சாரு நிவேதிதா's Blog, page 229
January 11, 2021
திருக்கல்யாணம் (தொடர்ச்சி)
ஒரு பிழை இருந்தது. என் குருநாதரைத் தவிர வேறு யாரும் குறிப்பிடவில்லை. ஹெச்சரிககா என்பதில் ரி-யை முழுங்கி விட்டேன். தட்டச்சுப் பிழை. ஆனால் இன்னொரு பிழை முக்கியமானது. குருநாதரோடு கூட வினித்தும் குறிப்பிட்டார். கே.வி.என். என் குருநாதர் கே.வி.என்.னின் சிஷ்யர் வேறு. கே.வி.என்.னை எப்படி மறந்தேன் எனத் தெரியவில்லை. அரியக்குடி, கே.வி.என். இருவருமே ஹெச்சரிககாவில் முழுமை.
Published on January 11, 2021 06:37
10. இசை பற்றிய சில குறிப்புகள்: திருக்கல்யாணம்
காலையிலிருந்து சீதா – ராமனின் திருக்கல்யாண வைபவத்தை விலாவாரியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். வெறுமனே எழுத முடியாது. தியாகராஜரின் உத்ஸவ ஸம்பிரதாயக் கீர்த்தனையான ஹெச்சரிககாவை பற்பல இசைக் கலைஞர்களும் பாடியிருப்பதைக் கேட்டேன். பாம்பே ஜெயஸ்ரீ, எம்.எஸ். மேலும் சிலரைக் கேட்டு சிறிதும் திருப்தி இல்லை. அரியக்குடியைக் கேட்கும் போது மட்டுமே கீர்த்தனையிலும் சங்கீதத்திலும் மனம் லயித்தது. வேறு யாரேனும் அரியக்குடியின் தரத்தில் பாடியிருந்தால் எனக்கு தயவுசெய்து தெரிவியுங்கள். (தம்பி வினித், சஞ்சய், டி.எம். கிருஷ்ணா என்று அனுப்பி வைத்து ... Read more
Published on January 11, 2021 04:33
11. திருக்கல்யாணம்
காலையிலிருந்து சீதா – ராமனின் திருக்கல்யாண வைபவத்தை விலாவாரியாக எழுதிக் கொண்டிருக்கிறேன். வெறுமனே எழுத முடியாது. தியாகராஜரின் உத்ஸவ ஸம்பிரதாயக் கீர்த்தனையான ஹெச்சககாவை பற்பல இசைக் கலைஞர்களும் பாடியிருப்பதைக் கேட்டேன். பாம்பே ஜெயஸ்ரீ, எம்.எஸ். மேலும் சிலரைக் கேட்டு சிறிதும் திருப்தி இல்லை. அரியக்குடியைக் கேட்கும் போது மட்டுமே கீர்த்தனையிலும் சங்கீதத்திலும் மனம் லயித்தது. வேறு யாரேனும் அரியக்குடியின் தரத்தில் பாடியிருந்தால் எனக்கு தயவுசெய்து தெரிவியுங்கள். (தம்பி வினித், சஞ்சய், டி.எம். கிருஷ்ணா என்று அனுப்பி வைத்து ... Read more
Published on January 11, 2021 04:33
January 10, 2021
10. நகைச்சுவை மறந்த சமூகம்
ஒரு கவர்ச்சி நடிகை உச்சத்தில் இருந்த சமயம். பொறுங்கள், எடுத்த எடுப்பில் அந்த நடிகையின் பெயரைத்தான் தட்டச்சு செய்தேன். ஆனால் இப்போதெல்லாம் எந்தப் பெயரைப் போட்டாலும் குண்டாந்தடி அடி விழுகிறது என்பதால் மீண்டும் ஆரம்ப இடத்துக்குப் போய் நடிகையின் பெயரை நீக்கி விட்டு, ஒரு கவர்ச்சி நடிகை என்று போட்டேன். அந்த அளவுக்கு ஆகியிருக்கிறது நிலைமை. சரி, ஆரம்பிக்கிறேன். ஒரு கவர்ச்சி நடிகை உச்சத்தில் இருந்த சமயம். அவரைச் சந்திக்க நேர்ந்தது. பேசிக் கொண்டிருந்து விட்டு அன்றைய ... Read more
Published on January 10, 2021 22:25
9. மீண்டும் ஒருவர்
என் நாவலைப் படித்துப் பார்த்து ரெண்டு வார்த்தை திட்டுங்கள் அப்பா என்று வரும் கடிதங்களையெல்லாம் குப்பையில் தள்ளி விட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்தான். ஆனால் எனக்கும் கேளிக்கை தேவைப்படுகிறது அல்லவா, அதனால் இப்படிப்பட்ட சிறு விலகல்கள். இன்று அப்படி வந்த ஒரு கடிதம் இது: ஒருமுறை உங்கள் பேட்டியைக் கேட்ட பிறகு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப் படிக்க ஆரம்பித்தேன். அவர்களில் யோசா, போர்ஹேஸ், ரொபர்த்தோ பொலான்யோ ஆகியவர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களைக் கவர்ந்த ... Read more
Published on January 10, 2021 17:12
8. மறுமை நோக்கியதன்று, வறுமை நோக்கியது…
சில மாதங்களுக்கு முன்பு கோவிட் தொற்று உச்சத்தில் இருந்தபோது ஒரு அமெரிக்க வாழ் வாசக நண்பரிடமிருந்து ஒரு செய்தி வந்தது. எங்கள் நகரத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில், வர இருக்கும் ஒரு தமிழ் விசேஷ நாளை ஒட்டி உரையாற்ற முடியுமா? அவர் என்னுடைய இருபது ஆண்டுக் கால நண்பர். முடியும் என்றேன். இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிப்பவர். சரி, மகிழ்ச்சி, அவர்களைக் கேட்டு அடுத்து தொடர்பு கொள்கிறேன் என்றார். சரி என்று சொல்லியிருப்பேன், அமெரிக்கத் தூதரகத்தில் இரண்டு ... Read more
Published on January 10, 2021 05:39
சி.சு. செல்லப்பா – சாரு நிவேதிதா உரை
சி.சு. செல்லப்பா பற்றிய என் உரை 31.5.2020 அன்று நடந்தது. காலை ஆறு மணி. இரண்டு மணி நேரம் ஐம்பது நிமிடம் பேச்சு. நீங்கள் இதை முழுமையாக ஒரே மூச்சில் கேட்க முடியாமல் போனால் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கலாம். செல்லப்பாவின் எழுத்தில் ஒரு பதினைந்து ஆண்டு காலம் செலவிட்டிருக்கிறேன். இதை ஸூம் சந்திப்பின் மூலம் சாத்தியப்படுத்தினோம். உலகின் பல மூலைகளிலிருந்து வாசகர்கள் கேட்டனர். சதீஷ்வர் ஒருங்கிணைத்துக் கொடுத்தார். ஸூமின் பாஸ்வேர்ட் போன்ற விவரங்களைக் கொண்டுதான் கூட்டத்தில் கலந்து ... Read more
Published on January 10, 2021 02:19
January 9, 2021
9. இசை பற்றிய சில குறிப்புகள்
இந்தத் தொடரின் எட்டாவது அத்தியாயம் டிசம்பர் எட்டாம் தேதி (2020) வெளியாகி இருக்கிறது. சில வாசகர்கள் இந்தத் தொடரை ஆழமாக வாசிக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் மீண்டும் ஒருமுறை தொடரை வாசித்து விட்டு இதைத் தொடரலாம். அல்லது, இதைத் தனியாகவும் வாசிக்கலாம். இந்த அத்தியாயத்தில் அவ்வளவு ஆழமாகச் செல்லப் போவதில்லை. வேறொரு பணியில் இருப்பதால். பா.ராகவன் சமீபத்தில் எனக்கு ஒரு ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரை அறிமுகம் செய்தார். இசைக்கும் எனக்குமான தீவிரமான சம்பந்தம் கடந்த இருபது ஆண்டுகளாக ... Read more
Published on January 09, 2021 22:38
பாகவதம்
இப்போது பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறேன். கடலங்குடி நடேச சாஸ்திரிகள் மொழிபெயர்த்தது. 1935-இல் வெளியானது. மூன்று ரூபாய் எட்டணா விலை. இதை முடித்து விட்டு, அல்லது, இதோடு கூட சேர்த்து ஸ்வாமி பிரபுபாதா மொழிபெயர்த்ததும் படித்தால் நல்லது என்று தோன்றியது. அதை யாரேனும் நண்பர்கள் வாங்கித் தர முடியுமா? முடிந்தால் எழுதுங்கள். விலாசம் தருகிறேன். எங்கே கிடைக்கும் என்ற விவரம் கூட தெரியாது. charu.nivedita.india@gmail.com
Published on January 09, 2021 17:40
ஜெயமோகனின் வாசகர்களுக்கு…
அன்புள்ள சாறு, தங்களின் எந்த புத்தகத்தையும் படித்தது இல்லை . புத்தக கண்காட்சியில் தங்களை பார்த்தும், முகத்தை திருப்பி கொண்டுபோனவன் நான். பாலகுமாரனில் தொடங்கி, ஜெயகாந்தன், சுஜாதா, தி. ஜா, ஜெயமோகன், லியோ டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, அமி என்று எல்லோரையும் படித்துள்ளேன். ஏனோ ஜெயமோகனின் தாக்கத்தால் என்னை அறியாமலேயே தங்களை அணுக தடுத்தது. அமி பற்றி தாங்கள் பேசியது யூடியூபில் கேட்டேன். இவ்வளவுநாள் நான் இறுக்கமாக தங்களின் எழுத்தையோ, பேட்சையோ செவிசாய்க்காதது என் தவறென உணர்கிறேன். புதுமைபித்தனை ... Read more
Published on January 09, 2021 08:05
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

