சாரு நிவேதிதா's Blog, page 226
February 10, 2021
பிறழ்வெழுத்து: சாபமும் விமோசனமும்
தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் படித்திருப்பீர்கள். அப்புவின் அம்மா அலங்காரம்தான் கதையின் பிரதான பாத்திரம். அவளுடைய கணவன் தண்டபாணி ஒரு வேதவிற்பன்னர். அலங்காரத்துக்கு சிவசு என்ற பணக்கார நிலக்கிழாருடன் தொடர்பு. ரகசியத் தொடர்பெல்லாம் இல்லை. அலங்காரத்தின் வீட்டுக்கே வெளிப்படையாக வந்து போய்க் கொண்டிருப்பவர்தான். ஒருநாள் சிவசு அலங்காரத்தின் வீட்டுக்கு வந்திருக்கும்போது தண்டபாணி மேல்தளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். சிவசு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து அலங்காரத்திடம் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பது தண்டபாணிக்குக் கேட்கிறது. தண்டபாணி குளித்து முடித்து விட்டார். வெளியே ... Read more
Published on February 10, 2021 21:48
முகமூடிகளின் பள்ளத்தாக்கு
முகமூடிகளின் பள்ளத்தாக்கு – இறுதிக் கட்ட வேலைகளை முடித்து விட்டேன். இரவு பகலாக அமர்ந்து இறுதிக் கட்ட பிழை திருத்தம், எடிட்டிங் எல்லாவற்றையும் இப்போதுதான் முடித்தேன். இந்த அளவு உழைப்பை நான் வேறு எந்தப் பிரதிக்கும் இதுவரை கொடுத்ததில்லை. பன்னிரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் தட்டச்சு செய்திருக்கிறேன். ஆனால் பிழை திருத்தம் என்பது வேறு. மௌஸைப் பிடித்துக் கொண்டே வேலை செய்ய வேண்டும். பன்னிரண்டு மணி நேரம் வலது கையை ஒரே இடத்தில் வைத்து மௌஸை ... Read more
Published on February 10, 2021 08:52
சில கேள்விகள், சில பதில்கள்
நாவல் நேஷன் என்ற அமைப்பு நடத்திய இலக்கிய விழாவின் Zoom சந்திப்பில் கலந்து கொண்டு முக்கால் மணி நேரம் அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். கேள்விகள் சுவாரசியமாக இருந்தன. யூட்யூப் இணைப்பு கீழே உள்ளது. கேட்டுப் பயன் பெறுங்கள். https://www.youtube.com/channel/UCrrk...
Published on February 10, 2021 04:35
February 7, 2021
தமிழின் எதிர்காலம்
நான் ஒற்று ஒழுங்காகப் போடாததற்கு அவ்வப்போது சாரு சுளுக்கெடுப்பார். சரி குழந்தைகளிடம் தமிழ் எந்தளவுக்கு புழங்குகிறது என்று பார்க்க, மதிய உணவு வேளையில் , செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சொல்லி என்னா மீனிங் என்றேன் . ஆழி : காது கேக்காம அடைச்சிகிட்டா , வயிறு பசிக்கும். அப்ப வயித்துக்கு சாப்பாடு குடுக்கணும். இமயா : காதுக்கு உணவில்லாத போது , காது தன் சத்தை கொஞ்சம் வயித்துக்கும் அனுப்பும். ஆனாலும் ஆழி ... Read more
Published on February 07, 2021 03:12
February 5, 2021
வெகுகாலமாக நான் வாசிக்க விரும்பும் புத்தகம் எது?
நேற்று வரை இன்றைய ஸூம் நிகழ்ச்சி பற்றி யோசிக்கவில்லை. நேற்றும் முந்தாநாளும் லத்தீன் அமெரிக்க சினிமாவிலேயே மூழ்கியிருந்தேன். 300 பக்க நூல். நான் ஒரு வேலையில் மூழ்கி விட்டால் அது முடிந்தால்தான் அடுத்தது. இடையில் யாரிடமும் பேசுவது கூடக் கிடையாது. தவம் மாதிரிதான். இந்த 300இல் இரண்டு பாகம். முதல் பாகத்தைக் கிட்டத்தட்ட திரும்பத்தான் எழுதினேன் என்று சொல்ல வேண்டும். 1982இல் எழுதிய தமிழுக்கும் இப்போதைய என் தமிழுக்கும் எத்தனை வித்தியாசம். திரும்பவே எழுதினேன் என்ற அளவுக்குத் ... Read more
Published on February 05, 2021 19:45
இன்று (6.2.2021) மாலை ஐந்து மணிக்கு இலக்கிய உரையாடல்…
Virtual Lit Fest 2021 Inauguration – 4:45 pm IST A Conversation with Charu Nivedita – 5.00 pm IST Check out the event page on our website – https://www.novelnation.org/lit-fest-... can register for the event on the following link – https://www.novelnation.org/event-det... You can also find us on Social Media onInstagram – https://www.instagram.com/novelnation... – https://twitter.com/NovelnationorgFac... – https://www.facebook.com/novelnationorg நாவல் நேஷன் என்ற அமைப்பில் இன்று ஒரு இலக்கியத் திருவிழா. virtual. ஐந்து மணிக்கு இலக்கியம் ... Read more
Published on February 05, 2021 16:20
February 4, 2021
40 ஆண்டுகளாகக் கிடைக்காத அடியேனின் புத்தகம்…
1982 என்று நினைக்கிறேன். லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் என்ற என் புத்தகம் வந்தது. 18 ரூபாய் விலை. அப்போதெல்லாம் 8 ரூ.தான் விலை வைப்பார்கள். 10 ரூபாய் என்றாலே அதிக பட்சம். நான் என்னுடைய புத்தகத்தையெல்லாம் நானே அச்சிட்டு வெளியிட்டதால் மிகுந்த சிரமப்பட வேண்டியிருந்ததாலும் லத்தீன் அமெரிக்க சினிமாவை தில்லியில் பல சிரமங்களுக்கு இடையில் பார்த்ததாலும் அவ்வளவு விலை வைத்தேன். இருந்துமே ஆறு மாதத்தில் புத்தகம் தீர்ந்து விட்டது. அ. மார்க்ஸ் அப்போது ... Read more
Published on February 04, 2021 02:25
February 3, 2021
ஜோக்கா? சீரியஸா? : சிறுகதை
நகைச்சுவை உணர்வு என்றால் அது தஞ்சாவூர்தான். அந்த மண்ணுக்கு உரிய விசேஷங்களில் அது ஒன்று. Body shame கூட எங்கள் ஊரில் பகடியாகத்தான் கருதப்படும். முடிந்தால் நீங்கள் பதிலுக்குப் பண்ணலாம். இல்லாவிட்டால் அதை ரசித்து விட்டுப் போவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த பாடி ஷேம் பண்ணுவதில் பெண்கள் ஜித்தர்கள். ஜெயிக்கவே முடியாது. அதிலும் குறிப்பாக பாலியல் சம்பந்தமான பகடிகள்தான் ஏராளம். அதுவும் பெண்கள்தான் பண்ணுவார்கள். இருபத்தைந்து வயதில் தஞ்சாவூரிலிருந்து தில்லிக்குப் போனால் அது தஞ்சாவூரை விட ... Read more
Published on February 03, 2021 22:10
மாயமோகினி: கவிதைத் தொகுப்பு
நான் எழுதும் கவிதைகள் சராசரியானவை என்று ஒரு கருத்து நிலவுகிறது என்பது எனக்குத் தெரியும். என் புனைகதைகள் பற்றி அப்படி யாருமே சொல்ல முடியாது. பிடிக்கவில்லை என்பார்கள். போர்னோ என்பார்கள். இன்னும் சிலர் என் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைக் கண்டு அது நான் தான் என மருட்சி கொண்டு இவனைத் தூக்கில் போட வேண்டும் அப்படி இப்படி என்று பலவிதமான தண்டனைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இப்படிப் பலவிதமாகத் திட்டுவார்களே ஒழிய சராசரி என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ... Read more
Published on February 03, 2021 04:51
February 2, 2021
புத்தக விழா
வருகின்ற புத்தக விழாவில் என்னுடைய புதிய புத்தகங்கள் எதுவும் வருகிறதா என நண்பர்கள் அக்கறையோடு விசாரித்தனர். நான் நாவல் எழுதும் மும்முரத்தில் அல்லவா இருக்கிறேன் என்றேன். எப்படியோ மனதைக் கரைத்து விட்டார்கள். அதனால் சட்டென்று அந்த வேலையில் அமர்ந்து இரண்டு புத்தகங்களை அனுப்பி விட்டேன். இன்னும் இரண்டு புத்தகங்களை அனுப்புவேன். மயானக் கொள்ளை (நாடகம்) மாயமோகினி (கவிதைத் தொகுப்பு) சொல் தீண்டிப் பழகு (கட்டுரைத் தொகுப்பு) பூச்சி (சுயசரிதக் குறிப்புகள்) இது தவிர இன்னும் மூன்று அத்தியாயங்கள் ... Read more
Published on February 02, 2021 08:29
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

