சாரு நிவேதிதா's Blog, page 227

February 1, 2021

முகமூடிகளின் பள்ளத்தாக்கு – 2

அன்புள்ள சாருஎனக்கு தருண் மீதும் சாருவின் மொழிபெயர்ப்பு மீதும் நம்பிக்கையுண்டு. உங்களின் இந்த முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.ஆனால் தயவுசெய்து தலைப்பு பற்றி கொஞ்சம் மறு பரிசீலனை செய்யுங்கள். இது ஒரு மாயாவிக் கதையின் தலைப்பு போல இருக்கிறது. ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்ப்பு செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். மேலும் இந்தக் கதையில் நீங்கள் ஊறியிருப்பீர்கள். அதனால் வித்தியாசமான மற்றும் ஆங்கிலத் தலைப்புடன் ஒத்துப் போகக்கூடிய ஒன்று நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். மெதூஸாவின் மதுக்கோப்பை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2021 22:00

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

தருண் தேஜ்பால் எழுதிய Valley of Masks என்ற அதியற்புதமான நாவல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு என்ற தலைப்பில் தமிழ் மொழிபெயர்ப்பில் அநேகமாக இன்னும் ஒரு மாத காலத்தில் உங்கள் கைகளில் கிடைக்கும். அதன் இறுதி கட்ட fine tuning வேலையில் இருக்கிறேன். 2020-ஆம் ஆண்டின் பெரும்பகுதி இந்த மொழிபெயர்ப்பு வேலைகளிலேயே போய் விட்டது. சந்தர்ப்பவசமாகவே இந்தப் பணியில் நான் கலந்து கொள்ள நேர்ந்தது. ஆனால் இறங்கிய பிறகு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பது என் மதம். அதனால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2021 08:51

கலையும் கடவுளும்…

ஒரு பெரிய விவாதத்துக்கு உரிய விஷயத்தை என் நண்பர் கேஷவ் தட்டி விட்டார் முகநூலில். கிருஷ்ணாவின் பழைய கச்சேரி ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். அதில் அவர் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது ஒரு சூப்பர் டூப்பர் இடதுசாரி என்றும், ஆனாலும் அவர் இசை என் நெஞ்சைத் தொடுகிறது என்றும் எழுதியிருந்தார் கேஷவ். தொடட்டும். அது எனக்குப் பிரச்சினை இல்லை. சங்கராபரணம் என்ற படத்தில் வரும் பாடல்களைக் கேட்டு வடக்கே ஓடியவன் நான், இப்போதுதான் தெற்கே திரும்பியிருக்கிறேன். ஆள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 01, 2021 07:24

January 26, 2021

D. அண்ணாஸ்வாமி பாகவதர்

எம்பார் விஜயராகவாச்சாரியார், பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகிய இருவருக்கும் மூத்தவர் திருவையாறு அண்ணாஸ்வாமி பாகவதர். இவரது ராமாயண காலக்ஷேபம் பிரசித்தி பெற்றது. இவர் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சென்னை மியூசிக் அகாதமியில் தியாகராஜரின் வாழ்க்கை பற்றி ஒரு காலக்ஷேபம் பண்ணினார். அது நிச்சயம் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் எனக்கு இணையத்தில் கிடைக்கவில்லை. அவரது ராமாயணம் கிடைக்கிறது. தியாகராஜர் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் விவரம் தெரிவியுங்கள். charu.nivedita.india@gmail.com
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2021 22:21

புரட்சித் துறவி

நான் என்னுடைய பதின்பருவத்தில் தீவிர ஆன்மீகத் தேட்டம் உடையவனாக இருந்தேன்.  ஆன்மீகப் பத்திரிகைகளில் நிவேதிதா என்ற பெயரில் எழுதினேன்.  விவேகானந்தரின் ஞான தீபம் தொகுப்புகளை வாங்கிப் படித்து அவரையே என் மானசீக குருவாக வரித்துக் கொண்டேன்.  தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது (1974-75) சமண சமயம் தொடர்பான என் கட்டுரை ஒன்று தமிழ்நாடு சமண சமயத்தின் குருமார்களால் சிலாகிக்கப்பட்டு பெரியதொரு தொகை பரிசாக வந்தது.  வாரம் ஒருமுறை மௌன விரதம் எல்லாம் இருப்பேன்.  இப்போது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2021 03:31

January 25, 2021

உலகின் மகத்தான தம்புராக் கச்சேரி : சிறுகதை

(இச்சிறுகதையில் வரும் எல்லா பெயர்களுமே கற்பனை. சம்பவங்களும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி similarity இருந்தால் அது தற்செயலானதே!!!) ஊர் பட்ட வேலை கிடக்கிறது.  நாவல் முடியும் வரை என்னுடைய அன்றாட ராணுவ ஒழுங்கு கெட்டு விடும் போலிருக்கிறது. மிகச் சரியாக பத்து மணிக்குத் தூங்கப் போனால் நான் எழுந்து கொள்ளும் போது கடிகாரம் சரியாக ஓடாவிட்டால் நாலு என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம்.  எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, அது எப்படி இந்த உடல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2021 20:41

இசை: எந்து தாகிநாடோ

ராக ஆலாபனை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த க்ருதி ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. தோடி ராகம். இதில் முசிறி சுப்ரமணிய ஐயர் நமக்கு ஒரு அற்புத அனுபவத்தைத் தருகிறார். குரலினிமைக்கு எப்போதும் பாலமுரளியையும் எம்.எஸ்.ஸையும் சொல்வார்கள். நான் முசிறியைச் சொல்வேன். சங்கீதம் என்றாலே எல்லோரும் fanaticsதான். நான் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ரொம்ப ரகளை நடக்கக் கூடிய இடம். எல்லோருக்குமே உடும்புப் பிடிதான். பாலமுரளிக்கெல்லாம் பெரிய தற்கொலைப் படையே உண்டு. இந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2021 07:11

இசை: தொரகுநா இடுவண்டி

தியாகபிரம்மத்தின் புகழ் பெற்ற கிருதிகளில் ஒன்று தொரகுநா இடுவண்டி. பிலஹரி ராகத்தில் அமைந்தது. இது ஒரு சினிமாவிலும் இடம் பெற்று விட்டதால் மலினமான புகழையும் அடைந்து விட்டது.  போகட்டும்.  இதை எனக்குப் பிடித்த சங்கீதக் கலைஞர்கள் எப்படியெல்லாம் அனுபவம் கொண்டிருக்கிறார்கள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன்.  பலருடையது கிடைக்கவில்லை.  குறிப்பாக வோலட்டி வெங்கடேஸ்வரலு, முசிறி சுப்ரமணிய ஐயர், முடிகொண்டான் வெங்கடராம ஐயர், அரியக்குடி போன்றோரது தொரகுநா கிடைக்கவில்லை.  ஆனால் வீணை எஸ். ராமனாதனின் தொரகுநா கிடைத்தது.  என்ன ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2021 05:18

January 22, 2021

இன்று இரவு 9 மணிக்கு…

இன்று (சனிக்கிழமை) இந்திய நேரம் இரவு 9 மணிக்கு அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கலையும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் பேசுகிறேன். (அமெரிக்க நண்பர்கள் தங்கள் நேரத்தை இதற்குத் தக்கபடி கணக்கிட்டுக் கொள்ளுங்கள்) ஒரு மணி நேரம் பேசுவேன். கேட்க விருப்பப்படும் நண்பர்கள் கேட்கலாம். சக எழுத்தாளர்களுக்குப் புதிதாக ஒன்றும் இருக்காது என்பதை இப்போதே உறுதி கூறி விடுகிறேன். எழுத்தாளர்கள் குறித்த என்னுடைய வழக்கமான பேச்சு அல்ல இது. வாழ்க்கையைக் கலாபூர்வமாக வாழ்வது எப்படி என்று பேசுவேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2021 21:17

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.