சாரு நிவேதிதா's Blog, page 225

February 17, 2021

முகமூடிகளின் பள்ளத்தாக்கு

முகமூடிகளின் பள்ளத்தாக்கு வேலை முழுமையாக முடிந்து விட்டது. அச்சகத்தில் ஒத்துழைப்பு நல்கினால் இந்தப் புத்தக விழா முடிவதற்குள் நாவல் உங்கள் கைகளுக்குக் கிடைக்கலாம். நாவலை எடுத்தால் முடித்து விட்டுத்தான் கீழே வைக்க முடியும். ஜெட் வேகத்தில் பறக்கும். நாவலை ஒரு பத்து வயதுச் சிறுமியிலிருந்து நூறு வயது முதியவர் வரை படிக்கலாம். படித்தால் உங்களால் எக்காலத்திலும் மறக்கவே முடியாத நாவல். தாமரைச் செல்வியும் நானும் இணைந்து செய்த மொழிபெயர்ப்பு. அடுத்த வேலைகளில் முழுமையாக இறங்கி விட்டேன். முகமூடிகளின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 17, 2021 07:18

February 16, 2021

ஒரு பிரபல எழுத்தாளரின் புதிய பதிப்பகம்

எஸ். ராமகிருஷ்ணன் தனக்கென்று ஒரு பதிப்பகம் வைத்திருக்கிறார்.  இன்னும் பல எழுத்தாளர்கள் தங்களுக்கென்று பதிப்பகம் வைத்திருக்கிறார்கள்.  நானோ குடிசைத் தொழில் மாதிரி என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்து வந்து கொண்டிருந்தேன், மனுஷ்ய புத்திரன் உயிர்மை ஆரம்பிக்கும் வரை.  ஒருவேளை அவர் அதற்கு முன்பு பணியில் இருந்த பதிப்பகத்திலேயே தொடர்ந்திருந்தால் ராம்ஜியும் காயத்ரியும் ஸீரோ டிகிரி பதிப்பகம் ஆரம்பிக்கும் வரை கூட என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும்.  என்னுடைய நிலைமை அப்போது எப்படியிருந்தது என்றால் – ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2021 02:23

February 15, 2021

இஞ்சி சுக்கு கடுக்காய்

இஞ்சி சுக்கு கடுக்காய் என்ற புத்தகத்தைப் பிழை திருத்தம் செய்து ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்குக் கொடுத்து விட்டேன். 2012-2013 காலகட்டத்தில் எழுதியவை. இதை சப்ஜெக்ட் வாரியாகத் தொகுப்பது சாதாரண வேலை இல்லை. ஒரே சப்ஜெக்டாகத் தொகுக்க வேண்டும். தலை வெடித்து விடும். ஸ்ரீராம்தான் தொகுத்தார். அந்தத் தொகுப்பில் இந்தப் பாடல் பற்றி எழுதியிருக்கிறேன். எனக்கு வயலினை விட ஜாஸ் மற்றும் பியானோ இரண்டும் பிடித்தவை. இந்திய வாத்தியங்களில் நாதஸ்வரம், ஷெனாய்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2021 05:02

February 14, 2021

அழியாத ரேகைகள்: சுதா மூர்த்தியின் வாழ்க்கைக் குறிப்புகள்

சென்ற ஆண்டு என் நண்பர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனும் ராமசேஷனும் பூரிக்குச் சென்றிருந்தனர். ஏன் என்னை அழைக்கவில்லை என்று கேட்டேன்.  நான் ஆடம்பரமாகத் தங்குவேன், விமானத்தில்தான் செல்வேன், இதெல்லாம் ராகவனுக்குக் கட்டுப்படி ஆகாது என்றார் ராகவன்.  நானே தனியாக விமானத்தில் கிளம்பிப் போய் அவர்களோடு சேர்ந்து கொண்டிருப்பேன்.  ஆனால் எனக்கு அப்போது கடும் வேலை.  அங்கே போனவர் நண்பர் ஒருத்தரின் வீட்டில் தங்கினார்.  நண்பரின் வீட்டில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள்.  தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம்.  அதில் ஒரு புத்தகம் சுதா ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2021 22:17

ராம்ஜி நரசிம்மனின் அல்லிக்கேணி

தீவிர இலக்கியம் என்று சொல்ல முடியாத, அதே சமயம் வெறும் பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்ட pulp writing என்றும் எடுத்துக் கொள்ள முடியாத பல்வேறு வகையான எழுத்து வகைகள் ஆங்கிலத்தில் உண்டு.  ஹெரால்ட் ராபின்ஸ், ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் வகையறாக்களை நாம் இரண்டாவதாகக் குறிப்பிட்ட பொழுதுபோக்கு எழுத்து என்று வகைப்படுத்தலாம்.  ஒவ்வொரு வகை எழுத்துக்கும் சமூகத்தில் தேவை இருக்கிறது.  அவ்வளவுதான் விஷயம்.  சில வளர்ச்சி அடைந்த சமூகங்களில் பொழுதுபோக்கு எழுத்தை 25 சதவிகிதத்தினர் படிப்பார்கள்.  மீதி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2021 21:23

அது ஒரு காலம்…

ஒரு நாஸ்டால்ஜியாவில் அப்படி ஒரு தலைப்பு வைத்து விட்டேன். ஆகஸ்ட் மாதம் 2013-இல் எழுதிய கட்டுரை பின்வருவது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது ஏதோ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது போல் தோன்றுகிறது. இந்தக் கட்டுரை இப்போது வெளிவர இருக்கும் இஞ்சி சுக்கு கடுக்காய் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. புத்தகத்தில் கட்டுரைத் தலைப்பு: Thanks, Nirmal… Thanks, Nirmal… கரூரில் என்னை சந்தித்த நிர்மல் கருவாடும் Absinthe –உம் கொடுத்தார்.  எப்படி இருந்தது என்று எழுதியிருக்கவேண்டும். நான் ... Read more
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2021 03:44

தேர்தலில் நிற்கப் போகிறாரா, பா. ராகவன்?

இப்படித்தானே இப்போதெல்லாம் பத்திரிகைகளில் தலைப்பு கொடுக்கிறார்கள்? அதே டெக்னிக்கை நானும் பின்பற்றினேன். பின்வருவது பாரா முகநூலில் எழுதியது. அதைத் தொடர்ந்து என் கருத்தை எழுதியிருக்கிறேன். பா. ராகவன்: அன்பின் பாரா, நீங்கள் ஏன் ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கக்கூடாது? நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கும்போது எழுத்தாளர்கள் செய்யக்கூடாதா? தாராளமாகச் செய்யலாம். ஆனால் அதற்கெல்லாம் ஒரு வக்கு வேண்டும். இதுவே ஜெயமோகனைச் சொல்கிறீர்களா? நியாயம். கமலஹாசன் கட்சிக்கு இருப்பதைக் காட்டிலும் அதிகமான தொண்டர் பலம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2021 01:15

February 13, 2021

இஞ்சி, சுக்கு, கடுக்காய்…

இதுவரை ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் நான் கொடுத்துள்ள புதிய புத்தகங்கள்: மயானக் கொள்ளை – நாடகம் மாயமோகினி – கவிதைத் தொகுதி லத்தீன் அமெரிக்க சினிமா முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மொழிபெயர்ப்பு நாவல்) இப்போது கொடுக்கப் போகும் புதிய புத்தகம்: இஞ்சி, சுக்கு, கடுக்காய்.  ஆகஸ்ட் 2012 முதல் ஆகஸ்ட் 2013 வரை எழுதிய கட்டுரைகள்.  அதில் ஒரு கட்டுரை கனடாவில் வசிக்கும் என் சிநேகிதி சந்த்ரா ஸித்தன் பற்றியது.  சந்த்ராவுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது ஒரு ஆச்சரியம்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 13, 2021 04:43

February 11, 2021

என் கடன் பணி செய்து கிடப்பதே…

முகமூடிகளின் பள்ளத்தாக்கு முடிந்து எக்ஸைலில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.  ஒரு ஆண்டு சுமையை இறக்கி வைத்து விட்டது போல் ஆசுவாசமாக இருக்கிறது.  இன்று வரை நான்கு புத்தகங்களை ஸீரோ டிகிரி பதிப்பகத்திடம் கொடுத்திருக்கிறேன்.  மயானக் கொள்ளை – நாடகம் மாயமோகினி – கவிதைத் தொகுதி லத்தீன் அமெரிக்க சினிமா முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மொழிபெயர்ப்பு நாவல்) இது எல்லாம் புத்தக விழாவிலேயே வந்து விடுமா என்று சொல்ல முடியாது.  வந்தால் நல்லது.  எல்லா எழுத்தாளர்களுமே புத்தக விழாவில் தம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 11, 2021 22:14

முகமூடிகளின் பள்ளத்தாக்கு (மீண்டும்)

அநேகமாக இனிமேல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு பற்றி எழுத மாட்டேன்.  புத்தகம் வெளிவந்த பிறகுதான்.  ஒரு விஷயத்தை மட்டும் மறந்து விடாதீர்கள்.  இப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் நான் படித்ததில்லை.  ஓரளவுக்குப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாசித்திருக்கும் நான் தான் இப்படிச் சொல்கிறேன்.  பின்வரும் பகுதி நாவலின் கடைசி அத்தியாயத்தில் வருகிறது.  அதைப் படித்த பிறகு இது பூனைகளைப் பற்றிய நாவலோ என நினைத்து விடாதீர்கள்.  நாவலின் இந்தப் பக்கத்தில் மட்டுமே பூனைகள் – அதுவும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 11, 2021 05:25

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.