சாரு நிவேதிதா's Blog, page 224

February 27, 2021

இச்சா : ஷோபா சக்தி

ஷோபா சக்தியின் இச்சா படித்தேன். தமிழின் பத்து முக்கியமான நாவல்களில் இச்சாவும் ஒன்று என நிச்சயமாகச் சொல்வேன். இது பற்றி விரைவில் விரிவாக எழுதுவேன். இதுவரையில் அவர் எழுதிய நாவல்கள் அனைத்தும் இதை எழுதுவதற்கான பயிற்சியோ என்று தோன்றும் அளவுக்கு ஒரு அற்புதமான நாவல் இச்சா. ரசித்து ரசித்துப் படித்தேன். நாவலில் ஒரு இடம் வருகிறது: மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கும் என் உடல் எழுத்துகளாகவும் ஆன்மா அசப்பியக் குறிகளாகவும் வடிவம் கொள்கின்றன. அன்பும் வெறுப்பும் காதலும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 27, 2021 07:28

February 26, 2021

27 feb 2021 zoom meeting 7 pm

நாளை இந்திய நேரம் மாலை ஏழு மணிக்கு சேனன் எழுதிய சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் என்ற நாவல் பற்றிப் பேசுகிறேன். லண்டனில் உள்ள திரள் சமூக கலை இலக்கியக் குழுமம் நடத்துகிறது. நேரில் நடந்திருந்தால் பெரிய அடிதடி ரகளை எல்லாம் அரங்கேற்றம் ஆகியிருக்கும். நான் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்குத் தகுந்த பாதுகாப்போடுதான் போவது வழக்கம். ஒருமுறை புத்தக விழாவில் உயிர்மை நடத்திய கூட்டத்தில்தான் மிகப் பெரிய ரகளை நடந்து எனக்குக் கொலை மிரட்டலும் விடப்பட்டது. இது ஸூம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 26, 2021 04:48

February 25, 2021

சிங்கப்பூர்

என் மகன் கார்த்திக் மரீன் எஞ்ஜினியர் என்பதால் அவன் போகாத நாடு இல்லை.  ஆனால் அவன் வசிக்கும் ஊர் மும்பை.  என்னை அடிக்கடி மும்பை வரச் சொல்லுவான்.  நான் மும்பைக்கே சென்று விட வேண்டும் என்பது அவன் ஆசை.  அவன் வீட்டில் அல்ல. தனி விட்டில்தான்.  நான் அதற்கு அவனிடம் பதில் சொல்ல மாட்டேன்.  அவந்திகாவிடம் சொல்வேன்.  ”எங்காவது ஐரோப்பிய நகரிலிருந்து கொண்டோ அமெரிக்காவில் இருந்து கொண்டோ கூப்பிட்டால் இன்றைய தினமே என் ஜாகையை மாற்றிக் கொண்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 25, 2021 23:35

February 24, 2021

வந்து விட்டது முகமூடிகளின் பள்ளத்தாக்கு

இன்று மாலை (25-2-2021) நான்கு மணியிலிருந்து சென்னை புத்தக விழா ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கு 10 – 11 இல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவல் கிடைக்கும். இப்போதே தேவையானால் அண்ணா நகரில் உள்ள ஸீரோ டிகிரி பதிப்பக அலுவலகத்தில் கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். புத்தக விழா முடிவதற்குள் 3000 பிரதிகள் விற்க வேண்டியது உங்கள் கையில். நன்றி.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2021 23:15

அன்புள்ள சேனனுக்கு…

அன்புள்ள சேனனுக்கு, நான் மொழிபெயர்த்த ஊரின் மிக அழகான பெண் என்ற சிறுகதைத் தொகுப்பை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியாது. நீங்கள் லண்டனில் இருப்பதால் அநேகமாக வாசித்திருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் கிண்டிலில் கிடைக்கிறது. வாசித்துப் பாருங்கள். அந்தத் தொகுதியில் லெபனிய எழுத்தாளர் காதா ஸம்மான் (Ghada Samman) எழுதிய பெய்ரூட் கொடுங்கனவுகள் என்ற நாவலிலிருந்து சில பகுதிகளை மொழிபெயர்த்திருக்கிறேன். சனிக்கிழமை நடக்க இருக்கும் உங்கள் நாவல் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள் பற்றி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2021 22:12

படித்ததில் பிடித்தது…

நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வருமா, மோடியே வருவாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அரசியலில் எனக்கு ஆர்வம் போய் விட்டது. மக்களின் தகுதிக்கு ஏற்பவே தலைவர்கள் வருவார்கள் என்ற விரக்தி உணர்வே காரணம். ஆனாலும் ராகுலின் இந்தத் தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. நாளை பிரதம மந்திரி நாற்காலில் இவர் அமர நேர்ந்தால் இவரை இப்படி இருக்க விட மாட்டார்கள். ஆனாலும் மனோபாவத்தை எத்தனை பதவி வந்தாலும் மாற்ற முடியாது. இவரைப் போன்ற ஒருவரே தலைவராக வர வேண்டும். தகுதி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2021 21:05

கள நிலவரம்

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலை நேற்று புத்தக விழா திறந்த முதல் நாளே பலர் வந்து கேட்டு விட்டுப் போனதாகக் கேள்விப்பட்டேன். இதோ இன்னும் சிறிது நேரத்தில் பிரதிகள் அச்சகத்திலிருந்து வந்து விடும் என்பது தற்போதைய செய்தி. தற்போது என்றால், 25 ஃபெப்ருவரி 2021 காலை பத்தேகால். இந்த நேரத்திலேயே போன் போட்டு புத்தகம் வந்து விட்டதா என்று டார்ச்சர் கொடுக்கக் கூடாது என்பதால் பதினோரு மணிக்குக் கேட்கலாம் என்று இருக்கிறேன். பதினோரு மணிக்கு அடுத்த செய்தியைத் தருகிறேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 24, 2021 20:51

February 23, 2021

பா. ராகவன் அடியேனுக்குத் தர வேண்டிய ஆயிரம் ரூபாய்!

குமுதத்துக்கு இன்று மதியம் பன்னிரண்டு மணிக்குள் கட்டுரை போய்ச் சேர்ந்தாக வேண்டும். இன்று மாலைக்குள் எக்ஸைல் பிழை திருத்தம் முடித்துக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன்.  900 பக்கத்தில் 300 பக்கம் முடித்திருக்கிறேன்.  அத்தனையையும் விட்டு விட்டு இதை எழுதிக் கொண்டிருப்பதற்குக் காரணம், பா. ராகவனின் யதி நாவல்.  இன்று காலை நாலு மணிக்கு அதைக் கையில் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  கிட்டத்தட்ட ரெண்டு வருஷமாக அதைப் படிக்க வேண்டும் படிக்க வேண்டும் என்று மேஜையிலேயே வைத்திருக்கிறேன்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 23, 2021 21:38

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.