சாரு நிவேதிதா's Blog, page 221
March 8, 2021
தனக்கே குழி தோண்டிக் கொண்ட தடித் தாண்டவராயனின் கதை (ஒரு நீதிக் கவிதை)
செய்வதற்கு ஒன்றுமில்லாத தாண்டவராயன் குழி ஒன்றைத் தோண்டினான் குழிக்குள் படுத்துக் கொண்டால் பதமாக இருக்குமென்று தலைப்பக்கம் கை வைத்துப் படுத்தும் விட்டான் ஒரு போர்வையும் இருந்தால் சுகமாக இருக்குமே யென நினைத்தபோது மேலே ஆளரவம் கேட்டு கொஞ்சம் மண்ணை அள்ளிப் போடும் ஓய் என்றான் வந்தவனும் கொஞ்சம் அள்ளிப் போட்டுவிட்டுப் போனான் குழி தோண்டிய களைப்பில் உறங்கிப் போனான் நம் தாண்டவ ராயன் பிறகு அந்தப் பக்கமாய் வந்த வழிப்போக்கர் சிலர் ஐயோ பாவம் மண்ணள்ளிப் போடவும் ... Read more
Published on March 08, 2021 21:01
நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்… (சிறுகதை)
தம்ரூட் என்ற இனிப்புப் பண்டத்தைப் பற்றி நீங்கள் நாகூர்ப் பக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தால் தவிர கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. நாகூர், காரைக்கால், கூத்தாநல்லூர் போன்ற ஊர்களில் தம்ரூட் உண்டு. நீங்கள் பார்த்திராத, சுவைத்திராத ஒரு தின்பண்டத்தைப் பற்றி உங்களுக்கு நான் எப்படியென்று அறிமுகப்படுத்துவது? நாகூருக்குச் செல்ல நேர்ந்தால் தர்ஹா பக்கத்தில் உள்ள பஷீர் அல்வா கடையில் தம்ரூட் என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டுப் பாருங்கள். தம்ரூட்டை ஓரளவுக்கு ஹல்வா ஜாதி என்று சொல்லலாம். பிராமணர் என்கிறோம், ஆனால் ... Read more
Published on March 08, 2021 06:21
கமல் பற்றி அபிலாஷ் மற்றும் அடியேன்
பின்வருவது அபிலாஷ் முகநூலில் எழுதியது. அது பற்றிய என் கருத்து அதற்குப் பின்னால்: கமல் எனும் சர்வாதிகார குழப்பவாதிகமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் வீட்டு மனைவியருக்கு ஊதியம் வழங்கப்படும் எனும் தனது வாக்குறுதி சம்மந்தமான ஒரு கேள்விக்கு பதில் அளித்த அபத்தமான விதத்தை உங்களில் பலரும் பார்த்திருப்பீர்கள். கமலுடன் இருக்கிற வேறு நிர்வாகி ஒருவர் தெளிவாக சிறப்பாக பதிலளிக்க கமல் பேசுவது மட்டும் அதர்க்கமாக, சம்மந்தமில்லாமல், தெளிவற்று இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். தன் கட்சி நிர்வாகி தன்னை விட ... Read more
Published on March 08, 2021 04:20
March 7, 2021
புத்தக விழாவில் வாங்கிய/கிடைத்த புத்தகங்கள்…
1.ஓ க்ரேஸ்… இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக் கொள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிப்பேன். நான் வளர்த்த பையன். வளன். உயிர்மை பதிப்பகம். 2. காஃபி சூனியக்காரி – சிறுகதைத் தொகுதி – வாசகசாலை 3. கொனஷ்டை புத்தகங்கள் – தொகுப்பாசிரியர் ராணி திலக் – ஸீரோ டிகிரி பதிப்பகம். படித்தே ஆக வேண்டிய கிளாஸிக் வகை. 4. அல்லிக்கேணி – நாவல் – ராம்ஜி நரசிம்மன் – ஸீரோ டிகிரி பதிப்பகம் – படித்து ... Read more
Published on March 07, 2021 07:12
March 6, 2021
இன்று மதியம் பன்னிரண்டிலிருந்து இரண்டு வரை…
என்னடா இது, நலம்விரும்பிகள் சும்மா இருக்கிறார்களே என ஆச்சரியப்பட்டேன். யாரோ ஒருத்தர் அவந்திகாவுக்கு ஃபோன் பண்ணி தடுப்பூசி போட்டு 28 தினங்களுக்குப் பிறகு இன்னொரு ஊசியும் போட்ட பிறகுதான் வேலை செய்யும். இப்போதே ஏன் சாருவை விட்டீர்கள் என்று சொல்லி விட்டார். அதனால் என் பரோல் ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் காலில் கையில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி மதியம் பன்னிரண்டு மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை ஸீரோ டிகிரி அரங்கில் (எண் 10-11) ... Read more
Published on March 06, 2021 20:51
March 5, 2021
22 வருஷ குமாஸ்தா வாழ்க்கை கொடுத்த பரிசு
அரசாங்க குமாஸ்தாக்களுக்கு ஒரு பொதுக் குணம் உண்டு. எது சொன்னாலும் யெஸ் சார் என்பார்கள். ஏய் மூளை கெட்ட் முண்டம். யெஸ் சார். நான் 22 வருஷம் குமாஸ்தாவாக இருந்திருக்கிறேன். இதில் பத்தை கழித்து விடலாம். தில்லியில் நான் பணி புரிந்த சிவில் சப்ளைஸில் இந்த குமாஸ்தாத்தனம் கிடையாது. அங்கே எல்லோருமே தனிக்காட்டு ராஜாக்கள். கொஞ்சூண்டு பணிவு எதிர்பார்ப்பார்கள். என் அதிகாரி பெயர் குல்லர். குல்லர் “ரவிஜி, கொஞ்சம் ஷர்மாவைக் கூப்பிடுங்களேன்” என்பார். உடனே நான் இண்டர்காமை ... Read more
Published on March 05, 2021 21:11
புத்தக விழா மகாத்மியங்கள் (2)
ஆஹா, ஆஹா, முறுக்கு கிடைத்து விட்டது. ஆம், என் மனம் கவர்ந்த முறுக்கை எனக்கு ஆசை ஆசையாகத் தின்னக் கொடுக்கும் செந்தில் குமரன் சேலத்திலிருந்து சென்னை வந்து விட்டார். முறுக்கும் கொண்டு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்த மாதிரி முறுக்கை நீங்கள் உலகத்தில் வேறு எங்கேயும் சாப்பிட்டிருக்க முடியாது. சென்னை முறுக்கெல்லாம் முறுக்கே கிடையாது. செந்தில், ஒரு முக்கிய விஷயம். பா.ராகவன் எதிரில் முறுக்கைப் பிரித்து விடாதீர்கள். அந்த ஆளும் என்னை மாதிரிதான் ஒரு சாப்பாட்டுப் பிரியன். ... Read more
Published on March 05, 2021 20:21
புத்தக விழா மகாத்மியங்கள்
ஒரு வாசகியின் கடிதம்: ”ஸீரோ டிகிரி அரங்கில் வந்து பார்த்தால் உங்களை ஹக் பண்ணலாமா? கிஸ் பண்ணலாமா?” நான் எழுதிய பதில்: “அம்மணி, ஒரு துறவி என்பவன் சமூகத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தவன். ஆனால் இப்போது எனக்கு சில கடமைகள் உள்ளன. ரிஸ்க் எடுக்க முடியாது. கொரோனா காரணமாக நாலு அடி எட்ட நின்றே பேசவும்.” இன்று மாலை நான்கு மணிக்கு சந்திப்போம். எல்லோரும் புத்தகம் வாங்கவும் தமக்குப் பிடித்த எழுத்தாளர்களைச் சந்திக்கவும், எழுத்தாளராக இருந்தால் புத்தகங்களில் ... Read more
Published on March 05, 2021 18:52
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

