சாரு நிவேதிதா's Blog, page 218
March 15, 2021
சில விடுபடல்கள்
தரிசனம் என்ற சிறிய குறிப்பில் நான் நினைத்த மாதிரியே சில முக்கியமான பெயர்கள் விடுபட்டு விட்டன. அவர்கள் என் குடும்ப உறுப்பினர்களைப் போல. ஆனந்தி, சிவா மெடிக்கல்ஸ் சிவா, அருணாசலம், செல்வகுமார், ஆடிட்டர் ஸ்ரீதர். இதையும் கூட அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதுதான் என் கொடுப்பினை.
Published on March 15, 2021 17:36
எக்ஸைல்
ஒரு மாபெரும் வேலை முடிந்தது. எக்ஸைல் நாவலின் பிழை திருத்தம் முடித்து விட்டேன். பிழை திருத்தம் மட்டும் அல்ல. எடிட்டிங். அதனால் கூர்ந்து வாசிக்க வேண்டியிருந்தது. பொதுவாக ஒரு படைப்பை எழுதி முடித்து விட்டு அதிலிருந்து நான் முற்றாக வெளியே வந்து விடுவேன். அதைத் திரும்பப் படிக்க நேர்ந்தால் அது நான் எழுதியது அல்ல. நான் அதன் வாசகன் மட்டுமே. அதுதான் எப்போதும் என் அனுபவம். பொதுவாக ஸீரோ டிகிரியைப் பலரும் சிலாகித்துப் பேசுவதைப் பார்க்கிறேன். அடிக்கடி ... Read more
Published on March 15, 2021 10:25
hathway என்ற கொடூர நிறுவனம்
hathway broadband நிறுவனத்தினர் தினமும் எனக்கு 25 முறை தொலைபேசியில் அழைக்கிறார்கள். தெரியாத எண் என்பதால் எப்போதாவது எடுத்து விடுகிறேன். தினமும் 25 முறை. புது கனெக்ஷன் வேணுமா. ஏற்கனவே எடுத்து ஏன் விட்டுட்டீங்க. இப்படி. பத்து மெஸேஜும் வருகின்றன. அநேகமாக என்னைப் பைத்தியமாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். நாள் பூராவும் 24 போன் அழைப்பை எடுக்கவில்லை. 25ஆவது அழைப்பை இப்போது எடுத்து விட்டேன். சார் ஹாத்வே கனெக்ஷன் வாங்கி ஏன் விட்டுட்டீங்க என்று ... Read more
Published on March 15, 2021 05:45
ஒரு தரிசனம்
பின்வரும் கதையை இன்று காலை லலிதா ராம் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். ரயிலைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் வேகத்தில் எக்ஸைல் பிழைதிருத்த வேலையில் இருந்த நான் ராம் என்றதும் உடனடியாக எக்ஸைல் வேலையை நிறுத்தி விட்டுப் படித்தேன். ராமின் எழுத்துக்கு நான் பரம ரசிகன். கட்டுரையாகத்தான் இருக்கும். மேலே பார்த்தால் சிறுகதை என்று இருந்தது. அவர் கதை எழுதுவார் என்று எனக்குத் தெரியாது. பெயரைப் பார்த்தால் லலிதா ராம். படித்துப் பார்த்தால் தி. ஜானகிராமன் கதை போல் ... Read more
Published on March 15, 2021 02:12
March 14, 2021
எஸ்.ரா.வும் சைத்தானும்…
நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய முதல் விசிறி உங்கள் மனைவி என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற பரிதாபத்துக்கு உரிய ஜீவன் வேறு யாருமே இல்லை. ஒரு பெரிய கூட்டத்துக்கு நடுவே அம்மணமாக நடக்கும் காரியம் அது. நான் இங்கே என்னுடைய தளத்தில் எழுதுவதை இறைவனின் கிருபையின் காரணமாக அவந்திகா படிப்பதில்லை. படித்தால் என்ன ஆகும்? ஒன்று, அவளுக்கு ஹார்ட் அட்டாக் அல்லது எனக்கு ஹார்ட் அட்டாக் வரும். சந்தேகமே இல்லை. அந்த ... Read more
Published on March 14, 2021 22:45
வெகுஜன எழுத்தும் இலக்கியமும்
எக்ஸைல் பிழைதிருத்த வேலையை முடிக்கும் தறுவாயில் இருந்தேன். இடையில் ஒரு பஞ்சாயத்து வந்து விட்டது. ”பட்டுக்கோட்டை பிரபாகரை ஏன் இப்படி அடிக்கடி வம்புக்கு இழுக்குறீர்கள்?” அடப்பாவிகளா, உங்களுக்கு எத்தனை ஆயிரம் தடவை சொன்னாலும் புரியவே புரியாதா? எனக்கு ஜனரஞ்சக எழுத்தின் மீது எந்தப் பகையும் இல்லை. எந்தப் புகாரும் இல்லை. ஒரு சமூகத்தில் எல்லா மனிதர்களுமே நகுலனையும் ஆதவனையும் படித்துக் கொண்டிருக்க முடியாது. எனக்கே பதினைந்து மணி நேரம் தொடர்ந்து எழுதினாலோ படித்தாலோ ஒரு பத்து நிமிடம் ... Read more
Published on March 14, 2021 09:05
March 13, 2021
எழுத்தாளனும் ஆன்மீகவாதியும்…
ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் தத்துவவாதிகள்தான் இந்தியாவில் ஆன்மீகவாதிகளின் இடத்தில் இருப்பவர்கள். அங்கே ஆன்மீகவாதிகளுக்கு சமூகத்தை வழிநடத்தும் அளவுக்கு அதிகாரம் கிடையாது. திருச்சபைகளின் அதிகாரம் ஒரு பக்கம் இருந்த போதிலும் தத்துவவாதிகளுக்கே அங்கே முதல் இடம். தத்துவவாதிகளின் பேச்சுக்குத்தான் அங்கே அதிக முக்கியத்துவம் கிடைக்கும். இங்கே மோடிக்கும் ஜக்கிக்கும், மோடிக்கும் ரவி ஷங்கருக்கும் உள்ள உறவை நினைத்துப் பாருங்கள். ஜக்கிக்கும் ரவி ஷங்கருக்கும் சமூகத்தில் உள்ள ஸ்தானத்தை கவனியுங்கள். ஆதிகாலத்திலிருந்தே இந்தியாவில் இப்படித்தான் இருந்து வருகிறது. ... Read more
Published on March 13, 2021 22:26
முகமூடிகளின் பள்ளத்தாக்கு – ஒரு மதிப்புரை
அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சாரு அவர்களுக்கு, இது தங்களுக்கு நான் எழுதும் முதல் வாசகர் கடிதம். கடந்த ஐந்து வருடங்களாக, சரியாகச் சொல்வதானால் என் கல்லூரியின் தொடக்க நாட்களிலிருந்து தங்களின் தீவிர வாசகன். தற்போது குடிமைப்பணித் தேர்வுக்காக தயார் செய்துகொண்டிருக்கின்றேன். உங்களது படைப்புகள் என்னில், எனது சிந்தையில், உலகை அணுகும் பார்வையில், பிறவுயிரிகளை நேசிப்பதில் என்று அவை ஏற்படுத்திய தாக்கங்கள் மற்றும் மாற்றங்கள் அனேகம். அதைப் பற்றியெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அடிக்கடி தோன்றும் ... Read more
Published on March 13, 2021 21:11
எக்ஸைல்
ஸீரோ டிகிரி ஒரு cult நாவலாக மாறி விட்டது. எப்படியும் ஒரு ஆண்டில் எழுநூறு எண்ணூறு பிரதிகள் போய் விடுகின்றன. எனக்கு வரும் ராயல்டி ஸ்டேட்மெண்ட்டில் எப்போதுமே அதிகம் விற்ற புத்தகமாக ஸீரோ டிகிரிதான் இருக்கிறது. அடுத்து, நண்பர்களிடையே பேசும்போது அவர்கள் அதிகம் குறிப்பிடுவதும் சிலாகிப்பதும் ராஸ லீலா. யாருமே குறிப்பிடாத நாவல் காமரூப கதைகள். புறக்கணிக்கப்பட்ட நாவல் அது. அடுத்து, யாரும் படிக்காத நாவல் என்று எக்ஸைலைச் சொல்லலாம். எப்போதுமே ஒன்றிரண்டு விதிவிலக்குகள் உண்டு. ஸ்ரீராம் ... Read more
Published on March 13, 2021 07:58
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

