சாரு நிவேதிதா's Blog, page 215

April 1, 2021

எக்ஸைல் வாசிப்பு (2)

சற்று நேரத்துக்கு முன்பு ஒரு நண்பர் எனக்கு போன் செய்தார். இதுதானே மீரா என்று ஒரு புகைப்படத்தை அனுப்பினார். மிரண்டு போனேன். சீலேவிலிருந்து நீங்கள்தான் அனுப்பினீர்கள் என்றார். சீலே பயணக் கட்டுரையின் ஆரம்ப அத்தியாயங்களை குமுதத்திலும் எழுதினேன். அதில் இந்தக் கதை விஷயங்கள் இல்லை. ஆனால் அலெஹாந்த்ரா என்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இருந்தது. ரொபர்த்தோ புகைப்படம் இருந்தது. மாயமான் வேட்டையில் பழைய கோணல் பக்கங்களின் சாருவைப் பார்த்தேன் என்றார். எங்கே போய் விடும்? எக்ஸைல் போன்ற ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2021 08:33

எக்ஸைல் வாசிப்பு

ஆயிரம் பக்கம் எழுதியிருக்கிறேன். ஆனால் அதை யாருமே சரியாகப் படிக்கவில்லையோ என ஐயுறுகிறேன். பதினான்காம் அத்தியாயம் – ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ – அந்த அத்தியாயத்தை மட்டும் படிக்கவே ஒரு வாரம் ஆகுமே? எல்லோரும் அப்படியே பக்கங்களைப் புரட்டி விட்டார்களோ எனத் தோன்றுகிறது. அதேபோல் பதின்மூன்றாம் அத்தியாயம் தாவர சங்கமம். அதையும் அப்படியே கடந்து விட்டார்கள். எக்ஸைல்தான் என்னுடைய நாவல்களில் சரியாக வாசிக்கப்படாமல், விவாதிக்கப்படாமல் போய் விட்டது. நாவல் வெளிவந்ததும் அது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2021 04:10

March 31, 2021

எக்ஸைல் : மூன்றாம் பதிப்பு : விரைவில்

உலகில் வெகு அரிதாக எழுதப்படும் ஆட்டோஃபிக்‌ஷன் வகையில் எழுதப்பட்ட நாவல் எக்ஸைல் மூன்றாம் பதிப்பு விரைவில் வெளிவர உள்ளது. அட்டை ஓவியம் : Rohini
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2021 23:18

கர்மா (2)

மிலரப்பா யோசித்தார்.  பணத்தைப் பெரிதாக நினைக்கும் லௌகீக வாழ்க்கை வேண்டாம் என்றுதானே இந்த ஞானியிடம் வந்து “எனக்கு ஆன்மீக வழியைக் காட்டுங்கள்” என்று தஞ்சம் அடைந்தோம்?  இவர் என்னவென்றால் இப்படி சித்ரவதை செய்தே நம்மைத் துரத்தி அடித்து விட்டாரே?  இது எந்த விதத்தில் நியாயம்?  ஒரு வீட்டைக் கட்டச் சொன்னார்.  உதவியாளரை வைத்துக் கொண்டு கட்டினோம்.  பாறாங்கற்களைக் கொண்டு களிமண் சேர்த்துக் கட்ட வேண்டும்.  இரண்டு பேரால் முடிகிற காரியமா அது?  நாள் கணக்கில் இரவு பகல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2021 17:53

பாலகுமாரனும் நானும்…

பாலாவுடனான என்னுடைய நட்பு பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. அதிகம் என்ன, எதுவுமே எழுதியதில்லை. அவரை ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்றே இலக்கியவாதிகளும் அறிவார்கள். அதில் தவறும் இல்லை. பாலகுமாரன் எழுதுவது ஏன் இலக்கியம் இல்லை என்று ஜெயமோகன் ஒரு முக்கியமான கட்டுரை எழுதியிருக்கிறார். அதை நீங்கள் வாசிக்க வேண்டும். ஆனால் பாலா எனக்கு எழுத்தைத் தாண்டிய ஒரு நண்பர். அவரைப் போன்ற பாசாங்கு இல்லாத, வெளிப்படையான மனிதரை நான் பார்த்தது அரிது. அன்பின் மொத்த வடிவம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2021 09:52

கர்மா

நான் எழுதிக் கொண்டிருக்கும் “அல்வாவினால் அடைந்த நிர்வாணம்” என்ற நெடுங்கதையைப் பதிவேற்றம் செய்ய சற்றுத் தயங்குகிறேன். எவ்வளவுதான் கற்பனையாக எழுதினாலும் இப்போது இருப்பவர்களின் சாயை தெரிவதால் நீதிமன்றத்துக்கு இழுத்துத் தொலைத்து விட்டால் என்ன செய்வது? அதற்காகவெல்லாம் பயப்படவும் முடியாதுதான். கதைசொல்லி மட்டும் நிர்வாணமாக வந்தால் பரவாயில்லை. இன்னொரு ஆளும் நிர்வாணமாக வருகிறார். பெண் அல்ல, ஆண். உடனே Gay கதை என்று நினைத்து விடாதீர்கள். நேரம் காலமெல்லாம் வேறு வேறு. செக்ஸ் கதையும் அல்ல. உளவியல்ரீதியான கதை. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2021 09:23

March 29, 2021

ஒரு புதிய செயலி, ஒரு புதிய பத்தி

https://bynge.in/ta/ இந்தச் செயலியில் சம்பந்தப்பட்டுள்ள இளைஞர்களை அவர்களின் பத்து வயதிலிருந்து நான் அறிவேன். குடும்ப நண்பர்கள். இதில் வாராவாரம் அ-காலம் என்ற தொடரை எழுதுகிறேன். இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கும். எட்டு அத்தியாயம் எழுதிக் கொடுத்து விட்டேன். தொடர் சுவாரசியமாகவும் நிலவு தேயாத தேசம் மாதிரியும் இருக்கும். படித்து விட்டுச் சொல்லுங்கள்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2021 03:40

March 28, 2021

10. இப்படியும் ஒரு சிறுகதை?

வாசகர்: உங்கள் தொலைபேசி எண் வேண்டும். எழுத்தாளர்: எதற்கு என்று தெரிந்து கொள்ளலாமா? வாசகர்: பேசுவதற்கு. முற்றும்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 23:51

திருச்சியில் என் புத்தகங்கள்…

திருச்சி புத்தகக் கண்காட்சியில் Jai Sairam அரங்கு எண் 63 and 64 இல் Zero degree மற்றும் எழுத்து பிரசுரத்தின் புத்தகங்கள் கிடைக்கும். என் புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கண்காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2021 21:20

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.