சாரு நிவேதிதா's Blog, page 211
April 27, 2021
அல்லாஹு அக்பர்…
இந்தப் பாடலை ஒரே நேரத்தில் திரும்பத் திரும்ப கேட்ட ஒரு நண்பர் சொன்னார், ”கடைசியில் கேட்பதை நிறுத்தி விட்டேன். இன்னொரு முறை கேட்டால் முஸ்லீமாக மாறி விடுவேன்.” என்ன ஆச்சரியம் என்றால், இன்னொரு நண்பருக்கும் அனுப்பினேன். அவரும் அதே வார்த்தைகளைச் சொன்னார்.
Published on April 27, 2021 08:13
April 26, 2021
ஒரு பதில்…
டியர் சாரு நீங்க கம்னாட்டி ஜெயமோகன் என எழுதியதைபார்த்து ஏன் இப்படி எழுத வந்தது என வியப்புவேதனை சரியில்லை இதைப்போல எழுதுவதுஎன தெரிவித்து க்கொண்டு முடிக்கிறேன் ஆரா என் அன்பு நண்பரும் அடிக்கடி என் எழுத்து பற்றி எனக்குக் கடிதங்கள் எழுதி ஊக்குவிப்பவருமான கவிஞர் ஆரா அவர்களின் மேற்கண்ட கடிதம் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். எங்கள் ஊர்ப் பக்கத்திலும் – பொதுவாக உலக வழக்கத்திலும் – அதி பிரியமான – அதி வாத்சல்யமான, செல்லமான, கொஞ்சலான ... Read more
Published on April 26, 2021 09:37
April 23, 2021
முந்நூறுக்குள் ஒரு கதை
67 வயது வரை எனக்குப் பொறாமை என்றால் என்னவென்றே தெரியாது. அதாவது, சென்ற ஆண்டு வரை. சத்தியம். இப்போது பொறாமை என்ற கெட்ட குணம் என்னையும் பீடித்து விட்டது. ஆரம்பித்து வைத்தது பெருந்தேவி. எனக்குக் கவிஞர்கள் மீது எந்தப் புகாரும் இருந்ததில்லை. அவர்கள் பாட்டுக்கு அவர்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அது வேறு ஏரியா. இப்போது ரமண மகரிஷி உயிரோடு இருந்தால் அவர் மீது உங்களுக்குப் பொறாமை வருமா. அந்த மாதிரிதான் எனக்குக் கவிஞர்கள். ஆனால் பெருந்தேவி ... Read more
Published on April 23, 2021 18:46
April 22, 2021
ArtReviewவில் அடியேன் கட்டுரை
ArtReview Asiaவிலும் ArtReview-விலுமாக கடந்த நாலு ஆண்டுகளாக நான் Notes from Madras என்ற தலைப்பில் எழுதி வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது ஓவியம் மற்றும் சிற்பங்களுக்கான பத்திரிகை. நான் மட்டுமே அதில் தமிழ்நாடு மற்றும் இந்தியா பற்றிய பல்வேறு விஷயங்களை எழுதி வருகிறேன். பொதுவாக இப்படி வெளியே போய் எழுதுபவர்கள் மேற்கத்தியர்களுக்குத் தோதாக இந்தியாவைத் திட்டி எழுதுவது வழக்கம். நான் இந்தியாவைத் திட்டி எழுதுவேன், ஆனால் ஆர்ட் ரெவ்யூ ஏஷியாவில் அல்ல. இங்கே ... Read more
Published on April 22, 2021 05:44
ஓர் உலகத் தரமான சிறுகதை
சமீபத்தில் நான் படித்த, மறக்கவே முடியாத ஓர் உலகத் தரமான சிறுகதை இது. சுஷில்குமாரின் தொகுப்பை விரைவில் படிக்க வேண்டும் என்று பார்க்கிறேன்.
Published on April 22, 2021 02:05
April 21, 2021
சமஸ் -இன் முகநூல் பக்கத்திலிருந்து
ஐந்தாண்டுகள் இருக்கும். “மகிழ் கவிதை மாதிரி அப்பப்போ நாலைஞ்சு வரி சொல்றான். இதை எப்படி எடுத்துக்குறதுன்னு தெரியலை” என்று மிகுந்த தயக்கத்துடன் சொன்னார் நண்பர் ஆசை. அப்போது மகிழுக்கு வயது நான்கு. குழந்தை மேதமையையும் பிரபல்யத்தையும் குழந்தைமைக்கான பெரும் சுமையாகக் கருதிவந்தவர் ஆசை என்பதால், மகிழ்ச்சியைவிடவும் குழப்பமே அவரைச் சூழ்ந்திருந்தது. “அது எப்படியோ, அவன் அவ்வப்போது சொல்வதைக் குறித்து வையுங்கள்” என்று சொன்னதை மட்டும் தவறாமல் செய்துவந்தார். குழந்தைமை மொழியே கவித்துமானது என்பது போக, குழந்தைகள் சில ... Read more
Published on April 21, 2021 21:23
ஓர் எதிர்வினை
அன்புள்ள சாரு அவர்களுக்கு, “கதையில் வரும் பெயரும் நீங்களும் ஒன்றா?” என்ற சிறுகதையைப் படித்தேன். வழக்கம் போல் நீரோட்ட நடை. நிஜத்தில் திரியும் மனிதர்களை எடுத்து கதையில் புனையும் போது ஏற்படும் ஒரு மாற்றத்தை இக்கதை சொல்கிறது. உங்கள் சிந்தனையுடன், நீங்கள் கண்ட மனிதர்களை உரசுவதில், புது அர்த்தம் ஒன்று பிறக்கிறது. வேறொரு பார்வையை இக்கதை அளிக்கிறது. நம் பெயரும், நாமும் ஒன்றா? இக்கேள்வியை இரண்டு விதமாக அணுகலாம். ஒன்று, ஒருவன் பெயர் மதி என்று இருக்கும். ... Read more
Published on April 21, 2021 21:10
April 20, 2021
எனக்குப் பிடித்த ஆட்டங்கள்…
பல ஆட்டம் உண்டு. எப்போதாவது தினப்பலன் பார்ப்பேன். கெட்ட செய்தி என்று போட்டிருப்பான். ங்கோத்தா என்று மனசுக்குள் ஆசீர்வதித்து விட்டுப் போய் விடுவேன். ஏனென்றால், எனக்கு எதுவுமே கெட்ட செய்தியாகத் தெரியாது. சும்மா ஏதோ பீலா விடுகிறேன் என்றுதான் நினைப்பீர்கள். அது உங்கள் விருப்பம். அடிக்கடி ஜோசியம் பார்ப்பேன். கைரேகை பார்ப்பேன். எல்லாமே விளையாட்டுதான். அப்படிப்பட்ட விளையாட்டுகளில் சமீபத்தில் ஒன்று சேர்ந்திருக்கிறது. Bynge.inஇல் ராஜேஷ் குமார் ஸ்கோர் என்ன, பட்டுக்கோட்டை ஸ்கோர் என்ன, இந்திரா சௌந்தர்ராஜன் ஸ்கோர் ... Read more
Published on April 20, 2021 08:24
கதையில் வரும் பெயரும் நீங்களும் ஒன்றா? (சிறுகதை)
என் நண்பர்களிடம் பலமுறை சொல்லி விட்டேன், ஆனால் யாரும் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அல்லது, நான் சொல்வதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லையோ என்னவோ. கதைகளில் நான் அவர்களின் பெயரையே போட்டு எழுதினால் சிலர் சண்டைக்கு வருகிறார்கள்; சிலர் நானா அப்படிச் செய்வேன், நானா அப்படிச் செய்வேன் என்று சொல்லிக் கதறிக் கொண்டே சவுக்கு மிளாறால் தங்களையே ரத்தம் சொட்டச் சொட்ட அடித்துக் கொள்கிறார்கள். யாருக்கும் அது ஒரு கதை, நம்மிடமிருந்து சாரு கச்சாப் ... Read more
Published on April 20, 2021 00:16
April 19, 2021
அ-காலம் தொடர் பற்றி…
ஒரு விஷயம் கவனித்தேன். என் தளத்தில் நான் தினந்தோறும் எழுதினால் மாதம் ஐம்பது பேர் சந்தா/நன்கொடை அனுப்புகிறார்கள். வாரம் ஒரு தடவை எழுதினால் அஞ்சு பேர்தான் அனுப்புகிறார்கள். அந்த அஞ்சு பேரும் என் நெருங்கிய நண்பர்கள். நான் எதுவும் எழுதாமலே போனாலும் அனுப்புவார்கள். ஒரு தகவலுக்காகச் சொன்னேன். இப்படி என் தளத்தில் வாரம் ஒருமுறை எழுதினாலும் bynge.in என்ற செயலியில் வாரம் இரண்டு முறை என் கட்டுரைகள் அ-காலம் என்ற தலைப்பில் வந்து கொண்டிருக்கின்றன. நான் அ-புதினங்களாக ... Read more
Published on April 19, 2021 23:03
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

