சாரு நிவேதிதா's Blog, page 228

January 21, 2021

நெகிழ்ச்சி

ரோஜா முத்தையா நூலகத்திலிருந்து புத்தகம் எடுக்க உதவி கேட்டு எழுதினேன் இல்லையா, எழுதின பத்து மணி நேரத்துக்குள் சுமார் ஐம்பது பேர் தாங்கள் செல்வதாக எழுதினார்கள். ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைந்தேன். இதில் பத்து பேர் மிக நெருங்கிய நண்பர்கள். ஒரு நண்பர் தமிழக அரசில் ஒரு துறையின் தலைவராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். அவர்தான் முதலில் தொடர்பு கொண்டவர் என்பதால் அவரிடமே பொறுப்பைக் கொடுத்தேன். வேலை முடிந்தது. இவ்வளவு அன்புக்கும் என் பிரதி உபகாரம் என் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2021 20:23

January 20, 2021

இந்த ஊரில் எப்படி வாழ்கிறீர்கள்? – சிறுகதை

ஒரு நிறுவனம் எப்படி உயர்ந்த நிலையிலிருந்து வீழ்ச்சி அடைந்து காணாமல் போகிறது என்பதை ஏர்டெல் நிறுவனத்தின் மூலமே அவதானித்து வருகிறேன்.  இண்டர்நெட் என்பது எனக்கு அறிமுகமான நாளிலிருந்தே ஏர்டெல் இணைப்புதான் வைத்திருக்கிறேன்.  சுமார் பதினைந்து ஆண்டுகளாக. சென்னையே வெள்ளத்தில் மிதந்தபோது கூட எனக்கு இண்டர்நெட் இல்லாமல் இருந்ததில்லை.  இண்டர்நெட் இல்லை என்ற பேச்சே பதினைந்து ஆண்டுகளில் இல்லை.  ஆனால் கடந்த ஆறு மாதங்களாக இடி இடித்தால் இண்டர்நெட் வெட்டு, மழை பெய்தால் வெட்டு, புயலடித்தால் தொடர்ந்தாற்போல் மூன்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2021 22:33

January 18, 2021

மன்னித்து விடு மாயா

நீ எங்கும் நிறைந்தவள் என்பதை மறந்து விட்டு இந்த ஊருக்கு வந்தேன் நீ சிந்தனைக்கும் அப்பாற்பட்டவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பற்றி சிந்தித்து விட்டேன் நீ வார்த்தைகளுக்குள் அடங்காதவள் என்பதை மறந்து விட்டு உன்னைப் பாடி விட்டேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 23:18

ZDP & எழுத்து பிரசுரம்

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்து இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  அதன் தமிழ்ப் பதிப்பு எழுத்து பிரசுரம்.  குழந்தைகளுக்கான இம்ப்ரிண்ட் கமர்கட்.  இந்தியா முழுவதுமாக ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நல்ல பெயரை ஈட்டியிருக்கிறது.  பல வட இந்திய எழுத்தாளர்கள் ZDP-இன் புத்தகங்களின் தரத்தைப் பற்றி வியந்து பேசியதை நேரில் பார்த்திருக்கிறேன்.  இன்னும் வேகமாகச் செயல்படுங்கள் என்று சொல்லி ZDP நண்பர்களை ஆசீர்வதிக்கிறேன்.  தரத்தில் எப்போதுமே உங்களுடைய இலக்கு அந்தக் காலத்து வாசகர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 21:21

13. ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்

இந்திரா நகரில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்தில் எனக்கு இரண்டு நூல்களை ஸ்கேன் செய்ய வேண்டும்.  கடந்த இரண்டு மாதங்களாக முயற்சி செய்து வருகிறேன்.  முடியாமல் கிடக்கிறது.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் சின்மயா நகரிலிருந்து மைலாப்பூருக்கு வந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, இந்த ரோஜா முத்தையா நூலகம்.  இந்திரா நகரில் இருந்தாலும் கூட சின்மயா நகரிலிருந்து அங்கே போவது எனக்கு சிரமமாக இருந்தது.  ஆனால் இப்போதைய நேர நெருக்கடியில் என்னால் இந்திரா நகர் வரை செல்ல ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 05:58

12. Aura…

வாசகர்கள் இன்னும் ஒரு மாத காலத்துக்கு க்ஷமிக்க வேண்டும்.  காலை நாலு மணிக்கு எழுந்து முன்பெல்லாம் ஒரு மணி நேரம் தியானம் செய்வேன்.  இப்போது அந்த தியானத்தை விட மேன்மையான ஒரு பணியில் ஈடுபட்டிருக்கிறேன்.  நான் இப்படிச் சொல்வதன் பொருள் உங்களுக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் என் நாவலை வாசிக்கும்போது தெரியும்.  It’s not a transgressive novel as has always been.  இது வேறு வகையானது.  மும்முரமாக அதில் ஈடுபட்டிருப்பதால் இந்தப் பக்கம் எட்டிப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2021 04:51

January 15, 2021

13. இசை பற்றிய சில குறிப்புகள்

ஜி.என்.பாலசுப்ரமணியம் கர்னாடக சங்கீதத்தின் சாதனைகளில் ஒருவர். 1959-இல் அகில இந்திய வானொலியில் நேரலையில் ஒலிபரப்பப்பட்ட இந்தக் கிருதியைக் கேட்டுப் பாருங்கள். தீக்ஷிதரின் புகழ்பெற்ற நவாவர்ண கிருதிகளில் ஒன்றான கமலாம்பாம் பஜரே கிருதி. வியோலா வாசித்திருப்பவர் பாலமுரளி கிருஷ்ணா. இந்த நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்ட அடுத்த வாரமே இதே கிருதியை இதே அகில இந்திய வானொலியில் பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கிறார். அப்போது பாலமுரளி 29 வயது இளைஞர். அந்த ஒலிப்பதிவு எனக்குக் கிடைக்கவில்லை. பின்வருவது ஜி.என்.பி. 1959-இல் பாடியது. அதற்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2021 21:53

January 14, 2021

12. இசை பற்றிய குறிப்புகள்

இந்தச் சம்பவம் நடந்தது 1926.  ஒரு பத்து வயதுச் சிறுமி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வருகிறாள்.  அவளை அவளுடைய அம்மா திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலிருந்து ஒரு லாலி பாடச் சொல்கிறாள்.  அம்மாவே பக்கத்தில் அமர்ந்து வீணையை மீட்டுகிறாள்.  சிறுமி பாடுவதை ஓரியண்டல் ரெகார்ட்ஸ் நிறுவனம் ஒலிப்பதிவு செய்து கொள்கிறது.  அதுதான் கீழே வருவது.  அதில் சில அபூர்வமான புகைப்படங்களும் உள்ளன.  சிறுமியின் அம்மாவின் பெயர் மதுரை சண்முகவடிவு.  சிறுமியின் பெயர் சுப்புலட்சுமி. பின்னாளில் உலகப் பிரசித்தி பெற்ற அச்சிறுமியின் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2021 05:11

January 13, 2021

11. கூழாங்கல் தொடர்கிறது…

(இந்தப் பதிவைப் படிப்பதற்கு முன் எண் 9-இல் உள்ள “மீண்டும் ஒருவர்” என்ற பதிவையும், 5ஆம் 3-ஆம் எண்களில் உள்ள கூழாங்கல் கட்டுரைகளையும் படித்து விட்டு இதைத் தொடரவும்.  அவற்றின் தொடர்ச்சிதான் இது.)  அன்புள்ள சாரு அவர்களுக்கு, வணக்கம். உங்களுக்கு நாவலை அனுப்பி வைத்த ஒரு இளம் எழுத்தாளர் பற்றி நீங்கள் எழுதிய இரண்டு பதிவுகளுக்குமான என் கேள்விகளும் சந்தேகங்களும் இவை. இதை எழுத முதலில் தயங்கினாலும் உங்கள் எழுத்தை இருபது ஆண்டுகளாகத் தொடர்ந்து இணையத்திலும் புத்தகங்களிலும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2021 07:58

January 12, 2021

11. இசை பற்றிய சில குறிப்புகள் – பொன்னையா பிள்ளை

இரண்டு தினங்களாக இடைவிடாமல் அமர்ந்து கே. பொன்னையா பிள்ளை இயற்றி 1940-ஆம் ஆண்டு வெளிவந்த “தஞ்சை பெருவுடையான் பேரிசை : தான வர்ணங்களும் கீர்த்தனங்களும், ஸ்வர ஸாஹித்தியங்களுடன்” என்ற அரிய நூலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  நான் இதைப் படித்து எந்தப் பயனும் இல்லை.  இது சங்கீதக் கலைஞர்கள் பயில வேண்டிய நூல்.  ஒவ்வொரு கீர்த்தனத்துக்கும் notations இருக்கின்றன.  ஓதுவா மூர்த்திகள் மரபில் வந்தவர்களும் முத்துஸ்வாமி தீட்சிதரின் மாணவர்களும், தஞ்சை-திருவனந்தபுரம்-மைசூர் முதலிய சமஸ்தான வித்வான்களும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2021 06:59

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.