ராக ஆலாபனை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த க்ருதி ஒரு உதாரணமாகத் திகழ்கிறது. தோடி ராகம். இதில் முசிறி சுப்ரமணிய ஐயர் நமக்கு ஒரு அற்புத அனுபவத்தைத் தருகிறார். குரலினிமைக்கு எப்போதும் பாலமுரளியையும் எம்.எஸ்.ஸையும் சொல்வார்கள். நான் முசிறியைச் சொல்வேன். சங்கீதம் என்றாலே எல்லோரும் fanaticsதான். நான் எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ரொம்ப ரகளை நடக்கக் கூடிய இடம். எல்லோருக்குமே உடும்புப் பிடிதான். பாலமுரளிக்கெல்லாம் பெரிய தற்கொலைப் படையே உண்டு. இந்த ...
Read more
Published on January 25, 2021 07:11