சாரு நிவேதிதா's Blog, page 230
January 9, 2021
6. நிகழும் அற்புதம்
நான் யாருக்கும் ஒருபோதும் அறிவுரை சொல்வதில்லை. சுய அனுபவம்தான் காரணம். இருபத்தைந்து வயது வரை யாரும் எனக்கு அறிவுரை சொன்னதில்லை. குறிப்பாக என் பெற்றோர். அதற்குப் பின் யார் யாரெல்லாம் எனக்கு அறிவுரை சொல்கிறார்களோ அவர்களையெல்லாம் நான் ஒதுக்கி வைக்க ஆரம்பித்தேன். இருபத்தைந்து வயது வரை அறிவுரை சொல்லாத பெற்றோர் அதற்குப் பிறகு எனக்கு அறிவுரை சொன்னார்கள். வீடு வாங்கு. ஒரு வருடம் போய்ப் பார்க்க மாட்டேன். குடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் சில அன்பர்கள் அதிகம் குடிக்காதீர்கள் ... Read more
Published on January 09, 2021 06:02
5. ஒரு சிறிய கூழாங்கல் போதும்…
இதே தலைப்பில் அமைந்த மூன்றாவது கட்டுரையின் தொடர்ச்சி இது: தமிழ்நாட்டிலேயே நாகர்கோவில் மாதிரி ஒரு ஊர் வராது. சொர்க்கம் மாதிரி இருக்கும். ஆனால் பெரும்பாலான மனிதர்கள் நரகர்கள். அசுரர்கள். பெரும்பாலான என்று சொல்லி விட்டேன். எல்லோரும் அல்ல. அதிலும் என் வாழ்வில் நான் சந்தித்த நாகர்கோவில் ஆட்கள் ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிக் கொண்டேதான் போகிறார்கள். ரெண்டு மாதத்துக்கு முன்பு ஒருத்தர் – ஒரு இருபத்தஞ்சு வயது சின்னப் பையன் – வந்தார். பழகினார் அவரிடம் நான் நாகர்கோவிலாச்சே, ... Read more
Published on January 09, 2021 05:36
நண்பர்களை ப்ளாக் பண்ணிய காதை (சற்றே மாற்றியது!)
முகநூலில் நண்பர்களை அவ்வப்போது ப்ளாக் செய்வது என் வழக்கம். சென்ற வாரம் அப்படி இரண்டு நண்பர்களை ப்ளாக் செய்யும்படி நேர்ந்தது. அதை உங்களுக்கும் சொல்ல வேண்டும். முதல் நண்பர் செல்வா. அவர் என் ஆளுமையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தவர். அவருடைய மேனரிஸங்களில் ஒன்று, ”எப்போ வர்றீங்க செல்வா?” என்றால், இதோ கிளம்பிட்டேன் சாரு என்பார். ஆனால் மறுநாள்தான் வருவார். அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக் கொள்ள பெரும் பிரச்சினை ஆகி விட்டது. சில நிபுணர்கள் இருப்பார்கள். ... Read more
Published on January 09, 2021 03:15
January 8, 2021
4. ஒரு சிறிய கூழாங்கல் போதும்… (தொடர்ச்சி)
உங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்பப் பழைய விஷயம். எனினும் படித்திருக்கலாம். தாகூருக்கு சும்மா லாட்டரி அடிப்பது போல் நோபல் பரிசு கிடைக்கவில்லை. அவர் அதற்காகக் கடுமையாக PR வேலை செய்தார். கீதாஞ்சலியை எழுதி அதை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எடுத்துக் கொண்டு இங்கிலாந்தோ அயர்லாந்தோ போய் W.B. யேட்ஸைப் பார்த்து முன்னுரை வாங்கிப் பதிப்பித்தார். அப்போது உலக அளவில் யேட்ஸ் ஒரு சூப்பர் ஸ்டார். அதோடு நிற்கவில்லை. தாகூர் கோடீஸ்வரர் என்பதால் காசுக்குப் ... Read more
Published on January 08, 2021 02:14
3. ஒரு சிறிய கூழாங்கல் போதும்…
ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். அழகாக இருக்கிறாள். உங்கள் நண்பனின் நண்பனின் தங்கையின் நண்பனின் தோழி. சந்தர்ப்பவசமாகச் சந்திக்க நேர்கிறது. பார்த்ததும் எடுத்த எடுப்பில் அவளிடம் “நாம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்கிறீர்கள். பிஞ்ச செருப்பால் அடிக்க மாட்டாளா? அதே மாதிரியான ஒரு கேள்வியை இன்று – ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால் என் நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார். டியர் சாரு அப்பா, ஹௌ ஆர் யூ. உருட்டி பொரட்டி ஒருநாவல் எழுதி இருக்கிறேன். நீங்க படிச்சுட்டு ... Read more
Published on January 08, 2021 00:02
January 7, 2021
2. இன்று pet shop செல்ல வேண்டும்…
கடந்த மார்ச்சிலிருந்து வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை. ஏப்ரல் மாதமோ என்னவோ ஒருநாள் காய்கறிக் கடைக்கு செல்ல வேண்டி வந்தது. திருவிழாக் கூட்டம். என்னதான் residency on earth எவ்வளவு காலம் என்பது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என நான் நம்பினாலும் இந்த மண்ணில் இன்னும் கொஞ்சம் வேலை பாக்கியிருக்கிறது என்பதால் ஆபத்தை விலைக்கு வாங்க விருப்பம் இல்லை. அதனால் கடைக்குச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்து விட்டாள் அவந்திகா. எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பு மேனேஜரும் பணியாளர்களும் சமயங்களில் ... Read more
Published on January 07, 2021 16:17
ஷோபா சக்தியின் இச்சா
ஷோபா சக்தியின் இச்சா நாவலுக்கு கடைந்தெடுத்த கயவாளித்தனமான ஒரு மதிப்புரை பார்த்தேன். ஒரு இலக்கியப் பத்திரிகையில். இலக்கியம் என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு பல சமூக விரோதிகள் உலவிக் கொண்டிருக்கிறார்கள். மதிப்புரை எழுதியவரை விட அந்தப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருப்பவர்கள்தான் சமூகத்துக்கு அபாயகரமானவர்கள் என்று தோன்றுகிறது. சமூகம் ரேப்பிஸ்டுகளால் நிரம்பியிருப்பது போல் இலக்கிய உலகம் ரவுடிகளாலும் லும்பன்களாலும் சமூக விரோதிகளாலும் நிரம்பியிருக்கிறது.
Published on January 07, 2021 03:29
January 6, 2021
கௌஹர் ஜான்
1902 நவம்பர் 14-ஆம் தேதி. கல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அடுத்தடுத்த அறைகளில் ஒரு ரெடிமேட் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் ரெக்கார்டிங் அன்றுதான் நடக்கப் போகிறது. அதுவரை எந்தப் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டதில்லை. சினிமாப் பாட்டு அல்ல. அந்தக் காலத்து சாஸ்த்ரீய சங்கீதம். தென்னிந்தியாவின் கர்னாடக சங்கீதம் மாதிரி வடக்கில் ஹிந்துஸ்தானி. அதில் அப்போது உலகப் புகழ் பெற்று விளங்கியவர் கௌஹர் ஜான். இந்தியாவில் வேலை செய்த வில்லியம் என்ற ஆர்மீனிய ... Read more
Published on January 06, 2021 09:33
January 5, 2021
ஆ. மாதவன்
December 20, 2015 தினமணி இணைய இதழில் இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி ஆ. மாதவன் பற்றி எழுதியிருந்தேன். பிறகு உடனேயே அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் பலரிடமும் அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டேன். ஜெயமோகனைக் கூட தொடர்பு கொண்டு கேட்டேன். ஆனால் அவர் அப்போது கனடாவில் இருந்தார். அதற்குப் பிறகு பழுப்பு நிறப் பக்கங்களின் மற்ற எழுத்தாளர்களில் மூழ்கி விட்டேன். இருந்தாலும் அவ்வப்போது அவரைத் தொடர்பு கொள்வது சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டே ... Read more
Published on January 05, 2021 04:28
January 4, 2021
2. சிவப்புக் கலர் பால் பாய்ண்ட் பேனா
இன்று ஒரு பிரபல பில்டர் போன் செய்து உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் சார் என்றார். ரொம்ப நாளாக எனக்கு சிவப்பு நிற பால் பாய்ண்ட் பேனா தேவைப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் பெரும்பாலும் நோட்டுப் புத்தகத்தில்தான் எழுதுகிறேன். ஒரு நண்பர் நோட்டுப் புத்தகமும் வாங்கிக் கொடுத்து விட்டார். நாலு நோட்டு ஆர்டர் பண்ணி ஒண்ணுதான் வந்தது. மூணுக்கு புகார் செய்திருக்கிறார். அமேஸான். ஆக, இன்றைய தேவை சிவப்புக் கலர் பால் பாய்ண்ட் பேனா. அதைக் கேட்டேன். நாளை ... Read more
Published on January 04, 2021 07:48
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

