என் நாவலைப் படித்துப் பார்த்து ரெண்டு வார்த்தை திட்டுங்கள் அப்பா என்று வரும் கடிதங்களையெல்லாம் குப்பையில் தள்ளி விட்டு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்தான். ஆனால் எனக்கும் கேளிக்கை தேவைப்படுகிறது அல்லவா, அதனால் இப்படிப்பட்ட சிறு விலகல்கள். இன்று அப்படி வந்த ஒரு கடிதம் இது: ஒருமுறை உங்கள் பேட்டியைக் கேட்ட பிறகு லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களைப் படிக்க ஆரம்பித்தேன். அவர்களில் யோசா, போர்ஹேஸ், ரொபர்த்தோ பொலான்யோ ஆகியவர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களைக் கவர்ந்த ...
Read more
Published on January 10, 2021 17:12