சாரு நிவேதிதா's Blog, page 186
November 2, 2021
சனல்லாஹ் இப்ரஹீம்
Sonallah Ibrahim எகிப்தின் மிக முக்கியமான எழுத்தாளர். ஏராளமாக எழுதியிருக்கும் இவர் நாஸர் காலத்தில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். செய்த குற்றம், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததுதான். இப்போதும் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி விரிவாக அ-காலம் தொகுப்பில் எழுதியிருக்கிறேன். அ-காலம் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பதிப்பக அரங்கில் கிடைக்கும். இப்ரஹீம் பற்றிய கட்டுரையிலிருந்து: 2003-இல் இப்ரஹீம் எகிப்திய அரசின் உயரிய இலக்கிய விருதான அராபிய நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுவாக கலகக்காரர் ... Read more
Published on November 02, 2021 23:33
November 1, 2021
புத்தக விழாவில் என் புதிய புத்தகங்கள்
கடந்த ஆறு மாதங்களாக நண்பர் ஸ்ரீராம் மருத்துவமனை முடிந்து வீட்டுக்கு வந்ததும் மனைவியிடம் போனில் பேசி விட்டு நள்ளிரவு வரை நான் இணைய தளத்தில் எழுதியவற்றை சப்ஜெக்ட்வாரியாகத் தொகுத்துக் கொண்டு இருக்கிறார். ஆறு மாதமாக இதேதான் வேலை. தூங்கி எழுந்து மறுநாள் மருத்துவமனை. நண்பர்களைச் சந்திப்பது இல்லை. சினிமா இல்லை. வேறு பொழுதுபோக்கு இல்லை. மாதம் ஒருமுறை மனைவியைப் பார்க்க ஊருக்குப் போய் வருவார். இப்படியாக பத்து புத்தகங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். அந்தப் பத்தையும் இந்தப் புத்தக ... Read more
Published on November 01, 2021 23:49
ஸ்மாஷன் தாரா
2020 அக்டோபர் வாக்கில் – அதாவது சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு என் கவிதைகளைத் தொகுத்து என் சிநேகிதியிடம் கொடுத்தேன். Mediocre என்று சொல்லித் திருப்பி அனுப்பி விட்டார். அவர் ஒரு cynic என்று நான் நினைப்பதால் இன்னொரு சிநேகிதியிடம் கொடுத்தேன். இவர் அவரை விடக் கடுமையான cynic என்று தெரியும். இருந்தாலும் வேறு யாரிடம் கொடுப்பது என்றும் தெரியாததால் கொடுத்தேன். இவரும் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டார். ஆனால் நான் சளைத்து விடவில்லை. உங்களுக்கு ஒக்தாவியோ ... Read more
Published on November 01, 2021 02:33
October 30, 2021
மெஜந்த்தா
நான் வண்ணங்களின் ரசிகன். பிஸ்மில்லா பாடலை தினமும் முப்பது தடவையாவது கேட்டு விடுவேன். எழுதிக் கொண்டிருக்கும்போது அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். இந்தப் பாடலில் கைலாஷ் அணிந்திருக்கும் வாடாமல்லி நிறச் சட்டைத் துணியை எங்கேயாவது பார்த்தால் எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் வாங்கி விடுவது என்ற வெறியில் இருக்கிறேன். நாளை என்பதே நம் கையில் இல்லை என்கிறார் புனித். ஆனால் ஹெடோனிஸ்டுகளுக்கு ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட்டம்தான். கேம் ஆஃப் த்ரான்ஸ் படத்தில் ... Read more
Published on October 30, 2021 06:54
vibrations…
25 ஆண்டுகளுக்கு முன்பு. ஸீரோ டிகிரி வெளிவந்த நேரம். பல பத்திரிகைகளில் சர்ச்சையாக இருந்தது. சீ அசிங்கம், மலம். இந்த மாதிரி. தினமலரில் மட்டும் என் நண்பர் ரமேஷ் ஸீரோ டிகிரியிலிருந்து ஐந்து பக்கங்களை எடுத்து வாரமலரில் வெளியிட்டு, மணியார்டரில் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள என் விலாசத்தையும் கொடுத்தார். பின்னால் பிரச்சினை வந்து விடக் கூடாது என்று புத்தகத்தை முழுமையாகவே படித்து விட்டுத்தான் செய்தார். 800 மணியார்டர்கள் வந்தன. (நான்தான் புத்தகத்தை வெளியிட்டவன். தமிழில் எந்தப் பதிப்பகமும் ... Read more
Published on October 30, 2021 03:34
October 28, 2021
ஓப்பன் பண்ணா: An existentialist classic on ‘Ennui’
இன்று தமிழில் பெருவாரியாக எழுதப்படும் எதார்த்த பாணி எழுத்து எப்படிப்பட்டது? அவ்வகை எழுத்தை உருவாக்குபவர்கள் மனித வாழ்க்கையை மாட்டுத் தொழுவத்தைப் போல் காண்பவர்கள் என்று கருதுகிறேன். மாடுகளுக்கு என்ன தேவையோ அது மனிதர்களுக்கும் கிடைத்து விட்டால் போதும் என்று நினைக்கும் ’ஸில்ஸிலா’ அது. அப்படி நினைத்த கம்யூனிசம் என்ன ஆயிற்று என்று நம் எல்லோருக்கும் தெரியும். வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் அளவுக்கு நாம் நம்மைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ... Read more
Published on October 28, 2021 17:11
ரமண மஹரிஷி, தலப்பாக்கட்டி பிரியாணி, ‘ஆன்வி’, எதார்த்த பாணி எழுத்து, ஓப்பன் பண்ணா… (Revised)
ஐயா, நான் மிகவும் வியப்பது பிரமிப்பு அடைவது திருவாளர்கள் ———————— போன்ற எழுத்தாளர்களை. இவர்களது நாவல்கள் கி்.ரா. அவர்கள் போல் வட்டார வழக்கு நடை. போலித்தனம் இல்லை. அடித்தட்டு மக்களை யதார்த்தமாக சித்தரிக்கிறது. இவர்களது நாவல்கள் இந்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட இலக்கிய சாதனையாளர்கள் தங்களின் பழுப்பு நிறப் பக்கங்கள் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட வேண்டும். பாலா. டியர் பாலா சார், தாங்கள் என்னை விட ... Read more
Published on October 28, 2021 03:59
October 26, 2021
அய்யர் ப்ளாக்
யாவரும் கேளிர் என்று நினைக்கும் எனக்கு ஜாதிப் பற்றோ ஜாதி வெறுப்போ எப்படி இருக்க முடியும்? அதனால் எனக்கு ஜாதி என்பது ஒரு பெயர் மாதிரிதான். என்னால் ஒருத்தரை செட்டியார் என்றோ நாயுடு என்றோ அய்யர் என்றோ கூப்பிட முடியும். அது ஒரு பெயர். இன்றைய தினம் நகர வாழ்வில் அதுதான் நடந்துள்ளது. எனக்கு நகரம்தான் தெரியும். கிராமத்தில் இப்படி இல்லை என்றும் தெரியும். இந்த நண்பரை அய்யர் என்றே அழைத்து வருகிறேன். பிரஸன்ன வெங்கடேசன் என்று ... Read more
Published on October 26, 2021 20:54
October 24, 2021
இரண்டு குறிப்புகள்
என் ஆக்ஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் கடந்த இருபது மாதங்களாக ஆன்லைன் பயன்பாட்டுக்கு உதவுவதில்லை. வங்கி மறுத்து விடுவதாக அறிவிப்பு வருகிறது. போனில் கேட்டால் நேரில் வா என்கிறார்கள். ஐசிஐசிஐ வீட்டுக்கு எதிரே உள்ளது. இருபது மாதங்களாக நேரில் செல்ல நேரம் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிக்கு போன் செய்தால் இதோ அதோ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக ஸ்ரீராம் மற்றும் அன்னபூர்ணி மூலம் சாமான்களைத் தருவித்துக் கொண்டு பெரிய ... Read more
Published on October 24, 2021 04:49
October 19, 2021
அ. மார்க்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
சமீபத்தில் ஒரு நண்பர் அ. மார்க்ஸை எங்கே பார்க்க முடியும் என்று கேட்டார். மனிதன் எங்கெல்லாம் துயருறுகின்றானோ, எங்கெல்லாம் ஒடுக்கப்படுகின்றானோ அங்கெல்லாம் அ. மார்க்ஸைப் பார்க்க முடியும் என்றேன். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். கடந்த வாரம் ஒரு என்கௌண்டர் மரணம். அடுத்த நாள் அந்த இடத்தில் அ. மார்க்ஸ் நிற்கிறார். எனக்கு அ. மார்க்ஸை நினைக்கும் போதெல்லாம் Saint Paul of the Cross ஞாபகம் வருவார். துயரப்படுவோரையெல்லாம் தேடித் தேடிப் பணி செய்த ஒரு மகான் ... Read more
Published on October 19, 2021 01:44
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

