சாரு நிவேதிதா's Blog, page 188

October 9, 2021

வன யோனா பற்றி அபிலாஷ்

அராத்து ஒரு நல்ல பாலியல் உளவியல் கதை எழுதியிருக்கிறார் – “வன யோனா”. தி.ஜா, ராஜேந்திர சோழன் பாணி கதையை தன்னுடைய கலவையான மொழியில் சொல்லி இருக்கிறார். கதையின் முடிவு, resolution, திருப்பம் பொருத்தமாக அமையவில்லை. ஆனாலும் முக்கியமான கதை தான். இந்த விழுமியங்கள் நம்முடைய மொழியை இருட்டாக மொழுமொழுவென மாற்றி விடுகின்றன. இத்தகைய கதைகள் ஒரு வெளிச்சத்தை சட்டென கொண்டு வந்து தரையில் துலக்கி விட்டது போல பண்ணுகின்றன.இதை அப்படியே திருப்பி பெண்களின் தரப்பில் இருந்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2021 07:47

October 8, 2021

வன யோனா: சிறுகதை: அராத்து

“பொண்ணு பாக்கறப்ப தனியா பேச விடுவாங்க இல்ல, அப்பவே புடிச்சி கிஸ் பண்ணிடு மச்சி ” என்றான் சயன் . நாளைக் காலை மதுரைக்குச் சென்று பெண் பார்க்க இருக்கும் அவலாஞ்சி , இன்று நண்பன் சயனுடன் பியர் அடித்துக்கொண்டு இருக்கிறான். அவலாஞ்சியின்  அப்பா மின் துறையில் அவலாஞ்சியில் வேலை பார்த்தபோது இவன் பிறந்ததால் அவலாஞ்சி என்றே பெயர் வைத்து விட்டார். பையன் ஊட்டியில் தான் படித்தான். ஊட்டி கான்வெண்ட் என “ரேஞ்சை” ஏற்றிக்கொள்ளாதீர்கள். ஊட்டியில் அரசுப்பள்ளியில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2021 09:10

காட்டியா ஜலேபி: சிறுகதை: ஸ்ரீராம் சோமசுந்தரம்

நான் குடியிருப்பது மின்ட்டில்.  சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் ஏழு கிணற்றில். ஆங்கிலத்தில் செவன் வெல்ஸ். அழகியசிங்கர் விருட்சம் அனுப்பும் போதெல்லாம் செவன் ஹில்ஸ் என்றே எழுதி அனுப்புவார். மருத்துவமனைப் பணி முடிந்து வீட்டுக்கு வரும் போது கேட்டில் விருட்சம் சொருகப்பட்டிருக்கும். ஒரு இதழ் கூடத் தவறியதில்லை. எல்லாம் செவென் ஹில்ஸில் இருக்கும் வேங்கடாசலபதி அருள். அசோகமித்திரனின் ஆகா கான் மாளிகையை விருட்சத்தில்தான் படித்தேன். காந்தி என்னும் தந்தையை, கணவனை மிகக் காத்திரமாக விமர்சனம் செய்த நாடகம். யானை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 08, 2021 03:49

October 7, 2021

டன் டன் டன் டண்டனக்கர: சிறுகதை: அராத்து

அதிகாலை ஐந்து மணிக்கு போன் அடித்தால் பெரும்பாலும் எனக்குக் கேட்காது. அதிசயமாக எழுந்து மொபைலை எடுத்தேன். தங்கை. அப்பா இறந்து விட்டார் என்று தோன்றியது.போனை எடுத்தேன். “அப்பா…” “ஆமாண்ணா.“ அப்பாவுக்கு இப்போது சாகும் அளவுக்கு ஏதுமில்லை. அவர் சாவை யாரும் எதிர்பார்க்கவுமில்லை. அதனால், தங்கையின் அழைப்பைப்  பார்த்ததுமே அப்பா இறந்து விட்டார் என்று எனக்குத் தோன்றியது ஆச்சர்யமானது ஆகிறது. எனக்கு இல்லை, உங்களுக்கு. எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஆளுக்கு ஒரு ஊரில் இருந்தோம். அதனால் எப்படிச் செல்வது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2021 05:32

டன் டன் டன் டண்டனக்கர சிறுகதை: அராத்து

அதிகாலை ஐந்து மணிக்கு போன் அடித்தால் பெரும்பாலும் எனக்குக் கேட்காது. அதிசயமாக எழுந்து மொபைலை எடுத்தேன். தங்கை. அப்பா இறந்து விட்டார் என்று தோன்றியது.போனை எடுத்தேன். “அப்பா…” “ஆமாண்ணா.“ அப்பாவுக்கு இப்போது சாகும் அளவுக்கு ஏதுமில்லை. அவர் சாவை யாரும் எதிர்பார்க்கவுமில்லை. அதனால், தங்கையின் அழைப்பைப்  பார்த்ததுமே அப்பா இறந்து விட்டார் என்று எனக்குத் தோன்றியது ஆச்சர்யமானது ஆகிறது. எனக்கு இல்லை, உங்களுக்கு. எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஆளுக்கு ஒரு ஊரில் இருந்தோம். அதனால் எப்படிச் செல்வது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2021 05:32

அ. மார்க்ஸ் க்ளப் ஹவுஸில்…

அ. மார்க்ஸ் என் ஆசிரியர்களில் ஒருவர். நானும் பார்வையாளனாகக் கலந்து கொள்வேன். நீங்களும் கலந்து கொண்டால் மகிழ்வேன். 10.10.2021. Sunday 6.00 p.m. Poster Design: Raghunathan Murugesanhttps://www.clubhouse.com/…/zero…/joX...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2021 02:10

October 5, 2021

எழுதுவதற்கு உகந்த நேரம் (சிறுகதை)

இந்த விஷயத்தைப் பற்றிப் பல எழுத்தாளர்களும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.  சிலருக்குக் காலை நேரம்.  பலருக்கு இரவு. அதோடு, எழுதும் நேரம் குறித்து பல சுவாரசியமான தகவல்களும் அவர்களின் பதிலில் கசிவதுண்டு. அதனால் இந்தக் கேள்வியைக் கேட்பவர்களும் மிகுந்த உற்சாகத்துடனே கேட்டு வைக்கிறார்கள்.  என்னிடமும் பல நண்பர்கள் இதைக் கேட்பதுண்டு.  முந்தாநாளும் ஒரு நண்பர் கேட்டார்.  அவருக்கு என்ன பதில் சொன்னேன் என்று ஞாபகம் இல்லை.  எதுவுமே படிக்காதவன் கேள்வித் தாளைப் பார்த்து என்ன பதில் எழுதுவான்?  அப்படித்தான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2021 07:18

October 1, 2021

முதுமை பற்றி அராத்து

சாரு இந்தியாவில் முதுமையை எப்படி கையாள்கிறார்கள் என கொலைவெறியுடன் எழுத , வளன் அம்பேரிக்காவில் முதுமையை எப்படி ஜாலியாக எதிர்கொள்கிறார்கள் , அவர்களை மற்றவர்கள் எப்படி டிரீட் செய்கிறார்கள் என்று எழுதினார். தொடர்ச்சியாக பெருந்தேவியின் போஸ்டும் கண்ணில் பட்டது. 92 வயதிலும் ஆக்டிவ் செக்ஸ் லைஃப் என்பது போல அவர் எழுதியிருந்தது நினைவில் வருகிறது. அதில் மட்டும்தான் கொஞ்சம் குழப்பம் நிலவுகிறது. இருவருமே 92 எனில் சாத்தியம் இல்லை. 92 – 28 எல்லாம் இங்கே விட்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2021 16:43

யார் அந்த பப்ளிஷர்?

கேள்வி: சாரு, யார் அந்த பப்ளிஷர் உங்களுக்கு சாபம் விட்டது? நீங்கள் அது பற்றிச் சொல்லவே இல்லையே? வினித், கும்பகோணம். பதில்: ஏங்க வினித், என் உள்வட்டத்தில் இருந்து கொண்டே இந்தக் குசும்பு? அவர் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் விட்ட சாபம் இப்போதுதான் expire ஆகும்போல் தெரிகிறது. இப்போது அவர் பெயரை வேறு கேட்டு, யாராவது என் நலம்விரும்பி அவரிடம் போய் அதைச் சொல்லி, அந்த சாபத்தை அவர் மீண்டும் உயிர்ப்பிக்கவா? வாயைக் கிளறாதீர்கள். ஔரங்கசீப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 01, 2021 02:15

September 30, 2021

லிஃப்கோ டிக்‌ஷனரியும் க்ரியாவும்…

ஒரு நெருங்கிய நண்பர் நேற்று போன் செய்து “30 ஆண்டுகளுக்கு முன்னால் நிறப்பிரிகையிலோ அல்லது வேறு எதிலோ க்ரியா டிக்‌ஷனரி வெளிவந்த புதிதில் அதை விட லிஃப்கோ டிக்‌ஷனரியே தேவலாம் என்பது போல் எழுதியிருந்தீர்களே, ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார்.  நன்றாக ஞாபகம் உள்ளது என்றேன்.  அப்புறம் எப்படி இப்போது க்ரியா டிக்‌ஷனரி ராமகிருஷ்ணனின் முக்கியமான பங்களிப்பு என்று சொல்கிறீர்கள் என்று கட்டையைப் போட்டார். கொஞ்சம் திகைத்த நான் “கனிந்து விட்டேன் போலிருக்கிறது” என்று சமாளித்தேன்.  அப்போதும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 30, 2021 22:38

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.