சாரு நிவேதிதா's Blog, page 191

September 17, 2021

மதுவும் புத்தகமும்

மேற்கண்ட தலைப்பில் ஒரு ப்ளாக். அதில் எழுதுபவர் மதுநிகா சுரேஷ். மதுவின் மங்கியதோர் நிலவினிலே மிக வித்தியாசமான நிலவியலைக் கொண்டு இயங்குகிறது. அதுவே அதன் பலமாகவும் இருக்கிறது. அவர் தொடர்ந்து எழுத வேண்டும். மங்கியதொரு நிலவினிலே ….. – மதுவின் பக்கங்கள் (madhuvumputhagamum.blog)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 17, 2021 09:35

September 16, 2021

பிடித்த பத்து பேர்

தனக்குப் பிடித்த பத்து பேர் என்று ஒரு பட்டியலைப் பல நண்பர்களும் முகநூலில் முகம் தெரியாத தோழிகளும் தோழர்களும் அடிக்கடி வெளியிடுவதைக் காண்பதுண்டு.  இதை ஆரம்பித்து வைத்தது க.நா.சு. என்று நினைக்கிறேன்.  வெகுஜன வெளியில் சுஜாதா.  சுஜாதாவின் பட்டியலில் எப்போதும் இடம் பிடித்தவர் ஒரு கவிஞர்.  இல்லை, நீங்கள் நினைப்பவர் இல்லை.  இவர் பெயர் “ப”வில் ஆரம்பிக்கும்.  அந்தப் பெயரை சுஜாதாவின் பட்டியலில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சுஜாதாவின் fetishதான் இப்படி வேறொரு ரூபம் எடுத்து வெளிவருகிறது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2021 23:28

என்னைச் சந்திக்க ப்ரூ ரூமுக்கு வருவாரா த்ரிஷா?

இந்தியாவிலேயே ரொம்பக் கட்டுப்பெட்டி சமூகம் தமிழ்நாடுதான்.  இன்று காலை ஃபாத்திமா பாபுவிடமிருந்து ஒரு வாட்ஸப் செய்தி.  தெரிந்த செய்திதான் என்றாலும் குஷ்வந்த் சிங் சம்பந்தப்பட்டது என்றால் திரும்பத் திரும்ப படிக்கலாம்.  குஷ்வந்த் இல்லஸ்ட்ரேடட வீக்லியின் ஆசிரியராக இருந்த காலம்.  அவருக்கு ஒரு போன் வருகிறது.  நான் நர்கீஸ் தத் பேசுகிறேன். எந்த நர்கீஸ் தத்?  சினிமா நடிகை? ஆமாம். யார்?  மதர் இண்டியா… ஆமாம்.  ஆமாம்.  எனக்கு உங்களைப் பார்க்க வேண்டும்.  வரலாமா? வாருங்கள். அரை மணி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2021 08:34

September 15, 2021

சிறுகதை நேரம்: இன்றைய வாசிப்புக்கான லிங்க்

சற்று முன்னர் எழுதிய குறிப்பில் சில மாற்றங்கள். ஒலிச் சித்திரம் என்பது சினிமாவை வானொலியில் கொடுக்கும்போது சொல்லப்படும் வார்த்தை. நான் சொல்ல நினைத்தது வானொலி நாடகங்கள். ஒலிச் சித்திரம் அல்ல. இன்னொரு முக்கிய விஷயம். என்னை, குழந்தை மாதிரி என்று முதலில் சொன்னவரே ஃபாத்திமா பாபுதான். பாருங்கள், நெருங்கிய நண்பர்கள் என்றால் மறந்து விடுகிறது. உமாவுக்கும் மீராவுக்கும் முன்பே சொல்லி விட்டார். இன்றைய கதை: கோடம்பாக்கம். லிங்க்: https://www.clubhouse.com/club/%E0%AE...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2021 22:59

சிறுகதை நேரம்

ஆதியிலே சப்தம் இருந்தது.  நான் அந்த சப்தத்தின் அடிமை.  சிலர் நாத பிரம்மம் என்கிறார்கள்.  ஓம் என்ற ஒலி ஒரு குறியீடு.  இஸ்தாம்பூலில் உள்ள நீல மசூதியின் பாங்கு உலகின் தலைசிறந்த பாங்குகளில் ஒன்று எனப் படித்ததும் உடனடியாகக் கிளம்பி இஸ்தாம்பூல் சென்றேன்.  தஞ்சாவூர்க் காவிரி தன் மைந்தர்களுக்குக் கொடுத்த கொடையே காவிரியின் மைந்தர்கள் தம் வாழ்நாள் பூராவும் சப்தத்தின் அடிமையாகவும் சப்தத்தின் உபாசகராகவும் வாழுமாறு மாற்றுவதுதான்.  நாதத்தின் ஒரு வடிவமே கதையை வாசிக்கக் கேட்பது.  இன்றைய ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2021 21:54

An Excerpt from Marginal Man

Here is an excerpt from my novel Marginal Man. It is set in the India of the Indian National Congress. The present Bharatiya Janata Party regime is no better. The riots of Delhi in 1984 and the Gujarat in 2002 have one thing in common – both happened under the surveillance of the police. Now ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2021 20:54

September 14, 2021

சிறுகதை நேரம்: ஃபாத்திமா பாபு: மாயமான் வேட்டை

நேற்று இரவு ஒன்பது இருபதுக்கு க்ளப் ஹவுஸில் ஃபாத்திமா பாபுவின் சிறுகதை நேரம் தொடங்கியது.  ஒன்பது முப்பதுக்குக் கதையை வாசிக்க ஆரம்பித்தார்.  நேற்றைய கதை என்னுடைய மாயமான் வேட்டை.  பொதுவாக தமிழ்ச் சூழலில் கதையையோ கவிதையையோ வாசித்துக் கேட்பது எனக்கு ஆகாத காரியமாக உள்ளது.  காரணம், நான் அல்ல.  வாசிப்பவர்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை.  அதிலும் அந்தத் துறையில் பிரபலமாக இருப்பவர்கள் வாசிப்பதைக் கேட்கவே சகிக்கவில்லை.  கவிஞர்களின் கவிதை வாசிப்பும் கொடுமை.  ஆனால் ஐரோப்பிய மொழிகளில் இது போன்ற ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2021 23:06

அராத்துவின் புதிய பன்றி கவிதை

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினால் ஸ்ரீராமுக்கு ஒரே ஜாலிதான் போல. நெரூதாவின் நாய்க் கவிதையை எனக்கு அனுப்பினார். மணி மாலை 4.46. என் பொருட்டு எழுதியதாகத் தெரியவில்லை. உடனே அராத்துவுக்கு அனுப்பி இதற்குப் பன்றி கவிதை தேவை என்று எழுதினேன். 5.02க்கு அவர் பன்றி கவிதை அனுப்பினார். எனக்கு நகுலனும் சுந்தர ராமசாமியும்தான் ஞாபகம் வருகிறார்கள். இப்படி எழுதுவதற்கு எத்தனை நாய்க் கவிதை வரப் போகிறதோ, பயமாக இருக்கிறது. சும்மா கிடந்த சீனி நெரூதா புண்ணியத்தால் பெரும் கவியாகி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2021 04:56

September 13, 2021

ஃபாத்திமா பாபு குரலில் மாயமான் வேட்டை- இன்று இரவு

https://m.facebook.com/story.php?stor... மேற்கண்ட சுட்டியின் மூலம் இன்று இரவு ஒன்பது இருபதுக்கு இணைந்தால் ஃபாத்திமா பாபுவின் குரலில் மாயமான் வேட்டை கதையைக் கேட்கலாம். நானும் கலந்து கொள்கிறேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2021 23:51

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.