சாரு நிவேதிதா's Blog, page 189
September 30, 2021
இப்படிச் சொன்னால்தான் புரியுமா?
புதுவை ஞானம் என்று ஒரு நண்பர். 35 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரியில் பழக்கம். எல் ஐ சியில் வேலை. அப்போதைய எல் ஐ சி சம்பளம் எங்கள் அரசாங்க சம்பளத்தையெல்லாம் விட மூன்று மடங்கு ஜாஸ்தி. பொதுவுடைமைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவர். அவர்தான் அந்தப் பத்திரிகையை எனக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு நான் ஃபிடல் காஸ்ட்ரோவுக்குக் கடிதம் எழுதிப் போட்டு, அந்தப் பத்திரிகை பல காலம் எனக்கு வந்து கொண்டிருந்தது. ஏழை எழுத்தாளன், சந்தாவெல்லாம் அனுப்ப முடியாது என்று ... Read more
Published on September 30, 2021 17:35
எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள்
பின்வரும் கேள்வியும் பதிலும் இன்று மாலை நடந்த அக்கப்போருக்கு முன்பே எழுதப்பட்டது. பிடிக்காத எழுத்தாளர்கள் இத்தனை பேரைச் சொல்கிறீர்கள், பிடித்தவர்கள்? காயத்ரி ஆர். பதில்: என் வாழ்க்கை வரலாற்றையே கேட்கிறாய். சொல்கிறேன். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் பிற்பகுதி மற்றும் எண்பதுகளில் நான் பெரிதும் இலக்கியத்தை விடவும் தத்துவவாதிகளையே பயின்று கொண்டிருந்தேன். முதலில் படித்தது Émile Durkheim. இந்தத் தத்துவவாதிகள் பற்றி நான் இப்போது எதுவும் எழுதப் போவதில்லை. கூகிளில் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். 1980இல் நிலைமை அப்படி ... Read more
Published on September 30, 2021 11:16
சாரு இப்படியும் இருக்கிறார்: சமஸ்
முகநூல் என்பதை என் நண்பர்கள் பலர் தங்கள் எழுத்தைப் பலருக்கும் கொண்டு சேர்ப்பதற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். நானும் அப்படியே. என் தளத்தில் எழுதுவதை முகநூலிலும் பகிர்கிறேன். ஆனால் என் நண்பர்களில் பலர் முகநூலில் புழங்கும் பலரது பதிவுகளைப் படித்து பைத்தியமே பிடித்துப் புலம்புகிறார்கள். முகநூலிலிருந்து ஒரு வாரம் வெளியே வந்து மீண்டும் நுழைகிறார்கள். காரணம், புற உலகில் நாம் ஹலோ கூட சொல்லத் தயங்கும் லும்பன்களின் எழுத்தையெல்லாம் அங்கே படித்து அதை மனதுக்குள் கொண்டு செல்கிறோம். கக்கூஸில் ... Read more
Published on September 30, 2021 10:09
எனக்குப் பிடித்தவை, எனக்குப் பிடிக்காதவை…
ஜி.குப்புசாமியின் கட்டுரைக்கு எதிர்வினை பின்வருவது. ஜி. குப்புசாமியின் கட்டுரை லிங்க்: https://www.arunchol.com/g-kuppusamy-... ஒரு மாதத்துக்கு முன்பு ராணி திலக் போன் செய்தார். எடுக்க முடியவில்லை. ஔரங்கசீப் முடிந்ததும் அவரோடு பேச வேண்டும். ஒரு புதைபொருள் அகழ்வாராய்ச்சியாளரைப் போல் பழைய எழுத்தாளர்களைத் தோண்டி எடுத்துக் கொண்டிருக்கிறார் ராணி திலக். அதேபோல் நற்றிணை யுகனும் போன் செய்தார். அவரும் என் உற்ற நண்பர். என்னவோ தெரியவில்லை, ஔரங்கசீப்பை முடிக்காமல் போனைத் தொடவே முடியவில்லை. இது ஒரு மனநிலை. புரிந்து கொள்வீர்கள் ... Read more
Published on September 30, 2021 02:12
September 29, 2021
கால சுப்ரமணியனின் லயம்
சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் ஸ்ரீராமுடன் திருநெல்வேலி சென்றிருந்தேன். இலக்கியவாதிகள் நிறைந்த ஊர். ஆனால் அவர்கள் யாருக்கும் என்னைப் பிடிக்காது. எனக்கும் அப்படியே. நான் சென்றிருந்தது ஒரு அம்மனை தரிசிக்க. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அத்தனை பிரபலம் அடையாத அம்மன். முஸ்லிம் பெண்கள்தான் அதிகம் காணப்படுவார்கள். கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை. நான் இரண்டு முறை சென்றிருக்கிறேன். கேட்டது கிடைத்தது. ஆனால் நான் கேட்பதும் கொடுப்பது மாதிரி சின்னதாகத்தான் கேட்பேன். நோபல் பரிசு வேண்டும் என்றெல்லாம் பேராசையாகக் கேட்பதில்லை. ... Read more
Published on September 29, 2021 04:59
September 28, 2021
புதிய புத்தகங்கள்
புத்தக விழா வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடைய புதிய புத்தகங்கள் எதுவும் புத்தக விழாவிலோ அதற்குப் பிறகோ வரவில்லை. கடைசியில் வந்த புத்தகம் நிலவு தேயாத தேசம்தான். இடைப்பட்ட காலத்தில் நான் எத்தனையோ எழுதி விட்டேன். என் வாழ்நாளில் நான் அதிகம் எழுதியது என்றால் புதிய புத்தகங்கள் வராத இந்த கால கட்டம்தான். தியாகராஜா நாவல் 200 பக்கங்கள் – இன்னும் ஒரு நூறு எழுதினால் முடிந்து விடும். அசோகா 300 பக்கங்கள் – குறிப்புகள் ... Read more
Published on September 28, 2021 04:36
September 27, 2021
Body shaming குறித்து பெருந்தேவி
”வயசாய்டுச்சே”, ”எழுபது வயசாச்சு, இன்னுமா இப்படிப் பேசறீங்க” என்றெல்லாம் அக்கறை என்ற பெயரில் தொடர்ந்து வன்முறைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பவன் நான். மிக நெருங்கிய நண்பர்கள் கூட விதிவிலக்கு இல்லை. கொடுமை என்னவென்றால், நாற்பது வயதிலிருந்தே இந்த அக்கிரமத்தை எதிர்கொண்டு வருபவன் நான். ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலை ஆறு மணி அளவில் சாந்தோம் தேவாலயம் வாசலில் ஒரு நண்பர் என்னுடைய சிவந்த கண்களைப் பார்த்து “ஏன் சாரு, நேத்து நைட் தூங்கலியா, அடடா, வயசானா இப்டித்தான் நைட்ல தூக்கம் ... Read more
Published on September 27, 2021 21:22
அடியேன் தொடாத ஏரியா
சாருவோட நான் ஔரங்கசீப் படிப்பதற்காக binge app download செய்தேன். ரெண்டே நாள்ல இதுவரை வந்த அத்தியாயங்கள் முழுக்க படிச்சு முடிச்சிட்டேன். இப்போ அடுத்த அத்தியாயங்கள் வரும்வரை காத்திருக்கணும் இதுதான் இப்படிப் படிப்பதில் உள்ள இம்சை.நாவல் பட்டாசு. சாரு இதுவரை தொடாத ஏரியா. ஜ்யோவ்ராம் சுந்தர் (முகநூலில்)
Published on September 27, 2021 05:02
September 26, 2021
கொண்டாட்டம்: வளன் அரசு
புலம்பெயர்ந்து வாழ்வதில் இருக்கும் மிகப்பெரிய நன்மை நம் சொந்த தேசத்தைக் குறித்து நன்றாகத் தெரிந்து கொள்ள முடியும் என்பதுதான். அந்த வகையில் நம் சமூகம் எவ்வளவு கீழ்மையாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். இதை வெளியே சொன்னால் நம்மை ஏதோ தீவிரவாதியைப் போல நடத்துகிறார்கள். அன்பின் பெயரால் நடக்கும் வன்முறையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உண்மையான அன்பு என்பது என்ன தெரியுமா? சாம்பார் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். சாப்பிடும் ஆர்வத்தில் உங்கள் சட்டையில் ... Read more
Published on September 26, 2021 05:43
September 25, 2021
கிழட்டுத்தனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனோடு இன்று நாகேஸ்வர ராவ் பூங்காவுக்குப் போயிருந்தேன். பூங்காவில் பெருங்கூட்டம். இனிமேல் போக மாட்டேன். எம்மார்சி நகர் பெங்களூர் மாதிரி இருக்கிறது. திரும்பின இடமெல்லாம் பூங்கா. பூங்காவில் ஆட்களே இல்லை. பெரிய பெரிய சாலைகள். சாலைகளிலும் ஆட்கள் இல்லை. ராகவன் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். இரண்டு தினங்களுக்கு முன்பு நாங்கள் வேலை பார்த்த அஞ்சலகத் தலைமையகத்துக்குச் சென்றிருந்தாராம். அவரைப் பார்த்த ஒவ்வொருவருமே “ஐயோ” என்றுதான் பேச்சையே ஆரம்பித்திருக்கிறார்கள். “ஐயோ, ஷுகரா? ஏன் இப்படி இளைத்து ... Read more
Published on September 25, 2021 23:04
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

