புத்தக விழா வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடைய புதிய புத்தகங்கள் எதுவும் புத்தக விழாவிலோ அதற்குப் பிறகோ வரவில்லை. கடைசியில் வந்த புத்தகம் நிலவு தேயாத தேசம்தான். இடைப்பட்ட காலத்தில் நான் எத்தனையோ எழுதி விட்டேன். என் வாழ்நாளில் நான் அதிகம் எழுதியது என்றால் புதிய புத்தகங்கள் வராத இந்த கால கட்டம்தான். தியாகராஜா நாவல் 200 பக்கங்கள் – இன்னும் ஒரு நூறு எழுதினால் முடிந்து விடும். அசோகா 300 பக்கங்கள் – குறிப்புகள் ...
Read more
Published on September 28, 2021 04:36