சாரு நிவேதிதா's Blog, page 185
November 21, 2021
ரத்து செய்யப்பட்ட குறுஞ்செய்தி (குறுங்கதை)
சற்று நேரத்துக்கு முன்பு ஒரு தோழி ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள். செய்தி ரத்து செய்யப்பட்டிருந்தது. என்ன சொல்ல விரும்பி, அனுப்பி விட்டு, பின் அதை ரத்து செய்திருக்கிறாள்? எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். பேசினால் சொல் வெளியே போய் விடுகிறது. போன வார்த்தையைத் திரும்ப எடுக்க முடியாது. போனது போனதுதான். அதனால்தான் அதை வடு என்கிறார் வள்ளுவர். ஒருத்தர் என் எழுத்தை கக்கூஸ் என்று சொன்னார். அதாவது பாராட்டாகத்தான் சொன்னார். ஒரு வீடு என்று இருந்தால் பூஜையறையும் இருக்கும், ... Read more
Published on November 21, 2021 20:58
என் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ளத் தடை செய்யப்பட்ட நண்பன் (முடிவில் மாற்றம் செய்யப்பட்ட சிறுகதை)
“உயிரினங்களிலேயே மனித இனம்தான் ஆகவும் நன்றி கெட்ட இனம்” என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ‘மனித இனத்துக்கு சுய விமர்சனம் நன்றாக வருகிறது’ என்று நினைத்துக் கொள்வேன். மனிதர்களோடு எனக்கு சகவாசம் கம்மி என்பதால் எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் நன்றி மறப்பதில்லை என்றும் உறுதிபடச் சொல்ல முடியாது. ஏனென்றால், என் உயிர்மூச்சான கொள்கைகள், கோட்பாடுகள் என்று வரும்போது இந்த நன்றி பன்றியையெல்லாம் தூக்கிப் போட்டு விடுவேன். எனக்குக் கொள்கை, ... Read more
Published on November 21, 2021 06:07
என் இறுதி யாத்திரையில் கலந்து கொள்ளத் தடை செய்யப்பட்ட நண்பன் (சிறுகதை)
“உயிரினங்களிலேயே மனித இனம்தான் ஆகவும் நன்றி கெட்ட இனம்” என்று பலரும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ‘மனித இனத்துக்கு சுய விமர்சனம் நன்றாக வருகிறது’ என்று நினைத்துக் கொள்வேன். மனிதர்களோடு எனக்கு சகவாசம் கம்மி என்பதால் எனக்கு இது பற்றி அதிகம் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் நன்றி மறப்பதில்லை என்றும் உறுதிபடச் சொல்ல முடியாது. ஏனென்றால், என் உயிர்மூச்சான கொள்கைகள், கோட்பாடுகள் என்று வரும்போது இந்த நன்றி பன்றியையெல்லாம் தூக்கிப் போட்டு விடுவேன். எனக்குக் கொள்கை, ... Read more
Published on November 21, 2021 06:07
November 18, 2021
ரத்தன் டாட்டாவைத் தெரியுமா?
வீட்டுக்குப் பக்கத்தில் மெட்ராஸ் காஃபி ஹவுஸ் உள்ளது. அங்கே காஃபி சிறப்பாக இருக்கும். எனக்கு சர்க்கரை கம்மியாக, டிகாக்ஷன் நடுத்தரமாக இருக்க வேண்டும். பொதுவாக சர்க்கரை கம்மி என்றால் டிகாக்ஷனைக் கூட்டி விடுவார்கள். அதுதான் உலக மரபு. ஆனால் எனக்கு க.நா.சு.வைப் போல டிகாக்ஷன் நடுத்தரமாக இருக்க வேண்டும். அதிக ஸ்ட்ராங் என்றால் குடிக்க மாட்டேன். என்னைப் பார்த்ததுமே தரணி அவ்வாறான காஃபியைக் கொடுத்து விடுவார். தரணிதான் அங்கே பொறுப்பாளர். சிரித்த முகம். தமிழ்ப் பெண். பொதுவாக ... Read more
Published on November 18, 2021 20:43
November 17, 2021
கலையின் பண்பு பரிச்சய நீக்கம் (defamiliarise) செய்வதே! – அ. மார்க்ஸ்
அ.மார்க்ஸ் எழுதியுள்ள “பேசாப்பொருளை பேசத்துணிந்தேன் “என்ற புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் அபூர்வமான கட்டுரை இது. சற்றே நீண்ட கட்டுரைதான். ஆனாலும் வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய கட்டுரை. முக்கியமாக எல்லாவற்றையும் ரொமாண்டிஸைஸ் செய்வதும், “துலாபாரத்” துன்பங்களும் தற்காலத் தமிழிலக்கியத்தில் ப்ரீ மெச்சூர் எஜாக்குலேஷனாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தக் கட்டுரை மிக முக்கியமானதாக ஆகிறது. புதிதாக எழுத வருபவர்கள், ஏற்கனவே எழுதிக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் அவசியம் நேரம் எடுத்து வாசிக்க வேண்டிய ... Read more
Published on November 17, 2021 02:54
November 16, 2021
அத்தியாயம் 51
நான்தான் ஔரங்கசீப்… நாவலின் 51ஆவது அத்தியாயம் பற்றி முகநூலில் ஒரு வரி எழுதியிருந்தேன். அந்த அத்தியாயம் அந்த நாவலின் உச்சங்களில் ஒன்று என. இதே போன்ற இடங்கள் நாவலில் வேறு சில பகுதிகளிலும் உண்டு. உதாரணமாக, நாதிரா பானு தன் மார்பகங்களை நீரில் கழுவி “இதையே தாய்ப் பாலாகக் கொள்ளுங்கள்” என்று தன் கணவன் தாராவுக்காக இன்னொருவரிடம் கையேந்தும்போது சொல்லும் இடம். நான்தான் ஔரங்கசீப்… நாவலை அந்த நாவல் புத்தகமாக வரும்போது படிக்க இருப்பதாகப் பல நண்பர்கள் ... Read more
Published on November 16, 2021 03:16
November 15, 2021
கவிதையும் ஆன்மீகமும் பற்றிய சுனில் கிருஷ்ணன் கட்டுரை
சமீபத்தில் நான் படித்த மிகச் சிறப்பான கட்டுரை இது. உங்களையும் வாசிக்க அழைக்கிறேன். கடவுளை காதலராகக் கொள்வது- சுனில் கிருஷ்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
Published on November 15, 2021 23:55
தஸ்தயேவ்ஸ்கியைச் சூதாடி எனச் சொல்லுங்கள்…
என் வாசகர் வட்ட நண்பர்கள் வெறும் குடிகாரர்கள், எதற்குமே லாயக்கற்றவர்கள், சாருவின் அல்லக்கைகள் என்று பல நண்பர்கள் என்னிடமே சொல்லக் கேள்விப்படுகிறேன். என்னையே இத்தனை நாள் தமிழ்ச் சமூகம் அப்படித்தானே சொல்லிக் கொண்டிருந்தது? சமீபத்தில் கூட ஒரு சின்னப் பையன் அப்படித்தானே சொன்னான்? சின்னப் பையன்கள் குறித்து எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்தச் சின்னப் பையர் ஒரு மதிப்புக்குரிய சிறு பத்திரிகை/இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராகவும், என் மதிப்புக்குரிய பல எழுத்தாள நண்பர்களுக்கு அந்தச் சின்னப் ... Read more
Published on November 15, 2021 23:05
இணையத் தொடர்பு
சுமார் இரண்டு வார காலமாக நான் இந்தப் பக்கம் வரவில்லை. ஒரு வாரம் வெளியூர் சென்றிருந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் இத்தனை நாட்களுக்கு நான் வெளியூர் சென்றது இதுவே முதல் முறை. இது போக ஏர்டெல் இண்டர்நெட் தொடர்பு ஒரு வாரமாக இல்லை. எவ்வளவோ புகார் செய்தும், ட்விட்டரில் திட்டியும் ஒரு பயனும் இல்லை. எல்லோரும் அரசு அலுவலகங்களைத் திட்டுவார்கள். விகடனில் ஒரு ஆயிரம் ஜோக்காவது படித்திருப்பேன். ஆனால் தனியார் நிறுவனங்கள் படு பயங்கரம். அரசு அலுவலகத்திலாவது ... Read more
Published on November 15, 2021 22:01
November 3, 2021
ஸ்மாஷன் தாரா: உன்மத்தத்தின் அழகியல்: அராத்து
சாரு நிவேதிதாவின் கவிதைத் தொகுதியான ஸ்மாஷன் தாராவுக்கு அராத்து அளித்துள்ள முன்னுரை கீழே: காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்து கின்ற இனிய வாசனையுடன் வா; இலைகளின்மீதும், நீரலைகளின்மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண – ரஸத்தை எங்களுக்குக் கொண்டு கொடு. காற்றே, வா. எமது உயிர் – நெருப்பை நீடித்து நின்று நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே. பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் ... Read more
Published on November 03, 2021 17:48
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

