சாரு நிவேதிதா's Blog, page 182

December 18, 2021

மிக வெறுக்கப்படும் அரக்கன் – சாரு நிவேதிதா: நேசமித்ரன்

மிக வெறுக்கப்படும் அரக்கன் – சாரு நிவேதிதா இதுவரை எந்த சாதியையும் உயர்த்திப் பிடித்ததாக தெரியவில்லை தமிழ் எழுத்துப் புலத்திற்கு உலக இசையை அறிமுகப் படுத்திய முதல் எழுத்தாளன் 3.காதலுக்கும் காமத்திற்கும் ஆன இடைவெளியை காலம் கடந்து கொண்டே இருக்கிறது.அதன் மானக்கேடான பக்கங்களை ( per version) தன் மொழித்திறத்தால் கடந்த ஒற்றை மனிதன் தான் நம்பிய உத்தியை நவீனத்துவத்தின் கூறுகளை இன்றும் அயல்நிலத்திலிருந்தும் பயின்று பார்க்கும் எழுத்தாளன் சிற்றிதழ் மரபு துயரார்ந்த வாழின் பாகங்களையே பேசிய ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2021 08:23

December 17, 2021

சாரு என்னும் சகாப்தம்: ஆர். அபிலாஷ்

முன்னோடிகளின் பாதையில் நடைபோடுவது சற்று சுலபம். தமிழில் ஏற்கனவே உள்ள செண்டிமெண்டுகள், இங்கு வெற்றி பெற்றுள்ள வடிவங்கள், உருவகங்களை பயன்படுத்தி வாசகரை சுரண்டுவதும் ஓரளவுக்கு எழுத்து கைவந்தவர்களுக்கு சுலபமே. ஆனால் இங்குள்ள கதைகூறல் மரபை முழுக்க உடைத்து விட முயல்வது, உரைநடை-புனைவு எனும் இருமையை அழிப்பது, அதன் வழி சுய அனுபவத்தை சொல்லுகிறவனும் ஒரு கற்பனைப் பாத்திரமே என நிறுவுவது, எதிர்க்கதை எனும் புதிய பள்ளியை இங்கு உருவாக்குவது, ஒரு புது அழகியலுக்கு. களம் அமைப்பது, அதற்கான ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2021 23:43

இன்று சாருவுக்குப் பிறந்தநாள்: மனுஷ்ய புத்திரன்

இன்று சாருவுக்கு பிறந்த நாள் என்று காலையில் கண் விழிக்கும்போதே நினைவுக்கு வந்தது. எழுத்தாளர்களுக்கிடையே வரும் சச்சரவுகள், பதிப்பாளர்- எழுத்தாளர்களுக்கிடையே வரும் கசப்புகளை எல்லாம் தாண்டி நட்பின், அன்பின் உயரிய கண்ணியத்தை எப்போதும் என்னை உணரச் செய்தவர் சாரு. அவரை புண்படுத்தக்கூடிய பல வாசகங்களை பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் அவர் ஒருபோதும் அதைப்பொருட்படுத்தியதில்லை. எழுத்திலோ பேச்சிலோ எந்தக் கசப்பையும் என் மேல் வெளிபடுத்தியதில்லை. உயிர்மையைவிட்டு எவ்வளவோ விலகிச் சென்றபிறகும்கூட உயிர்மை அவர் எழுத்து வாழ்க்கைக்கு அளித்த பங்களிப்பை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2021 20:20

December 15, 2021

முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலுக்குப் பரிசு

எங்களுடைய (ஸீரோ டிகிரி பதிப்பகம்) இரண்டாவது மொழிபெயர்ப்பு நாவல் இது. கடினமான ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல். 2019ல் மொழிபெயர்ப்பு முடிந்துவிட, பின் ஒவ்வொரு வரியாக எடுத்துக்கொண்டு ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு சரியான அர்த்தத்துடன் வந்திருக்கிறதா என்று பார்க்க ஒன்றரை வருடம் . சாரு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் தன் நேரத்தை இதற்காக ஒதுக்கினார். தாமரைச் செல்வியாகிய Thendral Sivakumarஐப் பற்றி சொல்ல வேண்டுமானால் எனக்கு சட்டென்று தோன்றும் வாக்கியம் ‘She’s publisher’s delight’. சொன்ன நேரத்தில் சொன்னபடி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2021 21:02

சந்தேகம் தீர்ந்தது

என்னுடைய பட்டியலைக் கண்டு யாரும் மிரளவோ வருத்தப்படவோ கூடாது.  ஏனென்றால், அதில் மிக முக்கியமானவர்களின் பெயர்களெல்லாம் விடுபட்டு விடும்.  சீனியின் பெயர் பட்டியலில் இருக்கிறது.  ஆனால் அவரோடு நான் வாரம் ஒருமுறைதான் பேசுவேன்.  கார்த்திக் பிச்சுமணியுடன் வருடம் ஒருமுறைதான் பேசுவேன்.  தினமும் பேசுவது கிருஷ்ணமூர்த்தி என்கிற கிருஷ்ணா.  அவர் பெயரே பட்டியலில் இல்லை.  நேற்று கூட வீடு தேடி வந்தார்.  சொல்லாமல் திடீரென்று வந்தால் என்னைப் பார்க்க முடியாது.  எழுதிக் கொண்டிருக்கும்போது என்னை யாரும் தொடர்பு கொள்ள ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2021 20:44

ஒரு சந்தேகம்

என்னோடு தொடர்பில் இருக்கும் நண்பர்கள் என முத்துக்குமார், கார்த்திக், சீனி, வளன், சாதனா, ஸ்ரீராம், காயத்ரி, ராஜா வெங்கடேஷ், வினித், கார்த்திக் பிச்சுமணி, ராஜேஷ், சிவராமன் (சவூதி), செல்வகுமார் என்று பலர் உண்டு.  இவர்களில் ஒன்றிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் நான்தான் ஔரங்கசீப்… நாவலைத் தொடர்ந்து வாசிப்பதாகத் தெரியவில்லை.  ஒவ்வொருவராக போன் செய்து கேட்டேன்.  நான் கேட்ட வரை யாருமே இதுவரை முழுசாகப் படிக்கவில்லை.  12, 35, 38 என்பதாகத்தான் அத்தியாயம் எண் சொன்னார்கள்.  ராஜா ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2021 00:21

December 12, 2021

முல்லா ஷா

நான்தான் ஔரங்கசீப்… நாவலின் தற்போதைய அத்தியாயங்களில் முல்லா ஷா பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவர் அடங்கிய இடம் லஹௌரில் மியான் மீர் கிராமத்தில் உள்ள தரம்பூர் என்ற இடத்தில் உள்ளது. முல்லா ஷாவின் பல ஓவியங்கள் லண்டன் நூலகங்களில் உள்ளன. அதில் ஒன்று கீழே உள்ளது. இந்தப் புகைப்படத்தின் காப்புரிமை பிரிட்டிஷ் லைப்ரரி போர்டில் உள்ளது.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2021 23:09

கார்த்தூஸியர்களின் பச்சை மது

கார்தூஸியா என்று எழுதுவது தவறு என நினைக்கிறேன். ஆங்கிலத்தில் Carthusia என்றால் தமிழில் கார்த்தூஸியா என்றே எழுத வேண்டும். ஏனென்றால், கார்தூஸியா என்று எழுதினால் விவிலியம் படிக்காதவர்கள் Cardhusia என்று படித்து விடவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் ஆசிரியர் தவறாக எழுதினாலும் எடிட்டர்தான் சரி செய்ய வேண்டும். இந்த இடத்தில் அரூ. குறிப்பிட்ட கதையை நான் இன்னும் படிக்கவில்லை. இன்று இரவு 8.50 மணிக்கு ஃபாத்திமா பாபு க்ளப் ஹவுஸில் இந்தக் கதையை வாசிக்கிறார். நானும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 12, 2021 21:36

December 11, 2021

காஃபிக்கு எப்படி ஆர்டர் கொடுப்பது?

என்ன நடந்திருக்கிறது என்றால், ஸீரோ டிகிரி பதிப்பக விழா முடிந்ததும் எங்கள் ஜமா அப்படியே கிளம்பி ஏற்காடு போய் விட்டது.  நானோ தொடர்ந்து வினித்தைத் திட்டித் திட்டி ஒவ்வொரு நாளாக கட்டுரை போட்டுக் கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொன்றையும் படித்து விட்டு ஏற்காட்டில் ஒவ்வொருத்தரும் வினித்தைப் பிடித்து இன்னும் சாத்தியிருக்கிறார்கள்.  சுரேஷ் சாத்தியதுதான் வேடிக்கை.  ஏண்டா, நான்தான் ரொம்பத் தெளிவாச் சொன்னேனேடா, அஞ்சு நிமிஷத்துக்கு மேல பேசாதேன்னு?  அப்படியும் ஏண்டா கேட்கலை? சரி விடுங்கள்.  அதற்கே மறுபடியும் போக வேண்டாம்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2021 23:19

December 7, 2021

வாழ்க நீ எம்மான்…: அ. மார்க்ஸ் (முகநூலில் எழுதியது)

இரவு மணி பத்து 12.35. மகாகவி பாரதியின் கால வரிசைப்படுத்தப்பட்ட படைப்புகளில் 1908 ஆம் ஆண்டு ஜனவரி நாட்களின் அவரது பதிவுகளைப் பார்த்துக் கொண்டுள்ளேன்.ஏற்கனவே பலமுறை நான் எழுதியுள்ள ஒன்று இங்கே நிரூபணம் ஆவதைக் காண்கிறேன். 1907 இல் இந்தியத் துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒரு எழுச்சி ஏற்பட்டது. பல இளைஞர்கள் அரவிந்தர் முதலான அன்றைய தலைவர்களின் கருத்துக்களால் எழுச்சி பெற்றிருந்தனர். அந்நிய வெள்ளை ஆட்சியை அழித்தொழிக்க அவர்கள் உயிரைப் பணயம் வைத்துக் களத்தில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 07, 2021 21:00

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.