சாரு நிவேதிதா's Blog, page 180
January 5, 2022
அசைவம்
பா.ராகவன் நேற்று ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அலுவலகம் போய் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் கையெழுத்துப் போட்ட மாதிரி நானும் ஒருநாள் அங்கே செல்லலாம் என்று நினைக்கிறேன். மதிய உணவுதான் பிரச்சினை. ஒரே சைவர்களாக அமர்ந்திருக்கும் இடத்தில் நான் மட்டும் அசைவம் சாப்பிட கூச்சப்படுவேன். அதனால் பக்கத்திலேயே இருக்கும் ஒரு உலகத் தரமான அசைவ உணவுக் கூடத்துக்கு- கோவை அலங்கார் விலாஸ் – நான் மட்டும் நைஸாகப் போய் வந்து விடலாம் என்று யோசனை. அது ஒரு பிரபல இசையமைப்பாளரின் ... Read more
Published on January 05, 2022 03:17
பா.ராகவன் நேற்று ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அலுவலகம் போய் நூற்...
பா.ராகவன் நேற்று ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அலுவலகம் போய் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் கையெழுத்துப் போட்ட மாதிரி நானும் ஒருநாள் அங்கே செல்லலாம் என்று நினைக்கிறேன். மதிய உணவுதான் பிரச்சினை. ஒரே சைவர்களாக அமர்ந்திருக்கும் இடத்தில் நான் மட்டும் அசைவம் சாப்பிட கூச்சப்படுவேன். அதனால் பக்கத்திலேயே இருக்கும் ஒரு உலகத் தரமான அசைவ உணவுக் கூடத்துக்கு- கோவை அலங்கார் விலாஸ் – நான் மட்டும் நைஸாகப் போய் வந்து விடலாம் என்று யோசனை. அது ஒரு பிரபல இசையமைப்பாளரின் ... Read more
Published on January 05, 2022 03:17
தமிழ் வாசகர் ஓசியில்தான் படிப்பாரா? – சமஸ்
சமஸ் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள இக்குறிப்பை அவர் அனுமதியின்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சமஸ் ஆட்சேபிக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன். அவரது அருஞ்சொல் இணைய இதழை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும். சமஸ் தமிழ் பத்திரிகையுலகுக்குக் கிடைத்த சொத்து. மற்றவர்களுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவர்கள் ஒரு கோட்பாட்டோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு விடுவார்கள். இடதோ வலதோ. சமஸ் ஒரு நடுநிலைப் பத்திரிகையாளர். பின்வரும் குறிப்பில் வாசகர்கள் சந்தா கட்டுவது பற்றி, நன்கொடை கொடுப்பது பற்றி எழுதியிருக்கிறார். ... Read more
Published on January 05, 2022 03:02
January 4, 2022
பாதி கதை (சிறுகதை): காயத்ரி ஆர்.
பந்துபோல் உருண்டு வந்த உளுந்து மாவை கரண்டியில் எடுத்து ஜாங்கிரித் துணியில் இட்டு கொதிக்கும் எண்ணையில் சுழிசுழியாக சமையல் மாமி வரைந்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தாள் தைலாம்பாள். கறுப்பாக எண்ணெய் பிசுக்கு அடுக்கடுக்காகப் படிந்த அந்த வாணலியை வாஞ்சையோடு பார்த்தாள். திருமணம் நிச்சயமானபின் அனுப்பர்பாளையத்தில் இருந்த தங்கவேல் கவுண்டர் பாத்திரக் கடையில் என் பெரியம்மா தட்டித் தட்டிப் பார்த்து வாங்கியது. “இந்தக் கைப்புடி இல்லாத கல்கத்தா சட்டிய எடுத்துக்குங்க. ரொம்ப நல்லா இருக்கும்” என்ற கவுண்டரைப் பார்த்து ... Read more
Published on January 04, 2022 22:11
வனத்தின் நடுவே ஒரு குடில்
வினித்தும் நண்பர்களும் ஒரு வனத்தின் நடுவே ஒரு குடிலை வாடகைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மாதத்தில் நான்கைந்து நாட்கள் அந்த வனத்தில் அமர்ந்துதான் எழுதத் திட்டமிட்டு இருக்கிறேன். உள்ளே பல இடங்களில் பகலிலும் அடர் இருள் கனத்திருக்கிறது. இனி வரும் காலத்தை எழுதுவதற்கு மட்டுமே செலவு செய்வதென்று முடிவு. அதைத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் செய்து வருகிறேன். இப்போது மாதத்தில் சில தினங்கள் வனம். இதற்கு மாத வாடகையாகக் கொஞ்சம் பணம் தேவை. இந்தக் கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது ... Read more
Published on January 04, 2022 06:24
கட் பண்ணு, தூக்கு…
வான் ஹூசனில் ஒரு சிவப்பு நிற சட்டை வாங்கினேன். வாங்கிப் பல காலம் இருக்கும். தூய பட்டுத் துணி என்பதால் பெண்கள் வைத்துக் கொள்ளும் பட்டுப் புடவை மாதிரி ஒரு டிகேட் வந்து விட்டது. என் சட்டைகளிலேயே அதி அழகு சட்டை அதுதான். அதே துணியில் பச்சை மஞ்சள் ஊதா என்று வாங்கலாம் என்று போனால் கிடைக்கவில்லை. நம் வினித் கூட பல ஊர்களில் தேடியிருக்கிறான். அவனுக்கு. கிடைக்கவில்லை. அந்த சட்டையை எப்போதோ ஒரு போட்டோ ஷூட்டுக்கு ... Read more
Published on January 04, 2022 01:02
January 2, 2022
ஊங் சொல்றியா மாமா? (2)
செக்ஸியாகத் தோற்றமளிக்கும் ஒரு பெண் இப்படித் தன்னை கேட்க வேண்டும் என்றுதான் இந்த உலகத்தில் உள்ள அத்தனை ஆண்களும் எதிர்பார்க்கிறார்கள். ஏங்குகிறார்கள். பல நல்லவர்கள் இதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லை. பல அசடுகள் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்கின்றன. ஆனால் எந்தப் பெண்ணும் அப்படிக் கேட்பதில்லை. ஆணும் பெண்ணும் படைக்கப்பட்ட விதம் அப்படி. எந்தப் பெண்ணும் ஆணைப் பார்த்து ஊங் சொல்றியா என்று கேட்க மாட்டாள். ஒன்றாகப் படுத்திருக்கும்போது கூட கேட்பாளா என்பது சந்தேகம். ஆனாலும் தொடர்ந்து ... Read more
Published on January 02, 2022 21:08
ஊங் சொல்றியா மாமா? (1)
நேற்று புஷ்பா என்ற படத்தைப் பற்றி சீனி பேசிக் கொண்டிருந்தார். அவர் போனை வைத்த கையோடு ஒரு வாசகி. அந்தப் படத்தில் வரும் ஊங் சொல்றியா ஊஹுங் சொல்றியா மாமா என்ற பாடலைப் பற்றி வயிறெரியப் பேசினார். இன்றுதான் அந்தப் பாடலைக் கேட்டேன். எத்தனை ஆண்டுகளாக ஐட்டம் ஸாங் என்ற பதம் தமிழ் சினிமாவில் அறிமுகம் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் எனக்கும் சில ஐட்டம் சாங்ஸ் பிடித்துத்தான் இருந்தன. ஆனால் எல்லோருமே – எழுத்தாளர்கள் உட்பட – ... Read more
Published on January 02, 2022 20:41
January 1, 2022
அ-காலம்
அன்பு சாரு, நேற்று முன்பதிவு திட்டத்தில் அ- காலம் வந்து சேர்ந்தது. என்னதான் பிஞ்சில் படித்திருந்தாலும் புத்தகத்தை கையில் எடுத்துப் படிப்பது தரும் உணர்வினை கருவிகள் தராது. அது ஒரு தனி சுகம், அனுபவம். நூல் வடிவமைப்பு சிறப்பாக வந்துள்ளது. மீண்டும் படிக்கத் தொடங்கியுள்ளேன். எண்ணற்ற நூல்கள், திரைப்படங்கள், வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய செறிவான நூல். குறிப்பாக லெபனானின் மத ஒற்றுமை, சாத்வீக வழிப் போராட்டம் குறித்த பதிவுகள் குறிப்பிடத்தக்கவை. தற்காலத் தலைமுறைக்கு இவை எடுத்துச் சொல்லப்பட ... Read more
Published on January 01, 2022 21:02
December 27, 2021
யூதாஸ் : வளன் : ஒரு மதிப்பீடு
வளன் எழுதிய யூதாஸ் நாவல் பற்றி செல்வகுமார் முகநூலில் எழுதியிருக்கும் மதிப்புரை இது. மதிப்புரையில் ஏழெட்டு இடங்களில் மன்னிக்கவே முடியாத எழுத்துப் பிழைகள் உள்ளன. மன்னித்து படித்துக் கொள்ளவும். கொள்ளவும் என்பதை கொல்லவும் என்று எழுதுவது போன்ற கொலைப் பிழைகள் அவை. திருத்த எனக்கு நேரம் இல்லை. அதேபோல் அந்த மதிப்புரையை இங்கே பகிராமலும் இருக்க முடியவில்லை. இந்த நாவல் எப்படி ஸீரோ டிகிரி நாவல் போட்டியின் குறும்பட்டியலில் இடம் பெறாமல் போனது என்பது இன்னமும் எனக்கு ... Read more
Published on December 27, 2021 23:03
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

