சாரு நிவேதிதா's Blog, page 178
January 22, 2022
எனக்குப் பூனைகளைப் பிடிக்காது : நிர்மல் ம்ருன்ஸோ
எனக்குப் பூனைகளைப் பிடிக்காது. பூனைகளைக் கொஞ்சுவது, உணவு வைப்பது போன்ற எதிலும் ஈடுபாடே கிடையாது. சிலர் அதன் பட்டுத் தோலை வருடி அது சுகத்தில் சொக்குவதைப் பார்த்து மகிழ்வார்கள். எனக்கு பூனை என்பது எல்லா உயிரினம் போல அதுவும் மரியாதைக்குரிய ஒரு உயிரினம், அவ்ளோவுதான் ! இப்போது என்னவென்றால் வீட்டிலிருந்து வெளியே கால் வைத்ததும் இரண்டு பூனைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன. யார் வீட்டுப் பூனைகளோ அல்ல. தெருப் பூனைகள். நாம் நடந்து செல்லும்போது குறுக்கு மறுக்காக ... Read more
Published on January 22, 2022 21:31
January 21, 2022
தமிழ்
எனக்கு எந்த மொழியின் மீதும் தனிப்பட்ட முறையில் பற்றோ பாசமோ வெறியோ கிடையாது. எல்லா மொழியும் ஒன்றே. எல்லா தேசமும் ஒன்றே. எந்த விதமான இனப் பற்றும், மொழிப் பற்றும், தேசப் பற்றும் இல்லாதவன் நான். மேலும் மனிதனின் வயது அதிகப் பட்சம் நூறு. அதிலும் லட்சத்தில் ஒருவர்தான் நூறை நெருங்குகிறார்கள். மற்றபடி எண்பது தொண்ணூறுதான். அதுவே பெரிய சாதனை. இந்தத் துக்கடா வாழ்வில் தமிழ் என்ற மொழி இருந்தால் என்ன, அழிந்தால் என்ன? வாழ்ந்தால் மகிழவும் ... Read more
Published on January 21, 2022 23:27
வயது
பல விஷயங்களில் நான் ஒரு ஐரோப்பியனைப் போல் யோசிப்பவன், வாழ்பவன் என்று சொன்னால் அது அவ்வளவாக யாருக்கும் புரிவதில்லை. சமயங்களில் என் மீது உண்மையான அக்கறையினால் சிலர் காட்டும் அன்பே எனக்கு வன்முறை போல் தோன்றுவதற்குக் காரணமும் இதுதான். “சாருவுக்கு வயசாய்டுச்சு, அவரை ரொம்பத் தொந்தரவு பண்ணாதீங்கப்பா” என்று யாரும் உண்மையான அக்கறையுடன் சொன்னால் எனக்கு அது என் மீது செலுத்தப்படும் உச்சக்கட்ட வன்முறை. கீழே உள்ள புகைப்படத்தையும் வசனத்தையும் பாருங்கள். நான் சொல்ல வருவது புரியும். ... Read more
Published on January 21, 2022 20:36
January 20, 2022
எனக்கு இசை
சற்று நேரம் முன்புதான் ஔரங்கசீப் 81-ஆவது அத்தியாயம் எழுதி முடித்தேன். பத்துப் பன்னிரண்டு மணி நேர ஆழ்நிலை தியானத்திலிருந்து பிரக்ஞை பெற்று எழுந்தது போல் இருந்தது. பற்களின் ஈறுகளில் கூட மின்னணு பாய்வது போல் இருந்தது. எட்டு ஒன்பது பெக் ரெமி மார்ட்டின் அருந்திய பிறகு ஒரு இழுப்பு மரியுவானாவை இழுத்தது போல் ஒரு மிதப்பு. வார்த்தைகளால் விளக்க முடியவில்லை. நாற்காலியில் அமர்ந்திருப்பதையே உணர முடியவில்லை. அந்தரத்தில் மிதப்பது போல் இருந்தது. இந்த உணர்வினால்தான் – இந்த ... Read more
Published on January 20, 2022 04:15
January 18, 2022
என்னுடைய புத்தகங்கள்
என்னுடைய நேரம் அவ்வளவையும் புனைவெழுத்துக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதன் காரணமாக, எனக்கு வரும் கடிதங்களை தளத்தில் வெளியிட்டு பதில் எழுதுவதை நிறுத்தி வைத்திருக்கிறேன். ஆனால் கடிதம் எழுதுபவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் பதில் எழுதி விடுகிறேன். நெருங்கிய நண்பர்களாக இருந்தால் போனில் வாய்ஸ் மெஸேஜோடு சரி. நேற்று கூட இரவு பதினோரு மணிக்குப் படுத்து நான்கு மணிக்கு எழுந்து ஔரங்கசீப்பில் மூழ்கினேன். ஔரங்கசீப்பை முடித்தாலும் நிலைமை இப்படித்தான் இருக்கும். முக்கால்வாசி முடித்து வைத்த ... Read more
Published on January 18, 2022 21:01
January 16, 2022
அன்பு என்றால் என்ன? அப்படி ஒன்று இருக்கிறதா?
சாரு, இப்போதுதான் உங்களுடைய சாய் வித் சித்ராவில் பார்க்காமல் விடுபட்ட பாகங்களைப் பார்த்து முடித்தேன். உங்கள் பேட்டியில் மற்றவர்கள்மீது உள்ள அன்பினால் செய்வதாக வெவ்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளின் பின்புலத்தில் சொல்லியிருந்தீர்கள். எனக்கு அன்பு என்றால் என்னவென்றே புரிவதில்லை, புரிந்துகொள்ளவும் முடிவதில்லை. பொதுவாகக் கேட்கிறேன், அது நிஜமான ஒன்றா? -ப்ரஸன்னா ப்ரஸன்னா, தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலையில் ஔரங்கசீப்பை எழுதிக் கொண்டிருக்கிறேன். என்னால் மற்ற எழுத்தாளர்களைப் போல் இரவில் கண் விழிக்க முடிவதில்லை. ஒருநாள் மாலை ... Read more
Published on January 16, 2022 21:42
இந்த ஆண்டு முழுவதும் தங்கப் போகும் பாடல்…
இந்த ஆண்டு முழுவதும் என் கூடவே இருக்கப் போகும் பாடல் இதுவென்று தோன்றுகிறது. https://www.youtube.com/watch?v=y0uZA...
Published on January 16, 2022 06:19
January 15, 2022
இன்று க்ளப்ஹவுஸில் ஃபாத்திமா பாபு
இன்று (ஞாயிற்றுக் கிழமை) இரவு 8.50 மணிக்கு ஃபாத்திமா பாபு என்னுடைய ‘வெளியிலிருந்து வந்தவன்’ என்ற சிறுகதையை க்ளப்ஹவுஸில் வாசிக்கிறார். நானும் கலந்து கொள்கிறேன். முடிந்தவர்கள் கலந்து கொள்ளலாம். லிங்க் கீழே. https://www.clubhouse.com/join/%E0%AE...
Published on January 15, 2022 22:39
கருட கமனா ரிஷப வாஹனா இயக்குனரிடமிருந்து ஒரு கடிதம்
நேற்று இரவு (15.1.2022) பத்து மணிக்கு கருட கமனா ரிஷப வாஹனா படத்தைப் பற்றிய என் மதிப்புரையை எழுதி பதிவேற்றி விட்டுப் படுத்தேன். காலையில் பார்த்தால் இயக்குனர் ராஜ் பி. ஷெட்டியிடமிருந்து இப்படி ஒரு கடிதம். இதுவுமே கூட தமிழில் நிகழ்வது வெகு அரிது. கேரளத்தில் எழுத்தாளர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நான் அடிக்கடி எழுதுவது வழக்கம். ஆனால் கர்னாடகாவில் எழுத்தாளர்கள்தான் சமூக வெளியில் உச்ச நிலையில் இருப்பவர்கள். சிவராம் காரந்த்துக்கும், யு.ஆர். அனந்தமூர்த்திக்கும், எஸ்.எல். பைரப்பாவுக்கும் கன்னடத்தில் ... Read more
Published on January 15, 2022 20:28
கருட கமனா ரிஷப வாஹனா மற்றும் ஒரு மொட்டையின் கதை : கன்னட சினிமாவின் பெரும் பாய்ச்சல்
நாம் கேள்வியே பட்டிருக்காத – எழுத்து உரு கூட இல்லாத – ஏதோ ஒரு ஆதிவாசி மொழியில் எடுக்கப்பட்ட முதல் சினிமா எப்படி இருக்கும்? நேற்று வரை அப்படித்தான் நான் கன்னட சினிமா பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். பி.வி. காரந்த் இயக்கத்தில் வெளிவந்த சோமன துடி (1975), கிரிஷ் காஸரவள்ளியின் கட ஷ்ரத்தா (1977), தபரண கதெ (1986) போன்ற கிளாஸிக்குகள் விதிவிலக்கு. அப்படிப்பட்ட விதிவிலக்குகள் எந்த மொழியிலும் எந்த நேரத்திலும் தன்னிச்சையாக நிகழலாம். தெலுங்கு சினிமா ... Read more
Published on January 15, 2022 08:32
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

