சாரு நிவேதிதா's Blog, page 176
February 12, 2022
நான்தான் ஔரங்ஸேப்…
ஔரங்ஸேப் – இதுதான் சரியான உச்சரிப்பு. இது பற்றி இன்று ஹரியிடமிருந்து வந்த கடிதம். Dear Charu, 35ஆவது அத்தியாயத்தைத் தாண்டி பறந்து கொண்டிருக்கிறேன். பிரமாதம்! இந்த பிரமாதத்தை போன emailலிலே சொல்ல நினைத்தேன். ஆனால் உங்கள் reaction எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இளையராஜாவிடம் போய் யாராவது உங்கள் இசை ப்ரமாதம் என்றால் அவர் என்ன சொல்லுவார்? அவர் இசை ப்ரமாதம் என்று சொல்ல வேண்டுமா? ஆனால் இப்போது எனக்கு சொல்லியே ஆக வேண்டும்.சரித்திரம் ... Read more
Published on February 12, 2022 04:40
February 11, 2022
நாளைய புத்தக வெளியீட்டு விழா
நாளை மாலை (13.2.2022) ஐந்தரை மணிக்கு வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலையில் உள்ள ஃப்ரெண்ட்ஸ் பார்க்கின் அம்மாச்சி பார்ட்டி ஹாலில் நடக்கவிருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேச இருக்கிறேன். அருண்மொழி நங்கையின் பனி உருகுவதில்லை. உடன் பேசுபவர்கள் யுவன் சந்திரசேகர், எம். கோபாலகிருஷ்ணன், ஜெயமோகன். ஏற்புரை அருண்மொழி நங்கை. நன்றியுரை காயத்ரி. ஜெயமோகனும் நானும் இதுவரை ஒரே ஒரு முறைதான் மேடையில் சந்தித்திருக்கிறோம். அராத்துவின் புத்தக வெளியீட்டில். அதற்கு அடுத்து இதுதான். என்ன ... Read more
Published on February 11, 2022 21:22
அருண்மொழி நங்கையின் நூல் வெளியீட்டு விழா
ஃப்ரெண்ட்ஸ் பார்க் – அம்மாச்சி பார்ட்டி ஹால் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பிரதான சாலை 13.2.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி
Published on February 11, 2022 16:56
சொற்கடிகை – 8
முதலில் ஒரு கடிதம்: Dear Charu Sir, Greetings! My monthly subscription to your writing is very less but I ensure that I do it meticulously on the 1st of every month. But this month, it got delayed. Apologies. The reason why I write now is not that. We, your readers, know you are totally engrossed in ... Read more
Published on February 11, 2022 03:45
February 10, 2022
இன்று மாலை ஒரு மணி நேர அரட்டை
இன்று மாலை ஏழு மணியிலிருந்து எட்டு வரை sharechat என்ற தளத்தில் ஒரு மணி நேரம் வாசகர் கேள்விகளுக்கு பதில் சொல்லுவேன். லிங்க்: https://sharechat.onelink.me/3i9Y/Cha...
Published on February 10, 2022 19:56
சொற்கடிகை – 7
ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் ராயல்டி வந்துள்ளது. கொரானா காலத்தில், குரியர் சர்விஸ் எல்லாம் நிரந்தரமாக இல்லாத நிலையில், வருமானம் இல்லாமல் பணப்புழக்கம் முடக்கப்பட்டிருக்கும் கால கட்டத்தில் இது மிகப் பெரிய சாதனை என்றார்கள் நண்பர்கள். பதிமூணு லட்சத்துக்கு என் புத்தகங்கள் விற்றிருக்கின்றன. சாதனைதான். ஆனால் என் பார்வையில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனக்கு வந்த ராயல்டியை பன்னிரண்டால் வகுத்தால் எவ்வளவு வரும்? பத்தாயிரத்துக்கும் கொஞ்சம் மேலே. இங்கே தெருமுனையில் இஸ்திரி போடுபவரின் மாத ஊதியமே 25000 ... Read more
Published on February 10, 2022 08:23
February 7, 2022
ஸ்மாஷன் தாரா
ஸ்மாஷன் தாரா என்ற என் மொத்தமான கவிதைத் தொகுதி இந்தப் புத்தக விழாவில் வந்து விடும். எல்லா எழுத்தாளர்களின் புத்தகங்களும் எடிட் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து உள்ளவன் நான். எழுத்தாளரே எடிட் செய்யக் கூடாது. எழுத்தாளரை நன்கு அறிந்த ஒருவர் செய்ய வேண்டும். தமிழில் நூறு புத்தகங்களே விற்பதால் யாரும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் நான் அப்படிச் செய்வதில்லை. ஸ்மாஷன் தாராவை எடிட் செய்து கொடுக்க என் நீண்ட கால நண்பர் ஆத்மார்த்தியைக் கேட்டேன். ... Read more
Published on February 07, 2022 02:56
February 6, 2022
நான்தான் ஔரங்கசீப்… குறித்து உங்களிடம் ஒரு கேள்வியும், நிர்மலின் மதிப்புரையும்…
நேற்று நந்தினி கிருஷ்ணன் பேசும்போது ஒரு யோசனை சொன்னார். நான்தான் ஔரங்கசீப்… நான்கு பாகங்களாக உள்ளது. இப்போது மூன்றாம் பாகம் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது வர இருக்கும் புத்தக விழாவில் முதல் பாகத்தை வெளியிட்டால் என்ன என்பது நந்தினியின் கேள்வி. ஆர்வமும் கூட. இது சம்பந்தமாக எனக்கு வேண்டும் என்பதற்கும் வேண்டாம் என்பதற்கும் சரிசமமான காரணங்கள் எழுகின்றன. வேண்டாம் ஏன் என்றால், 2000 பக்கம் என்றாலும் எல்லோரும் ஒரு சேரப் படிப்பதையே விரும்புவார்கள். வேண்டும் ஏன் என்றால், ... Read more
Published on February 06, 2022 15:51
February 5, 2022
சொற்கடிகை – 6
பத்து வயதிலிருந்தே அந்த வியாதி உண்டு. மறதி. இங்கே அவசியம் வயதைச் சொல்லி விட வேண்டும். இல்லாவிட்டால், வயசாய்டுச்சு இல்லப்பா என்று சொல்லி நம்மைக் காலி பண்ணி விடுவார்கள். வயசு பற்றி நாளை எழுதுகிறேன். அந்த அச்சுறுத்தலால்தான் முதல் வாக்கியத்திலேயே சொல்லி விட்டேன். பத்து வயதிலிருந்தே எனக்கு மறதி வியாதி உண்டு. சும்மா எல்லோருக்கும் வரும் மறதி இல்லை. வினோதமான மறதி. ஒருத்தரின் பெயர் ரகு என்று வைத்துக் கொள்வோம். அவர் பெயர் ரகு என்பது மறந்து ... Read more
Published on February 05, 2022 23:09
George Guidallஇன் வாசிப்பில் அடியேனின் சிறுகதை
இத்தாலியில் உள்ள Fondazione Prada என்ற அமைப்பின் மூலம் நடக்க இருக்கும் ஓவிய, சிற்பக் காட்சியில் என்னுடைய Tandav at Tadaka என்ற சிறுகதை Goerge Guidall மூலம் வாசிக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காகவே எழுதிய சிறுகதை அது. ஜார்ஜ் கைடல் உலகப் புகழ் பெற்ற ஆடியோ புத்தக வாசிப்பாளர். அமெரிக்க உச்சரிப்பாக இருந்தாலும் இவருடைய வாசிப்பு நம் எல்லோருக்குமே புரியக் கூடியதாக இருப்பது சிறப்பு. பல உலகப் புகழ் பெற்ற கிளாசிக்குகளை இவர் வாசித்த ஆடியோ ... Read more
Published on February 05, 2022 16:23
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

