சாரு நிவேதிதா's Blog, page 179

January 13, 2022

புஷ்பா : பெருந்தேவியின் எதிர்வினை

சாரு இக்கட்டுரையில் அல்லுவின் உடல்மொழி குறியீடு குறித்து எழுதியிருப்பது முக்கியம். புஷ்பாவைப் பார்க்கும்போது எனக்கும் அனுராக் காஷ்யப்பின் கேங்க்ஸ் ஆஃப் வஸேபூர் நினைவுக்கு வந்தது. அப்படி வந்திருக்க வேண்டிய படம் இது. காஷ்யப்பின் படத்தில் பகைக் குழுக்கள், கதாபாத்திரங்களுக்கு இடையிலான dynamics அற்புதமாக இருக்கும். புஷ்பாவிலோ நாயக ஆராதனை மட்டும்தான். புஷ்பா சின்னப் பையனாக இருக்கும்போதே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதாக ஃப்ளாஷ்பேக்கில் காட்டுவதெல்லாம் நம் மண்ணுக்கே உரித்தானது. என் கவிதைக்கு விதையே அந்தக் காட்சிதான். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2022 22:45

புத்தகங்கள் சலுகை விலையில்…

என் இனிய நண்பர்கள் ராம்ஜியும் காயத்ரியும் நடத்தும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் ஐந்தாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. அதன் கொண்டாட்டமாக 30 சதவிகிதத் தள்ளுபடியில் எல்லா புத்தகங்களும் கிடைக்கின்றன. வாங்கிப் பயனடையுங்கள். இன்னும் கொஞ்ச நாளில் முழு அடைப்பு இருக்கலாம் என்கிறார்கள். வீட்டுத் தனிமையைப் போக்க வாசிப்புதான் ஒரே வழி. அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். லிங்க்: https://zerodegreepublishing.com/coll...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2022 03:56

புஷ்பா – ஒரு லும்ப்பன் கிளாஸிக்

புஷ்பாவுக்கு ஆறு வயது புஷ்பா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறான் புஷ்பாவுக்கு அப்பன் பெயர் கிடையாது என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா சிணுங்கி அழுகிறான் புஷ்பா ரௌடியாகிவிட்டான் புஷ்பா கால் மேல் போட்டு உட்கார்ந்திருக்கிறான் புஷ்பாவுக்கு அப்பன் பெயர் இல்லை என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா குமுறி எழுந்து அவனை அடிக்கிறான் புஷ்பா பெரிய தாதாவாகிவிட்டான் ரௌடிகள் புடைசூழ போலிசுக்குக் கப்பம் கட்டுகிறான் புஷ்பா அப்பன் பெயர் தெரியாதவன் என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா இறுக்கி மூடிய கைக்குள் தன்னைத் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2022 03:40

January 10, 2022

ஒரு புள்ளிவிவரம்

அமெரிக்காவில் வசிக்கும் என் சிநேகிதி ஒருவர்.  அவர் வசிக்கும் நகரில் மெட்ரோ இல்லை.  கார்தான் ஒரே வாகனம்.  அவருடைய ஊதியத்தில் கார் வாங்க முடியவில்லை.  அதனால் அதிக அளவு போக்குவரத்து இல்லை.  இரவிலோ வெளியிலேயே போக முடியாது.  கறுப்பின, விளிம்பு நிலை மனிதர்களின் தொல்லை.  ஆனால் தமிழக உறவினர்களோ “அவள் அமெரிக்காவில் பெரிய வேலையில் இருக்கிறாள், கூரையைப் பிய்த்துக் கொண்டு டாலர் கொட்டுகிறது” என்றே நினைக்கிறார்கள்.  இது அந்தப் பெண் சொன்னது.  இப்படி ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2022 19:27

மார்கழி வீதி பஜனை

அற்புதமான ஒரு வீதி பஜனை. இதற்குத்தான் மைலாப்பூரில் இருப்பது. ஒருமுறையாவது இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பார்க்கிறேன். வாய்ப்பதில்லை. அடுத்த ஆண்டாவது கலந்து கொள்ள வேண்டும். இளைஞர்களையும் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. என் வீட்டிலிருந்து ஒரு ஐந்து நிமிட தூரத்தில்தான் இந்தத் தெரு இருக்கிறது. தாத்தாக்கள் அனைவரும் தாடிக்கு முகக் கவசம் அணிந்திருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடிகிறது. முகக் கவசம் அணிந்தால் மூச்சின் ஆவி கண்ணாடியில் படிந்து பார்க்க முடியாமல் போய் விடுகிறது. இந்தத் தகவலை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2022 08:57

அங்க சேஷ்டை

முகத்தை அஷ்ட கோணலாக்கிப் பாடும் சாஸ்திரீய இசைக் கலைஞர்கள் பற்றி அராத்து மிக மோசமான பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். பொதுவாக இது விஷயங்களை நான் அவரோடு நேரில்தான் விவாதிப்பது வழக்கம். ஆனால் இதை அவர் பொதுவில் எழுதியிருப்பதால் நானும் பொதுவிலேயே எழுத வேண்டியிருக்கிறது. எனக்குக் கிரிக்கெட் தெரியாது. மைதானத்தில் நடுவில் ஏன் ஒரு இடம் மட்டும் புல் இல்லாமல் வெள்ளையாக இருக்கிறது என்று கேட்கும் அளவுக்குத்தான் எனக்கு கிரிக்கெட் ஞானம் உண்டு. அதனால் கிரிக்கெட் பற்றி நான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2022 01:22

January 9, 2022

ஆசீர்வாதம் (குட்டிக் கதை)

நான் கர்ம வினையை நம்புபவன்.  கர்மாவுக்கெல்லாம் விஞ்ஞான ரீதியான சோதனை, நிரூபணம் எதுவும் கிடையாது.  பெரியோர் சொல்வதையும் சில அனுபவங்களையும் வைத்து நாமே முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.  இல்லாவிட்டால் என் பழைய நண்பர் ஒருவர் குடித்த குடிக்கு எப்போதோ மேலே போயிருக்க வேண்டும்.  அவர் தெளிவாகச் சொல்லி விட்டார். யாரும் அஞ்ச வேண்டாம்,  என் வயது 85 என்று.  அவருக்கு சோதிடம் தெரியும்.  நான் அந்நியோன்யமாக குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த போது பிரிந்து விடுவீர்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2022 17:21

January 8, 2022

கோட் சூட் பற்றி தமிழ்ப்பிரபா

தமிழ்ப்பிரபா ஃபேஸ்புக்கில் எழுதியது பின்வருவது: கோட் சூட் தான் உயர்வு என்று ஒப்புக்கொள்வதில் இருக்கிறது நமது வீழ்ச்சி.// மேலே இருப்பது நண்பர் தமிழ் ஸ்டுடியோ அருண் நேற்று எழுதிய குறிப்பு. Casteless collective மாதிரியான புதிய விஷயங்களை முன்னெடுக்கும் தொடக்கத்திலேயே ‘வீழ்ச்சி’ என்கிற வார்த்தையையெல்லாம் அவர் பயன்படுத்த வேண்டிய அவசரம் என்னவென்று எனக்குப் புரியவில்லை. இந்த பொதுச்சமூகம் எதையெல்லாம் உயர்வாகக் கருதியதோ அதை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு அனுமதிக்காமல் மறுத்து வந்ததன் எதிர் அரசியல்தான் இந்த கோட்சூட். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2022 02:32

January 7, 2022

யூதாஸ்: அறிமுகக் கூட்டம்

புத்தகத் திருவிழா தள்ளிப் போனதில் எல்லோருக்கும் வருத்தம் தான். ஆனால் தனிப்பட்ட கொண்டாட்டங்களுக்குத் தடையிட முடியுமா என்ன! யூதாஸ் நாவலுக்கு ஓர் அறிமுகக் கூட்டம். இந்த நாவலை நான் சாருவுக்காக எழுதினேன். எழுதும் போதே இது தமிழ் உலகில் எப்படியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற சந்தேகம் எழுந்த வண்ணம் இருந்தது. காரணம் முற்றிலும் அந்நியமான நிலம் மற்றும் கலாச்சாரம் கொண்டு கட்டமைக்கப்பட்டது இந்நாவல். ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தேன்: சாரு நிவேதிதாவுக்காக எழுதுகிறேன் என்று தீர்மானித்தப் பிறகு ‘நானும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2022 06:21

January 5, 2022

என்ன கவி பாடினாலும்…

https://m.facebook.com/watch/?extid=N... சித் ஸ்ரீராம் பாடியது. பக்க வாத்தியங்கள் இல்லாமல். அற்புதம். சித் பாடிய அத்தனை சினிமா பாடல்களையும் விட இது எனக்கு மிகவும் பிடித்தது. இதை அனுப்பிய வினித்துக்கு என் நன்றி. இந்தப் பாடல் பற்றி விரிவாக எழுத வேண்டும். நேரமில்லை.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2022 23:53

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.