சாரு நிவேதிதா's Blog, page 181

December 27, 2021

சைத்தானுடன் ஓர் உரையாடல்

சைத்தானை நான் சந்தித்த போது என் கழுத்தெல்லாம் கோரைப்பல் தடங்களிலிருந்து குருதி கொட்டிக் கொண்டிருந்தது மூக்கிலிருந்தும்தான் பற்களும் ஒன்றிரண்டு உடைந்து விட்டன கை கால் சேதமும் உண்டு ஆக மொத்தம் குற்றுயிரும் குலையுயிருமாய்த்தான் சைத்தானிடம் போய்ச் சேர்ந்தேன். என்னைத் தஞ்சம் அடைந்தவர்களை அந்த நாசமாய்ப் போன கடவுளைப் போல் நான் சோதிக்க மாட்டேன் முதலில் இந்தக் காயங்களுக்கு சத்திர சிகிச்சை செய்து விடுவோம் வலி தெரியாமலிருக்க இதோ கொஞ்சம் பருகு நாட்டுச் சாராயம் என்றான் சைத்தான் மன்னித்துக் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2021 03:22

December 26, 2021

கோக்கோ ஜம்போ

ஏற்காடு. நள்ளிரவு முடிந்து காலை மணி நான்கு இருக்கும். முந்தின மாலை ஏழரையிலிருந்து கேம்ப் ஃபயர் போட்டு பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பன்னிரண்டு பேர் இருக்கலாம். நள்ளிரவுக்கு மேல் யாரோ ஒரு பாட்டைப் போட்டார்களா, நான் ஆட ஆரம்பித்து விட்டேன். எங்கள் குழுவில் இளையராஜாவையெல்லாம் காரில் போகும்போதோ தனியாக இருக்கும்போதோதான் கேட்பார்களாயிருக்கும். இப்படி ஒன்று கூடும் போது கோக்கோ ஜம்போ மாதிரி பாடல்கள்தான். இல்லாவிட்டால் கவ்வாலி. யாரோ மார்க்ஸிடம் ஒரு கேள்வி கேட்க, விவாதம் தொடங்கியது. ஆம். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2021 21:32

பித்தனின் பாடல்கள்: மனுஷ்ய புத்திரன்

சமீபத்தில் பிராகிருத மொழியின்  அகப்பாடல் திரட்டு ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன். ’காஹா சத்தசஈ’ எனப்படும் அக்கவிதைத் திரட்டிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளை தமிழில் சுந்தர் காளியும் பரிமளம் சுந்தரும் மொழிபெயர்த்திருக்கின்றனர். பொதுவாக நவீன கவிதை வாசிப்புப் பழக்கம் உள்ள எவருக்கும் கவிதை என்று தோன்றாத மிக எளிய சொற்களில் அக்கவிதைகள் எழுதப்பட்டிருந்தன.  காமத்தின் பெருமூச்சுகள், பிரிவின் பரிதவிப்புகள், காதலின் முன் இயலாமையின் ஏக்கங்கள் என விரியும் அப்பபாடல்ககளுக்கும் சங்கப்பாடல்களுக்கும் இடையே  வியக்கத்தக்க ஒற்றுமைகளைக் காணமுடிந்தது. இதை மொழிபெயர்ப்பாளர்களும் தங்கள் அறிமுக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2021 20:30

இணையதளம் புது வடிவம்

நானும் சீனியும் பேசிக் கொண்டிருந்தபோது நம் இணைய தளத்துக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட அதற்கான சுற்றுவழியைப் பார்த்து, திகைத்து, கடந்து சென்று விடுவார்கள் என்றார். நானும் ஆமாம் என்றேன். சரி, பண உதவி செய்ய நினைப்பவர்கள் சுலபமாகப் பணம் அனுப்ப என்ன செய்யலாம் என்று தொழில்நுட்ப நண்பரோடு கலந்து ஆலோசித்தார். அதற்கு ஒரு வேண்டுகோள் எழுதச் சொன்னார். நானும், பணம் வேண்டும் என்று எழுதி அதோடு இன்னும் ரெண்டு வரி சேர்த்து அனுப்பினேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2021 16:16

Chat support (சிறுகதை)

அன்னபூர்ணிதான் என்னுடைய உணவுத் துறை.  எப்போதெல்லாம் வீட்டில் உணவு இல்லையோ அல்லது ஒரே உணவையே ஐந்தாவது முறையாகத் தின்ன நேர்கிறதோ அப்போது அன்னபூர்ணிக்கு மெஸேஜ் போட்டு விடுவேன்.  என்னது, ஐந்தாவது முறையா?  இதோ கணக்கு:  நேற்று மதியம் சாம்பார்.  அதையே இரவுக்கு.  காலை இட்லிக்குத் தொட்டுக் கொள்ள.  இன்று மதியமும்.  அப்படியானால் இன்று இரவு ஐந்தாவது முறைதானே?  பிடி அன்னபூர்ணியை.  இன்று இரவு அப்படி நேர்ந்தது.  சப்வேயிலிருந்து ஒரு சாண்ட்விச் வாங்கலாம் என்று நினைத்தேன்.  அவந்திகா நான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2021 08:31

December 25, 2021

நன்றி மனுஷ்ய புத்திரன்

என்னுடைய கவிதைத் தொகுதியான ஸ்மாஷன் தாராவுக்கு நேற்று நள்ளிரவு மனுஷ்ய புத்திரன் எழுதிய முன்னுரை கிடைத்தது. நான் அதை அதிகாலையில் படித்தேன். ஹமீது அவர் பணி புரிந்து கொண்டிருந்த பதிப்பகத்திலிருந்து பிரிந்து வந்திருக்காவிட்டால் ஸீரோ டிகிரி பதிப்பகம் வரும் வரை நான் என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொண்டிருந்திருப்பேன். முதல் முதலாக, துணிச்சலாக என் நூல்களைப் பதிப்பிக்க முன் வந்தவர் ஹமீது. என்னுடன் ஒரே தட்டில் சாப்பிட்ட நண்பர்கள் கூட முன் வர மறுத்த செயல் அது. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2021 23:16

December 23, 2021

சாருவின் மொழி: போகன் சங்கர்

தமிழ் இலக்கியத்துக்கு சாருவின் பங்களிப்பு அவர் தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு திடீரென்று நீண்ட காலம் தேங்கிவிட்ட இலக்கியத்தின் மொழி நடையை நவீனப்படுத்தியதே.இது ஒரு ஆச்சரியமான விஷயம்.பழைய மொழியை பழைய உள்ளடக்கத்தை எதிர்த்து எழுதிக்கொண்டிருந்தவர்களும் அதே மொழியில்தான் எழுதிக்கொண்டிருந்தார்கள்.உண்மையில் புதுமைப்பித்தன் ஏற்படுத்திய உடைப்புக்குப் பிறகு அதன் அதிர்ச்சியிலிருந்து மீள்வது போல தமிழ் இலக்கிய உலகம் நீண்ட காலத்துக்கு புதுமைப்பித்தனுக்கும் முந்திய மொழிக்குப் போய்விட்டது.இந்த வகையில் சாருதான் மீண்டும் இந்த இறுக்கத்தை உடைத்தவர் எனலாம்.தனிப்பட்ட பிரதிகளாக அவரது நாவல்கள் முழுமை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2021 02:36

December 22, 2021

பிறந்த நாள் அன்று வந்த ஒரு கடிதம்…

தமிழில் எழுத்தாளனாக இருப்பது, இந்தியாவில் பெண்ணாகப் பிறப்பதைப் போல.  எவன் எப்போது கையைப் பிடித்து இழுப்பான், பலாத்காரம் பண்ணுவான் என்று தெரியாது.  எழுத்தாளனுக்கு அப்படிப்பட்ட பிரச்சினை இல்லை.  வேறு விதமான ஒரு பிரச்சினை இது.  தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும்தான்.  வேறு மொழி எழுத்தாளர்களுக்கு நான் சொல்வதே புரியாது.  நீங்கள் ஒரு மருத்துவர் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  ஒரு விமானியும் வந்து நான் மருத்துவர் என்று சொல்ல மாட்டார்.  மருத்துவர் என்றால் மருத்துவர்தான்.  அதிலேயே சித்த மருத்துவர், ஆயுர்வேத ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2021 23:34

அ-காலம் : முன் வெளியீட்டுத் திட்டம்

ஐந்து நாட்களுக்கு முன்பு யெக்கரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. டயர் பஞ்சராக்கப்பட்டிருந்தது. யெக்கருக்குத் தன் புதல்வன் கமாலின் ஞாபகம் வந்தது. கமாலும் இப்படித்தான் மூளைச் சலவை செய்யப்பட்டிருந்தான். இவர்கள் யாரும் இனிமேல் சிறுவர்கள் அல்ல. இவர்கள் மரணத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள். மனிதர்களின் குரல்வளையைக் கடித்துக் குதறும் நாய்களைப் போல் இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கொலை செய்யும் போது இவர்களின் புருவம் கூட உயர்வது இல்லை . இந்தச் சிறுவர்களுக்கு இந்த உலகத்தில் பெற்றுக்கொள்ள எதுவும் இல்லை. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2021 04:55

December 21, 2021

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.