சாரு நிவேதிதா's Blog, page 184
December 1, 2021
சுஷியும் வஸாபியும்…
நேற்று எக்ஸ்பிரஸ் அவென்யூ போகவில்லை. காதர் நவாஸ் கான் ரோடு போய் விட்டேன். என் நண்பர் மகேஷ் முகநூல் பார்க்க மாட்டார். ஆனால் நேற்று ஏதோ எதேச்சையாகப் பார்த்திருக்கிறார். ஊரில் பெரும்பாலும் இல்லாதவர் நேற்று ஊரில் இருந்திருக்கிறார். எப்போதும் வேலை மும்முரத்தில் இருப்பவர் நேற்று கொஞ்சம் ஆசுவாசமாக இருந்திருக்கிறார். நான் வரட்டுமா என்றார். கரும்பு தின்னக் கூலியா என்றேன். காதர் நவாஸ் கானில் தொஸ்கானோ என்ற இத்தாலிய உணவகம் உள்ளது. அங்கே போனோம். மகேஷ் கேரளத்தைச் சேர்ந்தவர் ... Read more
Published on December 01, 2021 21:12
November 29, 2021
கோவா நாட்குறிப்புகள் (2)
நாளைக்குள் ஔரங்கசீப் நாவலின் ஐந்து அத்தியாயங்களை அனுப்ப வேண்டும். இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எழுத ஆரம்பிக்கவில்லை. நேற்றுதான் ஜஹானாரா பேகத்தின் சுயசரிதை கிடைத்தது. இரவுக்குள் முடித்து விடலாம் என்று பார்த்தால் ஒன்பதரைக்கே உறக்கம் கண்களைச் சுழற்ற ஆரம்பித்து விட்டது. படுத்து விட்டேன். படுத்த உடனேயே எனக்குப் பிரக்ஞை போய் விடும். மரணம் மாதிரிதான். காலை நான்கு மணிக்குத்தான் உயிர்த்தெழுதல். இத்தனை கெடுபிடியான நிலையில் இதை ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால், மனம் பூராவையும் வேறொரு எண்ணம் ... Read more
Published on November 29, 2021 22:59
November 28, 2021
தியாகராஜா
வணக்கம் சாரு சார், “நான்தான் ஔரங்கசீப்…” வாசித்துக் கொண்டிருக்கிறோம். புதுமையாகவும் கூடவே விசித்திரமாகவும் உள்ளது. இது சாருதானா? இல்லை, உண்மையிலேயே நாவலில் உள்ளது போல் பேய் ஏதாவது பிடித்துத்தான் எழுதுகிறாரா எனத் தோன்றுகிறது. உழைத்த உழைப்பை அணுக் கூட நாவலில் தெரியப்படுத்தாமல், ஒவ்வொருவரின் சுய சரிதம் மூலம், அவர்கள் சொல்வது போல் காட்டி இருக்கிறீர்கள். ஆனால் இந்தக் கடிதம் ஔரங்கசீப் பற்றி அல்ல, அடுத்ததாக எழுதப்போகும், தியாகய்யர் பற்றியது. மோகமுள் நாவலை ஒலிச்சித்திரமாக கேட்டுக்கொண்டு இருந்த போது, ... Read more
Published on November 28, 2021 07:05
November 27, 2021
கோவா நாட்குறிப்புகள் (1)
வெளியுறவுத் துறையில் ஐஏஎஸ்ஸாக இருந்தாலும் கோபால் மிகவும் அடக்கமானவர். தன் பதவி பற்றி யாரிடமும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார். எந்த பந்தாவும் கிடையாது. கோவாவிலிருந்து திரும்பியதும் எனக்கு ஃபோன் செய்து “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள் சாரு, திருத்திக் கொள்ளலாம்” என்றார். யார் கேட்பார் இப்படி? இப்படிக் கேட்டதால் சொல்கிறேன். செந்தில் நன்கு சமைக்கக் கூடியவர். பிரமாதமாகச் செய்வார். அவரும் கோபாலும் மீன் வாங்கக் கிளம்பினார்கள். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இடம் ... Read more
Published on November 27, 2021 04:28
ஆண் – பெண்
பரீட்சைக்குப் படிப்பது போல் நான் விழுந்து விழுந்து படித்த நாவல் தருணின் ஆல்கெமி ஆஃப் டிஸையர். அதில் ஒரு இடம் வரும். காதலி, ஆண்களின் பாலியல் நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யும் மாணவி. தன் காதலனிடமிருந்தே தொடங்கலாம் என்று முடிவு செய்வாள் அவள். இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருப்பார்கள். முழு நேரமும் கலவிதான். முழு நேரமும். அவள் முதல் கேள்வியைக் கேட்கிறாள். நீ சுயமைதுனம் செய்வதுண்டா? இல்லை என்றுதான் சொல்வான் என்பது அவளுடைய திண்ணமான முடிவு. எந்நேரமும் ... Read more
Published on November 27, 2021 02:23
November 26, 2021
மூன்று கட்டளைகள்
என் வாழ்வில் சீனி அளவுக்கு சுவாரசியமான ஒரு மனிதன் இல்லை. ஒரு உதாரணம் தருகிறேன். அப்பா ஆசிரியர். சின்ன ஊர் என்பதால் அப்பாவுக்கு செம மரியாதை. அம்மாவும் ஆசிரியை. இருவருமே அரசு ஆசிரியர்கள் என்பதால் மற்ற பல ஆசிரியர்களைப் போல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை இல்லை. நடுத்தர வர்க்கம். என் நைனா பிச்சை எடுத்த வாத்தியார். தனியார் பள்ளி என்பது ஒரு காரணம். ஆறு குழந்தைகள் இன்னொரு காரணம். ஆனால் சீனி எனக்கு அடுத்த தலைமுறை. ... Read more
Published on November 26, 2021 22:51
November 22, 2021
விளக்கம்: லஃபீஸ் ஷாஹீத்
இறைதூதரின் முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களில் முக்கியமான ஒருவர் அலி இப்னு அபூதாலிப் (ரழி). நபிகளாரின் சிறிய தந்தையாரின் மகனான அலி (ரழி) யிற்குத் தான் நபிகள் நாயகம் தன்னுடைய மகளான பாத்திமா (ரழி) யை திருமணம் செய்து கொடுத்து இருந்தார். நபிகளார் இறந்த பிற்பாடு முஸ்லிம் சமூகத்தின் நான்காவது கலீஃபாவாக (ஆட்சியாளர்) பொறுப்பேற்றவர் அலி தான். மிகச்சிறந்த அறிஞரான அலி ஆத்மீகத்திலும் ஆழ்ந்து போனவர். இஸ்லாமிய உலகின் புகழ் பெற்ற சூஃபி வழியமைப்புகளின் நிறுவனர்களில் கிட்டத்தட்ட ... Read more
Published on November 22, 2021 22:02
ஒரு சந்தேகம்
250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு ஃபார்ஸி நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மல்ஃபூஸாத் எ நக்ஷ்பந்தியா என்பது அந்நூலின் பெயர். ஆசிரியர் ஷா மஹ்மூத். அவர் ஒரு சூஃபி. மொழிபெயர்ப்பாளர் மிகச் சிறந்த ஃபார்ஸி அறிஞர் என்பதால் மொழிபெயர்ப்பில் பிரச்சினை இருக்க வாய்ப்பு இல்லை. ஔரங்காபாதில் அடங்கியிருக்கும் பாபா முஸாஃபிர், அவரது குருவான பாபா பலங்க்போஷ் ஆகியோரின் வரலாறு. இதில் ஒரு இடத்தில் ஒரு சந்தேகம். நபிகள் நாயகம் தன் தோழரிடம் ”உலகில் நீ ... Read more
Published on November 22, 2021 20:09
பேரின்பம் எது?
ஒரு கலந்துரையாடலின் போது நண்பர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. வாழ்க்கையில் உங்களுக்குப் பேரின்பம் தரக் கூடியது எது? ஒரு நண்பர் பெண் என்றார். பெண்களுடன் இருப்பது, பெண்களோடு பேசுவது, பெண்களோடு பழகுவது இத்யாதி. ராஜேஷ் (கருந்தேள்) விடியோ கேம்ஸ் என்றார். விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டேன். கிருஷ்ணா (விஞ்ஞானி) வாசிப்பதே பேரின்பம் என்றார். அதிலும் குறிப்பாக, சாருவின் எழுத்து. கார்த்திக் (கிருஷ்ணகிரி) இசையே பேரின்பம் என்றார். இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுவது என்று சொல்வார் என ... Read more
Published on November 22, 2021 01:46
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

