நாளைக்குள் ஔரங்கசீப் நாவலின் ஐந்து அத்தியாயங்களை அனுப்ப வேண்டும். இன்னும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எழுத ஆரம்பிக்கவில்லை. நேற்றுதான் ஜஹானாரா பேகத்தின் சுயசரிதை கிடைத்தது. இரவுக்குள் முடித்து விடலாம் என்று பார்த்தால் ஒன்பதரைக்கே உறக்கம் கண்களைச் சுழற்ற ஆரம்பித்து விட்டது. படுத்து விட்டேன். படுத்த உடனேயே எனக்குப் பிரக்ஞை போய் விடும். மரணம் மாதிரிதான். காலை நான்கு மணிக்குத்தான் உயிர்த்தெழுதல். இத்தனை கெடுபிடியான நிலையில் இதை ஏன் எழுத ஆரம்பித்தேன் என்றால், மனம் பூராவையும் வேறொரு எண்ணம் ...
Read more
Published on November 29, 2021 22:59