சாரு நிவேதிதா's Blog, page 183
December 7, 2021
நஷ்டம் எனக்குத்தான்…
வினித் போன்றவர்களைப் பற்றி விமர்சித்து எழுதுவதால் வினித்துக்கு மனக்கஷ்டம் என்பது போக, இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது நான்தான். உதாரணமாக, பொள்ளாச்சி மகாலிங்கம் மாதிரி ஒரு கோடீஸ்வரருக்கு என் எழுத்து பிடிக்கிறது, சந்திக்க நினைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே வினித் பற்றிய கட்டுரைதான் அவருக்கு முன்னே காண்பிக்கப் படும். அதைப் படித்த பிறகு மனிதர் என் பக்கம் திரும்பிப் பார்ப்பாரா? அதனால்தான் சொல்கிறேன், என் நண்பர்கள்தான் எனக்குப் பெரிதும் பிரச்சினையாக இருக்கிறார்கள் என்று. எழுதாமல் இரேன் என்றால் ... Read more
Published on December 07, 2021 01:27
December 6, 2021
வாழ்விலே ஒரு முறை…
பொதுவாக என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குப் புரியும். நான் மனிதர்களை விரும்பவில்லை. குறிப்பாக இந்தியர்களின் பழக்க வழக்கங்கள் எனக்கு மிகுந்த எரிச்சலைத் தருகின்றன. இந்தியர்கள் ஒன்றும் நரகத்திலிருந்து வரவில்லைதான். ஆனால் இவர்கள் இவர்களின் பெற்றோரினால் இப்படியாகத்தான் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். எங்கள் வீட்டுக்கு மேல் வீட்டில் குடியிருப்பவர்கள் பெரும் கோடீஸ்வரர்கள். ஆனால் மேல் வீட்டிலிருந்து எங்கள் பால்கனியில் சகலமும் வந்து விழுகிறது. வாழைப்பழத் தோல், சாக்லெட் காகிதங்கள், கோழி மற்றும் ஆட்டு எலும்புத் துண்டு, தரை பெருக்கும் துடைப்பானிலிருந்து விழும் ... Read more
Published on December 06, 2021 22:49
December 5, 2021
அவனா நீ?
குமரேசன் ஃபோன் செய்தார். “பதற்றம் கொள்ளாதீர்கள். இந்த வினீத் பிரச்சினையால் உங்கள் வேலை எதுவும் கெட்டு விடக் கூடாது” என்றார். ஔரங்கசீப் படிப்பவர்களுக்குத் தெரியும். மாத ஆரம்பத்திலேயே பதினைந்து அத்தியாயங்களை அனுப்பி விடுவேன். பிறகு அந்த மாதம் பூராவும் படித்துக் கொண்டிருப்பேன். ஆனால் இன்று தேதி ஐந்து ஆகி விட்டது. ஒரே ஒரு அத்தியாயம்தான் அத்தியாயப் பட்டியலில் இருப்பதை நீங்கள் காண முடியும். அவ்வளவுதான் அங்கே உள்ளது. பதினைந்தில் இன்னும் ஒன்று கூட அனுப்பவில்லை. நாளைக்குள் இரண்டாவது அனுப்ப வேண்டும். விழா முடிந்ததும் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். வினீத் பிரச்சினை குறுக்கிட்டு விட்டது. அதை ... Read more
Published on December 05, 2021 03:24
December 4, 2021
ஓராண்டுப் பயிற்சி
ஸீரோ டிகிரி பதிப்பகம் மற்றும் தமிழரசி அறக்கட்டளை இணைந்து நடத்திய பரிசளிப்பு விழா நேற்று இனிதே நடந்தது. இப்படித்தான் மற்றவர்கள் எழுதுவார்கள். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லையே? அதனால் அந்த இனிய விழாவில் என் நண்பன் செய்த குளறுபடியால் நேர்ந்த பிரச்சினைகளையும் எழுதித்தான் ஆக வேண்டும். கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாய் செலவாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அத்தனை பிரம்மாண்டமான விழா. அதை சாத்தியப்படுத்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். முக்கியமாக தமிழரசி அறக்கட்டளையின் நிர்வாகிகளும் ஸீரோ டிகிரி பதிப்பக நண்பர்களும். அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும். மிகச் சிறப்பான இலக்கிய ... Read more
Published on December 04, 2021 22:51
December 3, 2021
எழுதிக் கொண்டே இருக்கலாம்…
ஔரங்கசீப் நாவலுக்காக நூறு புத்தகங்கள் வாங்கியிருப்பேன். ஒவ்வொன்றுமே ஆயிரம் ரெண்டாயிரம் இருக்கும். இதில் ஒருசில தான் நானே காசு போட்டு வாங்கியது. மற்றவை வாசகர்கள்/நண்பர்கள் வாங்கிக் கொடுத்தது. இன்னொரு அம்பதோ நூறோ நூலகங்களில் திரட்டியது. ஒரு நாவலுக்காக இந்த அளவு படித்தது இதுதான் முதல். புத்தகங்கள் மட்டுமே ஒரு லட்சம் ரூபாய் ஆகியிருக்கும். நேற்றோடு ஒரு ஐநூறு பக்க நூலைப் படித்து முடித்தேன். ஒரே ஒரு தகவலைத்தான் எடுத்துக் கொண்டேன். ஆனால் அது ஒரு அதி முக்கியமான ... Read more
Published on December 03, 2021 00:47
December 2, 2021
அமலா பாலை அழைத்திருக்கிறீர்களா, ராம்ஜி?
வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் ஆயுளோடு ஒப்பிட்டால் மனித ஆயுள் எத்தகையது? ஒப்பிட முடியுமா? ஒரு புல் நுனியில் திகழும் நீர்த் துளியோடு சமுத்திரத்தை ஒப்பிட முடியுமா? நீர்க்குமிழி. ஈசல். இவ்வாறாக, மனித ஆயுளின் அற்பத்தன்மைக்கு எத்தனையோ எண்ணிலடங்கா உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் ஒரு ஹெடோனிஸ்டுக்கு கண்ணிமைக்கும் ஒரு கணம்தான் ஆதி அந்தம் இல்லாதது. Eternal. இந்தப் பின்னணியில் பின்வரும் விஷயத்தைப் படிக்கவும். ஏற்கனவே எழுதியிருக்கிறேன். என் காலத்திய இலக்கிய நிகழ்ச்சி மவுண்ட் ரோடு எல்.எல்.ஏ. ... Read more
Published on December 02, 2021 21:53
நூற்றாண்டில் ஒருவர்
நூற்றாண்டில் ஒருவர்தான் இப்படித் தோன்ற முடியும். இவரைக் கேட்கும் தோறும் இவரை எனக்கு அறிமுகப்படுத்திய பா. ராகவனை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். divine என்ற வார்த்தைக்கு ஸ்தூல சாட்சி வெங்கடேஷ் குமார். Raag Bhairav by Padmashri Pandit Venkatesh Kumar – YouTube
Published on December 02, 2021 03:52
இலக்கியத்தை விலை பேசுதல்: ஜெயமோகன்
இந்தக் கட்டுரையில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் நான் எழுதியதாகவும் கொள்ளவும். இலக்கியத்தை விலைபேசுதல்… | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
Published on December 02, 2021 03:16
நான்தான் ஔரங்கசீப்… நாவலுக்கு வந்த மிகச் சிறந்த எதிர்வினை
எனக்கே கொஞ்சம் பணமொடையாத்தான் இருக்கு. எதோ கொஞ்சம் பாத்து செய்ங்க.
Published on December 02, 2021 00:22
December 1, 2021
என் ஆசானுக்கு மரியாதை
ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் தமிழரசி அறக்கட்டளை சார்பாக என் ஆசானும் மதிப்புக்குரிய நண்பருமான அ. மார்க்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்படுகிறது. இதை நான் எனக்கே அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். எங்கள் சில்ஸிலாவில் யாருமே அப்படி அப்படியே க்ளோனிங் செய்த மாதிரி ஒருவர் சொல்வதை அடுத்தவர் ஏற்றுக் கொள்வது என்பது கிடையாது. அரசியல், தத்துவம், சமூகம், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் அன்பையும் அபிமானத்தையும் அடிப்படையாகக் கொண்ட புரிதலோடு வாழ்தல் என்பதுதான் இந்த சில்ஸிலாவின் பொதுத்தன்மை. ... Read more
Published on December 01, 2021 22:19
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

