சாரு நிவேதிதா's Blog, page 192
September 13, 2021
பேரரசனோடு பழகுதல்
ஒரு சிறுபத்திரிகையைச் சேர்ந்த நண்பர். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம். பதினைந்து ஆண்டுகளாக அந்தப் பத்திரிகையை நடத்தி வருகிறார். கண்களில் ஒத்திக் கொள்வது போல் இருக்கும். எந்த கோஷ்டியையும் சேராதவர். எனக்குத் தொடர்ந்து தன் பத்திரிகையை அனுப்பி வருகிறார். அவருக்கு ஏதாவது கைம்மாறு செய்ய வேண்டுமே என்று பதினைந்து ஆண்டுகளாகவே யோசித்து வருகிறேன். கைம்மாறு என்ன கைம்மாறு? கைக்காசையும் நண்பர்களிடமிருந்து பணம் திரட்டியும் பத்திரிகை நடத்தி வருபவருக்கு ஒரே ஒரு தேவைதான் இருக்க முடியும். அந்தத் தேவையை ... Read more
Published on September 13, 2021 01:55
September 12, 2021
இது போதும்…
அன்புள்ள சாரு நிவேதிதா, நான் ஆரம்ப கட்ட வாசகன் ஆகையால் எனக்கு உலக இலக்கிய புத்தகங்கள் மற்றும் தமிழ் இலக்கிய புத்தகங்கள் அறிமுகப்படுத்த வேண்டுகிறேன்.தற்போது உங்களையும் மற்றும் ஜெயமோகன், ராமகிருஷ்ணன் எழுத்துக்களை படித்து வருகிறேன்.எனக்கு மேலும் இலக்கிய அறிமுகம் தேவை.ஆகையால் உலக இலக்கிய புத்தக பெயர்களை வரிசைப்படுத்தி தரவும். இப்படிக்கு தங்கள் அன்புள்ள வாசகன். மூவரையும் தொடருங்கள். அது போதும். சாரு
Published on September 12, 2021 01:13
September 10, 2021
புத்தரும் விநாயகரும்: சிறுகதை: அராத்து
புத்தர் : மிஸ்டர் விநாயகா , நான் தான் நீ என்கிறார்கள். அம்மா அப்பாவைச் சுற்றி விட்டு , டகால்டி செய்து என் சகோதரனை ஏமாற்றும் பழக்கம் எனக்கு இல்லை . நெஞ்சம் பற்றி எரிகிறது விநாயகர் : ஹேய் , ப்ரூ , மேஜிக்கல் ரியலிஸம் தெரியாதா ? புத்தர் : ப்ரூ , மேஜிக்கல் ரியலிஸம் தெரிந்த ஆட்கள்தான் இப்படி விளையாடுகிறார்கள். விநாயகர் : கூல் ப்ரூ , அராத்துன்னு ஒரு ஆள் இருக்கான். ... Read more
Published on September 10, 2021 17:50
பாபாகாவின் புதிய நாவல்: அத்தியாயம் 2
2 இப்ராஹிமின் சிறுகதையொன்றை பெருங்கதையாக நிரவிக்கொண்டிருந்தார் மைந்தன். அவருக்கு இப்போழுதெல்லாம் கதை சொல்லுவதே தொழிலாகிப் போய்விட்டது. ஒரு நாள் அவர் மனைவியிடம் ஒரு ஊருல ஒரு இட்லி இருந்தது என்று கதை சொல்ல ஆரம்பித்த போது அவரது மனைவி பயந்தே போனாள். அவருக்காக கேஸரோலில் வைத்திருந்த ஐந்து இட்லிகளில் நான்கை அன்று மதியம் எடுத்து இரண்டாம் சிற்றுண்டிப் பசியில் அவள் விழுங்கிவிட்டாள். அதை சொல்லிக்காட்டத்தான் அந்தப் பரிதாபமான கதை ஆரம்பித்தது. இப்ராஹிம் எழுதிய தீ ஏன் சொட்டியது ... Read more
Published on September 10, 2021 06:08
வேடிக்கை பார்க்கும் பூனை…
நான் சொல்வதை உங்களில் பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். நம்புவதோ நம்பாமல் இருப்பதோ அவரவர் விருப்பம். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் ஒரு நண்பர் இன்னொரு நண்பரின் முகநூல் பதிவை எனக்கு அனுப்பி இதைப் பொருட்படுத்த வேண்டாம், வேலையைப் பாருங்கள் என்று சொன்னார். ஐயோ, அவரை நான் ப்ளாக் செய்து பல ஆண்டுகள் ஆயிற்றே என்றேன். அந்த நண்பரை என் எழுத்து எப்படித் துன்புறுத்தியிருக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. துன்புறுத்தினால் துன்புறுத்துபவரின் எழுத்தைப் படிக்காமல் ... Read more
Published on September 10, 2021 01:12
September 9, 2021
ஜெயமோகனின் கடிதம்
நேற்று வாட்ஸப்பில் ஜெயமோகனின் கடிதம் ஒன்றை காயத்ரி எனக்கு அனுப்பியிருந்தாள். அவளுடைய அப்பாம்மை கதை பற்றி. சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால், ஜெயமோகன் மற்றும் என்னுடைய ரசனை இரண்டும் இருவேறு துருவம் என்பது ஊர் அறிந்த விஷயம். நான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மரியோ பர்கஸ் யோசாவை அவருக்குப் பிடிக்காது. இப்படி ஆயிரம் உதாரணம் சொல்லலாம். ஆனால் அவ்வப்போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொள்வதும் உண்டு. காயத்ரியின் அப்பாம்மை கதை ஜெயமோகனுக்குப் பிடித்திருந்தது என்று அறிந்து மகிழ்ச்சி. ... Read more
Published on September 09, 2021 23:33
விநாயகர் சதுர்த்தியும் புத்திஜீவிகளும்… (2)
அபிலாஷ் என் நெருங்கிய நண்பர். பிரச்சினை என்னவென்றால், எந்த இடத்தில் என்ன பேசுவது என்று தெரியாது. ஒரு ஹிந்துப் பண்டிகை தினத்திலா இதைப் போய் பேசுவது? அதுவும் நாடு இப்போது இருக்கும் நிலையில்? பண்டிகை என்பது கொண்டாடுவதற்குத்தானே? நான் காலையிலிருந்து கொழுக்கட்டை சாப்பிடுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அங்கே வந்து ரகளை செஞ்சால் நான் எப்படி இனிக்க இனிக்கக் கொழுக்கட்டை சாப்பிடுவது? சரி, பகுத்தறிவுவாதிகளே, நீங்கள் எப்போது கொழுக்கட்டை தருவீர்கள்? கார்ல் மார்க்ஸ் பிறந்த தினத்திலா?
Published on September 09, 2021 23:05
ஒரு விளக்கமும் என் பதிலும்… (2)
சாரு, அதன் பொருள் விநாயகரை உடைக்க வேண்டும் என்பதல்ல. விநாயகருக்குள் இருப்பவர் புத்தர் என்பதே. விநாயகர் ஒரு பூர்வ புத்தர். இது ஒரு உருவகம் மட்டுமே. இது அபிலாஷ். புத்திஜீவிகளின் பிரச்சினையே இதுதான். ஒரு குழந்தை ஒரு பொம்மைக்குத் தலை சீவிப் பொட்டிட்டு புடவை கட்டி சோறு ஊட்டுகிறது. நான் புத்திஜீவி. நான் என்ன செய்ய வேண்டும்? அந்தக் குழந்தையிடம் சென்று “ஏய் முட்டாள் குழந்தையே, இது ஒரு உயிரில்லாத பொம்மை. இதற்கு உயிரில்லை, இது ஒரு ... Read more
Published on September 09, 2021 22:17
விநாயகர் சதுர்த்தியும் புத்திஜீவிகளும்… (1)
அபிலாஷ் ஒரு படம் போட்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லியிருக்கிறார். விநாயகர் சிலையை இரண்டாக உடைத்துக் கொண்டு புத்தர் தோன்றும் படம். இதைப் பார்த்தவுடன் ஒரு ஹிந்துவுக்கு என்ன தோன்றும்? இப்படிப்பட்ட நண்பர்கள்தான் மோடியை வளர்த்து விடுகிறார்கள். தங்கள் அடையாளத்தை மறந்து விட்டு இருந்த ஹிந்துக்கள் தங்கள் அடையாளத்தைத் திரும்பப் பெறவும் ஒருங்கிணைப்பு செய்து கொள்ளவும் அபிலாஷ் போன்ற நண்பர்களின் இது போன்ற காரியங்களே உத்வேகம் அளிக்கின்றன. கிறித்தவக் கல்லூரிகளில் சென்ற தேர்தலில் ராகுலுக்கு வாக்களிக்கச் சொல்லி ... Read more
Published on September 09, 2021 21:44
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

