நேற்று இரவு ஒன்பது இருபதுக்கு க்ளப் ஹவுஸில் ஃபாத்திமா பாபுவின் சிறுகதை நேரம் தொடங்கியது. ஒன்பது முப்பதுக்குக் கதையை வாசிக்க ஆரம்பித்தார். நேற்றைய கதை என்னுடைய மாயமான் வேட்டை. பொதுவாக தமிழ்ச் சூழலில் கதையையோ கவிதையையோ வாசித்துக் கேட்பது எனக்கு ஆகாத காரியமாக உள்ளது. காரணம், நான் அல்ல. வாசிப்பவர்களுக்கு வாசிக்கத் தெரியவில்லை. அதிலும் அந்தத் துறையில் பிரபலமாக இருப்பவர்கள் வாசிப்பதைக் கேட்கவே சகிக்கவில்லை. கவிஞர்களின் கவிதை வாசிப்பும் கொடுமை. ஆனால் ஐரோப்பிய மொழிகளில் இது போன்ற ...
Read more
Published on September 14, 2021 23:06