சாரு நிவேதிதா's Blog, page 194

August 31, 2021

இனிய நினைவுகள்…

என் வயது 68.  அதனால் கடவுளைத் தவிர வேறு எதற்காகவும் பயப்பட வேண்டியதில்லை, தயங்க வேண்டியதில்லை என்ற மனோபாவம் வந்துள்ளது.  முன்பேயும் இப்படித்தான்.  இப்போது அது கொஞ்சம் வலுப்பட்டிருக்கிறது.  பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது.  இந்தியா டுடே என் நண்பரும் என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பவருமான வாஸந்தி ஆசிரியர் பதவியிலிருந்து விலகி மற்றொருவர் அதன் ஆசிரியராக ஆகியிருந்த நேரம்.  புதிய பொறுப்பு அவருக்கு.  உதவி ஆசிரியராக இருந்து ஆசிரியர் பொறுப்புக்கு வந்தவர்.  இப்போது தினமலரில் பணியில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2021 21:35

தள்ளுபடி விலையில் என் புத்தகங்கள்…

20 சதவிகிதத் தள்ளுபடியில் என் புத்தகங்கள் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் கிடைக்கின்றன. பயன்படுத்திக் கொள்ளுங்கள்…
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2021 05:58

தமிழ்த் தாயின் புன்னகை

ஒரு இளைஞனின் கடிதம் வந்தது.  பதினாறு வயதிலிருந்து உங்களைப் படிக்கிறேன்.  இப்போது வயது இருபத்து மூன்று.  பதின்பருவத்தில் உங்களுக்கு நீண்டதொரு கடிதம் எழுதினேன்.  ஆனால் அனுப்பவில்லை.  அனுப்பினால் திட்டுவீர்கள் என்று கேள்விப்பட்டு பயந்து அனுப்பாமல் இருந்து விட்டேன்.  இப்படி நீண்டது அந்த ஆங்கிலக் கடிதம்.  இதுதான் சாரம். ரொம்பவும் மனதைத் தொட்டதால் “ஒருநாள் ப்ரூ ரூம் பக்கம் வாருங்களேன், சாப்பிடுவோம்” என்று பதில் எழுதினேன்.  உங்களோடு சாப்பிட்டால் செத்துடுவேன் சாரு. ஐயோ, ஏன், நான் ஒன்றும் விஷமெல்லாம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 31, 2021 01:44

August 29, 2021

தமிழ்த் தாயின் சாபம்…

எஸ்.ரா.வின் பேட்டி ஒன்றைப் பற்றி பலரும் சிலாகித்து எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.  முகநூலிலும் பார்த்தேன்.  எல்லோருமே அதில் கொண்டாடும் குறிப்பிட்ட விஷயம், அதில் உள்ள நேர்மறையான எண்ண அதிர்வுகள்.  உதாரணமாக, எஸ்.ரா.வுக்கு வாசகர் ஒருவரின் போஸ்ட் கார்ட் போகிறது.  என்னடா எழுதுறே, உன் கை காலை வாங்குவேன்.  அந்தக் கார்டில் வாசகரின் விலாசமும் இருப்பதால் அவர் வீட்டுக்கே போகிறார் எஸ்.ரா.  அதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.  அந்த வாசகர் எஸ்.ரா.வுக்குத் தேநீர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2021 22:22

ஓர் இனிய சந்திப்பு

வாசகர் வட்ட சந்திப்பு நடத்தி இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகின்றன.  சீனியின் புத்தக வெளியீட்டு விழாவில் கூடினால் அது வா.வ. சந்திப்பு.  அப்படி இறுதியாக உத்தண்டியில் கூடினோம்.  கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாகக் கூடவில்லை.  கொரோனா போனால் மாமல்லபுரத்தில் சந்திக்கலாம்.  ஆனால் அதற்கு முன்னதாக சில திட்டங்களை வகுக்க வேண்டும்.  அதற்கு முதல் அடியாக சீனி என் பேச்சைக் கேட்க வேண்டும்.  லௌகீகமாக நான் ஒரு பூஜ்யம் என்பதால் சீனியும் சரி, காயத்ரியும் சரி, நான் என்ன ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 29, 2021 02:38

August 28, 2021

வழி காட்டுதல்

அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு, நான் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன். ஒரு பக்கம், கல்லூரிக்கு சென்று தத்துவம் பயில வேண்டும் என்ற ஆசை. இன்னொரு பக்கம் திரைப்பட இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசை. எதைத் தேர்ந்தெடுப்பது என்று புரியவில்லை. நீங்கள் வழி காட்டுவீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வாசகன்,  சுரேஷ் டியர் சுரேஷ், உங்கள் பொருளாதாரப் பின்னணி தெரியாது.  திரைப்படத் துறையில் முன்னணியில் வந்தவர்களிடம் கோடிக் கணக்கில் சொத்து இருக்கிறது.  அவர்களின் புதல்வர்கள் திரைப்படத் துறையிலேயே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 28, 2021 00:47

August 24, 2021

ராத்வா அஷூரின் க்ரானடா

ஊரின் மிக அழகான பெண் என்ற என்னுடைய மொழிபெயர்ப்புத் தொகுதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதில் எகிப்தைச் சேர்ந்த ராத்வா அஷூரின் க்ரானடா என்ற புகழ்பெற்ற நாவலின் ஒரு பகுதியை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருந்தேன். மொழிபெயர்ப்பு வெளிவந்து இருபது ஆண்டுகள் இருக்கலாம். சரியாக நினைவில்லை. அரபி இலக்கியத்தில் நான் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் நண்பர்கள் அறிந்திருக்கலாம். நான் மொழிபெயர்த்த க்ரானடா நாவலின் பகுதியையும் ராத்வா அஷூர் பற்றி நான் எழுதியிருந்த குறிப்பையும் இங்கே மீண்டும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 18:11

7. அக்லாக் என்றால் என்ன? (நான்தான் ஔரங்கசீப்… விவாதங்கள்)

நான்தான் ஔரங்கசீப்… நாவலின் பத்தாவது அத்தியாயத்தில் ஔரங்கசீப் தன் வாழ்வின் ரூஹ் என்று இரண்டு விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.  அவை, அக்லாக் மற்றும் ஆதாப்.  இந்த இரண்டு வார்த்தைகளையும் நான் முதல் முதலாக ஔரங்கசீப்பின் கடிதங்களில் கண்டேன்.  பல இடங்களில் தொடர்ந்து இந்த வார்த்தைகளைக் குறிப்பிடுகிறார் ஔரங்கசீப்.  மட்டுமல்ல.  ஒரு பெர்ஷியனின் அடையாளமே இந்த அக்லாக்தான் என்கிறார்.  ரூஹ் என்றால், ஆத்மா, உயிர் மூச்சு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  வாழ்வின் அர்த்தம்.  ஃபார்ஸி மொழியில் அக்லாக் என்றால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 06:17

நான்தான் ஔரங்கசீப்… மதிப்புரைகள் (6)

நான் கடந்த இரு வாரங்களுக்கு முன், கோவிட் நோய்த் தொற்றால் பீடிக்கப்பட்டேன். என் வாழ்க்கையில் இது போன்ற ஒரு நரக வேதனையை அனுபவித்தில்லை என அடித்துச் சொல்வேன். உடலளவிலும் ,மனதளவிலும் இந்தக் கொடிய நோய் கொடுக்கக் கூடிய வலியை வார்த்தைகளில் கடத்த இயலவில்லை. இந்த நிலையில்தான் நான் bynge appஐ டவுன்லோடு செய்து சாருவின் நான்தான் ஒளரங்கசீப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பின், என் கடும்காய்ச்சலிலும், தலைவலியிலும், இதர பல நோவுகளிடையேயும் என்னுடன் ஒளரங்கசீப் பேச ஆரம்பித்தார். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2021 00:24

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.