சாரு நிவேதிதா's Blog, page 105
June 4, 2023
விரல்களின் வழியே வழிந்தோடும் இசை…
இன்று பெட்டியோ… நாவலின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை எழுதி முடித்தேன். வாழ்வே முடிந்து விட்டது போல் தோன்றியது. கூடவே Ludovico Einaudiயின் இசையைக் கேட்டுக் கொண்டே எழுதினேன். போலிஷ் இயக்குனர் Andrzej Wajda இயக்கிய தெ கண்டக்டர் (1980) என்ற படத்தில் ஒரு காட்சி வரும். எண்பது வயது இசைக் கலைஞன் ஒருவனுக்கும் முப்பது வயது பெண்ணுக்குமான காதல் பற்றிய கதை. இசைக் குழுவை தன் கரங்களால் இயக்கிச் செல்லும்போது அந்த இசைக் கலைஞனின் விரல்களின் வழியே ... Read more
Published on June 04, 2023 07:55
இசையும் மௌனமும்
வணக்கம் சாரு ஐயா, நான் தமிழ் சினிமாப் பாடல்களைத் தாண்டி மற்றவை ஏதும் பெரிதாகக் கேட்பதில்லை. உங்கள் பதிவுகள் சிலவற்றில் ஏதாவது வீடியோக்களோ பாடல்களோ இணைத்திருப்பீர்கள். நான் அதில் சிலவற்றைக் கேட்பேன். அவை எனக்கு ஒத்து வரவில்லை. நேற்றையப் பதிவில் சாமுவெல் பார்பரின் இசைக் கோர்வை ஒன்றை இணைத்திருந்தீர்கள். அதனைக் கேட்டேன். ஆரம்பத்தில் ஏதோ கறுப்பு வெள்ளை தமிழ் சினிமாப் பின்னணி இசை போல் இருந்தது. பின்னர் ஆங்கிலப் படத்தில் வரும் பின்னணி இசை போல் இருந்தது. ... Read more
Published on June 04, 2023 00:01
June 2, 2023
பெட்டியோ… உன்மத்தமும் கலையும்
சாமுவெல் பார்பர் உருவாக்கிய அடாஜியோ ஃபர் ஸ்ட்ரிங்ஸ் பாடலின் ஒரிஜினல் வடிவத்தை நயநதினி பெருமாளுக்கு அறிமுகப்படுத்தினாள். பார்பரை இப்போதுதான் கேட்கிறேன், நீ அதன் ரீமிக்ஸ் வடிவத்தைக் கேட்டிருக்கிறாயா என்றான். கேட்டிருக்கிறேன், ஆனால் அத்தனை கவர்ந்தது இல்லை என்றாள். இப்போது கேள் என்று அவள் கேட்டிராத ஒரு லைவ் வர்ஷனைப் போட்டுக் காண்பித்தான். உன்னிடமிருந்து வரும்போது அது வேறு மாதிரி இருக்கிறது என்று சொல்லி விட்டு அதற்கு நடனமாட ஆரம்பித்தாள். நடனம் தெரிந்தவள். அந்த நடனம் எப்படி இருந்தது ... Read more
Published on June 02, 2023 04:19
May 29, 2023
patiyo: a story of ménage à trois
பெட்டியோ… எது பற்றியது? பெட்டியோ… is the story of ménage à trois: Perumal, Nayanadini… and Sri Lanka.
Published on May 29, 2023 09:02
நேரம்
மேற்கு ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு நீண்ட கால நண்பர் இங்கே ஜூன் மாதம் வருகிறார். என்னை ஒரு லஞ்சிலோ டின்னரிலோ சந்திக்க வேண்டும் என்கிறார். ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்றால், உடனடியாக ஓடி விடுவேன். அதில் எனக்கு ஒரு நான்கு ஐந்து மணி நேரம் – அதாவது, அரை நாள் – செலவாகி விடும். ஆனால் இப்போதும் நான் அப்படி இருக்க முடியாது. என் வயது 70. என்னுடைய ஒவ்வொரு மணித்துளியையும் மிகக் கச்சிதமாக செலவு ... Read more
Published on May 29, 2023 05:12
கொண்டாட்டம்
வாழ்வின் மிகக் கொண்டாட்டமான, குதூகலமான மனநிலையில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருப்பது இப்போதுதான். பெட்டியோ… அப்படியாகச் சென்று கொண்டிருக்கிறது. இன்றும் நயநதினியிடமிருந்து ஒரு நீண்ட மெஸேஜ். ஒரு நாவலின் அத்தியாயம்தான் அது. அதை மொழிபெயர்த்து அப்படியே ப்ளாகில் போட்டு விட மனம் துடிக்கிறது. குறைந்த பட்சம் அதில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு மேற்கத்திய இசைக் கோர்வையையாவது போடலாம் என்று ஆர்வமுறுகிறது மனம். ஆனால் நாவலிலிருந்து எதுவுமே வெளியில் வரலாகாது எனபது என்.எஃப்.டி.யின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. வெளியே பிரபலம் ... Read more
Published on May 29, 2023 00:49
May 28, 2023
நயநதினியின் வாட்ஸப் மெஸேஜ்
நண்பர் ரிஷான் ஷெரிஃப் ஃபேஸ்புக்கில் இவ்வாறு எழுதியிருக்கிறார்: அன்பு Charu Nivedita ’நயந்தினி’ என்றொரு பெயர் சிங்களத்தில் இல்லை. அவரது பெயர் நயனி, நயனா அல்லது நந்தினியாக இருக்கக் கூடும். ஏன் சொல்கிறேன் என்றால் சிங்களவர்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது பிறந்த நேரத்தின் அடிப்படையில் மிகவும் நல்ல அர்த்தத்துடன் கூடிய பெயரையே சூட்டுவார்கள். அவர்களுக்கு தந்தை வழிப் பெயரொன்றும், தாய்வழிப் பெயரொன்றும் குடும்பப் பெயரொன்றும் சேர்ந்து மிக நீண்ட பெயரொன்று வைக்கப்படும். அரசாங்க அடையாள அட்டைகளிலும், பரீட்சைத் ... Read more
Published on May 28, 2023 05:26
May 27, 2023
நயந்தினியின் கதை…
பெட்டியோ… நாவலை இதுவரை மூவர் படித்தோம். இலங்கை நண்பர், நான், சீனி. கடைசி அத்தியாயம் உங்கள் எழுத்தின் உச்சம் என்றார் சீனி. எனக்குமே அப்படித்தான் தோன்றியது. ஆனால் என்.எஃப்.டி.யில் வெளியிடுவதற்கு முன்னால் ஒரு யோசனை என்றார். கடைசி அத்தியாயத்தில் வரும் நயந்தினி என்ற சிங்களப் பெண்ணை நாவல் நெடுகிலுமே நிகழ விட்டால் என்ன? சீனியின் யோசனை. எனக்குமே அந்த எண்ணம் இருந்தது என்றாலும், அதை வேறு ஒரு நாவலாக எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் சீனி சொன்ன ... Read more
Published on May 27, 2023 07:44
May 24, 2023
மகிழ்ச்சியான தினம்
நீண்ட காலத்துக்குப் பிறகு ஒரு மகிழ்ச்சியான நாவலை எழுதி முடித்தேன். அதுவும் நான்கே நாட்களில். 125 பக்கம். பேய் வேகத்தில் எழுதினேன். அடை மழை போல் கொட்டின வார்த்தைகள். இருவருக்கு அனுப்பி வைத்தேன். இருவரும் ஒரே அமர்வில் படித்து விட்டார்கள். அதுவே பெரிய வெற்றி. நான் நினைத்தது போலவே இறுதி அத்தியாயம் பிரமாதம் என்கிறார்கள். நானும் அப்படி சமீப காலத்தில் எழுதியது இல்லை. நேற்று முடித்து அனுப்பும்போது நள்ளிரவு. இதைக் கொண்டாடுவதற்கே கோவா போகலாம் என்று இருக்கிறது. ... Read more
Published on May 24, 2023 22:09
May 23, 2023
பெட்டியோ நாவல் தயார்
பெட்டியோ நாவலை எழுதி முடித்து விட்டேன். முதல் ட்ராஃப்ட்டில் 105 பக்கம். நான்கு நாள்களில் எழுதினேன். இத்தனை வேகத்தில் என் வாழ்வில் இதுவரை எழுதியதில்லை. ஸீரோ டிகிரியில் புழங்கிய மொழி நடை இனி எனக்கு லபிக்காது, அந்தக் காலம் வேறு, அப்போதிருந்த மனோலயம் வேறு என்றே நினைத்திருந்தேன். பெட்டியோ நாவலில் ஒரு முழு அத்தியாயம் ஸீரோ டிகிரியையும் விட கனமாக வந்திருக்கிறது. என் எழுத்து எளிமையாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த அத்தியாயம் மட்டும் வேறு ... Read more
Published on May 23, 2023 05:39
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

