பெட்டியோ நாவலை எழுதி முடித்து விட்டேன். முதல் ட்ராஃப்ட்டில் 105 பக்கம். நான்கு நாள்களில் எழுதினேன். இத்தனை வேகத்தில் என் வாழ்வில் இதுவரை எழுதியதில்லை. ஸீரோ டிகிரியில் புழங்கிய மொழி நடை இனி எனக்கு லபிக்காது, அந்தக் காலம் வேறு, அப்போதிருந்த மனோலயம் வேறு என்றே நினைத்திருந்தேன். பெட்டியோ நாவலில் ஒரு முழு அத்தியாயம் ஸீரோ டிகிரியையும் விட கனமாக வந்திருக்கிறது. என் எழுத்து எளிமையாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த அத்தியாயம் மட்டும் வேறு ...
Read more
Published on May 23, 2023 05:39