சாரு நிவேதிதா's Blog, page 103
June 24, 2023
the making of a novel…
பேயைப் போல் படித்துக் கொண்டிருக்கிறேன். ராஸ லீலாவைப் போல் இன்னொரு நாவல் எழுத முடியாது என்றே என் நண்பர்களிடம் சொல்லி வந்திருக்கிறேன். ஆனால் பெட்டியோ ராஸ லீலாவைப் போல் இருக்கும் என்று தோன்றுகிறது. ராஸ லீலாவைத் தாண்டி விட்டதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ராஸ லீலா எதார்த்த சொல்லாடலால் ஆனது. ஆனால் பெட்டியோ metaphysical narrative மூலம் உருவாகிறது. வெறும் மெட்டாஃபிஸிக்ஸாக இல்லாமல் மெட்டாஃபிஸிக்ஸையே பருண்மையாக ஆக்கும் முயற்சியாக இருக்கும். அந்த உலகத்தில் வாழ்வதற்காக இப்போது ... Read more
Published on June 24, 2023 07:39
June 23, 2023
விதியை வென்றவர்கள்…
முப்பத்தாறாவது வயதில் அந்தக் கவிஞனிடம் மருத்துவர்கள் சொன்னார்கள், உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது, அதுவும் குணப்படுத்தவே முடியாத நிலையில் இருக்கிறீர்கள். சொஸ்தப்படுத்தவே முடியாத பைத்தியம் என்பதால் உலகம் அவரைக் கை விட்டது. சமூகம் கை விட்டது. அம்மாவும் கைவிட்டு விட்டாள். சகோதரியும் கை விட்டாள். ஆனால் ஒரே ஒரு தச்சர் குடும்பம் அவரைப் பராமரித்தது. அவர் மற்றுமொரு முப்பத்தாறு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருடைய வாழ்வை இரண்டு முப்பத்தாறுகளாகப் பிரிப்பார்கள். இரண்டாவது முப்பத்தாறிலும் அவர் சும்மா இருக்கவில்லை. ... Read more
Published on June 23, 2023 23:10
புலம் பெயர்ந்து வாழும் சிலரின் தடித்தனம்
நான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்கு பார்த்தாலும் சாலையில் திரியும் நாய்களையும் அவைகளின் உயிருக்கு வாகனங்களால் ஏற்படக் கூடும் உயிராபத்தையும், அப்படி ரோட்டின் குறுக்கே பாயும் நாய்களால் மனித உயிருக்கு ஏற்படும் ஆபத்தையும் பற்றி எழுதிய போது, இலங்கை மக்களை ஒரு இந்திய எழுத்தாளர் நாய்கள் என்று திட்டி விட்டார் என்று காவல்துறையில் புகார் செய்து, பொதுமக்களையும் உசுப்பி விட்டு எனக்கு உயிராபத்து ஏற்படுத்திய சில தமிழர்களைப் போல ஃப்ரான்ஸிலும் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஃப்ரான்ஸில் சமீபத்தில் ... Read more
Published on June 23, 2023 01:18
June 21, 2023
ஓர் எதிர்வினை
நண்பர் ஸ்ரீராமை அழைக்க வேண்டியிருந்தது. ஆனால் பெயர் மறந்து விட்டது. மூன்றெழுத்துப் பெயராயிற்றே? ராம்ஜி… இல்லை… ஸ்ரீயில் ஆரம்பிக்கும். ஸ்ரீதர்… ஆ, அவர் நம் ஆடிட்டர் ஆயிற்றே? ஸ்ரீ… சே, அவள் பெண். ஸ்ரீயில்தான் ஆரம்பிக்கும். மூன்று எழுத்துப் பெயர். நல்ல அழகிய திருமுகம். பெயர் எப்படி மறந்தேன்? அவர் பெயரை மறப்பது என் பெயரை மறப்பது போல. இப்படி பெயர் மறந்து போனதற்குக் காரணம், ஒரு வார காலமாக ஒரு அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருந்தேன். ஒருவகையான ... Read more
Published on June 21, 2023 06:40
June 20, 2023
லாட்டின் இரண்டு புதல்விகள்
டியர் சாரு, உங்களுடைய வாசிப்பு முறை பற்றி நேற்று எழுதியிருந்ததைப் படித்து ஆச்சரியம் அடைந்தேன். ஏனென்றால், உங்களுடைய ராஸ லீலாவை நான் மூன்று ஆண்டுகளாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். பொதுவாக நான் அதிவேகமாக வாசிக்கக் கூடியவள். நீ என்ன படிக்கிறாயா, ஸ்கேன் பண்ணுகிறாயா என்று என் கணவன் என்னைக் கிண்டல் பண்ணுவான். நான் படிக்கும் வேகத்தை நம்ப முடியாமல் ஒருநாள் அவன் என்னை சோதித்தும் பார்த்தான். இன்னொரு கொடுப்பினை, படித்ததெல்லாம் அப்படி அப்படியே ஞாபகமும் இருக்கும். ஆனால் கடவுள் ... Read more
Published on June 20, 2023 22:15
லாட்டும் இரண்டு மகள்களும்…
கடந்த ஒரு வாரமாக அந்த்தோனின் ஆர்த்தோவின் எல்லா தொகுதிகளையும் படித்து விடும் முயற்சியில் இருந்ததால் இந்தப் பக்கம் வரவில்லை. நயநதினி அந்த்தோனின் ஆர்த்தோவின் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவள் என்று தெரிந்ததால் ஆர்த்தோவை முழுதாகப் படிக்க முனைந்தேன். ஆணோ பெண்ணோ ஒருவர் மீது ஆர்வமும் ஈர்ப்பும் வருவது வெறும் சதையைப் பார்த்து அல்ல என்பதற்கு இது ஒரு உதாரணம். என்னுடைய ஆசான் என்று நான் யாரைக் கருதுகிறேனோ அவரையே நம் தோழியும் கருதும் போது ஏற்படும் ஈர்ப்புக்கு ஈடு ... Read more
Published on June 20, 2023 07:25
June 19, 2023
கருணை: ஒரு குறுங்கதை
பெருமாளுக்குக் கொக்கரக்கோவைப் போல் ஒருநாளாவது வாழ்ந்து விட வேண்டும் என்பது தீராத ஆசை. வெறும் ஆசை இல்லை. பின்பற்ற வேண்டி மிகவும் முயற்சிக்கிறான். பெருமாளுக்கு அந்த ஆசை நிறைவேறாமலேயே இருப்பதற்கு முக்கியக் காரணம், கருணை. கருணை பற்றி சிந்திக்கும்போது பெருமாளின் இந்தக் குறிப்பிட்ட குணம் கருணையின் கீழ்தான் வருமா அல்லது இது வேறு ஏதாவது குணத்தின்பாற்பட்டதா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு உத்தேசத்துக்குக் கருணை என்றே நினைக்கிறான் பெருமாள். எல்லாம் ஒரு நண்பரின் மீது கொண்ட கருணையினால் ... Read more
Published on June 19, 2023 05:16
June 15, 2023
பெட்டியோ… நாவலிலிருந்து ஒரு பத்தி
கடந்த மூன்று தினங்களாக ஒரு நாடகப் பிரதியைப் படித்துக் கொண்டிருந்தேன். அதன் காரணமாகத்தான் இந்தப் பக்கம் வர முடியவில்லை. அந்த நாடகத்தைப் படிக்க மூன்று மணி நேரம் போதும். ஆனாலும் அதை நான் படிக்கும்போதே பல மணி நேரம் வெறுமனே அமர்ந்து அது பற்றி யோசிக்க வேண்டியிருந்தது. அந்த நாடகப் பிரதியை எழுதியது நயநதினி. நான் படித்தது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. அதில் அந்த்தோனின் ஆர்த்தோ ஒரு பாத்திரமாக வருகிறார். நயநதினி ... Read more
Published on June 15, 2023 01:40
June 14, 2023
அடாஜியோ…
எக்ஸைல் நாவல் எழுதிக் கொண்டிருக்கும்போது லாரா ஃபாபியானின் குரல் பழக்கம். அவரது je taimeஐக் கேட்டு உருகியிருக்கிறேன். எத்தனையோ ஆயிரம் முறை கேட்டிருப்போம். விவரம் எக்ஸைலில் இருக்கிறது. அதற்குப் பிறகு நேற்றுதான் லாரா ஃபாபியானின் பெயரை மீண்டும் கேட்டேன். இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறாயா என்று பின்வரும் லிங்கை அனுப்பினாள் நயநதினி. அடாஜியோ. முதல் முறையாகக் கேட்டேன். இப்படிப்பட்ட குரல்களை இந்தியாவில் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த உணர்ச்சித் தெறிப்பை, இசையின் உச்சத்தை வெகுஜன இசையில் இந்தியாவில் நான் கேட்டதில்லை. ... Read more
Published on June 14, 2023 21:30
June 13, 2023
என்னுடைய நேரம்
அவந்திகாவின் ஒரு பழக்கம் என்னவென்றால், எந்தப் பணிப்பெண் வந்தாலும் அவர்கள் அவளுடைய எதிர்பார்ப்புக்குத் தோதாக இல்லாவிட்டால் நிறுத்தி விடுவாள். அவளுடைய எதிர்பார்ப்புக்கு நூற்றுக்கு நூறு தோதான எடுபிடி நான்தான். பணிப்பெண்ணை நிறுத்தி விட்டால் எல்லா எடுபிடி வேலையும் நான்தான் செய்ய வேண்டும். முக்கியமான எடுபிடி வேலை, பாத்திரம் தேய்ப்பது, குக்கரில் சோறு பருப்பு வைப்பது, காய்கறி நறுக்கிக் கொடுப்பது. இது எல்லாம் எனக்கு ஒரு மூன்று மணி நேரம் ஆகும். இந்த மூன்று மணி நேரத்தையும் எனக்கு ... Read more
Published on June 13, 2023 21:59
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

