சாரு நிவேதிதா's Blog, page 100

August 1, 2023

ஒரு திருத்தம்

நாடகத்தின் அங்கம் 2 காட்சி 2இல் வரும் Charlemagne என்ற பெயரில் “r” என்ற எழுத்து விடுபட்டிருக்கிறது. அதேபோல் அந்தப் பெயரின் சரியான உச்சரிப்பு ஷார்ல்மான்ய. சார்லிமேன் அல்ல. ஏதோ ஒரு வேகத்தில் இதை கவனிக்காமல் விட்டுவிட்டேன். உச்சரிப்பு விஷயத்தில் இப்படி நடந்ததே இல்லை. ஆனால் St Patrickஇன் பெயரை ஐரிஷ்காரர்கள் பேட்ரிக் என்றும் ஃப்ரெஞ்சுக்காரர்கள் பாத்ரிக் என்றும்தான் உச்சரிப்பார்கள். அதனால்தான் நாடகத்தில் வரும் ஐரிஷ் பாதிரிகள் பேட்ரிக் என்றும் ஆர்த்தோ பாத்ரிக் என்றும் பேசுகிறார்கள். அதனால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 01, 2023 03:41

வெறியாட்டம்

சில நண்பர்கள் ஆர்த்தோ நாடகத்துக்குப் பணம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மின்னஞ்சல் முகவரி தெரியவில்லை. இதைப் படித்தவுடன் அனுப்பி வையுங்கள். *** வணக்கம் சாரு, இதுவரை  உங்களுடைய அ-புனைவுகளைப்  படித்துக் கொண்டிருந்த நான் இப்பொழுதுதான் புனைவுகளை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.  “அன்பு” நாவல் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். முதலில் எக்ஸிஸ்டன்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் வாசித்தேன்.  பின்னர் “நேநோ” தொகுப்பில் சில சிறுகதைகள், ஸீரோ டிகிரி, இப்பொழுது எக்ஸைல்.  ஒரு மாத காலமாக உங்கள் எழுத்துக்களிலேயே மூழ்கிக் கிடக்கிறேன்.  எல்லாமே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 01, 2023 00:49

July 31, 2023

ஆர்த்தோவின் குரலும் கலையின் கூச்சலும்

சிங்கப்பூரைச் சேர்ந்த இளங்கோவன் அகஸ்தோ போவால் போன்ற உலகப் புகழ் பெற்ற நாடகக் கலைஞர்களிடம் நாடகம் பயின்றவர். அக்னிக் கூத்து அமைப்பின் இயக்குனர். நாடகாசிரியர். நாடக இயக்குனர். ”அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்” நாடகம் பற்றி அவர் எழுதியிருந்த கடிதத்தை நாடகம் பற்றிய மூவரின் கருத்துரைகளில் சேர்த்திருக்கிறேன். மற்ற இருவர் ஜெயமோகன், அ. ராமசாமி. இன்று என் நண்பர்கள் முப்பது பேருக்கு நாடகத்தின் பிடிஎஃப் பிரதியை அனுப்பி வைத்தேன். இன்றும் இளங்கோவன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 31, 2023 09:26

July 30, 2023

கோவா நடனம்

நாளை என்னுடைய தளத்தில் கோவா நடனம் என்ற நெடுங்கதை வெளியாக இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நெடுங்கதை. சீனி படித்து விட்டு சிறப்பாக வந்திருப்பதாகச் சொன்னார். கொக்கரக்கோவின் அட்டகாசம், வினித்தின் ரகளை, ஷ்ரேயா என்ற புதிய பாத்திரம் எல்லாம் சேர்ந்த அதகளம்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2023 09:52

போகும் இடம்

அங்கே போய்ச் சேர்ந்து விட்டாரா என்றான் நண்பன் எல்லோரும் சேர வேண்டிய இடம்தானே என்றேன் நான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2023 09:33

குடை வேண்டுமா?

இடையில் குளிக்கப் போவதும் சாப்பிடுவதும் தவிர, காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறேன்.  காலையில் ஒரு மணி நேர நடை. மற்றபடி எதற்குமே வெளியே செல்வது இல்லை.  இப்படியே ஆறு ஏழு நாள் போனால் மனம் சோர்வுறும் இல்லையா?  அப்போது ஏதாவது ஒரு வெப்சீரீஸ் பார்ப்பேன்.  அதுவும் முக்கால் மணி நேரத்துக்கு மேல் இல்லை.  இப்படியே பத்து எபிசோட் உள்ள சீரீஸைப் பார்த்து முடிக்க மூன்று மாதம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 30, 2023 02:31

July 29, 2023

ஆர்த்தோவும் சார்த்தரும் (திருத்தப்பட்டது)

அந்தோனின் ஆர்த்தோ பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு சார்த்தர் பற்றியும் ஞாபகம் வரும்.  ஆர்த்தோவின் காலம் 1896 – 1948.  சார்த்தரின் காலம் 1905 – 1980.  ஆர்த்தோவை விட சார்த்தர் ஒன்பது வயது இளையவர்.  இரண்டு பேரும் சம காலத்தவர்கள்.  சார்த்தர் ஃப்ரான்ஸின் ஹீரோ.  நோபல் பரிசையே மறுத்தவர்.  ஆர்த்தோ வில்லன்.  ஃப்ரான்ஸ் தன்னுடைய வில்லனை என்ன பாடு படுத்தியது என்று இப்போது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.  ஆர்த்தோ- சார்த்தர் இருவரின் எதிர்முரண் பற்றி யோசிக்கும்போது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2023 07:45

July 27, 2023

பெங்களூரு, கூர்க், ஸ்ரீரங்கப்பட்டணம்

கடந்த நான்கு நாட்களாக ஒரு முக்கியமான, மிக அவசரமான பணியில் ஈடுபட்டிருக்கிறேன். அதன் விவரத்தை அக்டோபர் இறுதியில் அறிவிப்பேன். இதற்கிடையிலேயே ஒரு நீண்ட சிறுகதை எழுதினேன். அதில் கொக்கரக்கோவின் பெயரை மிஸ்டர் மாற்றுக் கருத்து என்று மாற்றி விட்டேன். எதைச் சொன்னாலும் மாற்றுக் கருத்தை மேஜையில் வைத்துக் கொண்டிருந்தான் கொக்கரக்கோ. அதனால் இந்தப் பெயர் மாற்றம். நக்கீரனுக்கும் சிவபெருமானுக்கும் பெண்களின் கூந்தல் மணம் பற்றி விவாதம் வந்தது போல் எனக்கும் மிஸ்டர் மாற்றுக் கருத்துவுக்கும் ஒரு விவாதம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2023 03:22

July 24, 2023

கோயம்பத்தூர் புத்தக விழா

கோயம்பத்தூரில் நடந்து கொண்டிருக்கும் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் என் புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும். அரங்கம் எண்: 239, 240, 265, 266. ஜூலை 21 முதல் ஜூலை 30 வரை. கொடிசியா தொழிற்காட்சி வளாகம், கோவை.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2023 08:48

July 22, 2023

அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்

ஆர்த்தோ பற்றிய நாடகத்திற்கு ஆங்கிலத்தில் Antonin Artaud: The Insurgent என்றும் தமிழில் மேலே குறிப்பிட்டவாறும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நண்பர் அ. ராமசாமி நாடகத்தில் சில திருத்தங்களைக் குறிப்பிட்டார். அந்தத் திருத்தங்களையும் செய்து விட்டேன். நாடகத்துக்கான தமிழ்த் தலைப்பும் அ. ராமசாமி வைத்ததுதான். இப்போது அந்த நாடகத்தின் பிடிஎஃப் வடிவத்தை அதை வாசிக்க விரும்புபவர்களுக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன். அதற்கான விலை அல்லது நன்கொடையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். நாடகத்தை தமிழில் அரங்கேற்றம் செய்ய முடியும் என்றே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2023 04:31

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.