சாரு நிவேதிதா's Blog, page 98

August 22, 2023

ரஜினியும் மரியாதையும்

பத்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.  ரஜினிகாந்தின் நண்பர் ஒருவர் என்னிடம் ரஜினி பற்றி ஒரு கருத்தைச் சொன்னார்.  அது எனக்கு ரஜினி பற்றிய முக்கியமான ஒரு அவதானமாகத் தோன்றியது.  ”பணக்காரர்கள் மீது ரஜினிக்குத் தனிப்பட்ட மரியாதை உண்டு.”  ஏனென்றால், பணம் சம்பாதிப்பதுதான் மிகவும் கடினமாக காரியம்.  அதை ஒருவர் சாதித்திருக்கிறார் என்றால், அவர் நம் மரியாதைக்கு உரியவரே.  எஸ். ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களும் மரியாதைக்கு உரியவர்களே என்றாலும் அவர்களுக்குப் பணம் சம்பாதிக்கும் திறமை இல்லை.  ஆகவே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2023 09:06

மூன்று தினங்கள்

மூன்று தினங்களெல்லாம் எனக்கே நான் மெடிக்கல் லீவ் கொடுப்பது சாத்தியம் இல்லை. ஆனால் கொடுக்கும்படி ஆகி விட்டது. மூன்று தினங்களுக்கு முன் தொண்டையில் லேசாக வலி. அடுத்து அது ஜுரமாக மாறும். நான் ஸ்ரீராமிடம் கேட்டு மாத்திரை சாப்பிடுவேன். ஜுரம் போய் விடும். ஆனால் தினமும் இருபது மணி நேரம் தூங்க வேண்டி வரும். அது கூட நிம்மதியான உறக்கம் அல்ல. மயக்கம் கலந்த உறக்கம். கூடவே உடம்பு வலியும் உண்டாகும். இன்னும் நிறைய பக்க விளைவுகள். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2023 00:17

August 19, 2023

சொல் பேச்சு

ரொம்ப காலமாக என் அறையில் மின்விசிறி வேலை செய்யவில்லை. ஏசி இருந்ததால் மின்விசிறியின் தேவையில்லாமல் இருந்தது. அதற்காக காலையிலிருந்தேவா ஏசியைப் போட்டுக் கொண்டிருக்க முடியும்? ஒருவழியாக நேற்று புதிய மின்விசிறி மாட்டப்பட்டது. அப்போது எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேனேஜர் மின்விசிறி மாட்டுவதை மேற்பார்வை இடுவதற்காக வந்தவர், அறையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து விட்டு பிரமிப்புடன் “இத்தனை புத்தகங்களையுமா சார் படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். தேவையானதை எடுத்துப் படிப்பேன் என்றேன். அவருக்கு என் பதில் புரியவில்லை. ”நான் இதுவரை ஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 19, 2023 00:15

August 16, 2023

பெங்களூருவில் ஆற்றிய உரை

ஆகஸ்ட் 15 அன்று பெங்களூருவில் புக் ப்ரம்மா அமைப்பின் ஆண்டு விழாவில் நான் ஆற்றிய உரையை கபிலனின் ஷ்ருதி டிவி காணொலியாகத் தருகிறது. நிகழ்ச்சிக்கு என் தமிழ் வாசகர்கள் பலர் பல ஊர்களிலிருந்து வந்திருந்தது மகிழ்ச்சியை அளித்தது. வந்திருந்த கன்னட எழுத்தாளர்களில் சிலர் என் ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்திருந்தார்கள். ஒரு கன்னடப் பெண் எழுத்தாளர் அக்கம்மா தேவியைப் பற்றி 700 பக்க நாவல் எழுதியிருக்கிறார். அவர் ஒரு களச் செயலாளியும் ஆவார். பெயர் மறந்து போனேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2023 23:16

தி இந்துவில் வெளிவந்த என் கட்டுரை பற்றிய கடிதம்

தி இந்துவில் உலகமயமாக்கல் 25 தொடரில் நேற்று வந்திருந்த சாரு நிவேதிதாவின் கட்டுரை: ஒரு எழுத்துக் கலைஞனின் கூரிய பார்வைகளைக் கொண்டிருக்கிறது. அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை. சிலிக்கன் புகைமூட்டத்தோடும், பாலித்தீன் புழுக்கத்தோடும், ஓயாத சங்கொலி அழைப்புகளோடும் நகரும் சிதறுண்ட வாழ்வின் ஓட்டமிகு தசைகளில் ஒன்றைப் பிளக்க வேண்டும். அப்படியாக இன்று எவரும் ஒரு சிறந்த படைப்புக்கு முயல முடியும். மாற்றம் ஏற்றமென்றல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் நமக்கு ஏமாற்றம்தான். இனி எழுத்தில் நாசூக்கு பார்க்க வேண்டியதில்லை. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 16, 2023 22:48

August 13, 2023

ஆகஸ்ட் 15 பெங்களூர் விழா

பெங்களூருவில் Book Brahma என்ற கன்னட இலக்கிய அமைப்பு உள்ளது. www.bookbrahma.com இந்த அமைப்பினர் சென்ற ஆண்டிலிருந்து கன்னடத்தில் சிறந்த நாவலையும் சிறந்த சிறுகதைகளையும் போட்டி மூலம் தேர்ந்தெடுத்து பரிசு அளிக்கிறார்கள். நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய். முதல் பரிசு மட்டும் அல்ல. மற்றும் பல பரிசுகள். சென்ற ஆண்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் தாமோதர் மாஸோ. பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற கொங்கணி எழுத்தாளர். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் அடியேன். (என்னை அவர்களுக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2023 07:26

August 10, 2023

ஆர்த்தோ: சில எதிர்வினைகள்

வணக்கம் சாரு.          எனக்கு நாடகத் துறையைப் பற்றி ஏதும் பெரிய அளவில் தெரியாது, ஆனால் ஒரு வாசகன் என்ற நிலையிலிருந்து ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். நாடகம் எப்பொழுதும் நம்மிடையே மிகவும் நேரடியாக உரையாடுகிறது . நான் பெரிய அளவில் நாடகங்களை வாசித்ததும் இல்லை. ஆனால் உங்களுடைய நாடகத்தை படித்தவுடன் என் மனதில் எழுந்த கேள்வி, எப்பொழுதும் அந்த கேள்வியே என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது,நாம் சரியாகத்தான் வாழ்ந்து கொண்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2023 03:50

ஆர்த்தோவின் உடல் மொழி: கலாமோகன்

அன்புடன் சாருவிற்கு, நீங்கள் அனுப்பி வைத்த  ஆர்த்தோ மீதான நாடகத்தை வாசித்து மீண்டும் ஓர் சிந்தனை உலகில் வீழ்ந்தேன். உங்களது எழுத்தில் ஆர்த்தோ தனது விதத்தில் ஓர் தியானம் செய்கின்றார் எனவும் சொல்லலாம். பல சிந்தனைகளிற்கான வீதிகளைத் தயாரிக்கும் கச்சிதமானது உங்கள்   படைப்பு. உங்களது எழுத்து மிகவும் கவித்துவமானது. சில வேளைகளில் நான் இதனை ஓர் கவித்துவச் சிருஷ்டிப்பு என்றே கருதுகின்றேன். எது எப்படியோ நாடக இலக்கியம் ஓர் கவித்துவ உயிர்ப்பே. ஆர்த்தோவின் முகத்தை நீங்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 10, 2023 02:03

August 8, 2023

அசோகமித்திரனின் கடிதம்

2010இலிருந்து எனக்குக் கடிதம் எழுதியவர்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். 6000 கடிதங்கள். அத்தனைக்கும் பதில் எழுத முடியாது. சுமார் இருநூறு கடிதங்களுக்கு ஒரு வரி பதில் எழுதினேன். அதில் 175 பேரிடமிருந்து பதில் வந்தது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் எழுதுகிறார்கள். ப்ளாகைத் தொடர்ந்து படிப்பதாகவே எழுதுகிறார்கள். அடிக்‌ஷன் மாதிரி ஆகி விட்டது என்கிறார்கள். அப்படியே நகர்ந்து வந்து கொண்டிருந்த போது 2016, மார்ச் இரண்டாம் தேதி காலை 6.05 மணிக்கு ஒரு கடிதம் வந்திருந்ததைக் கண்டேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 08, 2023 04:11

August 7, 2023

ஆகஸ்ட் 15 பெங்களூர் விழா

பெங்களூருவில் Book Brahma என்ற கன்னட இலக்கிய அமைப்பு உள்ளது. www.bookbrahma.com இந்த அமைப்பினர் சென்ற ஆண்டிலிருந்து கன்னடத்தில் சிறந்த நாவலையும் சிறந்த சிறுகதைகளையும் போட்டி மூலம் தேர்ந்தெடுத்து பரிசு அளிக்கிறார்கள். நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய். முதல் பரிசு மட்டும் அல்ல. மற்றும் பல பரிசுகள். சென்ற ஆண்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் தாமோதர் மாஸோ. பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற கொங்கணி எழுத்தாளர். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் அடியேன். (என்னை அவர்களுக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2023 06:17

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.