சாரு நிவேதிதா's Blog, page 96

September 20, 2023

3. ஜப்பான்: கனவும் மாயமும்

கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பான் பற்றிய செய்திகள் என் முயற்சி இல்லாமலேயே என் பார்வைக்கு வந்து கொண்டேயிருந்தன.  ஜப்பானிலேயே வசிப்பவர்கள், ஜப்பானில் இரண்டு மூன்று ஆண்டுகள் வசித்து விட்டு வந்தவர்கள், நீண்ட காலப் பயணிகள், அடிக்கடி ஜப்பான் சென்று வருபவர்கள் என்று பலரும் தன் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.  எனக்கே ஆச்சரியமாக இருக்கும், நாமோ ஜப்பானே செல்லப் போவதில்லை, நம் காதில் ஏன் இத்தனை ஜப்பான் செய்திகள் வந்து விழுகின்றன என்று. நான் படித்த செய்திகள், ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2023 06:24

September 19, 2023

ஷிபுயா கிராஸிங்: ரா. செந்தில்குமார்

1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் காட்சி விரிந்தது. அகலமான ஷிபுயா கிராஸிங். ஷிபுயா ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக ஐந்து மிகப்பெரிய நடைபாதைகள். எதிரில் மிகப்பெரிய திரைகளில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்தது. திரையின் ஓரத்தில் 7.30 என்று கடிகாரம் மணி காட்டியது. பச்சை விளக்கு எரிந்ததும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், கறுப்பு கோட்சூட், வெள்ளை சட்டை அணிந்து தோளில் தொங்கும் அலுவலகப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2023 06:59

September 18, 2023

ரா. செந்தில்குமாரின் ஒரு கதையும் அக்கதையில் சொல்லப்படாத முடிவும்…

என்னிடம் ஒரு பழக்கம் உண்டு.  நான் யாரையாவது எழுத்தாளரை சந்திக்கச் சென்றால், அவர்களின் ஒரே ஒரு புத்தகத்தையாவது படித்து விட்டுச் செல்வேன்.  என்னை சந்திக்கும் பலரும் என்னுடைய ஒரு புத்தகத்தைக் கூட படித்ததில்லை என்று சொல்வதால் அதற்கு மாறுதலாக இருக்க வேண்டும் என்று இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இப்போது நான் ஜப்பான் செல்வதால் என்னை அங்கே வரவழைக்கும் துளிக்கனவு இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ரா. செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுதிகள் இரண்டையும் படித்து விடுவோம் என்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2023 04:49

September 15, 2023

ஜப்பான்: கனவும் மாயமும் – 2

கீழைத் தேசம், கீழைத் தேசத்து மக்கள், கீழைத் தத்துவம் – சுருக்கமாகச் சொன்னால் ஓரியண்டலிசம் என்றால் என்ன? ஓரியண்டலிசம் விஞ்ஞானத்துக்கும் நவீனத்துவத்துக்கும் எதிரானது.  தர்க்கத்துக்கு எதிரானது.  புதுமையையும் புரட்சியையும் ஒதுக்கி விட்டு, மரபையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது.  அதன் காரணமாகவே வளர்ச்சி அடையாதது.  அதன் காரணமாகவே பின் தங்கிய நிலையில் இருப்பது.  அதன் காரணமாகவே துக்கத்திலும் துயரத்திலும் வறுமையிலும் உழன்று கொண்டிருப்பது.  அதிகாரத்துக்குப் பணிதல் என்பது மற்றொரு முக்கியமான ஆசியப் பண்பு.  அதிகாரம் என்பது அரசனாக இருக்கலாம், ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2023 09:18

புத்தகத் திருவிழா

வணக்கம் சாருஜப்பான் கட்டுரை வாசித்தேன். குருவி போல பறந்து கொண்டே இருக்கிறீர்கள். பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.நேற்று தருமபுரி புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன்.ஏதோ கைவிடப்பட்ட பேய் பங்களா போல் இருந்தது. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், கூட்டமே இல்லை. பதிப்பாளர்களிடம் பேசியபோது அவர்களும் விற்பனை மிகவும் குறைவாக இருப்பதாகவே சொன்னார்கள். மாலை 5 மணியளவில் ஒன்றிரண்டு பேர் தெரிந்தனர். பக்கத்தில் வெறிச்சோடியிருந்த அரங்கில் தனியாக ஒருவர் மைக்கில் பேசிக் கொண்டிருந்தார். ஈரோடு,சேலம் புத்தகத் திருவிழாக்களை விட கூட்டம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2023 02:11

September 14, 2023

ஒரு தகவல் பிழை

பால் ஷ்ரேடர் ரேஜிங் புல், லாஸ்ட் டெம்டேஷன், டாக்ஸி டிரைவர் ஆகிய படங்களின் இயக்குனர் அல்ல. திரைக்கதை மட்டுமே எழுதியிருக்கிறார். கட்டுரை வெளிவந்த உடனேயே இதைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிய அப்துல், சக்திவேல் (சென்னை) ஆகிய நண்பர்களுக்கு என் நன்றி.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2023 17:02

ஜப்பான் : கனவும் மாயமும் – 1

In fact, the whole of Japan is a pure invention.  There is no such country, there are no such people.  ஆஸ்கார் ஒயில்ட் 1889இல் எழுதினார்.  ஆனால் அதற்கு அடுத்த வாக்கியத்திலேயே ஜப்பானியர்கள் ஒன்றும் அதிசய மனிதர்கள் அல்ல என்றும் சொல்கிறார்.  ஆனால் நான் அவருடைய முதல் வாக்கியத்தைத்தான் எடுத்துக் கொள்வேன்.  ஆம், ஜப்பானும் ஜப்பானியரும் மேற்கத்தியருக்கு நம்பவே முடியாத ஒரு அதிசயமாகத்தான் இருந்தார்கள், இருந்து வருகிறார்கள்.  உலகில் யார் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2023 08:29

September 13, 2023

பெட்டியோ… : நேசமித்திரன்

பெட்டியோ… நாவலை நேசமித்திரனுக்கும் அனுப்பியிருந்தேன். ஒரே நாளில் படித்து விட்டார். நாவலின் வடிவத்தில் ஒரு முக்கியமான மாற்றத்தைச் சொன்னார். அதே மாற்றத்தை பதினைந்து நாட்களுக்கு முன்னதாக அராத்துவும் சொல்லியிருந்ததால் இப்போது அந்த மாற்றத்தைச் செய்து முடித்து விட்டேன். இப்போதைய வடிவத்தில் நாவல் இன்னும் காத்திரமானதொரு பின்நவீனத்துவப் பிரதியாக மிளிரும். பாவம் ஸ்ரீராம்தான், இதோடு நாவலை ஐந்தாறு முறை படித்து விட்டார். ஒவ்வொரு மாற்றம் செய்யும் போதும் இதுவே கடைசி என்று தோன்றும். இந்த நாவலைப் போல் வேறு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2023 06:16

September 12, 2023

சொர்க்கம் என்றால் என்ன?

சொர்க்கம் என்றால் என்ன?  இனிமை என்றால் என்ன?  மகிழ்ச்சி என்றால் என்ன? உன்னதம் என்றால் என்ன?  அற்புதம் என்றால் என்ன?  அதிசயம் என்றால் என்ன?    இன்று என் சிநேகிதியுடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது நான் எப்போதுமே சொல்லும் வசனத்தை ஒரு தொள்ளாயிரமாவது தடவையாகச் சொன்னேன்.  இந்த உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான்தான்.  என்னை விட மகிழ்ச்சியாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் துறவிகள், ஞானிகள், ரிஷிகள்.  நான் பேசுவது இப்படி ஒரு அமைப்பில் வாழ்ந்து கொண்டு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2023 02:43

September 11, 2023

யுவனும் நானும்…

”இவர் சென்னையில் பத்து பூனைகளோடும் ஒரு மனுஷியோடும் வாழ்கிறார்.”  என்னைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் ஆங்கிலத்தில் எழுதப்படுவது மேற்கண்ட வாசகம்.  இது ஏதோ பந்தாவுக்கு எழுதப்படுவது அல்ல.  எனக்கு பூனைகளையோ நாய்களையோ விட்டால் வேறு சொந்த பந்தங்கள் கிடையாது.  அந்த விஷயத்தில் கிட்டத்தட்ட நான் நகுலனைப் போல்தான் வாழ்கிறேன்.  ஒரு உதாரணம் சொல்கிறேன்.  சமீபத்தில் என் பேரன் என்னோடு ஆறு மாதம் இருந்ததால் அவனுக்கு என்னோடு பெரிய பந்தம் ஏற்பட்டு விட்டது போல.  பிறகு அவன் தன் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2023 23:06

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.