சாரு நிவேதிதா's Blog, page 95
September 26, 2023
ஜப்பான்: கனவும் மாயமும் (12): நிர்வாணக் குளியல்
நிர்வாணம் என்பது ஆடைகளைக் களைந்து விட்டு அம்மணமாக நிற்பது மட்டும் அல்ல. இந்தியாவில் நிர்வாணம் ஒரு தத்துவம். துறப்பு என்பதன் குறியீடு. உலகிலேயே மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தின் அதிபதியாக இருந்த சந்திரகுப்த மௌரியர் ஒருநாள் தன் ஆடை அணிகலன்கள் அனைத்தையும் கழற்றி எறிந்து விட்டு நிர்வாணமாக சரவண பெலகொலா வந்து சேர்ந்தார். சமணத் துறவிகள் இன்றளவும் திகம்பரமாகவே இருக்கிறார்கள். லங்கோடு கூட அணிவதில்லை. Beat writersஇல் ஒருவரான ஆலன் கின்ஸ்பெர்க் வங்காளத்துக்கு வந்து அங்கே உள்ள நாகா ... Read more
Published on September 26, 2023 07:22
September 25, 2023
ஜப்பான்: கனவும் மாயமும் (11)
கதையைத் தொடர்வதற்கு முன் ஒரு குறுக்கீடு. நாளை கிளம்பி நாளை மறுநாள் (28) தோக்கியோ சேர்கிறேன். அங்கே என்னைச் சந்திக்க நேரும் தமிழ் நண்பர்களுக்கு என் வேண்டுகோள் சில: தமிழ் சினிமா பற்றியோ இளையராஜா பற்றியோ என்னிடம் பேச வேண்டாம். அவை எனக்கு மிகவும் அலுப்பூட்டக் கூடிய விஷயங்கள். யாரும் என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைக்க வேண்டாம். காரணம், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரும் என்னை வாசித்திருக்க மாட்டார்கள். அதனால் உங்கள் மாமனார் என்னை எழுத்தாளன் என்று ... Read more
Published on September 25, 2023 16:50
ஜப்பான்: கனவும் மாயமும் (10) : ‘நீர்மை’ நாயகியும் சன்னி லியோனியும்…
தோக்கியோ டிகேடன்ஸில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. அதில் உள்ள தோப்பாஸ் என்ற சிறுகதைதான் தோக்கியோ டிகேடன்ஸ் என்ற திரைப்படம். இருபத்திரண்டு வயது கல்லூரி மாணவியான அய் ஒரு எழுத்தாளனை ஒருதலையாகக் காதலிக்கிறாள். அவன் எழுதுவதோடு நிறுத்துவதில்லை. சினிமா எடுக்கிறான். பாட்டு எழுதுகிறான். பாடுகிறான். ஓவியம் வரைகிறான். (இது எல்லாமே ரியூ முராகாமிக்குப் பொருந்துகிறது. ரியூவின் பல கதைகள் சுயசரிதைத்தன்மை வாய்ந்தவை.) ஒரு சனிக்கிழமை அன்று பகலில் ஒரு கஃபேயில் அமர்ந்து பியர் அருந்திக் கொண்டிருக்கிறாள் அய். எஸ் ... Read more
Published on September 25, 2023 08:21
September 24, 2023
Conversations with Aurangzeb
‘Comprehensively irreverent . . . genre-bending . . . sparklingly witty.’ – MANU PILLAI ‘Who would have thought Aurangzeb could be so entertaining.’ – MANU JOSEPH A writer hopes to get some primary research done for his new book by interviewing the spirit of Shah Jahan. But the endeavour turns into an obstacle course, with ... Read more
Published on September 24, 2023 03:39
September 23, 2023
ஜப்பான்: கனவும் மாயமும் (9): தோக்கியோ டிகேடன்ஸ் (1992) என்ற மாஸ்டர்பீஸ்
இதுவரை நான் பார்த்த எந்தத் திரைப்படத்திலும் இதில் உள்ளது போன்ற நேரடியான பாலியல் காட்சிகள் இருந்தது இல்லை. செக்ஸ் தளங்களில் காண்பிக்கப்படும் காட்சிகளின் narrative எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இப்படத்தின் காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் செக்ஸ் படங்களில் ஒரே ஒரு அர்த்தமும் ஒரே நோக்கமும்தான் இருக்கும். தோக்கியோ டிகேடன்ஸில் அந்த அர்த்தமும் நோக்கமும் இல்லாமல் பல்வேறு பரிமாணங்கள் அடுக்கடுக்காகச் சென்று கொண்டே இருக்கின்றன. அய் என்ற இருபத்திரண்டு வயதுப் பெண்ணை அவள் காதலன் புறக்கணித்து விட்டு ... Read more
Published on September 23, 2023 09:28
September 22, 2023
ஜப்பான்: கனவும் மாயமும் – 8
ஒரு தேசம் என்பதை எப்படி அனுபவம் கொள்கிறோம்? நான் இரண்டு விதமாக அணுகுகிறேன். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நானும் சீனியும் மற்றொரு நண்பரும் சீலே, மெக்ஸிகோ, கூபா ஆகிய மூன்று நாடுகளுக்கும் செல்கிறோம். மெக்ஸிகோவையும் இழுத்துக் கொண்டதற்குக் காரணம், மெக்ஸிகோவின் வடக்கில் உள்ள சியர்ரா மாத்ரே மலைத்தொடர்ச்சியில் தாராஉமாரா (Tarahumara) என்ற மலைவாசி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் ஒரு குறிப்பிட்ட சடங்கை எனக்குக் காண வேண்டும். பெயோத்தே சடங்கு என்பது அதன் பெயர். பெயோத்தே ஒருவகை கள்ளிச் ... Read more
Published on September 22, 2023 03:34
September 21, 2023
ஜப்பான்: கனவும் மாயமும் – 7
விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை சாப்பிடுவது ஒரு சந்தோஷம். ஆனால் இந்த விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் கொழுக்கட்டை கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு முந்தின நாள்தான் மாரிஸ் ஓட்டலில் மிக ருசியான ஒரு கொழுக்கட்டை சாப்பிட்டிருந்ததால் ரொம்பவும் ஏக்கம் தோன்றவில்லை. ஆனால் மாரிஸ் ஓட்டலை என் மனதிலிருந்து நீக்கி விட்டேன். இனி ஒருபோதும் அங்கே போக மாட்டேன். காரணம்? உலகிலேயே எனக்கு மிகப் பிடித்த உணவு தோம்யாம் சூப் (தாய்லாந்து) மற்றும் ஃபிஷ்பால் சூப் (சீனா). காலை ... Read more
Published on September 21, 2023 23:43
ஜப்பான்: கனவும் மாயமும் – 6
”இளைஞர் உலகம் தன் ஒவ்வொருவருடைய அடையாளத்தையும் இழந்து, மனநோயிலும் தனிமையிலும் விழுந்து விடுகிறது” என்று சென்ற அத்தியாயத்தை முடித்திருந்தேன். மற்றவர்களாக இருந்திருந்தால் “அதுதான் கவலை அளிக்கிறது” என்று எழுதியிருப்பார்கள். எனக்கு அப்படி அல்ல. இளைஞர் உலகம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்றே தோன்றுகிறது. இளைஞர் உலகம் மட்டும் அல்ல, மனித இனமே எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்றுதான் இருக்கிறது. ஏனென்றால், ஆயிரத்தில் அல்லது பத்தாயிரத்தில் ஒருத்தரைத் தவிர மற்றவர்களுக்குப் பணமே கண் ... Read more
Published on September 21, 2023 20:07
ஜப்பான்: கனவும் மாயமும் – 5
படத்தில் இருப்பவர் சுருக்கமாக RM என்று அழைக்கப்படுகிறார். Rap Monster என்பது முழுமையான பட்டப் பெயர். இயற்பெயர் கிம் ஜூன். தென் கொரியாவைச் சேர்ந்த பாடகர். இவருடைய குழுவின் பெயர் BTS. பதின்பருவத்திலேயே ஆர்.எம். வெளியிட்ட பாப் ஆல்பம் உலகப் புகழ் அடைந்தது. இப்போது இவர் வயது 29. எனக்குப் பிடித்த பாப் பாடகரான ஆர்.எம்.மை இந்த ஜப்பான் தொடரில் எழுத நேரிடும் என்று நான் எதிர்பார்த்ததில்லை. அது தற்செயலாக இன்று நேர்ந்தது. நேற்றிலிருந்து ரியூ முராகாமியின் ... Read more
Published on September 21, 2023 01:47
September 20, 2023
4. ஜப்பான்: கனவும் மாயமும்
நேற்று தூக்கக் கலக்கத்தில் பதிவேற்றம் செய்ததால் லவ் அண்ட் பாப் படத்தின் சில புகைப்படங்களைச் சேர்க்காமல் போய் விட்டேன். அக்கட்டுரையோடு இப்புகைப்படங்களையும் சேர்த்து இன்னொரு முறை வாசிக்கவும். கட்டுரைத் தொடரைப் பாராட்டி பல மின்னஞ்சல்கள் வந்தன. அடுத்த கட்டுரை படு ரகளையாக இருக்கும்.
Published on September 20, 2023 22:54
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

