தோக்கியோ டிகேடன்ஸில் பதினைந்து சிறுகதைகள் உள்ளன. அதில் உள்ள தோப்பாஸ் என்ற சிறுகதைதான் தோக்கியோ டிகேடன்ஸ் என்ற திரைப்படம். இருபத்திரண்டு வயது கல்லூரி மாணவியான அய் ஒரு எழுத்தாளனை ஒருதலையாகக் காதலிக்கிறாள். அவன் எழுதுவதோடு நிறுத்துவதில்லை. சினிமா எடுக்கிறான். பாட்டு எழுதுகிறான். பாடுகிறான். ஓவியம் வரைகிறான். (இது எல்லாமே ரியூ முராகாமிக்குப் பொருந்துகிறது. ரியூவின் பல கதைகள் சுயசரிதைத்தன்மை வாய்ந்தவை.) ஒரு சனிக்கிழமை அன்று பகலில் ஒரு கஃபேயில் அமர்ந்து பியர் அருந்திக் கொண்டிருக்கிறாள் அய். எஸ் ...
Read more
Published on September 25, 2023 08:21