சாரு நிவேதிதா's Blog, page 91

October 27, 2023

சித்த பிரமை

திருப்பூர் என்று நினைக்கிறேன். ஊர் பெயர் மறந்து விட்டது. அங்கே என் வாசகர் ஒருவர் தன் குடும்பத்தோடு என் நண்பரும் சித்த மருத்துவருமான பாஸ்கரனைப் பார்க்கச் சென்றிருக்கிறார். வாசகர், அவர் மனைவி, அவர்களின் பதின்மூன்று வயது மகள். வாசகருக்கும் அவர் மனைவிக்குமான உடல்நலப் பிரச்சினைகளைக் கூறி மருந்து பெற்றிருக்கிறார். மகளுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனாலும் பாஸ்கரன் குழந்தையின் நாடியையும் பார்த்து விடுகிறேனே என்று சொல்லி சிறுமியின் நாடி பார்க்கிறார். பார்த்தால் சிறுமிக்கு சித்த மருத்துவத்தில் சொல்லப்படும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2023 23:32

October 26, 2023

பெட்டியோ முதல் பிரதியும் நூறாவது பிரதியும் விற்பனையில்…

பெட்டியோ நூறாவது பிரதி ஏற்கனவே என்.எஃப்.டி.யில் விற்பனையில் இருக்கிறது. ஒரு வாரத்துக்கு முன் ஐந்து லட்சமாக இருந்தது இன்று 7159 டாலருக்கு விலை உயர்ந்து விட்டது. இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய். ஒரு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் அதிகரித்திருக்கிறது. டாலர் மதிப்புக்கு ஏற்பவும், சந்தை மதிப்புக்கு ஏற்பவும் இந்த விலை கூடும், குறையும். இன்று பெட்டியோவின் முதல் பிரதி வெளிவந்து இருக்கிறது.  விலை ரூபாய் இரண்டு லட்சம்.  இந்த ஐந்து லட்சம், ஆறு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2023 22:50

Cult writer

என்னைப் பற்றிய விவரக் குறிப்பில் ஆங்கிலத்தில் cult writer in Tamil என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.  கல்ட் என்பதை பொதுவாக தவறான பொருளிலேயே நாம் புரிந்து வைத்திருக்கிறோம். காரணம், அந்த வார்த்தை பெரும்பாலும் ஆன்மீக சம்பந்தம் கொண்டிருக்கிறது. ஓஷோ ஒரு கல்ட்.  ஜக்கியை என்னால் கல்ட் என்று சொல்ல முடியவில்லை.  அவர் ஒரு யோகா குரு.  அவ்வளவுதான்.  கல்ட் என்றால் அந்த கல்ட் மனிதனின் சிந்தனை மற்றவர் வாழ்வின் அனைத்து அம்சங்களோடும் ஊடாடி ஊடுருவி இருக்க வேண்டும்.  தமிழ் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2023 08:23

October 25, 2023

பெட்டியோ…

அநேகமாக இன்றோ நாளையோ பெட்டியோ என்.எஃப்.டி.யில் கிடைக்கும். முதலில் பத்து பிரதிகள் வெளிவரும். முதல் பிரதி இரண்டு லட்சம் ரூபாய். இரண்டாவது பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை ஒரு லட்சம் ரூபாய். இந்தப் பணம் அவ்வளவும் என்னுடைய ஃபெப்ருவரி மாத தென்னமெரிக்கப் பயணத்துக்கு உதவும். ஒன்றரை மாதப் பயணம். ஃப்ரான்ஸ், ஸ்பெய்ன், கொலம்பியா, சீலே. சாந்த்தியாகோ (சீலே) நகரிலிருந்து மேற்கே கிட்டத்தட்ட 4000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராப்பா நூயி என்ற தீவுக்கும் செல்கிறோம். ராப்பா நூயியை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 25, 2023 04:11

October 24, 2023

கொக்கரக்கோவின் வனவாசம் (குறுங்கதை)

பெருமாள் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒருபோதும் தனிமையில் இருந்ததில்லை. வைதேகிக்கு வீட்டை விட்டு வெளியே செல்வது பிடிக்காது என்பதால் அவள் எப்போதுமே வீட்டில்தான் இருப்பாள். அதன் காரணமாக பெருமாள் அவன் வீட்டில் எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்று சொல்லலாம். விதிவிலக்காக சென்ற ஆண்டு, மூன்று மாதம் மும்பை சென்றிந்தாள் வைதேகி. அவள் பெருமாளை விட்டுப் பிரிந்தால் அவன் குடித்துக் குடித்தே செத்து விடுவான் என்று என் நண்பர்கள் சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். ஒரு விஷயத்தை அடிக்கடி சொன்னால் நாமும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2023 05:20

ஔரங்ஸேப் ஆங்கில மொழிபெயர்ப்பு பற்றி…

ஹார்ப்பர்காலின்ஸ் உலகின் மிகப் பிரபலமான பதிப்பகம். இந்தியாவிலும் அப்படியே. இருந்தாலும் இந்தியாவில் ஹார்ப்பர்காலின்ஸில் பிரசுரம் ஆனாலும் அமெரிக்காவிலோ யு.கே.யிலோ நம் புத்தகம் பிரசுரம் ஆக வேண்டுமானால் அந்த நாடுகளில் உள்ள ஏதேனும் ஒரு பதிப்பகம்தான் பிரசுரம் செய்ய வேண்டும். அதற்கு நமக்கு ஒரு லிடரரி ஏஜெண்ட் தேவை. மற்றபடி வெளிநாடுகளில் ஔரங்ஸேப் கிண்டில் எடிஷன் கூடக் கிடைக்காது. இந்த நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் வளன் Conversations with Aurangzeb நாவலை இருபது பிரதிகள் வாங்கி தன் அமெரிக்க ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 24, 2023 00:11

October 23, 2023

ஜப்பான்: கனவும் மாயமும் (13)

ஜப்பான் பயணம் பற்றி ஏன் தொடர்ச்சியாக எழுதவில்லை என்று கேட்டு சில கடிதங்கள் வந்தன. ஒரே காரணம்தான். எழுத வேண்டிய பல விஷயங்கள் ரொப்பங்கி இரவுகளில் வருகின்றன. ரொப்பங்கி இரவுகளுக்காக பல நாவல்களைப் படித்துக் கொண்டும், பல திரைப்படங்களைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். இங்கே இப்போது எழுதினால் நாவலை வெளியிடும்போது ஏற்கனவே படித்ததாக ஆகி விடும். நாவலில் வராத விஷயங்களை வேண்டுமானால் இங்கே எழுதலாம். ஜப்பானில் பத்து நாட்கள் இருந்தேன். அதில் ஒருநாள் செந்தில் அவர் இல்லத்துக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 23, 2023 22:29

October 22, 2023

கோபி கிருஷ்ணன் மாஸ்டர் கிளாஸ் – 2

நகுலன், புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு. செல்லப்பா, கோபி கிருஷ்ணன் மற்றும் ஒரு சிலர் பற்றி கொரோனா காலகட்டத்தில் பேசிய இந்த உரைகள் தமிழ் இலக்கியத்தின் பொக்கிஷம் என்பதை இலக்கிய ஆர்வலர்கள் அறிவார்கள். பலராலும் நான்கு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்க முடியவில்லை என்று பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். உரையாற்றும் நேரத்தைக் காலை ஆறு மணிக்கு வைத்ததன் காரணம், என் அமெரிக்க வாசகர்கள். அவர்களுக்கு அது மாலை நேரமாக இருக்கும் என்பதால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2023 21:32

கோபி கிருஷ்ணன் மாஸ்டர் கிளாஸ் – 1

கொரோனா காலகட்டத்தில் நான் நம்முடைய தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றிப் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்குத் தொடங்கும் உரை அநேகமாக ஒன்பது மணிக்கு முடியும். பிறகு ஒரு மணி நேரம் கேள்வி பதில் பகுதி இருக்கும். கேள்விகள் மிகச் சுருக்கமாகவும் பதில்கள் மீண்டும் ஒரு உரை போன்றும் இருக்கும். ஆறு மணிக்கு ஆரம்பித்தால் ஒன்பது மணிக்கு உரையாற்றி முடித்து விட்டுத்தான் தண்ணீரே குடிப்பேன். இடையில் எது குறுக்கிட்டாலும் என் சிந்தனை ஓட்டம் தடைபடும். பத்து ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2023 21:10

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.