சாரு நிவேதிதா's Blog, page 101
July 22, 2023
அந்தோனின் ஆர்த்தோ: எரிமலையின் பெருவெடிப்பு
ஆர்த்தோ பற்றிய நாடகத்திற்கு ஆங்கிலத்தில் Antonin Artaud: The Insurgent என்றும் தமிழில் மேலே குறிப்பிட்டவாறும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நண்பர் அ. ராமசாமி நாடகத்தில் சில திருத்தங்களைக் குறிப்பிட்டார். அந்தத் திருத்தங்களையும் செய்து விட்டேன். இப்போது அந்த நாடகத்தின் பிடிஎஃப் வடிவத்தை அதை வாசிக்க விரும்புபவர்களுக்கு அனுப்பலாம் என்று நினைக்கிறேன். அதற்கான விலை அல்லது நன்கொடையை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். நாடகத்தை தமிழில் அரங்கேற்றம் செய்ய முடியும் என்றே தோன்றுகிறது. நாடகத்தில் இடம் பெறும் ஒரு கலவிக் ... Read more
Published on July 22, 2023 04:31
July 17, 2023
ஆர்த்தோ நாடகத்தைக் காண்பதற்கான ஒரு முன் தயாரிப்பு
Antonin Artaud: The Insurgent ஆர்த்தோ பற்றிய நாடகத்தை சில நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் அனைவருக்குமே நாடகத்தைப் படித்ததும் ஒரு ‘இன்ப அதிர்ச்சி’ ஏற்பட்டது என்றே அவர்களின் எதிர்வினையிலிருந்து தெரிந்து கொண்டேன். வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு ஆச்சரிய உணர்வு அவர்கள் பேசும் போது எனக்குத் தெரிந்தது. சீனியிடம் இதை என்.எஃப்.டி.யில் விடலாமா என்று கேட்டேன். வேண்டாம், நாடகங்களுக்கு வரவேற்பு இருக்காது என்று சொல்லி விட்டார். இம்மாதிரி விஷயங்களில் சீனி பேச்சுக்கு மறு பேச்சு ... Read more
Published on July 17, 2023 09:50
July 16, 2023
அந்தோனின் ஆர்த்தோ: தர்க்கத்துக்கு எதிரான கலையின் கூச்சல் – ஜெயமோகன்
ஆர்த்தோவின் வாழ்வில் ஒரு வரலாற்று அபத்தம் நிகழ்ந்தது. பின்நவீனத்துவ ஃப்ராய்டியர் லக்கான் ஆர்த்தோவை மனநோயாளி என்றும், பொருளற்றவற்றை எழுதுபவர் என்றும் சொன்னார். இன்று ஆர்த்தோ மானுடத்தின் ஒரு குரல். இன்று கல்வித்துறையின் சில பழைய ஆசாமிகளுக்கு மட்டுமே லக்கான் முக்கியமானவர். நவீன நரம்பியலின் வருகைக்குப் பின் முற்றிலும் அர்த்தமற்ற சொற்றொடர்களின் குவியலாகவே லக்கான் பார்க்கப்படுகிறார். அறிவு காலாவதியாகும்போது சாஸ்வதமாக நின்றிருக்கும் இன்னொன்று உள்ளது. பித்தின் வழியாக மட்டுமே சென்றடையத்தக்க ஓர் இடம். அதைச் சொல்ல உங்கள் நாடகத்தால் ... Read more
Published on July 16, 2023 22:47
ஆர்த்தோவும் ஜெயமோகனும்…
சில ஆண்டுகளுக்கு முன்பு ஓர் இரவில் நான் Cradle of Filth என்ற பாப் குழுவின் Nymphetamine என்ற பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். க்ரேடில் ஆஃப் ஃபில்த் எனக்கு மிகவும் பிடித்த குழு. அடித் தொண்டையிலிருந்து அலறுவார் பாடகர். சாஸ்த்ரீய இந்திய இசை கேட்ட செவிகள் பிய்ந்து விடும். செவிகளிலிருந்து ரத்தம் வருவது போல் இருக்கும். அதுதான் இசை என்கிறார் ஆர்த்தோ. ஆர்த்தோவின் கோட்பாடுகள்தான் இம்மாதிரி இசைக்கான உந்துதல் என்பதை இன்று இசை வல்லுனர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆர்த்தோ ... Read more
Published on July 16, 2023 22:18
பிள்ளைப்பூச்சியால் வந்த வினை – 2
இதெல்லாம் அபாண்டம் சாரு. நானா பலமுறை செய்தேன். ஒரே முறை சந்தித்தேன். அவ்வளவு தான். ஒரு அரங்கேற்றத்துக்கு நீங்கள் தலைமை தாங்குகிறீர்கள். சரி தலைவர் வருவாரேன்னு வந்தா நீங்கள் எப்போதும் போல முதல் வரிசையில் என்னுடனேயே உட்காருங்கள் என்றீர்கள். உலகளந்தானும் நானும் எவ்வளவோ மன்றாடினோம் நீங்கள் விடவில்லை. அது தான் உங்கள் பண்பு. நாங்க தான் வேண்டாம் வேண்டாம் என்கிறோமே கேட்டீர்களா(ஜெயலலிதா குரல்). அது தான் இங்கேயும் நடந்திருக்கிறது. அவங்க ஒரு நான்கு பேரை கூப்பிட்டார்கள். அதோடு ... Read more
Published on July 16, 2023 08:33
பிள்ளைப்பூச்சியால் வந்த வினை
ஆயுஷ் ஹோமம் சம்பந்தமான பிரச்சினைகள் தீராது போல் இருக்கிறது. இப்போது ஒரு வாழ்நாள் முழுதும் நீடிக்கும் ஒரு தடை போடப்பட்டிருக்கிறது. நான் பொதுவாக வீட்டில் என் நண்பர்களைப் பார்ப்பதில்லை. காரணம், பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வந்த நண்பர் சத்தமாக, “நீங்கள் பைசெக்ஷுவலா சாரு?” என்று கேட்டார். சமையல் அறையில் இருந்த அவந்திகா சாரூஊஊஊ என்று அலறினாள். ஓடிப் போய் என்னவென்று கேட்டேன். அந்த ஆளை முதலில் வீட்டை விட்டு வெளியே ... Read more
Published on July 16, 2023 04:47
July 15, 2023
பழகுவதற்கு சாரு எப்படி? – 2
ஆர்த்தோ நாடகத்தை முடித்தாயிற்று, இனிமேலாவது பெட்டியோவை எடுத்து முடித்து விடலாம் என்று நினைத்தேன். நேற்று ஜெயமோகன் அதைக் கெடுத்தார். இன்று வினித் கெடுத்து விட்டார். நேற்று நான் எழுதியிருந்த கட்டுரையைப் படித்து விட்டுப் பொங்கி விட்டார் போல. அவரிடமிருந்து இப்படி செய்தி: ”எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்று சொன்னால் எல்லோரும் என்னை அரக்கனைப் போலவும் பிள்ளைக் கறி சாப்பிடுபவனைப் போலவும் பார்க்கிறார்கள்.” இது நீங்கள் சொல்லி இருப்பது. சில வருடங்களுக்கு முன்பு உங்கள் நெருங்கிய நண்பர் எனக்குப் ... Read more
Published on July 15, 2023 08:11
July 14, 2023
பழகுவதற்கு சாரு எப்படி?
இன்று காலை ஜெயமோகன் மாடல் என்ற ஜெயமோகனின் கட்டுரையைப் படித்து விட்டு செம ஜாலியாகி விட்டேன். ஏனென்றால், அதில் உள்ள ஒவ்வொரு வாக்கியத்துக்கும் வார்த்தைக்கும் நான் நேர் எதிராக வாழ்கிறேன். ஆம், ஒவ்வொரு வார்த்தைக்கும். காலையிலிருந்து அதே நினைவாக இருக்கிறேன். ஒரே ஆச்சரியம், எப்படி இது சாத்தியம் என்று. அந்த அளவுக்கு நேர் எதிர். உடனே ஸ்ரீ, ஸ்ரீராம், ஸ்ரீனி, வினித், ராஜேஷ் நால்வரிடமும் ஜெயமோகனின் கட்டுரையை அனுப்பி “சாரு எப்படி?” என்று அபிப்பிராயம் கேட்டேன். சீனி ... Read more
Published on July 14, 2023 06:55
நாடக வாசிப்பு
கோவாவில் வரும் சனிக்கிழமை 22ஆம் தேதி எந்த நேரத்தில் நாடகம் வாசிப்பீர்கள் என்று கேட்டு ஒரு நண்பர் கடிதம் எழுதியிருந்தார். அது 21ஆம் தேதி எப்போது உறங்கப் போகிறேன் என்பதைப் பொருத்தது. வீட்டில் இருக்கும்போது ராணுவ ஒழுங்குடன் வாழ்கிறேன். இரவு பதினோரு மணி அதிக பட்சம். அதற்கு மேல் கண் விழிக்க மாட்டேன். காலையில் நாலரை அல்லது ஐந்து. அதற்கு மேல் உறங்க மாட்டேன். உறங்க நினைத்தாலும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் குயில்களும் கிளிகளும் என்னை ... Read more
Published on July 14, 2023 00:12
July 13, 2023
ஆர்த்தோவாக வாழ்தல்…
பேய் பிடித்தவனைப் போல் படித்து, குறிப்புகள் எடுத்து, நாடகத்தை எழுதி முடித்து விட்டேன். ஆங்கிலத்தில்தான் தலைப்பு அமைந்தது. தமிழில் இன்னும் கை கூடவில்லை. ஆங்கிலத்தில் Antonin Artaud: The Insurgent என்று வைத்திருக்கிறேன். வங்காளத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தமிழில் சாத்தியம் இல்லை. நாற்பத்தைந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரைக் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லை. நீங்கள் நாவலில், சிறுகதையில் – மதத்தில் கை வைக்காமல் ... Read more
Published on July 13, 2023 09:36
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

