சாரு நிவேதிதா's Blog, page 102
July 8, 2023
வாழ்க்கையும் எழுத்தும்…
சென்ற குறிப்பில் கொஞ்சம் பிழைகள் இருந்தன. இப்போது திருத்தி விட்டேன். அந்தக் குறிப்பில் விடுபட்டுப் போன விஷயம் ஒன்று உண்டு. மதுரையில் நடந்த ரெண்டாம் ஆட்டம் நாடகத்தில் ஒரு பள்ளி மாணவியும் நடித்தாள். வயது பதினேழு இருக்கலாம். ஏன் இதில் நடித்தாய் என்று அவளுக்கும் அடி விழுந்தது. பதினேழு வயதுப் பெண் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றுதான் சட்டம் இருக்கிறது. நவீன நாடகத்தில் நடிக்கக் கூடாது என்றுமா சட்டம் இருக்கிறது? *** நான் எப்போதுமே என்னுடனான ... Read more
Published on July 08, 2023 08:22
கோவா சந்திப்பு
என்னுடைய இருபதாவது வயதிலிருந்து இந்த அறுபத்தொன்பதாவது வயது வரை நாற்பத்தொன்பது ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் இலக்கியத்தையும் தத்துவத்தையும் சினிமாவையும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். என் அளவுக்கு இந்த மூன்றிலும் பாண்டித்யம் பெற்றவர்கள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. இதையெல்லாம் நான் ஆணவத்தில் பேசவில்லை. ஒருவர் தத்துவத்திலும் இலக்கியத்திலும் சினிமாவிலுமாக முறையே மூன்று பி.ஹெச்.டி. பட்டம் பெற்ற ஒருவர் அதை சொல்லிக் கொள்வது எப்படியோ அப்படியே இதைச் சொல்கிறேன். ஃப்ரெஞ்ச் தத்துவத்திலும் இலக்கியத்திலும் பாண்டியத்யம் பெற்ற பல ஃப்ரெஞ்ச் அறிஞர்கள் உண்டு. ... Read more
Published on July 08, 2023 05:42
July 6, 2023
யான் பெற்ற இன்பம்…
சித்த மருத்துவர் பாஸ்கரனை ஞாயிறு தவிர்த்து வேறு எங்கே பார்க்க முடியும் என்று பல நண்பர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர் வசிப்பது வேலூரில். முகவரி: Dr. D. Baskaran, B.S.M.S., 629, Phase 2, Sathuvachari, Vellore 9. email: drbaskaran57@gmail.com phone: 98947 25757 பார்க்கக் கூடிய நேரம்: காலை 9 இலிருந்து பகல் ஒரு மணி வரை. இன்னொரு முக்கிய செய்தி. மருத்துவர் பாஸ்கரனை இன்று கோவையில் சந்திக்கலாம். விவரம்: இன்று (7.7.2023) பிற்பகல் ... Read more
Published on July 06, 2023 20:38
July 5, 2023
தமிழில் எழுத்தாளனாக வாழ்தல்
என் மீது மிகுந்த பிரியம் கொண்டு என்னை நெருங்கி வரும் வாசகர்கள் கூட தமிழ் எழுத்தாளனின் நிலை பற்றி நான் அடிக்கடி புலம்புவதைப் பார்த்து வெறுத்து, அலுப்புற்று ஓடி விடுகிறார்கள். ஒருவர் வாட்ஸப் வரை வந்தார். என்னுடைய ஒரு புலம்பல் கட்டுரையைப் படித்து விட்டு என்னைக் கண்டபடி திட்டி வாட்ஸப் அனுப்பினார். அவரை ப்ளாக் செய்து விட்டேன். வெகுஜனப் பரப்பிலிருந்து வருபவர்களுக்கு நான் ஏன் புலம்புகிறேன் என்று புரியவில்லை. இதோ இப்போது விளக்கப் போகிறேன். என்னுடைய எக்ஸைல் ... Read more
Published on July 05, 2023 23:07
அந்த்தோனின் ஆர்த்தோ : ஒரு நாடகம்
Antonin Artaud: Blows and Bombs என்று ஒரு புத்தகம் இருக்கிறது. ஸ்டீஃபன் பார்பர் எழுதியது. இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்படி ஒரு தலைப்பு தமிழில் எனக்கு மாட்ட மாட்டேன் என்கிறது. நேற்றிலிருந்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். புலப்படவில்லை. எதற்கு? ஒரு ஐந்து நிமிடத்துக்கு முன்னால்தான் ஆர்த்தோ பற்றி ஒரு நாடகம் எழுதி முடித்தேன். அறுபது பக்க நாடகம். இரவு பகலாக வெறித்தனமாக உட்கார்ந்து எழுதினேன். இரவு பன்னிரண்டுக்குப் படுத்து காலை ஐந்துக்கு எழுந்து எழுதினேன். எழுதுவதற்குக் கொஞ்ச ... Read more
Published on July 05, 2023 09:40
July 3, 2023
குருவே நமஹ…
இன்று குரு பூர்ணிமா. இலங்கையில் இன்று போயா. முழு நிலவு நாளை சிங்களத்தில் போயா என்கிறார்கள். புத்த பூர்ணிமாவின் போது நான் இலங்கையில் இருந்தேன். இரண்டு நண்பர்கள் இன்று எனக்கு வணக்கம் சொல்லி செய்தி அனுப்பியிருந்தார்கள். ஆரோக்கிய புஷ்பராஜ் அவர்களில் ஒருவர். இன்னொருவர் எனக்கே குரு. யோகா குரு சௌந்தர். அவர் எனக்கு ஒரு அற்புதமான வந்தன செய்தி அனுப்பியிருந்தார். அவர் என் எழுத்துக்களிலிருந்தும் கற்றுக் கொள்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டியது அது. அந்த தர்க்கத்தின்படி ... Read more
Published on July 03, 2023 02:41
June 30, 2023
சித்த மருத்துவம்
அகத்திய முனியால் அறிமுகப்படுத்தப்பட்ட சித்த மருத்துவம் பன்னெடுங்காலமாக இங்கே மக்களின் பிணி தீர்க்கும் பணியைச் செய்து வருகிறது. ஆனால் ஆங்கிலேயரின் வருகைக்குப் பிறகு சித்த மருத்துவத்தின் புகழ் மங்கி விட்டதை நாம் அறிவோம். இழப்பு நமக்குத்தானே தவிர அந்த மருத்துவ முறைக்கு அல்ல. அதே சமயம் நான் அலோபதி மருத்துவ முறையை எதிர்ப்பவன் அல்ல. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது என் உயிரைக் காப்பாற்றியது அலோபதி முறைதான். ஆனால் சித்த மருத்துவத்தின் பெருமை என்னவென்றால், ஹார்ட் ... Read more
Published on June 30, 2023 21:39
ப்ளாக் ஹ்யூமர் என்றால் என்ன? (கட்டுரைதான், கதையாகவும் படிக்கலாம்!)
பெங்களூர் சென்று வந்தேன். திங்களும் செவ்வாயும் இருந்து விட்டு, புதன் கிழமை பஸ்ஸில் திரும்பினேன். பஸ் பயணம் ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பஸ்ஸில் பயணம் செய்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். பஸ் பயணமே எனக்கு ஒத்து வருவதில்லை. இந்தியாவில் பஸ்களில் கழிப்பறை வசதி இல்லாததால் என்னால் பஸ்ஸில் செல்ல முடிவதில்லை. அந்தப் பிரச்சினை இரவில் மட்டும்தான். பகலில் நானும் மற்றவர்கள் மாதிரிதான். பகலில் என் சிறுநீரகம் சரியாக வேலை செய்யும். ஆனால் ஒரு முழுப் ... Read more
Published on June 30, 2023 00:10
June 28, 2023
ஒரு முக்கியமான புத்தகம்
காலத் தாமஸ் (ரெனே) எழுதிய The Testament of the dead Daughter என்ற நாவல் எனக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் AbeBooks என்ற நிறுவனத்தில் கிடைக்கிறது. அந்த நிறுவனத்தில் இது போன்ற அரிதான புத்தகங்களை முன்பும் வாங்கியிருக்கிறேன். பாரிஸில் உள்ள பொம்ப்பிதூ நூலகத்தில் இந்த நூல் நிச்சயம் இருக்கும். ஸ்கேன் பண்ணிக் கேட்டால் கொடுப்பார்கள். பாரிஸில் யாராவது என் மீது பிரியம் கொண்ட ஆத்மா இருந்தால் முயற்சித்துப் பார்க்கலாம். பதினைந்து நாளாகத் ... Read more
Published on June 28, 2023 20:09
June 25, 2023
notes on making of a novel (1)
பெட்டியோ நாவலை எப்படியெல்லாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது பற்றிய குறிப்புகளை இங்கே தொடர்ந்து எழுதலாம் என்று இருக்கிறேன். எனவே அந்த நாவலை வாசிக்க விருப்பப்படும் நண்பர்கள் இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து வந்தால் நாவல் அனுபவம் இன்னும் கூடுதலாக இருக்கும் என்பது என் அபிப்பிராயம். இப்போது முதல் குறிப்பு: My Life and Times with Antonin Artaud என்ற நாவலை ஆர்த்தோவின் மிக நெருக்கமான நண்பரான Jacques Prevel எழுதியிருக்கிறார். என்ன முயன்றும் அந்த நாவல் எனக்குப் ... Read more
Published on June 25, 2023 06:52
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

