சாரு நிவேதிதா's Blog, page 106
May 21, 2023
ஒரு புதிய நாவல்… என்.எஃப்.டி.யில்
மிக மும்முரமாக பெட்டியோ நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். நாளைக்குள் முடிக்க வேண்டும் என்பது திட்டம். இன்று மூன்றாவது நாள். நான்கு நாள்களில் ஒரு நாவல் எழுதியது இப்போதுதான். அன்பு நாவலை பத்து நாளில் எழுதினேன். ஆனால் அதில் ஒரு நாற்பது சதவிகிதம் இணைய தளத்தில் உள்ளது. இப்போதைய பெட்டியோ நாவலில் இரண்டு பக்கம் மட்டுமே தளத்தில் இருக்கிறது. மற்றவை அனைத்தும் புதியது. அராத்துவுக்கே தெரியாது. அனோஜன் மற்றும் ப்ரஷாந்த் இருவருக்கும் மட்டுமே தெரியும். அதிலும் சிலது அவர்களுக்கும் ... Read more
Published on May 21, 2023 22:45
May 19, 2023
இன்று மாலை ஃபேஸ்புக் லைவில்…
இன்று மாலை ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் உரையாற்ற இருக்கிறேன். இன்று காலை பதினோரு மணியிலிருந்தே ஆரோவில்லில் சிறுகதைப் பட்டறை ஆரம்பிக்க இருக்கிறது. அதில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. பரோல் கிடைக்கவில்லை. அதனால்தான் ஐந்து மணிக்கு ஃபேஸ்புக் லைவில் பேசுகிறேன். ஜே.பி. சாணக்யாவின் ஆண்களின் படித்துறை, இராசேந்திர சோழனின் இசைவு, சு. வேணுகோபாலின் உள்ளிருந்து உடற்றும் பசி ஆகிய மூன்று சிறுகதைகள் பற்றிய பட்டறை. என் உரை இம்மூன்று சிறுகதைகள் பற்றியும் பொதுவாக எழுத்தும் பாலியலும் ... Read more
Published on May 19, 2023 21:24
ஒரு உச்சரிப்பு விளக்கம்
பெட்டியோ என்பதன் சரியான உச்சரிப்பு ஆங்கிலத்தில் cat, apple போன்ற வார்த்தைகளில் வரும் உச்சரிப்புதான். Paetiya என்றால் செல்லக்குட்டி. கடைசி எழுத்தில் ‘எ’வுக்குப் பதிலாக ‘ஓ’ போட்டால் செல்லக்குட்டீ…
Published on May 19, 2023 03:54
May 18, 2023
பேடியோ (Paediyo)
சிங்களத்தில் பேடியோ (Paediyo) என்றால் செல்லக்குட்டி என்ற பொருள் வரும். அந்தத் தலைப்பில் ஒரு குறுநாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். பயணக் கட்டுரையை விட ஒரு நாவலுக்குரிய fantastic சம்பவங்கள் நடந்ததால் குறுநாவலாகவே எழுதி விடலாம் என்று முடிவு செய்தேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெளிவரும்.
Published on May 18, 2023 22:13
பெட்டியோ
சிங்களத்தில் பெட்டியோ என்றால் செல்லக்குட்டி என்ற மாதிரி பொருள் வரும். அந்தத் தலைப்பில் ஒரு குறுநாவல் எழுதிக் கொண்டிருக்கிறேன். பயணக் கட்டுரையை விட ஒரு நாவலுக்குரிய fantastic சம்பவங்கள் நடந்ததால் குறுநாவலாகவே எழுதி விடலாம் என்று முடிவு செய்தேன். எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெளிவரும்.
Published on May 18, 2023 22:13
May 15, 2023
பாடை
என் வாழ்க்கையில் நான் யாருக்கும் பாடை கட்டியதில்லை. என் முதுகில் குத்திய ஒரு துரோகிக்கு நான் சென்னை வநததும் பாடை கட்டப் போகிறேன். சென்னையில் வசிக்கிறான். வினித்தின் நண்பன். வயது 75. அவனுக்கு இருக்கிறது என் கையால் பாடை. முதுகில் குத்தினால் அதுதான் வினை. இலங்கையில் அவனைக் கண்டதும் ஒரு குழந்தையைப் போல் ஓடிப் போய் கை கொடுத்தால் கையை விலக்கிக்கொண்டு மூஞ்சியைத் திருப்பிக் கொண்டான் துரோகி. அவனை 25 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்க முனைந்தேன். ... Read more
Published on May 15, 2023 20:25
NH 10 – சாரு: மதுரை ஆசைத்தம்பி
மதுரை ஆசைத்தம்பி எழுதியது: சாருவை நீங்கள் பெண்ணாகப் பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் நான் பார்த்தேன். தான் மாறியதோடு நில்லாமல் உங்களையும் ஒரு பெண்ணாக மாற்றி இருப்பார். எங்கே? எப்படி? என்று எழும் வினாக்களுக்கான விடை ஒரு சிறிய கட்டுரையில் உள்ளது. அந்தக் கட்டுரை பெயர். NH -10. பெண்களின் வலிகளை வரிகளாக வரைந்திருக்கும் அந்தக் கட்டுரை சாருநிவேதிதாவின் நாடோடியின் நாட்குறிப்புகள் என்ற புத்தகத்தின் இரண்டாம் கட்டுரை. எழுத்தாளர்களுக்கு சாதி மதம், இனம், தேசம் குடும்பம் என்ற ... Read more
Published on May 15, 2023 01:47
May 14, 2023
சும்மா கிடந்த சங்கு
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல சீனி ஒரு கதையை அனுப்பிப் படித்துப் பார்க்கச் சொன்னார். சு. வேணுகோபால் எழுதிய உள்ளிருந்து உடற்றும் பசி என்ற கதை. எல்லோராலும் சிலாகிக்கப்பட்ட அந்தக் கதையைப் படித்தேன். கோவில் வாசலில் தன் சீழ் வடியும் புண்ணைக் காண்பித்துப் பிச்சையெடுக்கும் காட்சிதான் நினைவு வந்தது. கதை அத்தனை அருவருப்பு. கடைசி வாக்கியத்தில் வரும் இன்செஸ்ட் அல்ல; அதில் வரும் ஜவுளிக்கடை வர்ணணை. ஞாபக சக்தி உள்ள ஒரு ஒம்பதாம் கிளாஸ் ... Read more
Published on May 14, 2023 08:11
May 12, 2023
ஒரு உதவி
வரும் திங்கள், செவ்வாய், புதன் மூன்று இரவுகள் கொழும்பில் தங்க வேண்டும். ஒரு நடுத்தர ஓட்டலில் அறை எடுக்கும் செலவை யாரேனும் நண்பர்கள் ஏற்க இயலுமா? பொதுவாக இப்படி நான் எழுதினால் மாணவர்கள் ஆட்டோ ஓட்டுநர் போன்றவர்களே பணம் அனுப்பி வைப்பார்கள். இந்த முறை அவர்கள் வேண்டாம். பணம் ஒரு பெரிய பிரச்சினையாக இல்லாதவர்கள் அனுப்பினால் அல்லது அறை ஏற்பாடு செய்தால் நலம். தெருவிலும் சாலைகளிலும் குறுக்கும் நெடுக்குமாகத் திரியும் நாய்களைப் பற்றி எழுதியதை குறியீடாக (தமிழ் ... Read more
Published on May 12, 2023 08:49
May 9, 2023
எனக்கு உயிராபத்து
நான் இலங்கைக்கு வந்ததிலிருந்தே என்னை நக்கல் பண்ணிக் கொண்டிருக்கிறார் என்னை இலங்கைக்கு வரவழைத்த றியாஸ் குரானா. நேற்று அவர் என்னைச் சந்தித்தபோது எனக்கு உயிராபத்து இல்லை. இன்றுதான் வந்தது. அதுவும் றியாஸின் நண்பர் அனுப்பிய வாய்ஸ் மெஸேஜ். அவருக்கும் உயிராபத்து. மிகவும் நடுக்கத்துடனும் பதற்றத்துடனும் அவர் எனக்கு அந்த வாய்ஸ் மெஸேஜை அனுப்பியிருந்தார். அதைப் பார்த்து விட்டுத்தான் இங்கேயிருந்து தப்பி விடலாம் என்று முடிவு செய்தேன். இங்கே அனாதையாக செத்தால் என்ன செய்வது என்று எழுதியிருந்தேன் அல்லவா? ... Read more
Published on May 09, 2023 04:56
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

