சாரு நிவேதிதா's Blog, page 108

April 25, 2023

சாரு மீதான தாக்குதல் தனி ஒருவர் மீதானதா? – ஆர். காயத்ரி

சாரு மீதான தாக்குதல் தனி ஒருவர் மீதானதா? – ஆர். காயத்ரி https://www.arunchol.com/r-gayathri-o...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2023 18:48

ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம் – சாரு உரை

ஆப்பிரிக்கா முத்தமிழ்க்கூடம் நிகழ்வில் 22.04.23 அன்று சாரு பேசியது கீழே இணைப்பில். நன்றி: கபிலன், ஸ்ருதி டிவி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 25, 2023 18:45

April 23, 2023

மத்திய சிறைச்சாலை (குறுங்கதை)

இரண்டு தினங்களுக்கு முன்பு மதியம் மூன்று மணி அளவில் வினித் ஃபோன் செய்தார்.  உங்கள் வீட்டின் கீழேதான் அராத்துவும் நானும் நிற்கிறோம், கீழே வருகிறீர்களா? உடனே கீழே கிளம்பினேன். எங்கே கிளம்புகிறாய் என்றாள் அவந்திகா.  ஏனென்றால், வேட்டி சட்டையோடு நான் வெளியே போனதில்லை.  ஏற்கனவே நான் திட்டமிட்டு வைத்து விட்டதால் எந்த சுணக்கமும் இல்லாமல் ”செல்வா வந்திருக்கிறார், பார்த்து விட்டு வருகிறேன்” என்று சொல்லி விட்டுக் கீழே இறங்கினேன். (சீனி என் வாழ்விலிருந்து தடை செய்யப்பட்டவர்.  வினித் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2023 23:12

ஒன் மேன் ஆர்மி – 3

அதிச்சி பற்றி இன்னொரு தகவல் இப்போது வந்தது. அதிச்சியின் ஒரு நூல் உயிர்மையில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் நம் தமிழ் எழுத்தாளர்களின் ஒரு நூலாவது நைஜீரியாவில் கிடைக்கிறதா? அத்தனை தென்னமெரிக்க எழுத்தாளர்களையும் ஐரோப்பிய எழுத்தாளர்களையும் நாம் தமிழில் மொழிபெயர்த்துப் படிக்கிறோம். நம்முடைய ஒரு எழுத்தாளரை அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ படிக்கிறார்களா? அவர்களுக்குத் தெரிந்த “இந்திய” எழுத்தாளர்கள் சல்மான் ருஷ்டியும் அருந்ததி ராயும்தான். இருவருமே ஆங்கிலத்தில் எழுதும் சராசரி எழுத்தாளர்கள். நம்மை அமெரிக்கரும் ஐரோப்பியரும் எப்போது படிப்பார்கள் என்பதே விருது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2023 22:57

ஒன் மேன் ஆர்மி – 2

ஒவ்வொரு விருதுக்குப் பின்னாலும் ஏகப்பட்ட ஊழல் கதைகள் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.  அது தெரிந்தும் ஏன் விருது பற்றி இத்தனை கவலைப்படுகிறீர்கள்? இது என்னிடம் பலரும் முன்வைக்கும் கேள்வி.  என்னுடைய எளிமையான பதில்:  நான் ஒரு சர்வதேச எழுத்தாளன்.  என் எழுத்து தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல.  எல்லா எழுத்தாளர்களுமே சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டியவர்கள்தான்.  மற்ற மொழி எழுத்தாளர்களுக்கெல்லாம் அது வாய்த்திருக்கிறது.  தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும் ஏன் அது நடப்பதில்லை? ஒரு ஹாருகி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2023 22:18

One Man Army – 1

இந்த ஆர்மரி ஸ்கொயர் விவகாரத்தில் நான் ஒன் மேன் ஆர்மியைப் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  இப்படிச் சொல்வதன் மூலம் இந்த விஷயத்தில் என் தோளோடு தோள் நின்று எனக்கு ஆதரவு அளிப்பவர்களை நான் அவமதிப்பதாக அவர்கள் நினைத்து விடக் கூடாது.  நான் இப்படி ஒன் மேன் ஆர்மி என்று சொல்வதன் காரணம், ஆர்மரி ஸ்கொயர் செய்த அவமானகரமான காரியம் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தவிர வேறு எந்த ஆங்கில ஊடகத்திலும் செய்தி வரவில்லை.  நடந்திருக்கும் விஷயங்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2023 21:30

ஏன் இலக்கியம்?

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை,பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய உலக புத்தக தின விழா – 2023 அன்று அடியேன் ஆற்றிய உரையின் காணொலி: நன்றி: கபிலன், ஷ்ருதி டிவி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2023 09:16

April 22, 2023

இன்று மூன்றரை மணிக்கு…

இன்று அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் மூன்றரை மணிக்கு உரையாற்றுகிறேன். ஐந்து மணிக்கு எஸ்.ரா. பேசுவதால் சரியாக மூன்றே முக்காலுக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். நல்ல முறையில் உரையாற்றும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயரை யாரும் சேர்ப்பதில்லை. நாற்பது ஆண்டுகள் கழித்துத்தான் என்னை எழுத்தாளர் பட்டியலிலேயே சேர்த்திருக்கிறார்கள். கொரோனா காலத்தில் சுமார் எட்டு முறை நான்கு மணி நேரம் தொடர்ந்து உரையாற்றியிருக்கிறேன். காலை ஆறு மணிக்குத் தொடங்குவேன். இடையில் தண்ணீர் கூட அருந்தாமல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2023 21:49

April 21, 2023

உலகப் புத்தக தின விழா

வரும் ஞாயிறு அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாலை 3.45 மணிக்கு மூன்றாம் உலக நாடுகளும் இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். காலை பத்து மணியிலிருந்தே விழா தொடங்குகிறது. அழைப்பிதழை இணைத்திருக்கிறேன். தவறாமல் வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்னை உரையாற்ற அழைத்தபோது நான் கொஞ்சம் தயங்கினேன். ஏனென்றால், எழுத்தாளர்கள் பேச்சாளர்களாக மாற வேண்டும் என்று ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் எனக்கு ஒரு சிறிதும் உடன்பாடு இல்லை. சார்ல்ஸ் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2023 08:47

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.