சாரு நிவேதிதா's Blog, page 107
May 9, 2023
கொழும்பு பயணம்
இங்கே பாசிக்குடாவில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. இங்கே இருந்து கொண்டு எழுதுவது சாத்தியம் இல்லை. ஏனென்றால், இவர்களின் அவதூறுகளுக்கு நான் பதில் எழுதவில்லை. எழுதினால் தலை என்னிடம் இருக்காது. அதனால் கொழும்பு கிளம்புகிறேன். என்னை நேரில் வந்து பார்த்து ஆதரவு தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி. ஒரு பெண் கூட வந்து ஆதரவு தருவதாகச் சொன்னார். துரதிருஷ்டவசமாக அவர் பெயரை மறந்து போனேன். கொழும்புவில் மூன்று நாள் இருப்பேன். என்னை அழைத்த நண்பர்களுக்குப் ... Read more
Published on May 09, 2023 04:40
May 7, 2023
நான் யார்?
நான் யார் என்று தெரியாத சிலர் றியாஸ் குரானா என்னை ஏறாவூருக்கு அழைத்தது பற்றி அவருக்கு உளவியல் நெருக்கடி கொடுப்பதை ஃபேஸ்புக் மூலம் அறிந்தேன். நான் ஒன்றும் நீயா நானா கோபிநாத் போலவோ திண்டுக்கல் லியோனி போலவோ இங்கே இலங்கை வரவில்லை. நான் வந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஆயிற்று. இதுவரை ஆன செலவு பூராவும் என்னுடையது. இப்போது இங்கே பாசிக்குடாவில் தங்கியிருக்கும் செலவும் என்னுடையதுதான். என் வாசகர்களிடம் நான் பெற்ற சன்மானத்தினால் மட்டுமே இது எனக்கு ... Read more
Published on May 07, 2023 00:27
May 6, 2023
தனிமனித சுதந்திரம்
முத்து என்று எனக்கு ஒரு நண்பர் இருந்தார். மிகவும் நெருக்கமான நண்பர். நான் சந்தித்த மனிதர்களிலேயே மிகச் சிறந்த படிப்பாளி என்றால் அவர்தான். எனக்கு அறிவின் மீது தீராக் காதல் என்பதால் அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. ஆனால் நட்பு என்றால் அது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். அவருக்கு என் எழுத்தின் மீது துளியும் மரியாதை இல்லை என்பதை நீண்ட காலம் கடந்து கண்டு கொண்டு அவரிடமிருந்து விலகி விட்டேன். அது எனக்கு மிகப் ... Read more
Published on May 06, 2023 11:11
உயிரின் விலை
நான் கணக்கில் எத்தனை பலவீனன் என்பதும், சீனி எனக்கு எத்தனை உறுதுணையாக இருக்கிறார் என்பதும் மீண்டும் நிரூபணம் ஆகியது. ஒரு லட்சம் ரூபாய்க்கு ஆயிரம் பேர் ஆயிரம் ரூபாய் அனுப்பினால் நலம் என்று எழுதி விட்டேன். நூறு பேர் என்று எழுதியிருக்க வேண்டும். இதைக் கூட சீனி மட்டும்தான் சுட்டிக் காட்டினார். ஆயிரம் பேரா பணம் அனுப்புவார்கள்? நான் என்ன ஆன்மீகவாதியா? சீனிக்கு அது நூறு பேர் என்று புரிந்து விட்டது. இப்போது மாற்றி விட்டேன். அந்தக் ... Read more
Published on May 06, 2023 09:48
வைர சூத்திரத்தின் விலை
ஏற்கனவே பல முறை எழுதிய விஷயம்தான். மீண்டும் எழுத வேண்டியிருக்கிறது. ஒரு இணைய இதழில் நான் கொடுத்த மிக நீண்ட நேர்காணலை நீங்கள் படித்திருப்பீர்கள். என் எழுத்து வாழ்விலேயே எனக்கு அதிக எதிர்வினைகள் வந்தது அந்த நேர்காணலுக்குத்தான். அதற்கு முன்பு ஒரு ஜனரஞ்சகப் பத்திரிகையின் இணைய இதழில் கோணல் பக்கங்கள் என்ற பத்தியை எழுதியபோதுதான் அந்த அளவுக்கு எதிர்வினைகள் வந்தன. அந்த நீண்ட நேர்காணல் ஒரு நூறு பக்க புத்தகமாக வரும். நூறு பிரதிகள் விற்கும். எனக்கு அதன் மூலம் ஆயிரம் ரூபாய் ராயல்டி கிடைக்கும். நேர்காணல் வந்த ... Read more
Published on May 06, 2023 05:42
May 2, 2023
அஞ்சலி: ரணஜித் குஹா (1923-2023) | ஆளப்படுபவர்களின் வரலாறு: ரவிக்குமார்
நான் அடிக்கடி வரலாற்றறிஞர் ரணஜித் குஹா பற்றி என் கட்டுரைகளில் குறிப்பிடுவது வழக்கம். அவர் சமீபத்தில் தன் நூறாவது வயதில் ஆஸ்திரியாவில் மறைந்தார். குஹா என் ஆசான்களில் ஒருவர். அவருடைய ஸபால்ட்டர்ன் ஸ்டடீஸ் இல்லாவிடில் ஔரங்ஸேப் நாவல் இல்லை. அவர் பற்றிய நண்பர் ரவிக்குமாரின் முக்கியமான கட்டுரையை இங்கே பகிர்கிறேன். நன்றி: இந்து தமிழ் திசை.
Published on May 02, 2023 09:43
May 1, 2023
நான்தான் ஒளரங்ஸேப்: ரமேஷ் கல்யாண்
நான்தான் ஒளரங்ஸேப்: ரமேஷ் கல்யாண் https://rasamattam.org/%e0%ae%a8%e0%a...
Published on May 01, 2023 01:30
ஒடியல் கூழ்
வவுனியாவில் இரண்டு தினங்கள் தங்கிவிட்டு இப்போது யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். யாழ்ப்பாணம் போன பிறகுதான் எந்த விடுதியில் தங்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அங்கே ஒடியல் கூழ் சாப்பிட வேண்டும் என்பது ஆசை. ஆனால் யாரைக் கேட்பது என்று தெரியவில்லை. 50 ஆண்டுகளாக தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளன் நான். யாழ்ப்பாணமும் தமிழ் பேசும் நிலம்தான். அங்கே எனக்கு ஒடியல் கூழ் கொடுக்க ஒரு ஆள் இல்லை. ரெஸ்டாரண்டில் கிடைக்குமா என்று ... Read more
Published on May 01, 2023 01:05
April 29, 2023
விருது மறுக்கப்பட்டது தொடர்பாக: பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
அன்புள்ள சாரு, இன்றுதான் தங்களுக்கு விருது மறுக்கப்பட்ட நிகழ்வை முழுமையாக அறிந்தேன். என்னைப் பொறுத்தவரையில் மூன்றாம் உலக நாடுகளின் தனித்துவமான அரசியல் சமூக நிலைமைகளை, குறிப்பாக நகரங்களில் நிலவும் பிறழ்வுகளை எழுதுவதின் வாயிலாக விவரிப்பவை மட்டுமல்ல, மிக அதிமாக சுரண்டலுக்கு உள்ளாகும் மக்களின் மத்தியில் உடலின் தன்னாட்சியை (autonomy) முன்னிறுத்தும் படைப்புகள் தங்களுடையவை. என்றாலும், ஃபாசிச எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தக் கூடியவை. குறிப்பாக மத விவகாரங்களில் தங்களது ஹை-பிரிட் தன்மை முழுக்க ஒழுங்குகள், சடங்குகளால் அன்றி, உணர்வு, இசை ... Read more
Published on April 29, 2023 04:31
April 27, 2023
சாரு விவகாரமும் நம் அனைவரின் அமைதியும்! – ஆசைத்தம்பி
சாரு விவகாரமும் நம் அனைவரின் அமைதியும்! – ஆசைத்தம்பி சாரு பிரச்சினையைப் பொறுத்தவரை தமிழ்ச் சூழலில் நிலவும் அமைதியைப் புரிந்துகொள்ள முடிகிறது. அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டாலும் தமிழ்நாட்டைப் பகைத்துக்கொண்டுவிடக் கூடாது. ஒருவர் இலக்கிய மடங்களோடு நெருக்கமாகவோ தொடர்பிலோ தூரத்து உறவாகவோ, குறைந்தபட்சம் பகைத்துக்கொள்ளாமலோ இருந்தாக வேண்டும். அப்படி இல்லையென்றால் எந்த ஆதரவும் ஒருவருக்குக் கிடைக்காது. மேலும் அந்த தனிநபர் கடைசி வரை போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டும். சாரு விஷயத்தில் மட்டும் அல்ல. நானும் கண்டுகொண்ட விஷயம் இது. இந்த ... Read more
Published on April 27, 2023 06:28
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

