எக்ஸைல் நாவல் எழுதிக் கொண்டிருக்கும்போது லாரா ஃபாபியானின் குரல் பழக்கம். அவரது je taimeஐக் கேட்டு உருகியிருக்கிறேன். எத்தனையோ ஆயிரம் முறை கேட்டிருப்போம். விவரம் எக்ஸைலில் இருக்கிறது. அதற்குப் பிறகு நேற்றுதான் லாரா ஃபாபியானின் பெயரை மீண்டும் கேட்டேன். இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறாயா என்று பின்வரும் லிங்கை அனுப்பினாள் நயநதினி. அடாஜியோ. முதல் முறையாகக் கேட்டேன். இப்படிப்பட்ட குரல்களை இந்தியாவில் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த உணர்ச்சித் தெறிப்பை, இசையின் உச்சத்தை வெகுஜன இசையில் இந்தியாவில் நான் கேட்டதில்லை. ...
Read more
Published on June 14, 2023 21:30