வாழ்வின் மிகக் கொண்டாட்டமான, குதூகலமான மனநிலையில் ஒரு நாவலை எழுதிக் கொண்டிருப்பது இப்போதுதான். பெட்டியோ… அப்படியாகச் சென்று கொண்டிருக்கிறது. இன்றும் நயநதினியிடமிருந்து ஒரு நீண்ட மெஸேஜ். ஒரு நாவலின் அத்தியாயம்தான் அது. அதை மொழிபெயர்த்து அப்படியே ப்ளாகில் போட்டு விட மனம் துடிக்கிறது. குறைந்த பட்சம் அதில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு மேற்கத்திய இசைக் கோர்வையையாவது போடலாம் என்று ஆர்வமுறுகிறது மனம். ஆனால் நாவலிலிருந்து எதுவுமே வெளியில் வரலாகாது எனபது என்.எஃப்.டி.யின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. வெளியே பிரபலம் ...
Read more
Published on May 29, 2023 00:49