Mathavaraj's Blog, page 7
February 1, 2023
”இந்த நாவலைப் படிப்பதில் எனக்கொரு சவால் இருந்தது”
“குழந்தைகள் பசித்தால் அழுகின்றன, பசிக்குமே என்று அழுவதில்லை போன்ற தத்துவ ரீதியான, உளவியல் ரீதியான வரிகள் நாவலில் பளிச்சென்று இருக்கின்றன. பணத்தை நோக்கி ஓடும் வாழ்க்கை எதை இழக்கிறது என்று சொல்கிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அதுபோன்ற வரிகளை கண்டெடுக்கலாம். அவைகளை மட்டுமே எடுத்து தனியாக தொகுக்கலாம்.”
க்ளிக் நாவல் குறித்து இரண்டு வாரங்களுக்கு முன் எழுத்தாளர் அ.உமர் பருக் அவர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிய குரல் பதிவினை இங்ஙனம் பகிர்ந்திருக்கிறேன். நாவல் வெளியீட்டு விழாவின் போது நாவலை அவர் படித்திருக்கவில்லை. வாழ்த்தியிருந்தார்.
நன்றி : எழுத்தாளர் அ.உமர் பருக்
January 26, 2023
இளைஞர்களின் மனநிலையை வாசகர் மனதிலும் எழச் செய்கிறது!

“இப்படியா இருப்பா ஒரு பெண்?” இந்த கேள்வியோடுதான் தொடங்குகிறது நாவல்.
மனித இனத்தின் சரிபாதி, சகமனுஷியான பெண் எப்படி இருக்க வேண்டும் ? எல்லா பெண்களும் ஒரே போல் இருக்க முடியுமா? இருக்க வேண்டுமா ? பெண்ணின் படிப்பு, உடை, வேலை, நண்பர்கள், திருமணம், பேசும் வார்த்தைகள் வரை எல்லோராலும் கேள்விக்குள்ளாக்கபடுவது ஏன்? பெண்ணின் செயலில் குறைகளையும், உள்ளீடுகளையும் செய்யத் தோன்றுகிறது ஏன்? பெண்ணுக்கு என விருப்பு, வெறுப்பு, தனித்தன்மை, இயல்பாக இருப்பது தவறா? அவ்வாறான பெண்களை குடும்பமும், சமூகமும் ஏற்க மறுப்பது ஏன்? பெண் புரியாத புதிரா? அல்லது புரிந்து கொள்வதில் ஆண்களுக்கு உணர்வுத்திறன் குறைபாடா? திருமணம் எதற்காக குடும்பத்தால் நடத்தி வைக்கப்படுகிறது? திருமண அவசியம் தானா? தன்விருப்ப திருமணமோ, குடும்ப விருப்ப திருமணமோ இணையும் ஆண், பெண் இருவருக்குள் அன்பு, நட்பு, புரிதல், மதித்தல், சகிப்புத்தன்மை உருவாக்குகிறதா? உருவாகாத திருமணமோ, உறவோ எதற்கு ?
பல கேள்விகளோடு உள்ள இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் மனநிலையை வாசிப்போர் மனதிலும் எழச்செய்வதே நாவலின் சிறப்பு !
தென் தமிழகத்தில் கணவனை இழந்து தாய் வீட்டில் தன் (ஆண், பெண் என) இரு குழந்தைகளுடன் பிழைத்து வரும் பெண். இளமை பருவம் அடைந்த தன் மகனின் சுயசாதி மறுப்பு விருப்ப திருமணம் அதனால் உருவாக்கப்படும் நெருக்கடிகள், கல்லூரி படிப்பு, வேலை என தன்விருப்பத்தை முன்னெடுக்கும் மகளின் போராட்டம், கணவன் இல்லாது வாழ்வின் தேவைகளுக்கு அல்லாது பாதுகாப்பிற்காக சுயமரியாதை சுயசிந்தனையற்று தன் அம்மா, அப்பா, சகோதர்கள், உறவினர்கள் கட்டுபாட்டை மீற இயலாது தவிக்கும் தாயின் தவிப்பையும், இறுதியில் அவளின் வீராவேஷத்தையும் நம்முள்ளும் ஏற்படுத்துகிறது நாவல்.
ஐ.டி துறை குறித்த மாயைகளை, உருட்டுகளை, உடைத்து அதில் பணிபுரிவோர், எந்த பணிப்பாதுகாப்பும் அற்ற அத்துகூலிகள் தான் என்றும்.. அவர்களின் இயந்திர வாழ்வு, நெருக்கடி, உளவியல் பாதிப்பு, குடும்பம், குழந்தை வளர்ப்பு என புதிய கோணத்தில் கூடுதலாக பெண்களின் நிலையிலிருந்து பிரச்சனைகளின் உண்மையை வாசிப்போருக்கு உறைக்க பதிவு செய்துள்ளார்.
கணணித் துறையின் வளர்ச்சி, பாலின தடைகளை கடந்து பணிக்கு செல்லும் இளம்பெண்களின் பொருளாதார சார்பற்ற சுயசிந்தனையான வாழ்வு அதில் ஏற்படும் வளர்ச்சி, வீழ்ச்சி, நுகர்வு கலாச்சாரத்தின் அகோரபசிக்கு இரையாகும் குடும்பங்கள், தன்விருப்பு வெறுப்புகளை உரக்கப் பேசிட, நடைமுறைபடுத்த தடையாக உள்ள சமூக ஒழுக்க நடைமுறை விதிகள் மீறிடவும், மீறிடாதும் போராடும் இளம்பெண்களின் போராட்டத்திற்கு ஆதரவு குரல் எழுப்புகிறது நாவல்.
குடும்ப விருப்ப திருமணத்தை எதிர்நோக்கி ஐ.டியில் பணிபுரியும் ஆண், பெண்ணின் கதையாக நாவல் விரிகிறது. எதையும் சுயமாக யோசித்து, தீர்க்கமாக முடிவு எடுக்கும் பெண்ணுக்கும், அம்மா பிள்ளையாக வளர்ந்த ஆணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவர்களுக்கிடையே ஏற்படும் கருத்து முரண்பாடு, பிரிவு என அவர்களின் உளவியலையும், குடும்பத்தாரின் மனநிலையையும் இயல்பாய் பேசியிருக்கிறது நாவல்.
காதல், காமம், நட்பு, அரவணைப்பு, பொறாமை, கோபம், இயலாமை, குடும்ப வன்முறை, சாதியம்,என நடைமுறை வாழ்வின் சிக்கல்களையும், இளம் தலைமுறையின் மனநிலையையும், எதிர்பார்ப்பையும் காதலோடு கலந்து அழகிய சித்திரமாக தீட்டியிருக்கிறார் எழுத்தாளர்.
அவசரகதியில் சுழலும் நம்மை எதார்த்த மனநிலைக்கு கொண்டுவந்து ஆசுவாசப்படுதும் அற்புத ஔடதம் இந்த நாவல்.
- க்ளிக் நாவல் குறித்து ஹூலர் சுமதியின் பார்வை (வாசகர் பார்வை - 2)
January 23, 2023
எழுத்து மேஜிக்கில் யாரும் தலையைத் தரலாம்!

வில்லா வீடு, எக்கச்சக்க சம்பளம் , கார் , நவநாகரீக வாழ்க்கையின் அனைத்து சொகுசுகளும் கொண்ட வாழ்க்கை வேண்டுமா என்று கேட்டால் யாராவது மறுப்பார்களா? இவையனைத்தும் ஒரு தீப்பெட்டிக்குள் அடைந்து கிடந்தால் கிடைக்கும் என்பது எதார்த்தமான உண்மையாக இருக்கிறது. அந்த "தீப்பெட்டியாபிஸ்" எப்படி ஐ.டி வாழ்வியலில் பொருந்தக்கூடிய சாத்தியம் என்பதை சொல்ல வந்த நாவல் "க்ளிக்".
ஐ.டி பின்புலம் என்றாலும் இந்த நாவல் பேசுவது மனித மனத்தைப் பற்றி. மனித உறவுகளைப் பற்றி. பெண் சந்திக்கும் பிரச்சனைகள், ஆணாதிக்க மனோபாவம், குடும்ப அமைப்பின் வன்முறை பற்றி. அந்த அதிகாரத்தின் மையத்தில் இருக்கும் பெண் மனங்கள் பற்றியும் நாவல் பேசுகிறது. அதற்காக துன்பியல் நாவல் என்று முடிவுக்கு வந்து விடக்கூடாது. மெல்லிய மயிலிறகின் வருடலாக ஒரு ஃபீல் குட் நாவல், மௌஸின் லெஃப்ட் க்ளிக் போல உடனே நாவலில் நுழைந்துவிட விடலாம் .
அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று வாசகனை படிக்கத் தூண்டும் சாத்தியம் துப்பறியும் நாவல்களில் மட்டும் இருக்கிறது. அதே சுவாரசியத்தை - மனித மனங்களை பற்றி, உறவுகளைப் பற்றி சொல்லும் நாவலிலும் சாத்தியம் என்பதை நிரூபித்து இருக்கிறார் நாவலாசிரியர்.
மனித மனம் மேலிருந்து குதி என்று சொல்லும். பிறகு ஏன் குதித்தாய் என்ற கேள்வியும் கேட்கும். இரட்டைத்தன்மை கொண்ட இந்த மனது, உறவுகளில் நிகழ்த்தும் மாறுதல்களை சம்பவங்களோடு கோர்த்து நாவலாக தந்திருக்கிறார். எந்த இடத்திலும் பிரச்சாரமோ இலக்கிய மேதைமையோ இல்லை. எளிமையான நடையில் நாவல் செல்கிறது. தமிழ் நாவலுக்கு எதுக்கு ஆங்கில தலைப்பு என்று யோசிக்கலாம். அதற்கு ஏற்ற ஒரு அருமையான விளக்கத்தை நூலில் ஆசிரியர் வைத்துள்ளார். நாவலில் வரும் கவிதைகளும், திரைப்பாடல்களும் ரசிக்க தக்கவை. ரொமான்ஸ் காட்சிகள் அழகானவை. நாவலாசிரியரின் எழுத்து நடை காட்சியை வாசகருக்குள்ளும் கடத்தும் திறமையான நடை
"பைக்கில் பயணித்தார்கள்" என எழுதாமல் உணர்வுகளோடு எழுதும் மேஜிக்கை கதைமாந்ரும் பைக் பயணமாக மனக்கண்ணில் உணர்வார்கள். பஸ் பயணத்தில் நாம் தினமும் பார்க்கும் ஒரு சாதாரணமான விஷயம் ஒரு கோவிலோ, குளமோ, ஊரோ இருக்கும். ஒரு நாள் அந்த நிறுத்தத்தில் இறங்கி நாமும் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் மனிதருக்கு உண்டு. இதே ஆவல் நமக்கும் ஏற்பட்டு நாவலுக்குள் ஈர்த்துவிடுகிறது.
கணத்துக்கு கணம் மாறும் மனித மனத்தை போல ஒரே காட்சியில் அழுகை அடுத்து சிரிப்பு என நமது மனமும் நாவலோடு இணைந்து மாறும் ரசவாதம் நிகழ்கிறது. க்ளிக், என்று தலைப்பிற்கு ஏற்றபடி ஒன்றிலிருந்து ஒன்றாக நாமும் கதையோடு பயணிக்கிறோம். நாவல் ஒரு சார்பாக எழுதப்படவில்லை. நாவலின் கதாபாத்திரங்கள் மூலமாக எதிரெதிர் நிலைகளைப் பற்றி கேள்விகளும் வருகிறது.
"ஆற்றை கேள் " என்ற சித்தார்த்தனின் நீட்சியாக கடலிடம் கவலைகளைச் சொல்லிவிடும் கதாபாத்திரம் எதார்த்தமானது. யாருமற்ற மனித மனம் கடலிடம் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்கிறது. ஆனால் இப்பொழுது இந்த நாவலே கடலாக இருந்து புரிதல் தந்து நம்மை ஆற்றுப்படுத்துகிறது.
கதையின் எழுத்து மேஜிக்கில் யாரும் தாராளமாக தலையை தரலாம் . பரிசாக நமக்கு கிடைப்பது புரிதல் மகிழ்ச்சி எனும் பூமாலைகள்.
- க்ளிக் நாவல் குறித்து கோவையைச் சேர்ந்த ராஜேஷின் பார்வை இது.
நன்றி : Rajesh (Luciddreamer), Coimbatore
January 20, 2023
Mukundan Unni Associates - மலையாள சினிமா

இந்த மலையாளப் படம் Mukundan Unni Associates குற்ற உணர்வே இல்லாத ஒரு மனிதனின் கதை. அப்படிப்பட்டவனை ஒரு வக்கீலின் கதாபாத்திரமாக்கி இருப்பது மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டதாக இருக்கிறது. அடையாளமும், மரியாதையுமற்று இருக்கும் ஒரு ஜூனியர் வக்கீல் முகுந்தன எப்படி தன் சீனியரிடமிருந்து விலகி, கடும் சிரமங்களுக்கும், அவமானங்களுக்கும் இடையில் படிப்படியாக முன்னேறி, இந்த சமூகத்தின் முக்கிய பிரமுகராக உயர்கிறான் என்பதுதான் கதை.நெருக்கடியான சூழல்கள் ஒவ்வொன்றையும் மனிதாபிமானமும், கொஞ்சம் கூட குற்ற உணர்வும் இல்லாமல் கடந்து செல்கிறான். பார்க்கும்போது தாங்க முடியாததாய் இருக்கிறது. தான் முன்னேறுவதற்கு துரோகம், கொலை என எதையும் மிகச் சாதாரணமாகச் செய்யத் துணிவது சகிக்க முடியாததாய் இருக்கிறது. மனித உணர்வுகள், மனித உயிர்களுக்கு அவன் உலகத்தில் எந்த மதிப்புமில்லை.“முன்னேறியவர்கள் எல்லோரும் தங்கள் திறமையாலும், உழைப்பாலும் அந்த இடத்தை அடைந்தார்கள் என நினைக்கிறாயா?’ என படத்தின் இறுதியில் அவனை நேசிக்கும் பெண் கேட்பது பார்வையாளர்களை நோக்கியதாய் இருக்கிறது. பொருளாதாரமே சகலமும் என மனித மனங்களை தகவமைத்து, எப்படியாவது முன்னேறு என மனித மூளைகளை சலவை செய்து வரும் நவீன முதலாளித்துவ காலத்தில், இந்த படத்தின் செய்தி இளம் தலைமுறைக்கு எப்படி போய்ச் சேரும் என கவலை அப்பிக் கொள்கிறது. படத்தின் முடிவில், திரைக்குள்ளே சென்று, அந்த முகுந்தனை அம்பலப்படுத்தி அவனை வீழ்த்த வேண்டும் என்றொரு வேகம் வந்தது. அப்படியொரு உணர்வை எல்லோருக்கும் இந்தப் படம் கடத்துமானால், இந்த சினிமாவைக் கொண்டாடலாம். அதற்கு சாத்தியமும் வாய்ப்பும் இல்லையென பயம்தான் வருகிறது.
( OTT : Disney + Hotstar. )
January 15, 2023
க்ளிக் நாவல் அறிமுகம்
14.1.2023 அன்று பாலம் வாசகர் சந்திப்பு மூலம் நடந்த க்ளிக் நாவல் அறிமுகக் கூட்டம் நடந்தது. பாலம் வாசகர் அமைப்புக்கு நன்றி.எழுத்தாளரும், தேர்ந்த வாசகருமான மணிமாறன் க்ளிக் நாவல் என்பது சமகாலத்தை பிரதிபலிக்கும் முக்கியமான படைப்பு என்பதை குறிப்பிட்டார். இந்த நாவலில் வரும் மனிதர்களின் சொற்றொடர்கள் வாழ்வனுபவத்தைத் தருவதாகவும், நாவலின் தனித்துவமாக இருப்பதாகவும் பகிர்ந்தார். அவருக்கு எனது நன்றிகள்.நாவல் குறித்து அதை எழுதியவனாக சொல்ல வேண்டியதை மிகச் சுருக்கமாக எனது ஏற்புரையில் பகிர்ந்தேன். திரும்பக் கேட்கும்போது, நேரலையின் பேச்சில் தெளிவு இருந்ததோ இல்லையோ, சொல்ல வங்ததை சரியாக உணர்த்தி விட்டதாகத் தோன்றியது.அதனை மேலே யூடியூபில் பகிர்ந்திருக்கிறேன் க்ளிக் நாவலை நீங்கள் படித்தால், இன்னும் பேசுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
14.1.2023 அன்று பாலம் வாசகர் சந்திப்பு மூலம் நடந்த க்ளிக...
14.1.2023 அன்று பாலம் வாசகர் சந்திப்பு மூலம் நடந்த க்ளிக் நாவல் அறிமுகக் கூட்டம் நடந்தது. பாலம் வாசகர் அமைப்புக்கு நன்றி.எழுத்தாளரும், தேர்ந்த வாசகருமான மணிமாறன் க்ளிக் நாவல் என்பது சமகாலத்தை பிரதிபலிக்கும் முக்கியமான படைப்பு என்பதை குறிப்பிட்டார். இந்த நாவலில் வரும் மனிதர்களின் சொற்றொடர்கள் வாழ்வனுபவத்தைத் தருவதாகவும், நாவலின் தனித்துவமாக இருப்பதாகவும் பகிர்ந்தார். அவருக்கு எனது நன்றிகள்.நாவல் குறித்து அதை எழுதியவனாக சொல்ல வேண்டியதை மிகச் சுருக்கமாக எனது ஏற்புரையில் பகிர்ந்தேன். திரும்பக் கேட்கும்போது, நேரலையின் பேச்சில் தெளிவு இருந்ததோ இல்லையோ, சொல்ல வங்ததை சரியாக உணர்த்தி விட்டதாகத் தோன்றியது.அதனை மேலே யூடியூபில் பகிர்ந்திருக்கிறேன் க்ளிக் நாவலை நீங்கள் படித்தால், இன்னும் பேசுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
14.1.2023 அன்று பாலம் வாசகர் சந்திப்பு மூலம் நடந்த க்ளிக...
14.1.2023 அன்று பாலம் வாசகர் சந்திப்பு மூலம் நடந்த க்ளிக் நாவல் அறிமுகக் கூட்டம் நடந்தது. பாலம் வாசகர் அமைப்புக்கு நன்றி.எழுத்தாளரும், தேர்ந்த வாசகருமான மணிமாறன் க்ளிக் நாவல் என்பது சமகாலத்தை பிரதிபலிக்கும் முக்கியமான படைப்பு என்பதை குறிப்பிட்டார். இந்த நாவலில் வரும் மனிதர்களின் சொற்றொடர்கள் வாழ்வனுபவத்தைத் தருவதாகவும், நாவலின் தனித்துவமாக இருப்பதாகவும் பகிர்ந்தார். அவருக்கு எனது நன்றிகள்.நாவல் குறித்து அதை எழுதியவனாக சொல்ல வேண்டியதை மிகச் சுருக்கமாக எனது ஏற்புரையில் பகிர்ந்தேன். திரும்பக் கேட்கும்போது, நேரலையின் பேச்சில் தெளிவு இருந்ததோ இல்லையோ, சொல்ல வங்ததை சரியாக உணர்த்தி விட்டதாகத் தோன்றியது.அதனை மேலே யூடியூபில் பகிர்ந்திருக்கிறேன் க்ளிக் நாவலை நீங்கள் படித்தால், இன்னும் பேசுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
January 12, 2023
க்ளிக் நாவல் குறித்து எழுத்தாளர்கள்
க்ளிக் நாவல் வெளியீடு சாத்தூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற நிகழ்வு திருவுடையான் தண்டபாணியின் காதல் ததும்பும் பாடல்களோடு துவங்கியது. சாத்தூர் தமுஎகச தலைவர் தோழர் பிரியா கார்த்தி தலைம தாங்க, கிளையின் பொதுச்செயலாளர் தோழர்.விஸ்வநாத் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வை தமுஎகச மாநில துனைப் பொதுச்செயலாளர் தோழர் லஷ்மிகாந்தன் தொகுத்தளித்தார்.
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் வெளியிட்டார். இளம் தலைமுறையினர் அகிலன், காவ்யா, தனலட்சுமி, மீனாட்சி, அய்னி பாரதி, ரத்தன் பாபா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், கலை இலக்கிய பெருமன்ற பொதுச்செயலாளர் தோழர் அறம் , எழுத்தாளர்கள் உதயசங்கர் , மணிமாறன் , உமர் பாருக் , முத்துலட்சுமி, அண்டோ கால்பர்ட் , சுமதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இன்றைய இளைஞர்களின் மனநிலையை, ஐ.டி துறையின் சமூக தாக்கங்களை, சென்ற தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்குமான கால மாற்றங்களை, ஆண் பெண் உறவுகளை ‘க்ளிக்’ பேசுகிறது என்றனர். மிக சுவாரசியமான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் அடர்த்தியான விஷயங்களை அங்கங்கு மனித மனங்களுக்கு கடத்திச் செல்கிறது என்றும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தனர்.
வாழ்வில் கிடைத்த அனுபவங்களும், அதுகுறித்த சிந்தனைகளுமே படைப்புக்களுக்கு ஆதாரமாய் இருக்கின்றன என்றும், புறச்சூழல்களால் படைப்பாளி இயங்குவதாகவும், தனது ஏற்புரையில் எழுத்தாளர் மாதவராஜ் தெரிவித்தார்.
கிளையின் துணைத் தலைவர் காதம்பரி வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
க்ளிக் நாவல் குறித்து அறிமுகமாகவும், ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் நூல் வெளியீடு அமைந்திருந்தது.
வெளியீடு நிகழ்வு குறித்த வீடியோ மேலே பகிரப்பட்டுள்ளது.
க்ளிக் நாவல்பாரதி புத்தகாலயம் வெளியீடுவிலை ரூ. 250/-
ஆன்லைனில் வாங்க: Thamizh Boos
அல்லது கீழ்கண்ட QR code ஐ ஸ்கேன் செய்து புத்தகத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

January 5, 2023
க்ளிக் நாவல் Promo!
சினிமாவுக்குத்தான் ப்ரோமோ இருக்க வேண்டுமா?க்ளிக் நாவலுக்கும் உண்டு.
இங்கே தீராத பக்கங்களில் தொடராய் வந்தபோது படித்தவர்கள் தந்த உற்சாகமே, இன்று நாவலாய் வெளிவருவதற்கான உந்துசக்தியாய் இருந்தது.
இன்று ஆரம்பிக்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் - பாரதி புத்தகாலயத்தின் அரங்கு எண் : F12ல் க்ளிக் நாவல் கிடைக்கும்.
கீழ்கண்ட ஆன்லைனில் பதிவு செய்தால் க்ளிக் நாவல் உங்கள் முகவரிக்கே வந்து சேரும். Tamizh Books
நாவலை வாங்கவும் -வாங்கிய நாவலை வாசிக்கவும் வாசித்த நாவல் குறித்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் -வேண்டுகிறேன்.
December 27, 2022
க்ளிக் - நாவல் வெளியீடு

ஆம்னி பஸ்ஸூக்காக ஊரில் காத்திருக்கும்போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். இருபத்தைந்து வயதுக்குள் இருக்கும். வழியனுப்ப வந்த அம்மாவும் அப்பாவும் அவளிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவளும் கையைக் கட்டிக்கொண்டு சரியென்பதாய் தலையைத் தலையை அசைத்துக் கொண்டிருந்தாள். சுற்றிலும் பொங்கல் முடிந்து சென்னைக்குச் செல்லும் பெரும் கூட்டம் நின்றிருந்தது.
நான் ஏறிய பஸ்ஸில்தான் அவளுக்கும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முதுகில் பையை மாட்டிக்கொண்டு எனக்கு முன்னால் சென்று அப்பர் பெர்த்தில் ஏறினாள். அவளுக்கு நேர் கீழே என் பெர்த். ஜன்னலில் அவளது அப்பாவும், அம்மாவும் வந்து நின்று தங்கள் மகளிடம் பேசினார்கள். தொலைதூரத்தில், சென்னை போன்ற நகரத்தில் தங்கள் மகள் எப்படி சமாளிப்பாளோ என்ற கவலையும் அக்கறையும் அவர்கள் முகத்திலும் வார்த்தைகளிலும் இருந்தன.
காலை ஏழு மணிக்கு பெருங்குளத்தூரை நெருங்கும்போது பஸ் ஊர்ந்து ஊர்ந்து சென்றது. முன்னால் எட்டிப் பார்த்தபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது. பத்து நிமிடங்கள் போலிருக்கும். மேலிருந்து அந்த பெண் கவனமாக கீழே இறங்கினாள். பையை முதுகில் மாட்டிக்கொண்டு முன்னால் சென்றாள். நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். டிரைவரிடம் எதோ பேசினாள். கதவு திறக்கவும் இறங்கிக் கொண்டாள்.
இந்த போக்குவரத்து நெரிசலுக்குள்ளிருந்து எப்படி வெளியேறப் போகிறாள், அவள் எங்கே போக வேண்டும் என ஜன்னல் கண்ணாடியில் பார்த்தேன். இறங்கியவள் வாகனங்களுக்கு இடையே நின்று அங்குமிங்கும் பார்த்தாள். பைக்கில் ஒரு இளைஞன் கிடைத்த இடைவெளியில் முன்னேறி வந்து கொண்டிருந்தான். அவனை நெருங்கி நிறுத்துமாறு கைகாட்டினாள். நிறுத்தினான் அதிலிருந்த இளைஞனிடம் பேசினாள். ஹெல்மட்டைக் கழற்றி அவன் “ஏறிக்க” என்பது போல் தலையசைத்து ஹெல்மட் மாட்டிக் கொண்டான். பைக்கில் ஏறிக்கொண்டாள். பஸ்களும், கார்களும் போக முடியாமல் நின்று கொண்டிருக்க, அவள் அவனோடு பைக்கில் சட்டென அந்த நெருக்கடியிலிருந்து மறைந்து விட்டாள். நேற்றிரவு பார்த்த அவளின் பெற்றோரின் முகங்கள் நினைவுக்கு வந்தன. எல்லாம் மேஜிக் போல் இருந்தது.
இந்தக் காட்சியை அவ்வப்போது நினைத்து அதிலிருந்து விரிந்த சிந்தனைகளையும், மனிதர்களையும்தான் ‘க்ளிக்’ நாவலில் கதையாய் எழுத ஆரம்பித்தேன். ’தீராத பக்கங்களில்’ தொடராய் வந்தது. நாவலாய் வெளியிடவேண்டும் என நிறுத்தி விட்டேன்.
முழுக்கதையையும் வெளியிடாமல் முடித்துக் கொண்டதால், கதை என்னவாயிற்று, கல்யாணி என்னவானாள், நரேனுக்கும் பூங்குழலிக்கும் திருமணம் நடந்ததா இல்லையா என்னும் பல கேள்விகளோடு வாசகர்கள் இருக்க வேண்டியதாயிற்று.
இந்த இடைப்பட்ட காலத்தில் ’க்ளிக்’கையும், கதையையும் கூட வாசகர்கள் மறந்துவிட்டிருக்கக் கூடும்.
அதுவும் நல்லதற்கே. நிறைய திருத்தங்களோடும், மாற்றங்களோடும், ‘க்ளிக்’ நாவல் இப்போது இருபத்தைந்து அத்தியாயங்களோடு வெளிவந்திருக்கிறது.
2023 ஜனவரி 6ம் நாள் துவங்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் ‘க்ளிக்’ நாவல் கிடைக்கும். அதற்கும் முன்னரே பெற விரும்பும் வாசகர்கள் கீழ்கண்ட லிங்க்கில் பணம் செலுத்தினால் புத்தகம் தங்கள் முகவரிக்கே வந்து சேரும்.
க்ளிக் நாவலைப் பெற
‘க்ளிக்’ எனது முதல் நாவல்.உற்சாகப்படுத்திய, ஆதரவளித்த அத்தனை பேருக்கும் நன்றிகள்.
‘க்ளிக்’ வெளியீடு:பக்கங்கள் : 250/- விலை ரூ. 250/- பாரதி புத்தகாலயம்