14.1.2023 அன்று பாலம் வாசகர் சந்திப்பு மூலம் நடந்த க்ளிக் நாவல் அறிமுகக் கூட்டம் நடந்தது. பாலம் வாசகர் அமைப்புக்கு நன்றி.எழுத்தாளரும், தேர்ந்த வாசகருமான மணிமாறன் க்ளிக் நாவல் என்பது சமகாலத்தை பிரதிபலிக்கும் முக்கியமான படைப்பு என்பதை குறிப்பிட்டார். இந்த நாவலில் வரும் மனிதர்களின் சொற்றொடர்கள் வாழ்வனுபவத்தைத் தருவதாகவும், நாவலின் தனித்துவமாக இருப்பதாகவும் பகிர்ந்தார். அவருக்கு எனது நன்றிகள்.நாவல் குறித்து அதை எழுதியவனாக சொல்ல வேண்டியதை மிகச் சுருக்கமாக எனது ஏற்புரையில் பகிர்ந்தேன்.
திரும்பக் கேட்கும்போது, நேரலையின் பேச்சில் தெளிவு இருந்ததோ இல்லையோ, சொல்ல வங்ததை சரியாக உணர்த்தி விட்டதாகத் தோன்றியது.அதனை மேலே யூடியூபில் பகிர்ந்திருக்கிறேன் க்ளிக் நாவலை நீங்கள் படித்தால், இன்னும் பேசுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
Published on January 15, 2023 03:44