Mathavaraj's Blog, page 2
March 2, 2025
சார்ஜ் ஷீட் 42/2021- 8ம் அத்தியாயம்

பணிஓய்வை நிறுத்தம் செய்த உத்தரவுக்கு தடை என்றால் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும்தடை என்றே அர்த்தம். மிஸ்டர் ஜெயக்குமார் 7.6.2021 தேதியிட்டு அனுப்பிய விசாரணக்கானஉத்தரவுக்கும் ( Enquiry Order ) தடையாகி விடும். மேற்கொண்டு விசாரணை நடத்தக் கூடாது.நாமக்கல் மேலாளர் மிஸ்டர் சந்திரனிடமிருந்து இனி கடிதம் வராது. அடுத்ததாக எனது ஓய்வுகாலச் சலுகைகள் வழங்கப்படாது என்று செஷேஷன் ஆர்டரில் சொல்லப்பட்டதற்கும் தடை விதிக்கப்பட்டதாகவேஅர்த்தம். பென்ஷன், கிராஜுவிட்டி உட்பட அனைத்துசலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.
”இனிஎன் மீது விசாரணை நடத்தக் கூடாது என்றும், ”எனக்குரிய ஓய்வுகாலச் சலுகைகளை வழங்க வேண்டும்”எனவும் ஹைகோர்ட் ஆர்டரை இணைத்து நிர்வாகத்திற்கு 30.6.2021 அன்று கடிதம் எழுதினேன்.
தொடர்ந்துசங்கத்தின் நடவடிக்கைகள் இருந்து கொண்டிருந்தன. கிராம வங்கியின் பங்குகளில் மத்தியஅரசு 50 சதவீதத்தையும், ஸ்பான்ஸர் வங்கிகள் 35 சதவீதத்தையும், மாநில அரசுகள் 15 சதவீதத்தையும்வைத்திருந்தன. ஸ்பான்ஸர் வங்கிகள், மாநில அரசுகளின் பங்குகளை மத்திய அரசே ஏற்றுக்கொண்டு, அனைத்து கிராமவங்கிகளையும் ஒன்றிணைத்து தேசீய கிராமப்புற வங்கி அமைக்க வேண்டும் என்பதே அகில இந்தியசங்கம் ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏவின் கோரிக்கையாய் இருந்தது. மத்திய அரசோ தன்னிடமிருக்கும்50 சதவீத பங்குகளையும் ஸ்பான்ஸர் வங்கிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள்வெளியானதைத் தொடர்ந்து ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.ஜூலை 9ம் தேதி சேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கி தலைமையலுவலகத்தின் முன்பு தர்ணா நடத்ததிட்டமிடப்பட்டது.
அன்றுகாலை 6 மணிக்கு சாத்தூரிலிருந்து நானும் சங்கரும்காரில் புறப்பட்டோம். ஓய்வுபெற்று 70 நாட்கள் கழித்து மீண்டும் சேலத்திற்கு பயணம்.வலதுபுறத்தில் மரங்கள், கட்டிடங்களுக்கு மேல் சூரியன் வந்து கொண்டிருந்தது. சில பறவைகள்ஒன்று போல் வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அத்தனை நாளும் வீட்டில் அடைந்து கிடந்தவனுக்கு விரிந்து பரந்த வெளி பேரனுபவமாய் இருந்தது.இளகிப் போனது மனமும் உடலும். வழியில் தோழர்கள் இம்ரான், அருண்பாண்டியன், ராஜராஜன்,ஆறுமுகப்பெருமாள், ஸ்ரீனிவாஸ் ஆகியோர் சேர்ந்து கொண்டனர். மாறி மாறிப் பேசி கலகலப்பாயிருந்தது.போகும் வழியில் கோவிட் தொற்றையொட்டி அங்கங்கு காவல்துறை தடுப்புகள் இருந்தன. கெடுபிடிகள்அவ்வளவாக இல்லை.
சங்கங்களின்மீது நிர்வாகத்திற்கு இருந்த வன்மத்தையும் வெறித்தனத்தையும் பற்றி பேச்சு வந்தது. சங்கங்களுக்குஉறுப்பினர்கள் சந்தா செலுத்தும் செக்-ஆப் முறையைரத்து செய்ததையும், ஊழியர்களிடையே பயத்தை விதைத்து இருப்பதையும் பற்றி அவர்களின் கவலையும்கோபமும் வெளிப்பட்டது.
எப்போதெல்லாம்சங்கங்களின் மீது நிர்வாகத்திற்கு பயம் வருகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற அராஜகங்களில்ஈடுபடும் என்பதை விளக்கினேன். 2009ம் ஆண்டில் பாண்டியன் கிராம வங்கியில் மிஸ்டர் சுந்தர்ராஜ்சேர்மனாய் இருக்கும்போதும் இதுபோல் செக்-ஆப் ரத்து செய்யப்பட்டதையும், நீதிமன்றம் சென்றுஅதற்கு சங்கம் தடையுத்தரவு வாங்கியதையும் குறிப்பிட்டேன். ’நிர்வாகம் தாக்குதல் நடத்தும்போது,நாம் அதைத் தாங்கிக்கொண்டு நம் போராட்டக் குணத்தை இழந்துவிடாமல் மீண்டும் மீண்டும்நிர்வாகத்தை அம்பலப்படுத்துவதையும், எதிர்த்து நிற்பதையும் செய்து கொண்டே இருக்க வேண்டும்.நிர்வாகம் ஒரு கொடிய மிருகம். அடங்கிப் போகாத நம் சிந்தனைகளாலும் தளராத நம் நடவடிக்கைகளாலும்அதனை நம் வழிக்கு பழக்க வேண்டும். அநீதியை எதிர்க்கும் நம் போக்கை இயல்பாக்கிக் கொள்ளவேண்டும்’ என்றேன்.
ஏ.ஐ.பி.ஓ.சி( AIBOC ) சங்கத்துக்கு மிஸ்டர் செல்வராஜும்,மிஸ்டர் ஜெயக்குமாரும் ஆதரவளித்துக் கொண்டிருப்பதையும் தோழர்கள் பேச்சில் புரிந்துகொண்டேன். போர்க்குணம் அற்ற, எப்படியாவது காரியம் சாதித்தால் போதும் என கொள்கையற்றதலைவர்களை நிர்வாகத்துக்கு எப்போதுமே பிடிக்கும். அவர்கள் மீது மோசமான குற்றச்சாட்டுகள்இருந்தாலும் நிர்வாகம் கண்டு கொள்ளாது. நம்மைப் போன்ற போர்க்குணமிக்க சங்கங்களின் வளர்ச்சியைத்தடுக்க அந்த சங்கத்தை பயன்படுத்தும். அவர்களும் அதில் குளிர் காய்வார்கள். ஒரு தொழிற்சங்கத்தின்இயல்பு கொஞ்சம் கூட ஏ.ஐ.ஓ.பி.சிக்கு கிடையாது என்றேன். சக தொழிற்சங்கத்துடன் கொள்கையில்,நடைமுறைகளில் அதற்கு கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகசக தொழிற்சங்கத் தலைவர்கள் மீது நிர்வாகம் தாக்குதல் நடத்தும்போது குறைந்த பட்சம் கண்டிக்கவாவதுசெய்ய வேண்டும். அதுதான் வர்க்க குணம். இங்கே நம்மீது நிர்வாகம் தொடுக்கும் தாக்குதல்களைஅந்த சங்கம் கொண்டாடுவதைப் போல அவமானகரமானது இல்லை என்றேன்.
பேச்சின்ஊடேயும், பேசாமல் இருந்த சமயங்களிலும் போகும் வழியில் பார்வை சென்று கொண்டிருந்தது.ஒன்றரை வருடங்களாய் இதே வழியில் எத்தனையோ முறை பயணம் செய்திருந்தேன். இதே போல் காலைகளில்இருட்டு விலகி, பொழுது ஆரம்பிக்கும் நேரங்களில் வண்டியோட்டி இருக்கிறேன். பழக்கமான,கவனத்தில் பதிந்த இடங்களைப் பார்க்கும்போது மனம் புன்னகை பூத்தது. நாமக்கல்லைத் தாண்டியதும்நினைவுகள் அடர்ந்தன. காலை பத்து மணிக்கு எதிரே உயரத்தில் பாலம் தெரியும் ஜனநடமாட்டம்அடர்ந்த சீலநாயக்கன்பட்டியை நெருங்கினோம். இடதுபக்கம் உயர்ந்திருக்கும் அந்த மலையைப்பார்த்தேன். சேலத்தின் வாழ்ந்த நாட்களை அதுதான் அடைகாத்துக் கொண்டிருந்தது. நாங்கள்தங்கியிருந்த சங்க அலுவலகத்திலிருந்தும் அந்த மலையைப் பார்க்க முடியும். கூடவே இருந்தமலை.

நேரேஅஸ்தம்பட்டியில் இருக்கும் தலைமையலுவலகம் சென்றோம். அந்த வளாகத்தின் முன்பகுதியில்அடர்ந்து இருந்த மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு மொட்டையாய் நின்றன. எதையோ இழந்ததுபோலிருந்தது. வெயில் பளீரென்று அடித்துக் கிடந்தது.தோழர்கள் அறிவுடைநம்பி, அஸ்வத், பரிதிராஜா, அண்டோ, தங்கமாரியப்பன், லஷ்மி நாராயணன்மற்றும் பெஃபி தலைவர்களில் ஒருவரான எஸ்.ஏ.ராஜேந்திரன் போன்ற தோழர்கள் ஏற்கனவே வந்துஇருந்தார்கள். உற்சாகத்துடன் வரவேற்று நலம் விசாரித்தார்கள். ”நீ எதுக்கு வந்தே மாது? இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமே” என காரைக்குடியில்இருந்து வந்திருந்த தோழர் சோலைமாணிக்கம் அக்கறையினால் கடிந்து கொண்டார்.
முற்றிலும்புதிய தலைமையும், புதிய தோழர்களும் சங்கமாய் திரண்டிருக்கும் அந்த காலக்கட்டத்தில், முன்வந்திருக்கும் கோரிக்கை குறித்தவரலாற்றையும், அதன் முக்கியத்துவத்தையும் தர்ணாவில் சொல்ல வேண்டும் என்றுதான் கலந்துகொண்டேன். அதுவரை ஸ்பான்ஸர் வங்கியின் எதேச்சதிகாரத்தை, அத்துமீறல்களை, அடாவடித்தனத்தையெல்லாம்சங்கம் பேசியிருந்தாலும் முதன் முதலாக ’கிராமவங்கிகளை ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து துண்டிக்க வேண்டும்’ என ஒரு கோரிக்கை அப்போதுதான்எழுந்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் நூறு தோழர்கள் போல கலந்து கொண்டனர்.
1975ல்ஆரம்பிக்கப்பட்ட கிராம வங்கிகள் குறித்து ஒரு தெளிவான திட்டமும் வரையறையும் எப்போதும்மத்திய அரசுக்கு இருந்ததில்லை. 1981ல் அமைக்கப்பட்ட சிவராமன் கமிட்டியின் அறிக்கை,‘வணிக வங்கியின் கிராமப்புற கிளைகளை கிராம வங்கிகளோடு இணைக்க வேண்டும்’ என்றது. வணிகவங்கி சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததனால் அது நடைமுறைப்படுத்த முடியவில்லை. 1985ல்அமைக்கப்பட்ட ஒரு கமிட்டி, ‘ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கிராம வங்கி’ என பரிந்துரைசெய்தது. அதனை அமல்படுத்தும் விதமாக மே.வங்கத்தின் கௌர் கிராம வங்கியை இரண்டாக பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கௌர் கிராம வங்கியில்தான்ஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ பொதுச்செயலாளர் தோழர் திலீப்குமார் முகர்ஜி ஏரியா மேலாளராக இருந்தார்.சங்கத்தின் கடுமையான எதிர்ப்பினால் அந்த அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. ஒவ்வொரு காலத்திலும்,ஒவ்வொரு கமிட்டி அறிக்கைகள் வெளிவந்தன. 2005ல் ஒரு மாநிலத்தில் இருக்கும் ஒரே ஸ்பான்ஸர்வங்கியைக் கொண்டிருந்த கிராம வங்கிகள் இணைக்கப்படும் என அரசு அறிவித்தது. அப்படித்தான்தமிழ்நாட்டில் வள்ளலார் கிராம வங்கியும் , அதியமான் கிராம வங்கியும் பல்லவன் கிராமவங்கியாக ஒன்றிணைக்கப்பட்டன. 2014க்குப் பிறகுஒரு மாநிலத்தில் உள்ள கிராம வங்கிகள் ஒன்றிணைக்கப்படும் என அறிவிப்பு வந்தது. அதன்படிதான்2019ல் பாண்டியன் கிராம வங்கியும் பல்லவன் கிராம வங்கியும் தமிழ்நாடு கிராம வங்கியாகஒன்றிணைக்கப்பட்டன. இனி அனைத்து மாநில கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து ‘தேசீய கிராமப்புறவங்கி’ அமைக்க வேண்டும் எனஏ.ஐ.ஆர்.ஆர்.பி.இ.ஏ அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது. மத்தியஅரசின் பங்குகளையும் ஸ்பான்ஸர் வங்கிகளுக்கும் கொடுப்பது என்பது கிராமப்புற மக்களுக்கும்,கிராம வங்கி ஊழியர்களுக்கும் முற்றிலும் எதிர்மறையான நடவடிக்கையாக இருக்கும் என்பதைஎல்லாம் விவரித்தேன்.

இறுதியாக35 சதவீத பங்குகள் இருக்கும்போதே ஸ்பான்ஸர் வங்கியிலிருந்து சேர்மனாய் வந்திருக்கும்செல்வராஜ் போன்றவர்கள் அதிகாரத்திமிர் கொண்டு நடத்தும் அராஜகங்களை பார்க்கிறோம். பங்குகள்85 சதவீதமானால் என்னவாகும் என்பதை உணர்த்தி உரையை முடித்தேன்.
”ரொம்பஅவசியமான, தெளிவான வரலாற்றைச் சொல்லியிருக்கீங்க அண்ணே” என்று அண்டோ கால்பர்ட் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னான்.
தர்ணாமுடிந்ததும் தோழர்கள் அறிவுடைநம்பி, அஸ்வத், அண்டோ கால்பர்ட், பரிதிராஜா ஆகியோர் தலைமையலுவலகத்திற்குள்சென்றனர். சேர்மன் செல்வராஜிடம் மெமொரெண்டத்தை கொடுத்திருக்கின்றனர். அவரும் அமைதியாகவாங்கிக் கொண்டு இரண்டு வார்த்தை பேசி அனுப்பி இருக்கிறார். இதுபோல் 1.3.2021 அன்றும்மிஸ்டர் செல்வராஜ் நடந்துகொண்டிருந்தால் எந்த பிரச்சினையும் வந்திருக்காது. உள்ளே சென்றஓய்வு பெற்ற தோழர்களை மரியாதையில்லாமல் நடத்தியதில்தானே எல்லாப் பிரச்சினையும் என்று பேசிக்கொண்டோம்.
மதியஉணவு முடித்துவிட்டு சங்க அலுவலகம் சென்று பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது சங்கத்தின்பொறுப்பிலிருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன். 2021 ஜனவரி 7ம் தேதி சேலத்தில்நடந்த மாநாட்டில் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி உதவித்தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். ஓய்வு பெறும் வரை சங்கப் பொறுப்பில் இருக்கலாம்என்பதை ஒரு விதியாகக் கொண்டிருந்தோம். அதையே நடைமுறையாகத் தொடர்ந்து கடைப்பிடித்தும்வந்தோம். ஓய்வு பெற்ற பிறகும் ஒருவர் சங்கப் பொறுப்பில் இருப்பது அடுத்த தலைமையை வளர்க்காது. பணி ஓய்வு பெற்று இரண்டுமாதங்களாகி விட்டன. அதற்கு மேலும் பொறுப்பில் இருப்பது சரியல்ல என்றேன்.
சார்ஜ்ஷீட் விவகாரம் முடிந்து, ஓய்வுகாலச் சலுகைகளை பெறுகிற வரை சங்கப் பொறுப்பில் இருக்கவேண்டுமென தோழர்கள் வலியுறுத்தினர்.
“அப்படியானால்நிர்வாகத்தின் ‘பணி ஓய்வு நிறுத்தம்’ ( Cessation ) ஆர்டரை நாம் ஒத்துக் கொள்கிறோமா?”என்று சிரித்தேன். தோழர்களும் சிரித்தனர்.
சிரித்துக்கடந்தாலும், சீக்கிரம் சங்கப் பொறுப்பில் இருந்து விடுபட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன்.தேவைப்பட்டால் ஆலோசனைகள் சொல்வது வேறு, கூடவே இருந்து ஒவ்வொன்றிலும் தலையிடுவது வேறு.
ஜூலை14ம் தேதி சென்னை சென்று இரண்டு நாட்கள் தங்கி பெஃபி தலைவர்கள் தோழர்கள் சி.பி.கிருஷ்ணன்,ராஜகோபால் தோழர்களோடு முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து நம் கோரிக்கைகளை கொடுத்துபேசுவது என்று திட்டமிடப்பட்டது. தோழர்கள் என்னையும் அழைத்தனர். ஒப்புக்கொண்டேன்.
சேலத்திலிருந்துசாத்தூருக்குத் திரும்பும்போது சீலநாயக்கன்பட்டியில் அந்த மலையைப் பார்த்தேன். ‘மீண்டும்வருவேன்..” என சொல்லிக் கொண்டேன். நிர்வாகத்திற்கு நான் எழுதிய கடிதமும் நிர்வாகத்தின்மௌனமும் மனதிற்குள் ஒடியது. இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த சென்னை ஹைகோர்ட் வழக்கைஎப்போது விசாரிக்கும் என்று தெரியவில்லை. வருடக்கணக்கில் இழுத்தடித்தால்… என யோசனையாய்இருந்தது. சென்னைக்குச் செல்லும்போது அட்வகேட் கீதா மேடம், தோழர்கள் சி.பி.கே, ராஜகோபால் ஆகியோரிடம் ஆலோசிக்க வேண்டும்.
(தொடரும்)
1ம் அத்தியாயம் 2ம் அத்தியாயம் 3ம் அத்தியாயம்
February 25, 2025
டிராகன் - தமிழ் சினிமா

நிஜம்போலவும், அடுத்த நிமிடத்தில் காத்திருக்கும் ஆச்சரியங்களைக் கொண்டது வாழ்க்கை எனவும்சிலர் ’டிராகன்’ சினிமாவைப் பாராட்டி எழுதுவதை பார்க்கும்போது எரிச்சல்தான் வருகிறது.
லவ்டுடே போல டிராகனும் 2கே கிட்ஸுக்கான படம் என்று வகைப்படுத்துவதும், டிரெண்ட் செய்வதும்ஒரு விளம்பர யுத்தியாக மட்டும் தெரியவில்லை.ஆபத்தின் அறிகுறியாகவும் படுகிறது.
ஒருவேளைதற்கொலை செய்ய முனையும் அந்த மாணவனைப் பற்றி ராகவன் அறிய நேராமல் போயிருந்தால் என்னவாகிஇருக்கும்.? அப்படி என்ன தவறு செய்துவிட்டதாய் ராகவனின் கல்லூரிக் காதலிக்கு குற்றஉணர்ச்சி வருகிறது? என நியாயமான கேள்விகளாய் கேட்க ஆரம்பித்தால் – பிரின்ஸ்பாலாய் வரும்மிஸ்கின் சொல்வது போல அஸ்திவாரம் இல்லாமல் அடுக்கப்பட்ட கதை என்பது புலனாகும்.
படிப்புதான்வாழ்க்கை என ப்ளஸ் டூ வரைக்கும் இருந்தவன் ஒரு பெண்ணால் பாதை மாறுகிறான். எல்லா பாடங்களிலும் அரியர்ஸாய் குவித்து கெத்தாய் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடித்து காலேஜைவிட்டு வெளியேறுகிறான். வேலைக்குப் போவதாய் வீட்டை ஏமாற்றி சிகரெட், மது, காதல் எனமிதந்து கொண்டு இருந்தவனை தரையில் இறக்கிவிட்டு காதலி பிரிகிறாள். காதலி முன்பு வாழ்ந்துகாட்ட மோசடி செய்து டிகிரி வாங்கி ஐ.டி கம்பெனியில் மாதம் மூன்று லட்சம் சம்பாதிக்கிறான்.பெரும் தொழிலதிபரின் மகளுக்கு நிச்சயம் ஆகிறது. போலி டிகிரியை தெரிந்து கொண்ட காலேஜ்பிரின்ஸ்பால் அவனை மீண்டும் காலேஜில் சேர்ந்து முந்தைய அரியர்ஸை கிளியர் செய்யுமாறு,செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்ய வழி சொல்கிறார். காதலியே அவனுக்கு லெக்சரராக வந்துகாதலனை ஏமாற்றிய தனது முந்தைய பாவத்தை கிளியர் செய்ய அவனுக்கு உதவுகிறாள். அப்படியும்அவனால் முடியாமல் மீண்டும் மோசடி செய்கிறான். பரீட்சை பேப்பர் மாற்றப்பட்டு அவனால்ஒருவன் தற்கொலைக்குத் துணிகிறான். குற்றவுணர்ச்சி வாட்ட எல்லோர் முன்பும் தான் செய்தகுற்றங்களை ஒப்புக் கொள்கிறான். ’முன்னேற ஆசைப்பட்டது உண்மை. இன்னொருன் வாழ்க்கையைகெடுத்து விட்டு அல்ல” என்ற பஞ்ச் வசனம் பார்வையாளர்களை நெகிழ வைக்கிறது.
இரண்டுமணி நேரம் 20 நிமிடங்கள் குப்பையாய் கொட்டிவிட்டு, கடைசி 15 நிமிடங்கள் அந்த குப்பைகளைஒதுக்கி அல்லது ஒளித்து வைத்து ’சுத்தமே சுகம்’ என நீதி சொல்லி முடித்திருக்கிறார்கள்.
அறமற்ற,தார்மீக நெறியற்ற, மனிதாபிமானமற்ற, தன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீது அன்பும் மரியாதையுமற்றஅருவருப்பான அலட்சியமான ஒருவனது நடவடிக்கைகளை எந்நேரமும் காட்டி இயல்பாக்கி விட்டு, திடீரென உதயமாகும்ஞானத்தை அற்புதம் போலக் காட்டுகிறார்கள். குப்பையை கொட்டியதற்கும் மக்கள் குதூகலிக்கிறார்கள்.சுத்தம் செய்வதையும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.
சின்னபட்ஜெட்டில் உருவான ஒரு குட்டி டிராகன்.
February 22, 2025
சித்தி பெற்ற ஞானச் சுடர்!

அம்மாஎன்றால் அன்பு என்று ஒரு வரியில் அடக்கி விட முடியாத விஸ்வரூபம் திருமதி.ஞானாம்பிகை.
அற்பவிஷயங்களில் ஈடுபாடு கொள்ளும், பிரச்சினைகளைக் கண்டு மிரளும் சாதாரண மனுஷியல்ல. நிதானம்,நிதானம், அதன் பேர்தான் ஞானமோ என நினைக்கத் தோன்றுகிறது.
என்சிறு வயதில் மற்ற பெண்களின் உரையாடல்களை கேட்கும்போது மிக இயல்பாகவும், எளிமையாகவும்குறிப்பாக சுவாரசியம் மிக்கதாகவும் இருப்பதாக எண்ணுவேன். அப்போதெல்லாம் நம் அம்மா ஏன்இது போன்ற உரையாடலை கையாளாமல் உளவியல் பூர்வமாகவும், காரண காரியங்களை ஆராய்ந்தும் பேசுகிறார்என ஒப்பிட்டுப் பார்ப்பதுண்டு. ஏன் அதில் ஒரு ஏக்கம் கூட உண்டு என்பேன். எதற்கெடுத்தாலும்ஆமாம் சாமி போடாமல், எவராக இருந்தாலும் தன் மனதில் பட்டதை சொல்வதும், எதிர்வாதம் செய்வதும்அவரது இயல்பு. அம்மாவின் மேல் அப்பாவுக்கு ஈர்ப்பு ஏற்பட அம்மாவின் குணமே காரணமாக இருந்திருக்கும்என பின்னாளில் உணர்ந்தேன்.
நான்முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அம்மா பணியாற்றிய புரசைவாக்கம் - தற்போதையஅழகப்பா - ஸ்கூலில் படித்தேன். வீட்டுப்பாடம் எழுத வைக்க அம்மா என்னுடன் ஒரே போராட்டம்தான்.வாய் மட்டும் நல்லா பேசுவேன். அம்மாவுக்கு திருமணம் முடிந்து பத்து ஆண்டுகள் கழித்துதான்நான் பிறந்தேன். வடிவேலு டயலாக் மாதிரி ”அம்மா நான் குழந்தையாக உருவாவதற்கு எவ்வளவுசிரமப்பட்டேன் தெரியுமா, அதனால் எனக்கு எதுவும் மெதுவாகத்தான் வரும்” என்றேன். எதையும்நகைச்சுவையாக எடுக்கத் தெரியாத அம்மா அதை மிகவும் ரசித்துவிட்டார்கள் போலும். நான்மறந்து போனாலும் சொல்லிக் காட்டிக் கொண்டே இருந்தார்கள்.
அம்மாஒரு செகண்ட் கிரேட் டீச்சர் என்பதால் நான் பி.எட் முடிக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டார்கள்பி எட் முடிக்கவில்லை என்றால் நானே உனது திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றுஒரே போடாய் போட்டார்கள். வீட்டு அருகில் ஸ்டெல்லா மேரிஸில் சீட் கிடைத்தது. படித்துமுடித்த பின்னரே திருமணம் நடந்தது.
சிலஆண்டுகள் கழித்து அம்மா கண்டிப்பாக கரஸ்பாண்டன்ஸில் எம்.ஏ படிக்க வேண்டும் என்று அன்புகட்டளை இட்டார்கள் ஒரு வழியாய் எம்.ஏ முதலாம்ஆண்டு முடித்து விட்டேன். எனக்கு குழந்தை உண்டானதால் இரண்டாம் வருட தேர்வு எழுதாமல்விட்டுவிட்டேன். ”தற்காலத்தில் பெண்கள் பரிட்சை ஹாலின் வெளியே குழந்தையை படுக்க வைத்துவிட்டு தேர்வு எழுத செல்கிறார்கள் நீ இதற்கு போய் எழுதாமல் விடுவாயா” என்று அம்மா கடிந்துகொண்டார்கள். எனக்கும் ரோசம் வந்து எம்.ஏ முடித்தேன். அதன் பயனை விரைவில் உணர்ந்தேன். சாத்தூர் எத்தல் ஹார்வி பெண்கள்மேல்நிலைப் பள்ளியில் 1997லிருந்து 1999வரை இரண்டு வருடங்கள் முதுகலை பட்டதாரி லீவு போஸ்ட்டுக்குவேலை கிடைத்தது.
அதேபள்ளியில் 2009ல் காலி இடம் ஏற்பட்டது. அந்த இடத்திற்கு வேலை கிடைக்கஅதுவே உதவியாய் இருந்தது. இவ்வாறு வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் என்னை வழிநடத்தியதுஅம்மா!
இன்றுநான் யாருக்காவது அறிவுரை வழங்கும்போது என் அம்மா உள்ளிருந்து பேசுவதை உணர்கிறேன் படிப்பின்வாசனையை அறியாத, கல்வியின் பின்புலம் இல்லாத மாணவிகளின் தாயாய் என்னை ஆக்கிய பெருமைஎன் அம்மாவையேச் சேரும். அம்மாவை போன்ற ஒருஆளுமையை நான் இதுவரை பார்த்ததில்லை. மனதளவில் ஊறு விளைவிக்காத, தேர்ந்தெடுத்த வார்த்தைகளைஉபயோகப்படுத்துவார்கள். மனதில் பட்டதை போட்டு உடைப்பார்கள். தான் ஒரு வளைக்க முடியாதஇரும்பு என்று எல்லோருக்கும் உணர்த்தியவர்கள்.
அபசகுனமானமொழியில் பேசக்கூடாது என்பதில் அம்மா எப்போதும் கறாராக இருப்பார்கள். அம்மா வேலைக்குச்சென்று தன் காலில் நின்றாலும் தன் தேவைக்கு அதிகமாக வாங்கி குவித்ததில்லை. கஞ்சத்தனமாகஇருந்ததும் இல்லை. வீட்டில் வேலை செய்பவருக்குஅம்மாவின் மேல் அவ்வளவு பிரியம். எப்படி பிறரை கஷ்டப்படுத்தாமல் வேலை வாங்குவது என்பதைஅம்மாவிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன்.
எந்தவேலையையும் அலுப்புடனும் சலிப்புடனும் அம்மா செய்து நான் பார்த்ததில்லை. வீட்டில் அவ்வளவுபேருக்குமான சமையலை சுவையாகவும் நேர்த்தியாகவும் செய்ததை தினமும் எண்ணிப் பார்க்கிறேன்.தன் உடல் வலிகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் எந்தவொரு வேலையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வார்கள்.
அம்மாவுக்குகவிதை எழுதுவதிலும், வரலாற்று நாடகங்கள் எழுதுவதிலும் தனி ஈடுபாடு உண்டு. அவர் எழுதியசில பாடல்களுக்கு அவரே மெட்டமைத்து பாடிக் காட்டுவார்கள். மிகவும் உயிரோட்டமாக இருக்கும்.நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ஒரு நாடகம் நடத்தினார்கள். அலெக்சாண்டருக்கும்போரசுக்கும் இடையே நடைபெறும் உரையாடல். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும், ஜாக்சன் துரைக்கும்இடையே உள்ள அனல் பறக்கும் காட்சி போன்று அமைத்திருந்தார்கள். அதே போல் கொலம்பசின் கடற்பயணம்குறித்த நாடகம். அதில் பெரிய கப்பல் ஒன்றினை செய்து மேடையில் வைத்திருந்தார்கள். அவற்றையெல்லாம்இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக உள்ளது.
சுயமரியாதையின்சொரூபம் எனலாம் அம்மாவை. பல பெரிய தலைவர்கள் மற்றும் அவர்களின் சுயசரிதைகளை படித்தவர்கள்.கதைகளை விட அறிவியல் சார்ந்த, உணர்வு பூர்வமானகட்டுரைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். படிப்பது, அது குறித்து பேசுவது என்றுதான் அம்மாவின் உரையாடல்அமைந்திருக்கும். தனது நேரத்தை அவ்வளவு பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டவர்கள்.
சுயபச்சாதாபம் அல்லது தற்பெருமை பேசும் பெண்களுக்கிடையில் அவர் ஒரு சித்தி பெற்ற ஞானச்சுடர்.
( மணிவிழா மலரில் தன் அம்மாவைப் பற்றி இணையர் காதம்பரி எழுதியது )
February 21, 2025
சார்ஜ் ஷீட் 42/2021- 7ம் அத்தியாயம்

மிஸ்டர்செல்வராஜ் தலைமையிலான தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் அடுத்து என்ன செய்யும் என்பதைஅறிந்தே இருந்தோம். அப்படியே நடந்தது. ஜூன் 10ம் தேதி ஒரு பதிவு தபால் சாத்தூர் குயில்தோப்பிற்கு வந்தது. ஹெச்.ஆர்.டிபார்ட்மெண்ட் முதன்மை மேலாளர் மிஸ்டர் ஜெயக்குமார் கையெழுத்திட்டிருந்தார். அவர்தான் ஒழுங்கு அதிகாரி! (Disciplinary Authority) ஜூன் 7ம் தேதியிட்ட கடிதம் அது. அதாவது நான் சார்ஜ் ஷீட்டிற்கு பதிலளித்த பின்னர் ஏறத்தாழஇரண்டு மாதம் கழித்து என் பதில் மீதான நிர்வாகத்தின் கடிதம்.
“30.3.2021தேதியிட்ட சார்ஜ் ஷீட்டிற்கு மிஸ்டர் மாதவராஜ் அனுப்பிய கடிதம் என் பார்வைக்கு வைக்கப்பட்டுஇருந்தது. சார்ஜ் ஷீட்டில் கூறப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளையும், அந்த குற்றச்சாட்டிற்குஅடிப்படையான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படித்தேன். குற்றச்சாட்டுகளையும் அதற்குரியபதிலையும் ஆராய்ந்து பார்த்ததில், அந்த பதில் ஒப்புக்கொள்ளும்படியாக இல்லை. எனவே தமிழ்நாடுகிராம வங்கி பணியாளர் விதிகளின்படி, துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன்.”

அதற்குமேல் கடிதத்தைப் படிக்காமல் எழுந்து உட்கார்ந்தேன். கொரோனா வைரஸிலிருந்து மீண்டு, உடல் மெலிந்து, அசதியில்துவண்டு போயிருந்ததை எல்லாம் மீறிய வீம்பு ஜிவ்வென்றிருந்தது.
முதலில்குற்றச்சாட்டுகளே ஒப்புக் கொள்ளும்படியாய் இல்லையே. சார்ஜ் ஷீட் என்பது குழப்பமில்லாமல்தெளிவாகவும், தேவையான விபரங்களோடு இருக்க வேண்டும் என்பதுதான் விதி. (InDisciplinary proceedings, a charge sheet should not be vague. It should beclear and specific with all relevant details.) அப்படி எந்த விபரங்களும் சார்ஜ் ஷீட்டில்இல்லை.
முதலாவதாக,1.3.2021 அன்று ஓய்வு பெற்றவர்கள் மற்றும் சிலரோடு நான் தலைமையலுவலகத்தில் முரட்டுத்தனமாகவும்அநாகரீகமாகவும் நுழைந்ததாக குற்றச்சாட்டு சொல்லப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் நுழைந்தார்கள்என்ற விபரம் இல்லை. யார் யார் என்று பெயர்கள் இல்லை. முரட்டுத்தனமாக என்றால் எப்படி?யாரையாவது தள்ளிவிட்டு அல்லது எதையாவது போட்டு உடைத்துவிட்டு நுழைந்தோமா? அது குறித்தவிபரம் இல்லை. அப்புறம் அநாகரீகமாக என்றால்? சட்டை கிட்டை போடாமலா உள்ளே நுழைந்தோம்? குழப்பமாகஇருக்கிறதா இல்லையா?
இரண்டாவதாக,அலுவலகத்திற்குரிய ஒழுக்கத்தை கடைப்பிடிக்காமல் நிறுவனத்தின் கண்ணியத்தை சீரழித்துவிட்டீர்கள் என்று குற்றச்சாட்டு. என்னய்யாஅந்த அலுவலகத்திற்குரிய ஒழுக்கம்? அதை முதலில் சொல்ல வேண்டாமா? அதில் எதை கடைப்பிடிக்கவில்லை,எப்படி மீறினார்கள் என்று சொல்ல வேண்டாமா? ஒரு மண்ணாங்கட்டியும் சொல்லாமல் நிறுவனத்தின்கண்ணியத்தை குலைத்து விட்டீர்கள் என்றால் எப்படி புரிந்து கொள்வது?
மூன்றாவதுதலைமையலுவலகதிற்குள் சத்தம் போட்டு, சேர்மன் கேபின் முன்னால் சலசலப்பை ஏற்படுத்தினோம்என்று குற்றச்சாட்டு. என்ன சொல்லி சத்தம் போட்டார்கள்,என்ன வார்த்தைகளை உபயோகித்தார்கள் என்று சொல்லப்பட வேண்டாமா? அந்த விபரங்களைச் சொன்னால்தான்மனிதர்களைக் குறிப்பதாக அர்த்தம். வெறுமனே சத்தம் போட்டார்கள், சலசலப்பை ஏற்படுத்தினார்கள்என்றால் உள்ளே சென்றவர்கள் எல்லாம் ஆடு மாடுகளா?
கடைசியாகதலைமையலுவலகத்தில் சேர்மன் வெளியே செல்லும்போது வழி விடாமல் தடுத்தீர்கள் என்றும் தலைமையலுவலக ஊழியர்களின் நடமாட்டங்களுக்குஇடையூறு செய்தீர்கள் என்றும் குற்றச்சாட்டு. வழி விடவில்லை என்றால் எந்த வழி என்று குறிப்பிட வேண்டும். யார் யாரெல்லாம் வழிவிடவில்லை என பெயர்களை தெரிவிக்க வேண்டும். எந்ததலைமையலுவலக ஊழியர்கள் நடமாடமுடியாமல் இடையூறு செய்யப்பட்டார்கள் என்று அவர்களது பெயர்களையும்தெரிவிக்க வேண்டும். எல்லோரும் பெயரற்ற அநாமதேயங்களா?
இதையெல்லாம்விட மிகப் பெரிய கூத்து ஒன்றும் நடந்திருந்தது. ’கீழ்கண்ட ஆவணங்களின் அடிப்படையில்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவைகளை இங்கே இணைத்திருக்கிறோம்’ என்று சார்ஜ் ஷீட்டோடுஇரண்டு ஆவணங்களை இணைத்திருந்தார்கள். ஒன்று, இதே குற்றச்சாட்டுகளோடு நிர்வாகத்திலிருந்து10.3.2021 அன்று எனக்கு விளக்கம் கேட்டு பொதுமேலாளரிடம் இருந்து வந்த கடிதம்! இரண்டாவது,அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து 16.3.2021 அன்று நான் எழுதிய பதில் கடிதம்! அவைகளா அடிப்படை ஆவணங்கள் (basic documents)? எதாவதுஅடிப்படை அறிவு இருக்கிறதா இதில்?
1.3.2021அன்று தலைமையலுவலகத்தில் நடந்த விஷயங்கள் குறித்து யாராவது புகார் அளித்திருந்தால்அந்த ஆவணத்தை இணைக்கலாம். அல்லது எதாவது விசாரணக்கு உத்தரவிடப்பட்டு, அப்படியொரு விசாரணைநடந்திருந்தால் அதன் அறிக்கையை ஒரு அடிப்படைஆவணமாக இணைக்கலாம். அதை விட்டு விட்டு ஏற்கனவே விளக்கம் கேட்டு நிர்வாகம் அனுப்பியகடிதத்தையும், அதற்கு நான் கொடுத்த பதிலையுமே அடிப்படை ஆவணங்களாக தாக்கல் செய்வதெல்லாம்’செக்குன்னு தெரியாம, சிவலிங்கம்னு தெரியாம நக்குன நாய்’ கதைதான்.
இப்படியெல்லாம்சட்ட விதிகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கை நெறிமுறைகளுக்கும் முற்றிலும் விரோதமாக குற்றச்சாட்டுகளைசுமத்திவிட்டு, ’கவனமாக படித்தேன்’, ’எல்லாவற்றையும் ஆராய்ந்தேன்’, ‘பதில் ஒப்புக்கொள்ளும்படியாய் இல்லை’ என்று யோக்கிய சிகாமணியாய் எழுதுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும்.நாடி நரம்பெல்லாம் பொய்யும் பித்தாலாட்டமும் நிறைந்தவர்களால்தான் அது முடியும்.
நான்ரிடையர் ஆவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு சேலத்தில் தலைமையலுவலகத்தில் உயர் அதிகாரிகளாகப்பணிபுரிந்த தோழர்கள் வரதராஜப் பெருமாளும், சௌந்திர நாகேஸ்வரனும் பணி ஓய்வு பெற்றார்கள்.மார்ச் 28, ஞாயிறு அன்று அவர்கள் இருவரும்தலைமையலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மதிய விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.பாண்டியன் கிராம வங்கியிலிருந்தே நல்ல பழக்கம் என்பதால் என்னையும் அழைத்து இருந்தார்கள்.இருவரின் அன்பிற்காக கலந்து கொண்டேன். சேர்மன் உட்பட அனைவரும் வந்திருந்தனர். நம் சங்கத்தோழர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது மிஸ்டர் ஜெயக்குமார் என்னருகில் வந்து”அடுத்த மாதம் உங்கள் பணி ஓய்வையும் கொண்டாடிவிடுவோம்” என்று சிரித்தார். அதற்கு இரண்டுநாள் கழித்து 30.3.2021 அன்று எனக்கு சார்ஜ் ஷீட் கையெழுத்திட்டு அனுப்பி இருந்தார்.அப்பேர்ப்பட்டவர் அவர்!
மீண்டும்கடிதத்தை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். என் மீது விசாரணை நடத்த, அப்போதைய நாமக்கல்மண்டல மேலாளர் மிஸ்டர் சந்திரனை விசாரணை அதிகாரியாக (Enquiry Officer) நியமித்திருந்தார்.நிர்வாகத்தரப்பில் குற்றச்சாட்டை முன்வைக்கும் அதிகாரியாக (Presenting Officer) மிஸ்டர்திருமூர்த்தியை நியமித்திருந்தார்.
இனிமிஸ்டர் சந்திரனிடமிருந்து விரைவில் ஒரு கடிதம் வரும். எந்த தேதியில் எங்கு வைத்துவிசாரணை என்பதைக் குறிப்பிட்டு அதில் அழைப்பு விடுக்கப்படும்.
நமதுஇரு சங்கத் தலைமைக்கும், பெஃபி தமிழ்நாடு தலைவர்கள் தோழர் சி.பி.கிருஷ்ணன், தோழர் ராஜகோபால்ஆகியோருக்கும் தெரிவித்தேன். அட்வகேட் கீதா அவர்களுக்கு மெயில் அனுப்பினேன். சென்னைஹைகோர்ட்டில் வழக்குத் தொடுக்க அஃபிடவேட் நகலைகீதா மேடம் மெயிலில் அனுப்பி்யிருந்தார்கள். அதை இறுதிப்படுத்தியாகி விட்டது. ஓரிருநாட்களில் தாக்கல் செய்யப்பட்டு விடும் என்று தெரிவித்திருந்தார்கள். ஆன்-லைனில்தான் ஹியரிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
விரைவில்தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்படும் என்றொரு பேச்சு எழுந்து கொண்டிருந்தது. அப்போதுஆன்–லைனில் வழக்கு நடைபெறுமா எனத் தெரியவில்லை. 2020ல் இருந்ததை விடவும் 2021ல் தொற்று தீவீரமாகஇருப்பதாக டிவிகளில் கவலையோடு பகிர்ந்து கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட்ட தெரிந்தவர்கள்அனைவருக்கும் தொற்றின் பாதிப்பு வந்து போய்க்கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள்,நம்மோடு பணிபுரிந்த தோழர் வேதமுத்து, தோழர் அந்தோணி மரியராஜ், தற்காலிக ஊழியர் பிரசாத்,ஆகியோரின் உயிரிழப்புகள் சூழலின் தீவீரத்தை உணர்த்தின. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும்லீவு கிடைக்காமல் வேலை பார்த்து இறந்து போன புதுவை பாரதியார் கிராம வங்கி ஆபிஸர் சங்கத்தைச்சேர்ந்த 37 வயதனான தோழர் நாகலிங்கத்தின் சிரித்த முகம் இன்னும் எதையோ சொல்லிக்கொண்டேஇருக்கிறது. துயரங்களைக் கூட வெளிப்படுத்த முடியாமல் முடங்கிப் போயிருந்த காலம். எப்போதுமனிதர்களின் முகங்களை மீண்டும் புன்னகையோடு பார்க்கப் போகிறோம் என ஏக்கங்கள் அடர்ந்தன.
நிர்வாகம்வழக்கம் போல் ஈவிரக்கமில்லாமல் இருந்தது. ஊழியர்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தாமல்பழிவாங்கும் போக்கை தீவீரப்படுத்திக் கொண்டிருந்தது. 1.3.2021 அன்றைய சம்பவத்திற்காகநிர்வாகம் ஓய்வு பெற்ற தோழர்கள் மீதும் பாய்ந்திருந்தது. சோலைமாணிக்கம், கிருஷ்ணன்,சுப்பாராமன் ஆகியோருக்கும் குற்றச்சாட்டுகளை அனுப்பி விளக்கம் கேட்டிருந்தது. பென்ஷனைநிறுத்த வேண்டும் என்ற வெறி சேர்மன் செல்வராஜ் தலைமையிலான நிர்வாகத்துக்கு இருந்திருக்கவேண்டும். தோழர்கள் சோலைமாணிக்கமும், கிருஷ்ணனும் அதற்கு பதில் கொடுத்து விட்டனர்.உடல்நலம் இல்லாத உறவினரைக் கவனித்துக் கொண்டிருந்த தோழர் சுப்பாராமன் உரிய நேரத்தில்பதில் அளிக்கவில்லை. அவருக்கு மாறி மாறி கடிதங்களை நிர்வாகம் அனுப்பிக் கொண்டிருந்தது.தங்கள் பாதுகாப்பு கருதி கிளைகளில் இருந்து ஊழியர்கள் அனுப்பும் கடிதங்களின் மீது உரியநேரத்தில் பதில் அளிக்காத நிர்வாகம், பழிவாங்கும் நடவடிக்கைகளில் மட்டும் வேகத்தைக்காட்டிக் கொண்டிருந்தது.
கணுவாய்கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்த தற்காலிக ஊழியர் முத்து லட்சுமியின் மரணம் தாங்கமுடியாத துயரத்தைத் தந்தது. கோவிட் தொற்று தீவீரமாய் இருந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம்3ம் தேதி அவரை வேலைக்கு வர வேண்டாம் என அந்தக் கிளையின் மேலாளர் வெளியே அனுப்பி விட்டார்.சங்கத்திலிருந்து மிஸ்டர் ஜெயக்குமாரிடம் பேசினோம். கண்டு கொள்ளவே இல்லை. நாம் ரீஜினல்லேபர் கமிஷனரிடம் முறையிட்டோம். சேலத்தில் ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில்உள்ள அலுவலகத்தில் வைத்து இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்தது. நானும் தோழர் அறிவுடைநம்பியும்சங்கத்தரப்பில் சென்றோம். மிஸ்டர் ஜெயக்குமார் நிர்வாகத்தரப்பில் வந்தார். ”இந்த கொரோனாநேரத்தில் வெளியே அனுப்பினால் அந்த ஊழியர் என்ன செய்வார், அவரை பணிக்கு சேர்த்துக்கொள்ளுங்கள்” என ரீஜினல் லேபர் கமிஷனர் சொல்லிப் பார்த்தார். மிஸ்டர் ஜெயக்குமார் கேட்கவேஇல்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.அதன் மீது மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவெடுத்து லேபர் கோர்ட்டில்விசாரணை ஆரம்பிக்க சாதாரண காலங்களிலேயே நான்கைந்து மாதங்கள் ஆகும். கொரோனா நேரத்தில்கேட்கவா வேண்டும்? தோழர் முத்து லட்சுமி அவ்வப்போதுபோன் செய்து கேட்பார்கள். நான் எதாவது நம்பிக்கையளித்து பொறுமையாய் இருக்கும்படிச்சொல்லிக்கொண்டு இருந்தேன். நெஞ்சடைத்துப் போய் ஒருநாள் அவரும் காலமானார். ”மாதவராஜ்சார்” என அழைக்கும் அந்தக் குரல் நினைவிலேயே இருந்தது. நம்பிக்கையான செய்தி என்னிடம்இருந்து வரும் என காத்திருந்து காத்திருந்து காணாமலேயே போய்விட்டது. நிர்வாகத்துக்கும்,மிஸ்டர் ஜெயக்குமாருக்கும் அந்த வலி என்னவென்று தெரியுமா?
பணிநிரந்தரம் செய்யப்பட்ட ஊழியர் என்பதால் மாதவராஜால் கேள்வி கேட்க முடிகிறது. சட்டப்படிநிர்வாகத்தை எதிர்த்து நிற்க முடிகிறது. தோழர் முத்து லட்சுமியின் நிலைமை? ’அடித்தால்கேள்வி கேட்க ஆள் இல்லாத அனாதையே’ என்ற விதத்தில்தானே அந்த கிளை மேலாளர் அவரை வேலையிலிருந்து ஒரே நாளில் வாய்மொழி உத்தரவுமூலம் வெளியேற்றினார்? அப்படித்தானே அவரை மீண்டும் பணிக்கு சேர்த்துக் கொள்ள மிஸ்டர்ஜெயக்குமார் இரக்கமே இல்லாமல் மறுத்தார்? தற்காலிக ஊழியர்களுக்கு இந்த வாழ்க்கை கொடுமையானதாகவும்,நகரமாகவும் இருக்கிறது. வாழ்வில் என்றேனும் ஒரு நல்ல நாள் வருமென எல்லாரையும் போல்அவர்கள் காத்திருக்கிறார்கள்.
யோசித்துப்பார்க்கும்போது உலகில் எல்லோருமே தங்களுக்கு ஒரு நாள் நீதி கிடைக்கும் என எதிர்பார்த்திருப்பதுபோலவே தெரிந்தது.
எனக்குஅந்த நாள் 2021 ஜூன் 24ம் தேதியாக வந்தது போலிருந்தது.
(தொடரும்)
February 3, 2025
சார்ஜ் ஷீட் 42/2021- 6ம் அத்தியாயம்

கொரோனாத்தொற்று ஆரம்பித்ததிலிருந்து பெரும்பாலும் வெளியே அலைந்து கொண்டுதான் இருந்தேன். வாராவாரம் சாத்தூரிலிருந்து சேலத்திற்கு, அங்கிருந்து தினமும் மின்னம்பள்ளி கிளைக்கு, அப்புறம்சேலத்தில் கடைவீதிகளில் என பயணங்களும் நடமாட்டங்களுமாய்த்தான்இருந்தன. மாதத்திற்கு ஒருமுறையாவது இருபது பேருக்கு மேல் தோழர்கள் சங்க அலுவலகத்தில் கூடி விவாதித்தோம். அப்போதெல்லாம் எட்டிப் பார்க்காத வைரஸ், பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்த இரண்டு வாரங்களுக்குள்நுழைந்து விட்டது. சுறுசுறுப்பாய் தன்னை மறந்து வேலைகளில் கவனம் செலுத்தும்போது கிருமிகள்நெருங்குவதில்லை. சும்மா இருக்கும்போதுதான் அவைகளுக்கு தொக்காகி விடுகிறோம்.
அடுத்தநாள் காலையில் எழுந்திருக்கவே முடியவில்லை. உடலில் அப்படியொரு அசதி. கணகணவென்றிருந்தது.இட்லியைக் கூட சாப்பிட முடியவில்லை. ஒரு வேகத்தோடு திமிறி உட்கார்ந்து அட்வகேட் கீதா கேட்டிருந்த ஆவணங்களைசேகரிக்க ஆரம்பித்தேன்.
1.3.2021தர்ணாவுக்கு நான் அனுப்பிய லீவு லெட்டர், 10.3.2021 அன்று பொய்யான குற்றச்சாட்டுகள்சுமத்தி விளக்கம் கேட்டு நிர்வாகம் அனுப்பிய கடிதம், 16.3.2021 அன்று நான் விளக்கம்அளித்து அனுப்பிய பதில் கடிதம், 30.3.2021 அன்று ’எனது பதில் திருப்திகரமாக இல்ல என்றுநிர்வாகம் அனுப்பிய சார்ஜ் ஷீட், 12.4.2021 அன்று நான் அனுப்பிய சார்ஜ் ஷீட்டிற்கானபதில், 30.4.2021 அன்று மின்னம்பள்ளி கிளை மேலாளரிடம் மாலை 5 மணிக்கு “ஓய்வு பெறுவதாக’நான் கொடுத்த கடிதம், 30.4.2021 அன்று அதேநாள் மாலை 7.36 மணிக்கு நிர்வாகம் அனுப்பிய மெயில், 3.5.2021 அன்று ஓய்வுகாலச் சலுகைகள்கேட்டு பொது மேலாளருக்கு நான் எழுதிய கடிதம், 15.5.2021 அன்று செஷேஷன் செல்லும் என்றும்விரைவில் என்கொயரி நடக்கும் என்றும் பொது மேலாளரிடம் இருந்து வந்த கடிதம், தமிழ்நாடுகிராம வங்கி ஸ்டாஃப் ரெகுலேஷன்ஸ் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நிர்வாகத்தின்பொய்களும், பித்தலாட்டமும் அந்த ஆவணங்களில் இருந்து கீழே உதிர்ந்து கொண்டிருந்தன.
9.3.2021அன்று நாமக்கல் ரீஜினல் மேனேஜர் சந்திரன் மின்னம்பள்ளி கிளை மேலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் ‘1.3.2021 அன்றுஓய்வு பெற்றோர் சங்கம் நடத்திய தர்ணாவில் நான் கலந்து கொண்டதாகவும் அதனால் ‘வேலை இல்லை,ஊதியம் இல்லை’ (No work, No Pay) என்னும் விதியின்அடிப்படையில் 1.3.2021 அன்று என் லீவு மறுக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். சார்ஜ்ஷீட் அனுப்பப்பட்ட ஆறு தோழர்களுக்கும் இதுபோல தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்ச்மாத ஊதியத்தில் பிடிக்கவும் செய்திருந்தார்கள். அப்படிச் செய்தது முற்றிலும் சட்ட விரோதமானது.இந்த விவகாரத்தில் நிர்வாகத்தின் முதல் கோணல் அதுதான்.
ஒருஊழியருக்கு ஊதிய வெட்டு அல்லது சம்பளப்பிடித்தம் செய்ய வேண்டுமென்றால், முதலில் சம்பந்தப்பட்டஊழியரிடம் எழுத்து பூர்வமாக தகுதி வாய்ந்தஅதிகாரி (competent authority) விளக்கம் கேட்க வேண்டும். அவர் பதில் அளித்த பின்பு,தகுந்த காரணங்களோடு அதை மறுத்து, ஊதிய வெட்டு செய்யப்போவதை எழுத்து பூர்வமாக தெரிவிக்கவேண்டும். நிர்வாகம் அப்படிச் செய்யவில்லை.செய்தது எல்லாம் சட்டத்துக்கு புறம்பானது.
முதலில்ரீஜினல் மேனேஜர் அந்த ‘தகுதி வாய்ந்த அதிகாரி’ இல்லை. ஹெச்.ஆர் துறையின் முதன்மை மேலாளர் மிஸ்டர் ஜெயக்குமார்தான் ‘தகுதிவாய்ந்த அதிகாரி’.
இரண்டாவதுசம்பந்தப்பட்ட ஊழியருக்கு தெரிவிக்கவே இல்லை. கிளை மேலாளருக்குத்தான் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மூன்றாவது,‘வேலை இல்லை, ஊதியம் இல்லை’ என்னும் விதியின் கீழ் ஊதிய வெட்டு அமல்படுத்துவதாய் இருந்தால்,’1.3.2021 தர்ணா சட்டவிரோதமானது, அதில் ஊழியர்கள் கலந்து கொண்டால் ஊதிய வெட்டு அமல்படுத்தப்படும்‘ என தொழில் தகராறு சட்டத்தின்படி முன்கூட்டியே நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டு இருக்கவேண்டும். ஓய்வு பெற்றோர் சங்கத்தின் தர்ணாவை அப்படி வகைப்படுத்தவும் முடியாது.
செய்ததையெல்லாம்குளறுபடியாகவும், தான்தோன்றித்தனமாகவும் செய்து விட்டு சார்ஜ் ஷீட்டில் முழுப் பூசணிக்காயைநிர்வாகம் மறைத்திருந்தது.
’1.3.2021அன்றைய லீவு என்பதை ‘தகுதி வாய்ந்த அதிகாரியிடம்’ முன்கூட்டியே தெரிவிக்கவில்லை, முறைப்படிஅவரிடம் அனுமதி பெறவில்லை. அதிகார பூர்வமற்ற முறையில் தர்ணாவில் கலந்து கொண்டீர்கள்’என்றுதான் முதல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது!
Nowork No Pay, மண்டல மேலாளரின் கடிதம், ஊதியவெட்டு என்று நடந்த நிகழ்வுகளுக்கு முற்றிலும் மாறாக வேறு ஒரு கதையை ஜோடித்திருந்தது.அதாவது சொல்லாமல் கொள்ளாமல் சங்கத் தலைவர்கள் 1.3.2021 தர்ணாவில் கலந்து கொண்டார்களாம்.
’Nowork No Pay’ என்று தாங்கள் முதலில் ஜோடித்த கதையைச் சொன்னால், தங்கள் செவிட்டிலேயேஹைகோர்ட் ஓங்கி அடிக்கும் என்பது தெரிந்திருக்க வேண்டும். சேர்மன் ரூமில் உட்கார்ந்து’திட்டம் இரண்டை’ கையிலெடுத்திருக்க வேண்டும். முதன்மை மேலாளர் ( Chief Manager) ஜெயக்குமாரின் மூளை அபாரமான ஆற்றல் கொண்டது. எல்லாம்தெரிந்த ஏகாம்பரம் அவர்.
அந்தபித்தலாட்டமும் செல்லாமல் போயிருந்ததுதான் சுவாரசியம்.
தர்ணாநடந்த 1.3.2021 அன்றைக்கு மட்டும் ஒருநாள் லீவு என நான் கேட்டிருக்கவில்லை. அடுத்தநாள்2.3.2021க்கும் சேர்த்து இரண்டுநாள் கேஷுவல் லீவு கேட்டிருந்தேன். 2.3.2021 அன்று சென்னையில்ரீஜினல் லேபர் கமிஷனர் முன்பு நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை இருந்தது.
ஆனால்1.3.2021க்கு மட்டும்தான் மார்ச் மாதத்தில் எனக்கு சம்பளவெட்டு செய்யப்பட்டு இருந்தது.2.3.2021க்கு ஊதியம் கொடுக்கப்பட்டு விட்டது. சார்ஜ் ஷீட்டில் கூறியுள்ளபடி முன்கூட்டிலீவு தெரிவிக்கப்படவில்லை, உரிய அனுமதி பெறவில்லை என்றால், நான் அனுப்பிய ஒரே கடிதத்தில்குறிப்பிட்டு இருக்கும் இரண்டு நாட்களில்,ஒருநாளுக்கு ஊதிய வெட்டும், இன்னொரு நாளுக்கு ஊதியமும் எப்படி கொடுக்க முடியும்? ஒருகடிதத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்கள் லீவில் ஒருநாள் அதிகாரபூர்வமற்றதாகவும் அடுத்தநாள்அதிகாரபூர்வமானதாகவும் எப்படி கருத முடியும்?
அந்தகாய்ச்சல் நேரத்திலும் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்தது. ஒருவேளை என்கொயரி நடந்தால்நம் கேள்விகளுக்கு எங்கு போய் முகத்தை வைத்துக் கொள்வார்கள் என நினைத்துப் பார்த்தேன்.அட்வகேட் கீதா அவர்களிடம் என் லீவு லெட்டர் பற்றி குறிப்பிட்டேன். அவர்களும் சிரித்துக்கொண்டே, “சட்டத்தைப் பத்தியெல்லாம் அவங்களுக்கு கவலையே இல்ல மாது. எதாவது செஞ்சு உங்களைதண்டிக்கணும், உங்களுக்கு வலிக்கணும். ஆனா நீங்க இப்படி சிரிக்கிறீங்க. என்றார். அந்தலீவு லெட்டர் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் அனுப்பி வைக்கச் சொன்னார். எல்லாவற்றையும்கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து மெயில் பண்ணிவிட்டுத்தான் எழுந்தேன்.
டாக்டரைப்போய் பார்க்கச் சொன்னாள் அம்மு. பிரியா கார்த்தியிடம் போனில் சொன்னேன். அப்போதுதான் கொரோனாவில் அவதிப்பட்டு அவனும்சரியாகி இருந்தான். ஆனாலும் வீட்டுக்கு வந்து விட்டான். ”இரண்டு வேள பாரசிட்டாமல் மாத்திரயப் போட்டு பாருங்க,அப்படியும் காய்ச்சல் இறங்கலன்னா, டாக்டரைப்பாத்துருங்க” என்று மாத்திரைகளை வாங்கித் தந்து விட்டுப் போனான். மாடியில் இருந்த அறையில்போய் படுத்துக் கொண்டேன். அந்த இரவே கடும் பாடு பட்டேன்.
அடுத்தநாள் காலையில் அம்முவுக்கும் காய்ச்சல் வந்திருந்தது. மறைந்த எழுத்தாளர் தனுஷ்கோடிராமசாமி அவர்களின் மகன் டாக்டர் அறத்தை பார்க்க இருவரும் சென்றோம். ஆஸ்பத்திரியில்மனிதர்கள் கசங்கிப் போய் நிறைந்திருந்தார்கள். எல்லோரும் முகக் கவசம் மாட்டிக் கொண்டுஇருந்தார்கள். மனிதர்களின் கண்கள் கதிகலங்கிப் போயிருந்தன. நர்ஸ்களும், டாக்டர்களும்உடல் முழுக்க பிளாஸ்டிக் கவுன் மாதிரி ஒன்று மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் ஓடிக்கொண்டுஇருந்தார்கள். யாரிடமும் புன்னகையைக் காண முடியவில்லை.
சோதனைகள்எல்லாம் முடிந்த பிறகு, ‘கொரோனாதான்’ என்பதை டாக்டர் உறுதி செய்தார். தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா எனக் கேட்டார். நான் போடவில்லை. அம்மு போட்டிருந்தாள். ’அண்ணே, நீங்களும்போட்டிருக்கலாமே” என்ற வார்த்தையில் அக்கறையும், ‘ஏன் இந்த அலட்சியம்’ என்ற தொனியும்இருந்தது. மாத்திரைகள் எழுதித் தந்தார். எதையெல்லாம் சாப்பிடலாம் என அறிவுறுத்தினார்.
வீட்டின்கதவைத் திறந்த போது, இந்த வீட்டை இனி மனிதர்கள் பார்க்கும் பார்வை எப்படி இருக்கும்என்பதை உணர்ந்தேன். நானும் அம்முவும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டோம். அத்திப்பழம்,பிஸ்கட், வால் நட் போன்றவற்றை வாங்கித் தருமாறு தோழர் சங்கரிடம் போனில் சொன்னேன். சங்கத்தின்உதவித் தலைவராயிருந்தான். பக்கத்தில் படந்தால் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தான். வாங்கி வந்து பூட்டப்பட்ட கேட்டிற்கு வெளியேஇருந்து போன் செய்தான். சுவற்றில் வைத்து விட்டு போகுமாறு சொன்னேன். ’சும்மா வெளியேவாங்கண்ணா’ என்றான். எப்போது பார்த்தாலும்அவனை ’வாப்பா’ ஆரத்தழுவிக் கொள்வேன். அன்று தள்ளி நின்று அவனை வைத்து விட்டு போகச்சொன்னேன். அவன் என்னைப் பார்த்த விதம் கலங்க வைத்தது.
இப்படிஒரு காலம் வரும் என ஒரு வருடத்திற்கு முன்னால் அறிந்திருக்கவே இல்லை. இந்த சமூகம் உருவாக்கிவைத்திருக்கும் இடைவெளிகளை மனிதர்களிடையே இருந்து அகற்றுவது, அவர்களை ஒன்றுபடுத்துவது, போர்க்குணத்தையும், நம்பிக்கையையும் வளர்ப்பது என்று இயங்கிக் கொண்டிருந்தோம். ஆனால்சமூக இடைவெளியே அப்போது ஒரு ஒழுங்காகி விட்டிருந்தது.
டிவி,ஃபேஸ்புக் எங்கு சென்றாலும் தொற்று குறித்தும், நோய்கள் குறித்துமே செய்திகளாய் இருந்தன.வெறுமையும், அவநம்பிக்கையும் சூழ்ந்த நாட்கள். தெருக்களில் அமானுஷ்ய அமைதி நிறைந்திருந்தது.பறவைகள், நாய்களின் சத்தங்கள் கூட விநோதமாய் கேட்டன. எதுவும் பிடிக்காமல் போயிருந்தது.
இரண்டுமூன்று நாட்களில் அம்முவுக்கு தொற்று குறைந்து, உடல்நலம் திரும்ப ஆரம்பித்திருந்தது.ஆறுதலாகவும், நம்பிக்கையாகவும் இருந்தது. “நீங்களும் தடுப்பூசி போட்டிருக்கலாம்” என்றுசொன்னாள்.
அடுத்தமுறைஆஸ்பத்திரி சென்றபோதும் தொற்று குறையவில்லை என்றே ரிப்போர்ட்டும் டெஸ்ட்டும் காட்டின.சங்கரையும், அவன் மனைவியையும் அங்கே பார்த்தேன்.சங்கர் பேசும்போது மூச்சிறைத்தது. டாக்டரிடம் அவனைப் பற்றி விசாரித்தேன். தொற்று அதிகமாய்இருக்கிறது. அட்மிட் ஆக வேண்டும் என்றார். சங்கரிடம் சொன்னபோது மறுத்தான். ‘இரண்டுநாள்ள சரியாயிரும்’ என்றான். சத்தம் போட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்துவிட்டு வீட்டுக்குவந்தபோது தலையெல்லாம் விண் என்று இருந்தது.
அட்வகேட்கீதா போன் செய்தார்கள். அஃபிடவேட் தயார் செய்து விட்டதாகவும், மெயிலில் அனுப்புவதாகவும்சொன்னார்கள். நாம் எப்போது ஹைகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்வோம் என கேட்டேன். ”கோடைவிடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டும். இந்த நிலமையில் கோர்ட் நடக்குமா எனத் தெரியவில்லை.ஒருவேளை ஆன்லைனில் ஹியரிங் நடக்கலாம்” என்றார்கள்.
உடல்மீதான பிரக்ஞை, நோய் குறித்த பதற்றம், சுற்றிலும் செய்திகள் தந்த துயரம் எல்லாவற்றையும்மீறி, நிர்வாகம் தோற்று நிற்கும் காட்சியை எப்படியும் காண வேண்டும் என்பது மட்டும் அந்த நேரத்தில் வைராக்கியமாய்இருந்தது.
(தொடரும்)
1ம் அத்தியாயம் 2ம் அத்தியாயம் 3ம் அத்தியாயம்
February 2, 2025
குடும்பஸ்தன் - தமிழ் சினிமா

பலகோடி குடும்பங்களின் கதை இது.
சர்வவல்லமை படைத்த பணம்தான் இந்த சமூக அமைப்பையே ஆட்டுவிக்கிறது. பணம்தான் குடும்ப உறவுகளை தீர்மானிக்கிறது. மனிதனின் மதிப்பைமட்டும் அல்ல, இருப்பையும் கூட பணமே முடிவுசெய்கிறது. அனுபவங்களில் அதைக் கண்டு வெறுத்துப் போகிற மனிதர்களின் கதை இது.
நம்மசொந்த பந்தம் என்ன பேசும், நாலு பேர் என்ன நினைப்பாங்க, ஊர் எப்படி பார்க்கும் என்றுகடிகார முள் ஒன்று உள்ளுக்குள் ஒடிக்கொண்டிருக்கும். கிழிந்து கிடக்கும் உண்மை நிலைமையை தனக்குள் மறைத்துக்கொண்டு மற்றவர்கள் முன்னால் சிரிக்கவும் தலைநிமிர்ந்து நடக்கவும் மெனக்கெடுவதே வாழ்க்கையாகிப்போகும் மனிதர்களின் கதை இது.
தனக்குபிடித்தமானது எது, தன்னால் இயன்றது எது எனத் தெரிந்திருந்தாலும், அதை விட்டு விட்டுசம்பந்தமில்லாத வழிகளில் எல்லாம் சென்று ஒவ்வொருமுறையும் அடிபட்டு, காயங்களோடு திரும்புகிறமனிதர்களின் கதை இது.
எப்படியாவதுபிழைத்துக் கொள்ள முயன்று, தோற்று, தோற்று, கடைசியில் எதாவது ஒருநாளில் நடந்து விடாதாஎன மூளையில் பதற்றம் தொற்றி அலைபாயும் மனிதர்களின் கதை இது.
நாம்அன்றாடம் பயணிக்கும் வழியெல்லாம், பார்க்கும் இடமெல்லாம் நடமாடும் எத்தனையோ மனிதர்களின் கதைஇது.
தன் உழைப்பிலிருந்து தானே அந்நியமாகும் மனிதர்களின் கதை இது.
அந்தமனிதர்கள் எல்லோருக்குமான உதாரணம்தான் குடும்பஸ்தனாக வரும் நவீன். இயல்பான தோற்றத்தில்,சாதாரண உடையில், சின்னச் சின்னக் கனவுகளோடு இருக்கும் அவன் காதல் திருமணத்தில் துவங்குகிறதுபடம். அவர்கள் இருவருக்கும் ஒழு பெண் குழந்தை பிறப்பதோடு படம் முடிவடைகிறது. அதற்குள்அவன் படும் பாடுதான் குடும்பஸ்தன்.
இடைவேளைவரை வலி, கோபம், சந்தோஷம் எல்லாவற்றையுமே நகைச்சுவை துணுக்குகள் போலாக்கி அதைக் கோர்த்திருக்கிறார்கள்.உணர்வுகள் மேலோங்காமல் அங்கங்கு அலுப்பும் கூட தட்டுகிறது. பல இடங்களில் தர்க்கங்கள்இடறுகின்றன. இடைவேளைக்குப் பிறகு காட்சிகளின் ஊடாகவும், மேலோங்கியும் மனிதத்தின் வண்ணங்கள்தெரிகின்றன. பணத்தை மீறி நிற்கும் மனித அழகுகள் பிடிபட படத்தின் இறுதி நெகிழ்ச்சியடையவைக்கிறது.
இந்தப்படத்தில் பணம் சம்பாதிப்பவர்களாகவும், குடிகாரர்களாகவும், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களாகவும், ஆண்கள் கிடந்து அல்லோலப்படுகிறார்கள். குழந்தை சுமப்பவராக, தனக்குள் பொருமுகிறவர்களாக, புரணி பேசுகிறவர்களாக துண பாத்திரங்களாய் பெண்கள் இருக்கின்றனர்.பணம் சம்பாதிக்கும் ஒரே பெண், ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு யூடியுபராக இருக்கிறார். நடுத்தர, எளிய குடும்பங்களில் பெண்களின்நிலைமையும், பங்களிப்பும் இன்று முக்கியம்பெற்றிருக்கிறது. அவர்களுக்குரிய இடம் இந்தப் படத்தின் கதையிலும், காட்சிகளிலும் இல்லை.
நவீனின்மாமாவாக வரும் குருசோமசுந்தரமும், நவீனின் மனைவியாக வரும் மேகன்னாவும் சிறப்பாக நடித்திருந்தாலும்மொத்தப் படத்தையும் சுமந்து நிற்கிறார் நவீனாக வரும் நடிகர் மணிகண்டன். அவரது உடல்மொழியும், குரல் தொனியும் அவ்வளவு இயல்பாய் கதாபாத்திரத்தோடு இணைந்து விடுகிறது. தமிழுக்குகிடைத்த இன்னொரு நல்ல திரைக்கலைஞர் அவர். மனைவியின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையோடுஅவர் பேசும் காட்சிகள் கவிதைகளாய் இருக்கின்றன. இந்தப் படம் என்ன சொல்கிறது என்பதும்அதுதான்.
எதையெல்லாம்நக்கலடித்துக் கொண்டு கடக்க முடியும். எதையெல்லாம் அப்படி கடக்க முடியாது என்பதையும்‘குடும்பஸ்தன்’ காட்டுகிறது. படத்தின் பலவீனம் அது. இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி அதைஅறிந்து கொண்டால் மேலும் நல்ல படங்களைத் தரமுடியும்.
January 31, 2025
நான் என்ன செய்கிறேன் தெரியுமா? - 4

”நான்என்ன செய்கிறேன் தெரியுமா?”
மனைவியிடம்கேட்டான்
அந்தமகா புருஷன்
புரியாமல்நின்றவளிடம்
புத்தன்நான் என்று
வீட்டைவிட்டு வெளியேறினான்
ஐம்பத்தாறுஆண்டுகளாய்
சொல்லத்துணியாத அவளிடம்
பத்திரமாய்இருக்கிறது
பதில்ஒன்று
“ஆசையைத்துறந்தவன்
அன்புக்காகஅதிகாரத்தையே
விட்டுக்கொடுத்தவன்
புத்தன்
பேராசைக்காரன்
அதிகாரத்துக்காக
எதையும்விட்டுக் கொடுப்பவன்
என்புருஷன்”
நரைமுடிகாற்றில் அலைய
வெறுமைகொண்ட கண்கள்
எங்கோநிலைத்திருக்க
தனக்குள்சொல்லிக்கொள்ள
முடிந்ததெல்லாம்ஒன்றுதான்
அது-
”நான்யசோதாதான்”
January 30, 2025
பைத்தியங்களின் நாடு

முன்பும் ஒரு நாடு இருந்தது. பைத்தியமே அந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தது.பைத்தியங்கள் பைத்தியமற்றவர்களை பைத்தியங்கள் என அழைத்தார்கள். பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை பைத்தியங்கள் என அழைத்தால் பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டனர்.பைத்தியங்கள் பைத்தியமற்றவர்கள் மீது கல்லெறிந்தனர். பைத்தியமற்றவர்கள் பைத்தியங்களை திருப்பித் தாக்கினால் அரசால் கொலை செய்யப்பட்டார்கள்.பைத்தியங்களின் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன.பைத்தியமற்றவர்களுக்கு ஒரே ஒருநாள் மொத்தமாய் பைத்தியம் பிடித்தது.பிறகு அந்த நாட்டில் பைத்தியங்களே இல்லாமல் போனார்கள்
January 29, 2025
சார்ஜ் ஷீட் 42/2021- 5ம் அத்தியாயம்

இன்ட்ராநெட்டில்எனக்கு செஷேஷன் என்பதை அறிவித்த நிர்வாகத்தைக் கண்டித்து சங்கத்தின் வாட்ஸ்-அப் குரூப்பில்தோழர்கள் தொடர்ந்து கண்டனத்தைத் தெரிவித்தபடி இருந்தார்கள்.
”காலச்சூழலை பயன்படுத்திக் கொண்டு ஆட்டம் ஆடுகிறார்கள்” என்று நிர்வாகத்தின் நடவடிக்கைகளை தோழர் ரவீந்தரன் அந்த நேரத்தில்விமர்சித்து பதிவு செய்திருந்தார். அப்போதைய புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர்சங்க பொதுச்செயலாளர் அவர். அந்த வார்த்தைகளின் பின்னணியில் ஒரு வரலாறே இருந்தது.
பாண்டியன்கிராம வங்கியில் 1988ம் ஆண்டு நடத்திய 44 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்ட காலத்தை ஒருஇதிகாசம் போல சென்ற தலைமுறைத் தோழர்கள் கிளைகளில் இன்றைய தலைமுறைக்கு கடத்தி இருந்தனர்.
2009ல்தோழர்கள் அண்டோவையும், காமராஜையும் நிர்வாகம் சஸ்பெண்ட் செய்த போது பெரும் எண்ணிக்கையில்தோழர்கள் தலைமையலுவலகத்தில் திரண்டு சேர்மனை முற்றுகையிட்டனர். ஆறு மணி நேரத்துக்குசேர்மன் எங்கும் செல்ல முடியாத, சேர்மனை யாரும் சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது.பின்னர் காவல்துறை வந்து சங்கத் தலைவர்களிடம் சமாதானம் பேசிய பிறகே சேர்மன் வீட்டுக்குச்செல்ல முடிந்தது.
2010ம்ஆண்டில் நிர்வாகத்தின் புகாரின் பேரில் சங்கத் தலைவர்கள் சோலைமாணிக்கத்தையும், செல்வகுமார்திலகராஜையும் காவல்துறை கைது செய்தபோது அதை எதிர்த்து அடுத்தநாளே மின்னல் வேகத்தில்(Lightning Strike) வேலைநிறுத்தம் நடந்தது.
அந்தப்போர்க்குணம் தமிழ்நாடு கிராம வங்கியிலும் படர ஆரம்பித்திருந்தது. அதே தலைமையலுவலக வளாகத்தில்எட்டு மாதங்களுக்கு முன்பு, நடத்திய தர்ணாப் போராட்டம் அவ்வளவு எழுச்சியோடும், பெரும்திரளோடு நடந்திருந்தது.
எங்கேதலைமையலுவலகம் இருக்கிறதோ அங்கே சங்கத்தின் தலைவர்கள் இருந்து சங்கப் பணி ஆற்றுவதுதான் பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள்சங்க காலத்திலிருந்து வழக்கமாக இருந்து வந்தது. பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன்கிராம வங்கியும் இணைந்து தமிழ்நாடு கிராம வங்கியாக உருவெடுத்தவுடனே, நமது இரண்டு சங்கங்களிலிருந்தும்பொதுச்செயலாளர்களுக்கு சேலத்துக்கு டிரான்ஸ்பர்கள் கேட்கப்பட்டன. டிரான்ஸ்பர்கள் போடாமல்நிர்வாகம் இழுத்தடித்தது. முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து 2019 ஆகஸ்ட் 8ம் தேதி தர்ணாப்போராட்டத்தை அறிவித்தது. தமிழகத்தின் அத்தனைபகுதிகளிலிருந்து தர்ணாவுக்கு தோழர்கள் தயாராக ஆரம்பித்தனர். தர்ணாப் போராட்டத்திற்குகலந்து கொள்ள லீவு மறுக்கப்பட்டது. மண்டல மேலாளர்கள் மூலம் ஊழியர்கள் பயமுறுத்தப்பட்டனர்.தர்ணாவுக்கு முந்தைய நாள் அங்கங்கு கிளைகளிலேயே உடல்நலம் சரியில்லை என சில தோழர்கள்சுருண்டு கொண்டனர். அதுவே ஒரு போராட்ட வடிவமாக மாறியது. பின்னர் அந்தத் தோழர்கள் மெடிக்கல்லீவில் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அடுத்தநாள் அறுநூறுக்கும் மேலான தோழர்களின் உரத்தகோஷங்கள் தலைமையலுவலகத்தை அதிரச் செய்தன. நிர்வாகம் கோரிக்கையை நிறைவேற்றியது ஒர்க்கர்ஸ்யூனியன் பொதுச்சயலாளராக நானும் ஆபிஸர்ஸ் யூனியன் பொதுச்செயலாளராக அறிவுடைநம்பியும்அப்படித்தான் சேலத்திற்கு சென்றிருந்தோம்.
அந்தப்போர்க்குணம் தமிழ்நாடு கிராம வங்கியிலிருந்து புதுவை கிராம வங்கிக்கும் பரவ ஆரம்பித்தது.சேலத்தில் தர்ணா நடந்த இரண்டு வாரங்களுக்குள் 2019 ஆகஸ்ட் 23ம் தேதி புதுவையில் கிராமவங்கித் தலைமையலுவலகம் முன்பு ஆவேசத்துடன் அடுத்த போராட்டம் நடைபெற்றது. எந்த வங்கியிலும்நடைபெறாத கொடுமை அங்கு நடந்து கொண்டிருந்தது. கிளைகளில் உள்ள பணம் , நகைகள் வைத்திருக்கும் பெட்டகத்தின்சாவிகளில் ஒன்றை ஆபிஸரும் இன்னொன்றை கேஷியரும் வைத்திருப்பதுதான் நடைமுறை. தேவையானஆட்களை பணிக்கு எடுக்காததால், ஐந்து கிளைகளில் ஆபிஸர்களே கிளர்க்குகளின் வேலைகளை பார்க்கவேண்டி இருந்தது. ஒரே ஆபிஸரே பெட்டகத்தின் இரண்டு சாவிகளையும் கையாள வேண்டி இருந்தது.அதுமட்டுமல்ல, இல்லாத கேஷியருக்கு பொய்யாக ஒரு பாஸ்வேர்டு உருவாக்கி அதை ஆபிஸர்களேகம்ப்யூட்டரில் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகள் செய்ய நிர்வாகமே ஏற்பாடு செய்து கொடுத்தது. மிக மோசமான, ஆபத்தான பணிச்சூழல்அங்கு இருந்தது. அதனை எதிர்த்து புதுவை பாரதியார் கிராம வங்கி சங்கத் தோழர்களுடன் தமிழ்நாடுகிராம வங்கி சங்கத் தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். உடனடியாக கிளர்க்குகளுக்குரிய சாவியையும்பாஸ்வேர்டையும் கிளர்க்குகளே வைத்திருக்கும்நிலைமை உருவாக்கப்பட வேண்டும், இல்லையென்றால் கிளர்க்குகளின் சாவிகளைக் கொண்டு வந்துதலைமையலுலகத்தில் சேர்மனிடம் ஒப்படைக்கும்போராட்டத்தை முன்னெடுப்போம் என அந்த தர்ணாவில்அறைகூவல் விடுக்கப்பட்டது. இரண்டே நாட்களில் சங்கத்தின் கோரிக்கையை நிர்வாகம் நிறைவேற்றியது.
தமிழ்நாடுகிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி இரண்டிற்கும் ஸ்பான்ஸர் வங்கியாக இருந்தஇந்தியன் வங்கி நிர்வாகத்திற்கும் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்தின் மீது வன்மம் இருந்திருக்க வேண்டும். அதையெல்லாம் மனதில்வைத்துத்தான் ரவீந்திரன் அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்.
உண்மைதான்.போக்குவரத்து தடைசெய்யப்பட்ட, சமூக இடைவெளி என்பது விதியாக்கப்பட்ட கொரோனா காலத்தில்தோழர்களைத் திரட்டி நிர்வாகத்திற்கு எதிராக தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் ஜனநாயகச்சூழல் இல்லை. வீரம் செறிந்த போராட்டங்களே வரலாறாகவும், போர்க்குணமே இயல்பாகவும் கொண்டிருந்தமகத்தான தொழிற்சங்க இயக்கத்திற்கு ஒரு சோதனையான காலச்சூழல்தான் அது.
தேசம்முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட நேரத்தில் 2020 மார்ச் 23ம் தேதி இரவு 6 மணிக்கு தமிழ்நாடு கிராமவங்கியில் உள்ள முன்னணித் தோழர்களுக்கு மட்டும் கீழ்கண்ட எச்சரிக்கையை வாட்ஸ்-அப் மூலம்தெரிவித்திருந்தேன்.
“வரும்நாட்கள் நம் வாழ்நாளில் மிகவும் நிதானத்துடனும், உறுதியுடனும் கடக்க வேண்டியவை என்பதைமுதலில் நினைவு கொள்ளுங்கள். சாதாரண காலங்களில் நாம் பிரச்சினைகளை எதிர்கொள்வதைப் போலஇப்போது முடியாது, கூடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஒருகுழப்பமான சூழல் இது. முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றங்களும், ஸ்தம்பிப்புகளும் ஏற்படலாம்.அவரவர் நிலைகளில் கொந்தளிப்புதான் நிலவும். அதே மனநிலையோடு நாம் பிரச்சினைகளை அணுகமுடியாது.
நாம்சமூகத்தில் பொறுப்பு மிக்கவர்களாக சிந்திக்கவும், செயல்படவும் பக்குவம் பெற்றாக வேண்டும்.
சங்கத்தின்முன்னணித் தோழரான உங்களுக்கு நான் இதைச் சொல்ல வேண்டியது அவசியம் என நினைக்கிறேன்.சொல்லலாம்தானே?”
பொறுப்புமிக்க ஒரு சங்கத்திற்கு இருந்த இந்த பிரக்ஞையும், நிதானமும் துளி கூட நிர்வாகத்திடம் இல்லை. தொழிற்சங்க இயக்கத்தை ஒடுக்குவதற்கும்,முடக்குவதற்கும் உற்ற நேரம் அதுவென வெறி கொண்டிருந்தது.
3.5.2021அன்று ஓய்வுகாலச் சலுகைகள் கேட்டு நான் எழுதிய கடிதத்திற்கு நிர்வாகத்திடம் இருந்துபதில் ஒரு வாரத்திற்கு மேலாகியும் வரவில்லை.சங்கத் தோழர்கள் தொடர்ந்து என்னிடம் தகவல் வந்ததா என கேட்டுக் கொண்டு இருந்தனர்.
2020நவம்பரில் கொஞ்சம் குறைந்திருந்த கொரோனா தொற்று 2021 மே மாதத்தில் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருந்தது. அம்முவுக்கு மீண்டும் பள்ளி விடுமுறை விட்டிருந்தார்கள். டி.வி செய்திகள்பதற்றத்தை அதிகமாக்கிக் கொண்டிருந்தன. தெரிந்தவர்களின் உயிரிழப்புகளும், யாருமற்றுஅவர்களின் உடல்கள் எரிக்கப்படுவதும் தாங்க முடியாததாய் நினைவுகளில் பாரமாகி கனத்தது.ஒரு கொடுங்காலத்தின் வெறுமையும், வேதனையும் எங்கும் சூழ்ந்திருந்தது.
10.5.2021தேதியிட்ட நிர்வாகத்தின் கடிதம் 14.5.2021 அன்றுதான் வந்தது. முழுக்க முழுக்க செஷேஷனை(பணி ஓய்வு நிறுத்தம் ) உறுதி செய்து வந்த கடிதம்.
நான்பணி ஓய்வு பெற்ற 30.4.2021 அன்று நாமக்கல் மண்டல் மேலாளர் மூலம் செஷேஷன் குறித்த தகவலைப் பெற்று மின்னம்பள்ளி கிளைமேலாளர் என்னிடம் அதை தெரிவித்து விட்டதாக கடிதத்தின் முதல் பாரா. நாமக்கல் மண்டல மேலாளர்மின்னம்பள்ளி கிளை மேலாரிடம் செஷேஷன் பற்றி கூறியதும் வாய்மொழிதான் போல. மிகப் பெரிய வேடிக்கை இது. செஷேஷன் பற்றி முடிவெடுத்து அறிவிக்க வேண்டியவர்அதற்கென அதிகாரத் தகுதி (competentauthority) பெற்றவர்தான். கிளர்க்குகளுக்குஅந்த தகுதி படைத்தவர் பொதுமேலாளர் (General Manager). எதுக்கு குறுக்கே நாமக்கல் மண்டல்மேலாளரை சைக்கிள் ஓட்ட விட்டிருக்கிறார்கள் என்று சிரிப்புத்தான் வந்தது.
வங்கியிலிருந்துமுறையான கடிதம் பெற்ற பிறகுதான் நான் பணி ஓய்வு பெற முடியும் என இரண்டாவது இரண்டாவதுபாரா. நிர்வாகம் முறையான கடிதம் கொடுக்காததுதானே மொத்தப் பிரச்சினையும்!
தமிழ்நாடுகிராம வங்கி ஸ்டாஃப் சர்வீஸ் ரெகுலேஷன்ஸ் பிரகாரம் – ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கைகள்துவங்கப்பட்டு விட்டால், அவரது பணி ஓய்வு நாளன்று அவரது பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்படும்என மூன்றாவது பாரா. யார் இல்லையென்றது? சார்ஜ் ஷீட்டிற்கு கொடுத்த பதில் திருப்திகரமாகஇல்லை, எனவே உங்களது பணி ஓய்வை நிறுத்தி வைத்து ஒழுங்கு நடவடிக்கைகள மேற்கொள்ளப்படஇருக்கிறது என முறையான கடிதம் நிர்வாகம் கொடுக்காத போது எப்படி ஓய்வு நிறுத்தம் செல்லும்என்பதுதானே நமது கேள்வி?
எனவே,என் மீது விரைவில் தொடங்க இருக்கும் என்கொயரியில் பங்கு கொள்ள வேண்டும் என கடைசி பாரா. எவ்வளவுதெனாவெட்டு. அதிகாரத் திமிர்!
சங்கத்தோழர்களுக்கும், பெஃபி தலைவர்களுக்கும், அட்வகேட் கீதா அவர்களுக்கும் தகவல் தெரிவித்தேன்.கூகுள் மீட்டில் கலந்தாலோசித்தோம்.
நிர்வாகம்எப்படியாவது என்கொயரி நடத்தி, காலத்தை இழுத்தடிக்க துடிப்பதை எல்லோரும் அறிந்திருந்தோம். சட்டத்திற்கு புறம்பாக 5 மணிக்குப் பிறகு செசேஷன்கொடுத்தது தவறு என சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்து தடையுத்தரவு கேட்பது என முடிவு செய்தோம்.
அதற்கானபேப்பர்கள் தயார் செய்து அட்வகேட் கீதா அனுப்பச் சொன்னார்கள். நான் அந்த வேலைகளில்ஈடுபட ஆரம்பித்தேன்.
சரியாகஅடுத்த இரண்டாவது நாள், மே 16ம் தேதி மதியம் அசதியும் காய்ச்சலும் என்னை படுத்த ஆரம்பித்து.வைரஸ் என்னையும் கவ்விக் கொண்டு விட்டது என்பதைஅன்று இரவு உணர்ந்து கொண்டேன்.
(தொடரும்)
1ம் அத்தியாயம் 2ம் அத்தியாயம் 3ம் அத்தியாயம்

January 28, 2025
நான் என்ன செய்கிறேன் தெரியுமா? - 3

எதிர்பாராமல்மன்னரின்ரதம்
பழுதடைந்துநின்றது
சுற்றிவளைத்து
நின்றகுதிரைகளில்
மெய்க்காப்பாளர்கள்வீற்றிருந்தனர்
அவர்களைஅடுத்து
அணிவகுத்த படை வீரர்கள்
அரணாகநின்றனர்
அதற்கும்அப்பால் மக்கள்
மக்களைத்தவிர யாருமில்லை
இன்னொருரதத்துக்கு
ஏற்பாடு செய்து
அங்கேயே காத்திருந்தார்கள்
இருந்தரதத்தை விட்டு
மன்னர்இறங்கவே இல்லை
திரைச்சீலைகளைஇறக்கி விட்டுநகத்தைக்கடித்துக் கொண்டிருந்தார்
”நான்என்ன செய்கிறேன் என்று தெரியுமா?”
மெல்லதனக்குள் முணுமுணுத்தார்.
